2005 சோ.ச.க. கோடைக்கால பள்ளி: மார்க்சிசமும் நான்காம் அகிலத்தின் அடித்தளங்களும்

சோசலிச சமத்துவக் கட்சியும் (அமெரிக்கா) மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 20, 2005 வரை “மார்க்சிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் வரலாற்று அடித்தளங்கள்” என்ற தலைப்பில் ஒரு கோடைகாலப் பள்ளியை நடத்தியது.

இந்த பள்ளியின் போது அதில் பங்கேற்பாளர்கள் இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான தத்துவார்த்த மற்றும் வரலாற்று பிரச்சினைகள் குறித்த ஒன்பது சொற்பொழிவுகளைக் கேட்டனர். இதில் முக்கிய தலையங்களில் ஒன்றாக, நவீன கருத்தியல்வாதம், பிராங்பேர்ட் பள்ளி மற்றும் பல்வேறு வகையான மார்க்சிச எதிர்ப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டிருந்தது. சோ.ச.க.வின் தேசிய செயலாளரும், WSWS இன் ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த், மார்க்சிசத்தின் தத்துவார்த்த அடித்தளங்கள்,முன்னோக்கின் விஞ்ஞானம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் புறநிலை உண்மையைப் பாதுகாத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட தொடர் சொற்பொழிவுகளை வழங்கினார்.

மற்றைய விரிவுரையாளர்கள் முதல் உலகப் போரின் தோற்றம், ஜேர்மனியில் பாசிசத்தின் எழுச்சி, சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத்தின் தோற்றம் மற்றும் அதன் எதிர் புரட்சிகர தன்மை, லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கலை மற்றும் கலாச்சாரத்தின் பிரச்சினைகள் பற்றிய ஆய்வு உள்ளடங்கலான ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட பரந்த ஏனைய தலைப்புகளில் பேசினர்.

Members of the Left Opposition in 1927. Sitting: Serebryakov, Radek, Trotsky, Boguslavsky, Preobrazhensky. Standing: Rakovsky, Drobnis, Beloborodov, Sosnovsky