Permanent Revolution & Results and Prospects
WSWS : Tamil : Ëôè‹

 

Preface
The Peculiarities of Russian Historical Development
The Towns and Capital
1789---1848---1905
Revolution and the Proletariat
The Proletariat in Power and the Peasantry
The Proletarian Regime
The Prerequisites of Socialism
A Workers’ Government in Russia and Socialism
Europe and Revolution
The Struggle for Power
Further Reading

 

X. அதிகாரத்திற்கான போராட்டம் [1]

Use this version to print | Send feedback

எமக்கு முன்னால் எமது வேலைத்திட்டம், தந்திரோபாயம் பற்றிய துண்டுப்பிரசுரம் ஒன்று: "ரஷ்ய தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள பணிகள்--ரஷ்ய தோழர்களுக்கு ஒரு கடிதம்" என்ற தலைப்பில் உள்ளது. இந்த ஆவணம் பி.ஆக்சில்ரோட், ஆஸ்ட்ரோவ், ஏ.மார்ட்டினோவ், எல். மார்டோவ் மற்றும் எஸ். செம்கோவ்ஸ்கி ஆகியோரால் கையெழுத்திடப்பட்டுள்ளது.

புரட்சி பற்றிய பிரச்சினை இக் 'கடிதத்தில்' பொதுவான வகையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது; அரசியல் எதிர்கால வாய்ப்பு வளங்களுக்கும் தந்திரோபாயங்களுக்கும் போரினால் ஏற்பட்டுள்ள நிலைமையை விளக்குவதில் இருந்து ஆசிரியர்கள் விலகுவதால் தெளிவும், துல்லியமும் அதிகமான விகிதத்தில் காணாமற்போகின்றன; சொற்றொடரே சிதைந்த தன்மையைக் கொண்டிருப்பதுடன், சமூக வரையறுப்புகளும் தெளிவற்று உள்ளன.

வெளி உலகத்தின் பார்வையில் ரஷ்யாவில் இரண்டு மனோநிலைகள் இருப்பது போன்ற தோற்றத்தை காணமுடிகிறது: முதலில், ரோமனோவில் இருந்து பிளெக்கானோவ் வரை தேசிய பாதுகாப்பு தொடர்பான கவனம், இரண்டாவதாக எதிர்க்கட்சி அதிகாரத்துவ பிரிவிலிருந்து, தெருக் கலகங்கள் தோன்றும் நிலையில் காணப்படும் பொதுவான அதிருப்தி என்றும் உள்ளன. எங்கும் பரவி இருக்கும் இவ்விரு மனோநிலைகளும். தேசியப்பாதுகாப்பின் நிமித்தத்திலிருந்து எழவிருக்கும் வருங்கால மக்கள் சுதந்திரம் பற்றிய பிரமையை ஏற்படுத்துகின்றன. ஆனால் 'தேசிய பாதுகாப்பிற்கு' எதிராக வைக்கப்பட்டாலும் 'மக்கள் புரட்சி' பற்றிய பிரச்சினையில் தெளிவின்மைக்கு, இந்த இரு மனோநிலைகளுமே பெரும் பொறுப்பாக இருக்கின்றன.

தன்னுடைய தோல்விகளுடன் போரானது, புரட்சிகர பிரச்சினையையோ அல்லது அதன் தீர்விற்காக எந்த புரட்சிகர சக்திகளையோ தோற்றுவித்திருக்கவில்லை. நம்மைப் பொறுத்த வரையில் பவேரியா இளவரசரிடம் வார்சோவை நிபந்தனையின்றி சரணடைந்ததில் இருந்து வரலாறு தொடங்கவில்லை. புரட்சிகர முரண்பாடுகளும், சமூக சக்திகளும் முதலில் 1905ல் நாம் அவற்றை எதிர்கொண்டதுபோல்தான் இருந்தன; அடுத்த பத்து ஆண்டுகளில் அவை கணிசமாக மாற்றப்பட்டுள்ளன. இயந்திரரீதியாக மிகத்தெளிவாக ஆட்சியின் புறநிலை திவால்தன்மையைத்தான் போர் வெளிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் சமூகநனவில் அது ஒரு குழப்பத்தையும் கொண்டுவந்துள்ளது; அதில் "ஒவ்வொருவரும்" ஹிண்டென்பேர்க்கை எதிர்த்தல், மற்றும் ஜூன் 3ம் தேதி ஆட்சியின் மீது வெறுப்புக் காட்டுதல் ஆகிய விருப்பால் தொற்றிக் கொள்ளப்பட்டவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் ஒரு அமைப்பு என்றவகையில் 'மக்களுடைய போர்', ஆரம்பத்தில் இருந்தே ஜாரிச போலீசிற்கு எதிராக எழுந்து வந்ததால், அதன் விளைவாய் ஜூன் 3ம் தேதியிலான ரஷ்ஷிய ஆட்சி ஒர் உண்மை என்றும், "மக்களுடைய போர்" என்பது கட்டுக்கதை என்றும் காட்டுகிறது, ஆகையால் 'மக்கள் புரட்சி' பற்றிய அணுகுமுறை தலைவாயிலிலேயே பிளெக்கானோவின் சோசலிச போலீசுக்கு எதிரானது என்றும், பிளெக்கானோவ், அவருடைய முழுப் பரிவாரமான கெரென்ஸ்கி, மில்யுகோவ், குச்கோவ் ஆகியோர் அவருக்குப் பின் இல்லை என்றால் கட்டுக்கதை எனக் கூறிவிடலாம் என்றும், பொதுவாக புரட்சிகர தன்மை அற்றவர்கள் என்றும் எதிர்ப்புரட்சிகர, தேசிய ஜனநாயகவாதிகள் மற்றும் தேசிய தாராளவாதிகள் என்ற நிலையில் கருதப்படலாம் என்றும் கூறவியலும்.

நாட்டின் வர்க்கப் பிரிவினையை "கடிதம்" அசட்டை செய்ய முடியாது; போரின் விளைவு, இப்பொழுதுள்ள ஆட்சி இவற்றிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளுவதற்கு நாடு புரட்சி என்ற வழியைத்தான் கையாளவேண்டும் என்பதையும் அசட்டை செய்ய முடியாது. "தேசியவாதிகளும், அக்டோபர்காரர்களும், முற்போக்குவாதிகளும், காடெட்டுக்களும், தொழிற்துறை அதிபர்களும், தீவிரவாத அறிவுஜீவிகளில் ஒரு பகுதியினரும் கூட(!) ஒருமித்த குரலில் நாட்டை அதிகாரத்துவம் காப்பாற்ற முடியாத தன்மையை பிரகடனப்படுத்துகின்றனர்; மேலும் சமூக சக்திகள் பாதுகாப்பு நலன்களுக்காக திரட்டப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்... ." இந்நிலைப்பாட்டின் எதிர்ப்புரட்சித்தன்மை பற்றி சரியான முடிவையே கடிதம் எடுக்கிறது; 'ரஷ்ஷியாவின் தற்போதைய ஆட்சியாளர்கள், அதிகாரத்துவத்தினர், பிரபுக்கள், தளபதிகள் ஆகியோருடன் நாட்டின் பாதுகாப்பிற்காக ஒற்றுமையுடன் இருக்கிறார்கள்' என்ற முன்கருத்தை இது கொண்டிருக்கிறது. "அனைத்து வகையான முதலாளித்துவ தேசபக்தர்களின்" எதிர்புரட்சி நிலைப்பாடு பற்றியும் கடிதம் சரியான முறையிலேயே சுட்டிக்காட்டுகிறது; கடிதத்தில் குறிப்பிடப்படாத சமூக-தேசபக்தர்களும் இவ்விதமே இருந்தனர் என்று நாம் வைத்துக் கொள்ளலாம்.

இதில் இருந்து சமூக ஜனநாயகவாதிகள், மிகத் தர்க்க ரீதியான புரட்சிகர கட்சியினர் என்பது மட்டுமில்லாமல் நாட்டில் இருக்கும் ஒரே புரட்சிக்கட்சி என்ற முடிவிற்கும் வரவேண்டும்; அதாவது அவர்களுடன் புரட்சி வழிமுறைகளை செலுத்துவதில் சற்றே குறைந்த உறுதியுடன் இருக்கும் குழுக்கள் மட்டும் இல்லாமல், புரட்சிகரமற்ற கட்சிகளும் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வேறுவிதமாகக் கூறினால், சமூக ஜனநாயக கட்சி, பிரச்சினைகளை முன்வைக்கும் தன்னுடைய புரட்சிகரமான வழியில், "பரந்த அதிருப்தி" இருந்தபோதிலும், வெளிப்படையான அரசியல் அரங்கில் மிகவும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த முதல் முடிவு மிகவும் கவனத்துடன் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கட்சிகள் வர்க்கங்கள் அல்ல என்பது தெரிந்ததேயாகும். ஒரு கட்சியின் நிலைப்பாட்டிற்கும் அது தளமாகக் கொண்டிருக்கும் சமூக தட்டின் நலன்களுக்கும் இடையே சற்று இணைந்து செயல்படும் தன்மை குறைந்திருக்கலாம்; இது பின்னர் ஆழ்ந்த முரண்பாடாக மாறக்கூடும். ஒரு கட்சியின் நடவடிக்கை மக்களின் மனப்பாங்கின் செல்வாக்கினால் மாறக்கூடும். இது மறுக்க முடியாததாகும். இதை ஒட்டி, நம்முடைய கணக்கீடுகளில், இந்த குறைந்த உறுதிப்பாடு உள்ள, குறைந்த நம்பகத் தன்மை உடைய கூறுபாடுகளை, கட்சியின் முழக்கங்கள், தந்திரோபாயங்கள் போன்றவற்றை நம்புவதை நிறுத்திவிட்டு இன்னும் கூடுதலான வரலாற்றுக் காரணிகளை கவனித்தல் முக்கியமாகும்: அதாவது, நாட்டின் சமூக அமைப்பு, வர்க்க சக்திகளின் உறவுகள் மற்றும் வளர்ச்சியின் போக்குகள் போன்றவை கவனிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு இருந்தாலும் கூட 'கடிதத்தின்' ஆசிரியர்கள் இந்த வினாக்களை முற்றிலும் தவிர்க்கின்றனர். 1915ம் ஆண்டு ரஷ்ஷியாவில் 'மக்கள் புரட்சி' என்று கூறப்படுவது எது? இந்த ஆசிரியர்கள் அது பாட்டாளி வர்க்கத்தாலும் ஜனநாயகத்தாலும் 'கட்டாயமாக' செய்யப்பட்டது என்று வெறுமனே கூறுகின்றனர். பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன என்பது பற்றி நமக்குத் தெரியும்; ஆனால் 'ஜனநாயகம்' என்றால் என்ன' அது ஒரு அரசியல் கட்சியா? மேலே கூறியவற்றில் இருந்து அது இல்லை எனத் தெரிகிறது. பின்னர், அது என்ன மக்கட்திரளா? எத்தகைய மக்கள்? அது அப்படியானால் சிறு தொழிற்துறை மற்றும் வணிக முதலாளித்துவத்தினர், அறிவுஜீவிகள், விவசாயிகள் என்று இருக்கவேண்டும்; இவர்களைப் பற்றித்தான் அவர்கள் பேசியிருக்க வேண்டும்.

"போர் நெருக்கடியும் அரசியல் எதிர்பார்ப்புக்களும்" என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த தொடர்கட்டுரைகளில், நாம் இந்த சமூக சக்திகளில், ஒருவேளை இருக்கக்கூடிய புரட்சிகர முக்கியத்துவம் பற்றிய பொது மதிப்பீட்டை கொடுத்துள்ளோம். கடந்த புரட்சியின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு 1905ல் அடையப்பட்ட, கடந்த பத்து ஆண்டுகளில் சக்திகளின் உறவுகளுக்குள் ஏற்பட்டிருக்க கூடிய மாறுதல்கள் பற்றி ஆராய்ந்தோம்; இவை ஜனநாயகத்திற்கு (பூர்சுவாசிக்கு) ஆதரவாக இருந்துள்ளனவா அல்லது அதற்கு எதிராக இருந்துள்ளனவா? இதுதான், புரட்சி பற்றிய எதிர்கால வாய்ப்புவளங்கள், பாட்டாளி வர்க்கத்தின் தந்திரோபாயங்கள் பற்றி ஆராய்வதற்கான மைய வரலாற்று பிரச்சினையாகும். 1905ல் இருந்ததை விட, பூர்சுவா ஜனநாயகம் ரஷ்ஷியாவில் வலிமையாகி விட்டதா அல்லது அது இன்னும் நலிவடைந்து விட்டதா? நம்முடைய முந்தைய விவாதங்கள் அனைத்தும் பூர்சுவா ஜனநாயகத்தின் வருங்காலம் பற்றி மையம் கொண்டிருந்தன; இப்பிரச்சினைக்கு இன்னும் விடை கொடுக்க முடியாதவர்கள் இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். ஒரு தேசிய பூர்சுவா புரட்சி ரஷ்யாவில் நடக்க முடியாது ஏனெனில் ஓர் உண்மையான புரட்சிகர பூர்சுவா ஜனநாயகம் இங்கு இல்லை என நாம் இக்கேள்விக்கு விடையறுக்கிறோம். தேசிய புரட்சிகளுக்கான காலம் கடந்துவிட்டது; குறைந்தது இது ஐரோப்பாவிலாவது அவ்வாறுதான் என அறியப்படவேண்டும்: இது எவ்வாறு தேசிய போர்களின் காலம் கடக்கப்பட்டுவிட்டது என்றுள்ளதோ, அதுபோல்தான். ஒன்றிற்கும் மற்றொன்றிற்கும் இடையே ஓரு உள்ளார்ந்த தொடர்பு உள்ளது. நாம் ஏகாதிபத்திய சகாப்தத்தில் வாழ்கிறோம்; இது காலனித்துவ வெற்றிகளின் ஒரு முறை மட்டும் அல்ல; உள்நாட்டிலும் ஒரு திட்டவட்டமான ஆட்சிமுறை உள்ளது என்பதை உட்குறிப்பாக கொண்டுள்ளது. பூர்சுவா தேசத்தை இது பழைய ஆட்சிக்கு எதிராக திருப்பாது; ஆனால் பாட்டாளி வர்க்கத்தை பூர்சுவா தேசத்திற்கு எதிராகத் திருப்பும்.

1905ம் ஆண்டு புரட்சியில் குட்டி பூர்சுவா கைவினைஞர்களும், வணிகர்களும் ஏற்கனவே முக்கியத்தவம் அற்ற பங்கைத்தான் கொண்டிருந்தனர். கடந்த பத்து ஆண்டுகளில் இந்த வர்க்கத்தின் சமூக முக்கியத்துவம் இன்னும் சரிந்துவிட்டது என்பது பற்றிச் சந்தேகம் இல்லை. ரஷ்ஷியாவில் முதலாளித்துவம் இன்னும் தீவிரமாகவும் கடுமையாகவும்தான், மற்ற மூத்த பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் இருப்பதைவிட இடைப்பட்ட வர்க்கங்களிடம் நடந்து கொண்டுள்ளது. அறிவுஜீவிகள் ஐயத்திற்கு இடமின்றி எண்ணிக்கையில் பெருகிவிட்டனர் மற்றும், அவர்களுடைய பொருளாதார பங்கு பெருகிவிட்டது. ஆனால் அதே நேரத்தில் அதன் முந்தைய 'சுயாதீனம்' பற்றிய போலித் தோற்றம் முற்றிலும் மறைந்து விட்டது. அறிவுஜீவுகளின் சமூக முக்கியத்துவம், ஒழுங்குபடுத்தப்பட்ட முதலாளித்துவ தொழிற்துறையில் அதன் தொழிற்பாடுகளால் மற்றும் பூர்சுவா பொதுக்கருத்து இவற்றால் முற்றிலும் தீர்மானிக்கப்படுகிறது. முதலாளித்துவத்துடனான அதன் சடரீதியான தொடர்புகள், அதை ஏகாதிபத்திய போக்குகளுடன் முற்றிலும் கரைத்துள்ளன. ஏற்கனவே மேற்கோளிட்டபடி, 'கடிதம்' கூறுகிறது: "தீவிர அறிவுஜீவிப் பகுதிகூட ... சமூக சக்திகள் பாதுகாப்பிற்காக திரட்டப்படவேண்டும் எனக் கோருகிறது." இது முற்றிலும் உண்மையற்றதாகும்; ஒரு பகுதி என்றில்லாமல், தீவிர அறிவுஜீவுகளின் ஒட்டுமொத்தமுமே, உண்மையில் முற்போக்கான பிரிவின் முழுப் பகுதி என்று இல்லாமல், மிகக் கணிசமான அல்லது சோசலிச அறிவுஜீவிகளின் பெரும்பகுதிக்கும் இது பொருந்தும். அறிவுஜீவிகளின் பண்பு எனும் வண்ணப்பூச்சின் மூலம் 'ஜனநாயகத்தின்' அணிகளை நாம் அதிகரித்துவிட முடியாது.

இவ்வாறு தொழிற்துறை மற்றும் வணிக பூர்சுவாசி இன்னும் சரிவை அடைந்துள்ளது; அதேவேளை அறிவுஜீவிகள் தங்களுடைய புரட்சி நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டனர். நகர்ப்புற ஜனநாயகம் ஒரு புரட்சிகரக் காரணி என்னும் முறையில் குறிப்பிடத்தகுந்ததாக இல்லை. விவசாயிகள் மட்டுமே எஞ்சியுள்ளனர்; ஆனால் நாம் அறிந்தவரையில், ஆக்சல்ரோட்டோ மார்டோவோ இதன் சுயாதீன புரட்சிகர பங்கு பற்றி பெரிதாக ஏதும் நம்பிக்கைகளை கொண்டிருக்கவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயிகளுக்கு இடையே தொடர்ந்து இருக்கும் வர்க்க பேதம் இப்பங்கை அதிகப்படுத்தியுள்ளது என்ற முடிவிற்கு அவர்கள் வருகிறார்களா? அத்தகைய நினைப்பு, அனைத்து வரலாற்று அனுபவம் மற்றும் கோட்பாட்டு ஆய்வு முடிவுகளையு எதிர்த்து நிற்பதாகத்தான் இருக்கும்.

அப்படியானால், இக் கடிதம் எந்த வகைப்பட்ட "ஜனநாயகத்தை" பற்றிக் கூறுகிறது? எந்த உணர்வில் இவர்கள் "மக்களுடைய புரட்சி" என்று பேசுகின்றனர்?

அரசியலமைப்பு சட்டமன்றம் என்ற முழக்கம் ஒரு புரட்சிகர நிலைமை உள்ளது என்பதை முன்நிபந்தனையாக கொண்டுள்ளது. அப்படி ஒன்று இருக்கிறதா? ஆம், அவ்வாறு உள்ளது; ஆனால் அது இப்பொழுது பூர்சுவா ஜனநாயகம், இறுதியாக, ஜாரிசத்துடன் கணக்கு தீர்த்துக் கொள்ள தயாராக இருக்கிறது மற்றும் அதனால் இயலும் என்று கூறப்பட்டுள்ள தன்மையில் தோன்றியதாக கருதப்பட்டதில் குறைந்தபட்சம் வெளிப்படுத்தப்படவில்லை; இதற்கு மாறாக, இந்தப் போர் எதையேனும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது என்றால் அது இந்தாட்டில் ஒரு புரட்சிகர ஜனநாயகம் இல்லை என்பதைத்தான் தெரிவித்துள்ளது.

ஜூன் 3ம் தேதியிலான ரஷ்யா, தன்னுடைய புரட்சிகர உட்பிரச்சினைகளை ஏகாதிபத்திய பாதையின் வழியே தீர்த்துக்கொள்ளும் வகையில் மேற்கொண்ட முயற்சி முற்றிலும் வெளிப்படையான பெருந்தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் ஜூன் 3 ஆட்சிக்கு பொறுப்பான, அல்லது ஓரளவு பொறுப்பான கட்சிகள் புரட்சி பாதையை மேற்கொள்ளுவார்கள் என்ற பொருளை தராது; மாறாக, ஆளும் வர்க்கத்தை ஏகாதிபத்திய பாதையில் இன்னும் கூடுதலாக இட்டுச் செல்லும், இராணுவ பேரழிவினால் விளைந்துள்ள புரட்சிகர பிரச்சினை, நாட்டில் இருக்கும் ஒரே புரட்சிகர வர்க்கத்தின் முக்கியத்துவத்தை இரு மடங்காக்கிவிடும் என்றுதான் பொருள்படுத்தும்.

ஜூன் 3ம் தேதி முகாம், உள் உராய்வுகளினாலும், பூசல்களினாலும் அதிர்ந்துள்ளது. இதையொட்டி, அக்டோபரிஸ்டுகளும் காடேட்டுகளும் அதிகாரத்தை புரட்சிகரப் பிரச்சினை மூலம் அடையலாம், அதிகாரத்துவம் மற்றும் ஒன்றுபட்டுள்ள பிரபுக்கள்மீது தாக்குதலுக்கு தயார் செய்யலாம் என நினைப்பதாக அர்த்தப்படுத்தாது. ஆனால் புரட்சிகர அழுத்தத்தை எதிர்கொள்ளும் அரசாங்கத்தின் திறன் ஒரு குறுகிய காலத்திற்கு ஐயத்திற்கு இடமின்றி வலுவிழந்துள்ளது என்பதை அர்த்தப்படுத்துகிறது.

முடியாட்சியும், அதிகாரத்துவமும் மதிப்பிழந்துள்ளது ஆனால், இதனால் அவை அதிகாரத்தை ஒரு சண்டையின்றி கைவிட்டுவிடும் என்று பொருள் ஆகிவிடாது. டுமா கலைப்பும், சமீபத்திய அமைச்சரவை மாற்றங்களும், இத்தகைய நினைப்பு உண்மையில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன என்பதை, தேவைப்பட்டவர்களுக்கு காட்டியுள்ளன. ஆனால் இன்னும் பெருக இருக்கும் அதிகாரத்துவத்தின் உறுதியற்ற கொள்கை, சமூக ஜனநாயகவாதிகளால் பாட்டாளி வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டுவதற்கு பெரிதும் உதவும்.

நகரங்கள் மற்றும் கிராமங்களில் அடிமட்ட வர்க்கங்கள், இன்னும் கூடுதலான வகையில் களைப்படைந்து, ஏமாற்றத்திற்குட்பட்டு, அதிருப்தி அடைந்து, சீற்றத்தையும் அடையும். இதனால், புரட்சிகர ஜனநாயகத்தின் சுயாதீனமான சக்தி, பாட்டாளி வர்க்கத்துடன் ஒன்றுக்கொன்று ஆதரவாய் இணைந்து செயலாற்றும் என்று பொருள் ஆகிவிடாது. ஏனெனில் அத்தகைய சக்திக்கு சமூக ஆதாரங்களோ, தேவையான தலைமையோ இல்லை; ஆனால் அடிமட்ட வர்க்கங்களின் ஆழ்ந்த அதிருப்தி தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அழுத்தத்திற்கு உதவி செய்யும் என்பது ஐயத்திற்கிடமின்றி அர்த்தப்படுத்தும்.

பூர்சுவா ஜனநாயகம் தோன்றுவதற்கு பாட்டாளி வர்க்கம் காத்திருப்பது குறையும் என்றால், குட்டி பூர்சுவா, விவசாய தொகுப்பின் செயலற்ற, குறைந்த வரம்புகளுக்கேற்ப தன்னை இருத்திக்கொள்ளும் தன்மை குறையும் என்றால், கூடுதலான, உறுதியான, சமரசத்திற்கு இடமில்லாத வகையில் போராட்டம் பெருகும்; "முடிவு வரையில்", அதாவது அதிகாரத்தை கைப்பற்றும் வரையில் இது வெளிப்படையான தயாரிப்பை மேற்கொள்ளும்; அந்த உறுதியான, முடிவெடுக்கும் கணத்தில் பாட்டாளி வர்க்கமல்லாத மக்களையும் தன்னுடன் இட்டுச் செல்லும் வாய்ப்புக்களும் அதிகமாகும். ஆனால் "நில பறிப்பிற்காக" என்பது போன்ற, வெறும் முழக்கங்களை முன்வைப்பதால் மட்டும் எதுவும் சாதிக்கப்பட மாட்டாது. இது இன்னும் கூடுதலான முறையில், அரசாங்கம் நிலைப்பதற்கு அல்லது சரிவதற்கு நம்பியிருக்கும், இராணுவத்திற்கும் பொருந்தும். இராணுவத்தின் பெரும்பாலானவர்கள் புரட்சிகர வர்க்கத்தின்பால் தான் பற்றைக் கொள்ளுவர்; அதுவும் அது வெறும் முணுமுணுப்பு, ஆர்ப்பாட்டம் என்று இல்லாமல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு போராடுகிறது, அதில் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது என்பது நம்பிக்கையூட்டும் வகையில் இருந்தால்தான் இது ஏற்படும். ஆனால் நாட்டில் ஒரு புறநிலையான புரட்சிகர பிரச்சினையும் இருக்கிறது: போரினாலும் அதன் தோல்விகளினாலும் பகட்டாக வெளிப்படுத்தப்பட்டுள்ள அரசியல் அதிகாரம் பற்றிய பிரச்சினைதான் அது. ஆளும் வர்க்கம், அதிகரித்தளவில் சீர்குலைந்து வருகிறது. நகர்ப்புற, கிராமப்புற மக்களிடையே பெருகிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரே புரட்சிகர ஆக்கக்கூறு பாட்டாளி வர்க்கம்தான்: இது 1905ல் இருந்ததைவிட ஒப்பிடமுடியாத அளவிற்கு அதிகரித்தளவில் உள்ளது.

ஒரு கட்டத்தில் இந்தக் 'கடிதம்' பிரச்சினையின் மையப் பகுதியை அணுகுவதாக தோன்றும். ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர்கள் "ஜூன் 3ம் தேதி முடியரசை கவிழ்ப்பதற்கான தேசிய போராட்டத்தை வழிநடத்தவேண்டும்" என்று இது கூறுகிறது. எத்தகைய "தேசிய" போராட்டம் என்பதை, நாம் இப்பொழுதுதான் குறித்துக் காட்டியுள்ளோம். ஆனால் 'தலைமை தாங்குவதென்றால்' முன்னேறிய தொழிலாளர்கள் பெருந்தன்மையுடன் தங்கள் குருதியை எதற்காக என்று கேள்வி கேட்காமல் சிந்த வேண்டும் என்ற பொருளைத் தந்துவிடாது: மாறாக தொழிலாளர்கள் முழுப் போராட்டத்தின் அரசியல் தலைமையையும் எடுத்துக் கொள்ள வேண்டும்; அதாவது எல்லாவற்றிற்கும் மேலாக பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் தலைமையை எடுத்துக் கொள்ள வேண்டும், பின்னர் இந்தப் போராட்டத்தில் வெற்றி என்பது, போராட்டத்திற்கு தலைமை தாங்கிய வர்க்கத்திற்கு, அதாவது சமூக ஜனநாயக பாட்டாளி வர்க்கத்திற்கு கட்டாயம் மாற்றப்படும் என்பது தெளிவாகும்.

எனவே பிரச்சினை "புரட்சிகர இடைக்கால அரசாங்கம்" என்று மட்டும் வெறுமே இல்லாமல் -- இது ஒரு வெற்றுச் சொற்றொடர், வரலாற்று வழிவகை இதற்கு ஏதேனும் ஒரு பொருளுரை கொடுக்கவேண்டும் -- ஒரு புரட்சிகர தொழிலாளர் அரசாங்கம் என்று இருக்க வேண்டும், அதாவது ரஷ்ஷிய பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை வெற்றி கொண்டதாக இருக்க வேண்டும். தேசிய அரசியலமைப்புத் திட்டம், ஒரு குடியரசு, எட்டு-மணி நேர வேலை நாள், நிலப்பிரபுக்களிடம் இருந்து நிலப்பறிப்பு, போரை உடனடியாக நிறுத்தவேண்டும், தேசங்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் ஐரோப்பிய ஐக்கிய அரசுகள் போன்ற கோரிக்கைகள் எல்லாமே சமூக ஜனநாயகவாதிகளின் கிளர்ச்சிப் பாத்திரத்தில் முக்கிய பங்கை வகிக்கும். ஆனால் புரட்சி என்பது முதலிலும், முக்கியமானதுமாக அதிகாரத்தை கைப்பற்றுதல் என்ற பிரச்சினையாகும். அரசின் வடிவம் (அரசியலமைப்பு சட்டமன்றம், குடியரசு, ஐக்கிய அரசுகள்) என்று அல்லாது அரசாங்கத்தின் சமூக உள்ளடக்கத்தை பற்றியதாக இருக்கும். இப்பொழுதுள்ள நிலைமையில் தொழிலாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு போராடத் தயாராக இல்லாவிட்டால், அரசியல் அமைப்பு சட்டசபை மற்றும் நிலப்பறிப்பிற்கான கோரிக்கைகள் அனைத்தும் தங்களுடைய புரட்சிகர முக்கியத்துவத்தின் நேரடித் தன்மையை இழந்துவிடும். தொழிலாள வர்க்கம் முடியாட்சியின் கரங்களில் இருந்து அதிகாரத்தை பலவந்தமாய் பற்றி எடுத்துக் கொள்ளாவிட்டால், வேறு எந்த சக்தியும் அதைச் செய்ய இயலாது.

புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கின் வேகத்திறன், ஒரு சிறப்பு பிரச்சினையாகும். இது பல இராணுவ, அரசியல், தேசிய மற்றும் சர்வதேச காரணிகளை பொறுத்துள்ளது. இந்தக் காரணிகள் வளர்ச்சியை முடக்கலாம் அல்லது விரைவுபடுத்தலாம், புரட்சியின் வெற்றிக்கு வசதிகளை கொடுக்கலாம் அல்லது மற்றொரு தோல்விக்கு வகைசெய்யலாம். ஆனால் நிலைமைகள் எவ்வாறு இருந்தாலும் பாட்டாளி வர்க்கம் தன்னுடைய பாதையை தெளிவாகக் கண்டறிந்து முழு நனவுடன் பின்பற்ற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அது நப்பாசைகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும். அதன் அனைத்து வரலாற்றில் இருந்தும் இதுகாறும் அது அனுபவித்துள்ள துன்பங்களுக்கு காரணமான மோசமான நப்பாசை மற்றவர்கள் மீது பாட்டாளி வர்க்கம் கொண்டிருந்த நம்பிக்கைதான்.