Permanent Revolution & Results and Prospects
WSWS : Tamil : Ëôè‹

 

Preface
The Peculiarities of Russian Historical Development
The Towns and Capital
1789---1848---1905
Revolution and the Proletariat
The Proletariat in Power and the Peasantry
The Proletarian Regime
The Prerequisites of Socialism
A Workers’ Government in Russia and Socialism
Europe and Revolution
The Struggle for Power
Further Reading

 

VII.சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகள்

Use this version to print | Send feedback

மார்க்சிசம், சோசலிசத்தை ஓர் விஞ்ஞானமாக மாற்றிவிட்டது; ஆனால் இவ்வாறு இருந்தும் கூட "மார்க்சிஸ்டுகள்" சிலர் மார்க்சிசத்தை ஒரு கற்பனாவாதமாக மாற்றுவதிலிருந்து தடுத்து நிறுத்தமுடியவில்லை.

சமூகமயமாக்கல் மற்றும் கூட்டுறவு வேலைத் திட்டம் இவற்றிற்கு எதிராக வாதிடும் ரோஜ்கோவ், "மார்க்சினால் உறுதியாக முன்வைக்கப்பட்டுள்ள வருங்கால சமுதாயத்தின் அத்தியாவசியமான முன்நிபந்தனைகள்" பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்: தனிப்பட்ட இலாபத்திற்கான உந்துதல், பணத்துக்கான அக்கறை[?], தனிநபர் முயற்சி, நிறுவனம் மற்றும் ஆபத்து ஆகியவற்றிற்கான செயற்தூண்டலை குறைக்கும் அத்தகைய அபிவிருத்தியைக்கொண்ட, அதன் விளைவாக சமூக உற்பத்தியை ஒரு முதல்தர பிரச்சினையாக ஆக்கும் சடரீதியான புறநிலை முன்நிபந்தனைகள் அங்கு ஏற்கனவே இருக்கிறதா? அத்தகைய தொழில்நுட்ப மட்டம் கிட்டத்தட்ட பொருளாதாரத்தின் அனைத்து கிளைகளிலும் பேரளவு உற்பத்தியின் முற்றுமுழுதான மேலாதிக்கத்துடன் தொடர்புடையது.

அத்தகைய கட்டம் அடையப்பட்டுவிட்டதா? பாட்டாளி வர்க்கத்திடையே வர்க்க - நனவின் வளர்ச்சி என்ற அகநிலைரீதியான உளவியல் முன்நிபந்தனைகள் கூட, பெரும்பான்மையான மக்கட் திரளினுள் உள்ளார்ந்த ஒற்றுமையை அடைவதற்கேற்ப தேவையான தரத்திற்கான வளர்ச்சி கூட இன்னும் ஏற்படவில்லை. "பிரான்ஸ் நாட்டில் ஆல்பியில் உள்ள புகழ்வாய்ந்த கண்ணாடி தொழிற்சாலைகள், இன்னும் பிரான்சிலேயே இருக்கும் பல விவசாய சங்கங்கள் போன்றவற்றின் உற்பத்தியாளர்கள் சங்கங்களை பற்றி நாம் அறிவோம்; ஆயினும்கூட பிரான்சின் அனுபவம், வேறு எதுவும் காட்டாததுபோல், அத்தகைய முன்னேற்றமடைந்துள்ள நாட்டில் இருக்கும் நிலைமைகள்கூட கூட்டுறவின் ஆதிக்கத்தை அனுமதிக்க போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை என்றுதான் காட்டுகிறது. இந்த நிறுவனங்கள் சரசாரி அளவில்தான் உள்ளன. அவற்றின் தொழில்நுட்ப தரம் சாதாரண முதலாளித்துவ நிறுவனங்களைவிட உயர்ந்ததாக இல்லை; அவை தொழிற்துறை வளர்ச்சியின் தலைமையில் இல்லை, வழிநடத்தவில்லை, மிகச் சாதாரணமான சராசரி அளவைத்தான் அடைந்துள்ளன" என்று ரோஜ்கோவ் தொடர்ந்து எழுதியுள்ளார்.

"தனிப்பட்ட உற்பத்தியாளர்களின் சங்கங்கள் பொருளாதார வாழ்வில் தங்களுடைய தலைமை பங்கை காட்டலாம் என்ற அனுபவம் ஏற்பட்ட பின்னர்தான், நாம் ஒரு புதிய அமைப்பை அணுகிக் கொண்டிருக்கிறோம் என்று கூறமுடியும், பின்னர்தான் அதன் இருப்பிற்கு அவசியமான நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட்டன என்று நாம் நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்." [1]

தோழர் ரோஜ்காவின் நல்ல எண்ணங்களை மதித்தாலும் கூட, அபூர்வமாகத்தான் முதலாளித்துவ இலக்கியத்தில்கூட, இவர் சோசலிசத்தின் முன்நிபந்தனைகள் என்று அறியப்படுவதை பற்றி, கொண்டிருக்கும் குழப்பங்களை வெளிப்படுத்தியுள்ளதுபோல் வெளிவந்துள்ளன என்பதை வருத்தத்துடன் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ரோஜ்காவிற்கு என்றில்லாமல், இந்தப் பிரச்சினையை பற்றி அறிவதற்கு, இந்த குழப்பத்தை பற்றிச் சற்று விவாதித்தல் உகந்ததேயாகும்.

தனிப்பட்ட இலாப நோக்கை, பணம் பற்றிய அக்கறை [?], தனிநபர் முயற்சி, நிறுவனம், இழப்பு ஆபத்து ஆகியவற்றிற்கான கவலையை குறைந்த பட்சமாக குறைக்கும், மற்றும் சமூக உற்பத்தியை ஒரு முதல் வரிசை பிரச்சினையாக்கும் அத்தகைய கட்டத்தை' நாம் இன்னும் அடையவில்லை என்று ரோஜ்கோவ் பிரகடனப்படுத்துகிறார்.

இந்தப் பகுதியின் பொருளை அறிந்து கொள்ளுதல் கடினமாகத்தான் உள்ளது. தற்கால தொழில்நுட்பம் தொழிற்துறையில் இருந்து மனித உழைப்புச்சக்தியை போதியளவு வெளியேற்றவில்லை என்றும் இவ்வாறு அகற்றுவது என்பது 'கிட்டத்தட்ட' பொருளாதாரத்தின் அனைத்து பெரிய அரசு நிறுவனங்களிலும் அதற்கு முழு ஆதிக்கம் இருக்க வேண்டும் என்றும், எனவே ''கிட்டத்தட்ட' நாட்டின் முழு மக்கட்தொகையும் முற்றிலும் பாட்டாளி வர்க்கமயமாக ஆகியிருக்க வேண்டும் என்றும் ரோஜ்னோவ் தெரிவிக்க விரும்புகிறார். இந்த இரண்டு முன்நிபந்தனைகளும் சோசலிசத்திற்கு இருக்கவேண்டும் என்று 'மார்க்ஸ் உறுதியாகத் தெரிவித்துள்ளார்' என்பதும் இவர் கருத்தாகும்.

சோசலிசம் வரும்போது முதலாளித்துவ உறவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை ரோஜ்கோ கற்பனை செய்துள்ளதைப் பார்ப்போம்: "தொழிற்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் பெரிய அளவான உற்பத்திமுறை கிட்டத்தட்ட முற்றிலும் ஆதிக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்" என்பது ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, அனைத்துச் சிறிய, நடுத்தர விவசாயம், தொழில் உற்பத்தி முறைகளிலும் பாட்டாளி வர்க்க மயமாக்கப்பட்டு, அதாவது முழு மக்கள் தொகுப்பும் பாட்டாளி வர்க்கமாக மாற்றப்பட்டிருக்கும். ஆனால் இந்தப் பெரிய நிறுவனங்களில் இயந்திரமுறை தொழில்நுட்பம் முற்றிலும் ஆதிக்கம் செலுத்துவது மனித உழைப்புச் சக்தியை உற்பத்தியில் மிகக் குறைவாக்கும் வழிவகையில் இருக்கும்; எனவே நாட்டு மக்களில் மிகப் பெரும்பாலனவர்கள், 90 சதவிகிதம் என்று வைத்துக் கொள்ளுவோம், அரசாங்கத்தின் செலவில் உழைப்பின் சேமிப்பு படை போல் தொழிற்கூடங்களில் மாற்றிவைக்கப்படுவர். நாம் 90 சதவிகிதம் என்று குறிப்பிட்டோம்; ஆனால் இன்னும் தர்க்கபூர்வ முறையில் கற்பனை செய்தோமானால், நாட்டின் முழு உற்பத்தியும் ஒற்றை தானியங்கி கருவியாக இருந்து, ஒற்றை வணிகக்கூட்டமைப்பின் (syndicate) கட்டுப்பாட்டிற்குட்பட்டு, உயிர்த்திருக்கும் தொழிலாளரை பயிற்சி பெற்ற ஒற்றை மனித குரங்குப்படை (Orang-Outang) ஆக்கிவிடும். நாம் அறிந்துள்ளபடி, இதுதான் பேராசிரியர் டுகான் பாரனோவ்ஸ்கியின் மிகச்சிறந்த-நிலைபேறுள்ள கோட்பாடாகும். அத்தகைய நிலைமைகளில், "சமூக உற்பத்தி" என்பது "முன்னிலையில்" மட்டும் இராமல், முழுக் களத்தையும் கட்டுப்படுத்தும். மேலும் இத்தகைய சூழ்நிலைகளில், நுகர்வு என்பது சமூக உடைமையாக்கப்படும்; ஏனெனில் நிறுவனங்களை (Trust) உடைமையாக கொண்டிருக்கும் 10 சதவிகிதத்தினரை விட, நாடு முழுவதும் உள்ள மற்றவர்கள் வேலைக்கூடங்களில் பொதுச் செலவில் வாழ்ந்து கொண்டிருப்பர். இவ்வாறு ரோஜ்கோவின் பின்னணியில், நன்கு அறிந்துள்ள டுகன்-பாரனோவ்ஸ்கியின் சிரித்த முகத்தைத்தான் நாம் காண்கிறோம். சோசலிசம் இப்பொழுது காட்சிக்கு வருகிறது. மக்கள் வேலைக்கூடங்களில் இருந்து வெளிப்பட்டு, அபகரித்து வாழ்ந்து வந்த குழுவினை அபகரித்து எடுத்துக் கொள்ளுகின்றனர். பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமோ, புரட்சியோ இதற்கு தேவையில்லை.

சோசலிசத்திற்காக ஒரு நாடு கனிந்துள்ளதற்கு இரண்டாவது பொருளாதார அடையாளம், ரோஜ்கோவின் கருத்தின்படி, அதற்குள் கூட்டுறவு உற்பத்திமுறை ஆதிக்கம் செலுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆகும். பிரான்சில்கூட ஆல்பியில் கூட்டுறவு முறையில் கண்ணாடி ஆலைகள் மற்ற முதலாளித்துவ நிறுவனங்களைவிட உயர்ந்த அளவில் இல்லை. கூட்டுறவு முறைகள் தொழிற்துறை வளர்ச்சியின் முன்னணியில், தலைமை வகிக்கும் நிறுவனங்களாக இருந்தால்தான் சோசலிச உற்பத்தி வகைக்கு சாத்தியக் கூறு உள்ளது.

ஆரம்பத்திலிருந்து முடிவுவரை முழு வாதமும் தலைகீழாக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி போதுமான அளவு கூடுதலாக முன்னேறிவிட்டது என்பதால் இல்லாமல், மிகக்கூடுதலாகவே போய்விட்டது என்பதால்தான் தொழிற்துறை முன்னேற்றத்தில் கூட்டுறவுகள் தலைமை தாங்கமுடியாது. பொருளாதார வளர்ச்சி இந்தக் கூட்டுறவிற்கான அடிப்படையை தோற்றுவிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லையென்றாலும், எத்தகைய கூட்டுறவிற்கு அது தளமிடுகிறது? கூலி-உழைப்பை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ கூட்டுறவில் இத்தகைய முதலாளித்துவ கூட்டுறவை ஒவ்வொரு ஆலையும் காட்டுகிறது. தொழில்நுட்பத்தின் வளரச்சியால் அத்தகைய கூட்டுறவின் அவசியமும் வளர்கிறது. ஆனால் "தொழிற்துறையின் முன்னணியில்" கூட்டுறவுச் சங்கங்களை முதலாளித்துவத்தின் வளர்ச்சி எவ்வகையில் இருத்த இயலும்? கூட்டுறவுச் சங்கங்கள் பெருநிறுவனங்களை அகற்றிவிட்டு தொழிற்துறையில் அவற்றின் முன்னணி இடத்தை பெறமுடியும் என்ற நம்பிக்கையை எந்த அடிப்படையில் ரோஜ்கோ கொண்டுள்ளார்? இவ்வாறு நடந்தால், கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்து முதலாளித்துவ நிறுவன அமைப்புக்களையும் இயல்பாகவே அபகரிக்கலாம் என்பதுடன், அதன் பின்னர் நாளாந்த வேலைநேரத்தின் அளவை குறைக்கவும், அதையொட்டி அனைத்துக் குடிமக்களுக்கும் வேலைகொடுக்கவும், பல துறைகளிலும் உற்பத்தி அளவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து நெருக்கடியை தவிர்க்கவும் இயலும். இவ்விதத்தில் சோசலிசத்தின் முக்கிய கூறுபாடுகள் அனைத்தும் நிறுவப்பட்டுவிடும். மேலும் புரட்சிக்கோ, தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கோ அவசியமே ஏற்படாது.

மூன்றாவது முன்நிபந்தனை உளவியல்ரீதியானது ஆகும்: 'பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க-நனவு மக்கட்தொகையின் அபரிமிதமான பெரும்பான்மையை உணர்வுரீதியாய் ஒன்றுபடுத்தக் கூடிய கட்டத்தை அடைந்திருப்பதற்கான' தேவை. இந்த எடுத்துக்காட்டில், 'உணர்வுரீதியான ஐக்கியம்' என்பது நனவான சோசலிச ஐக்கியம் என்ற பொருளைத் தரும் என்று கருதப்படவேண்டும் என்பதால், தோழர் ரோஜ்கோவ் சோசலிசத்திற்கு உளவியல் ரீதியாக இருக்கவேண்டிய முன்நிபந்தனை சமூக ஜனநாயக கட்சிக்குள் 'மக்கட் தொகையின் அபரிமிதமான பெரும்பான்மையை' கொண்டுள்ள அமைப்பை காணவேண்டும் என்று கருதுகிறார் போலும். முதலாளித்துவம் சிறு உற்பத்தியாளர்களை பாட்டாளி வர்க்கத்தின் அணிகளில் தூக்கிவீசிவிட்டு, பெரும்பாலான பாட்டாளி வர்க்கத்தினரை உழைப்பின் சேமிப்புப் படையில் சேர்த்துவிட்டால், சமூக ஜனநாயகத்திற்கு மக்களின் அபரிமிதமான பெரும்பான்மையை (90 சதவீதம்?) உணர்வு ரீதியாய் ஐக்கியப்படுத்தவும் அறிவொளியூட்டவும் சாத்தியத்தை தரும் என்று ரோஜ்கோவ் கருதுகிறார் என்பது வெளிப்படையாகிறது.

முதலாளித்துவ போட்டி உலகில் கூட்டுறவுகளின் ஆதிக்கம் எவ்வாறு சாத்தியமற்றதோ, அதேபோல்தான் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தன உலகில் இதை அடைவது முடியாததாகும். ஆனால், இது அடையப்படக் கூடியதென்றால், நனவுபூர்வமாக மற்றும் உணர்வுரீதியாக நாட்டின் 'அபரிமித பெரும்பான்மை' எந்தச் சிரமும் இன்றி முதலாளித்துவ முறையின் ஒரு சில பெரும்புள்ளிகளை நசுக்கிவிட்டு, புரட்சியோ, சர்வாதிகாரமோ இல்லாமல் சோசலிசப் பொருளாதாரத்தை அமைத்துவிடுவர்.

ஆனால், இங்கு கீழ்வரும் வினா எழுகின்றது: ரோஜ்கோவ் மார்க்சை தன்னுடைய ஆசிரியர் போல் போற்றுகிறார். ஆயினும்கூட, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் "சோசலிசத்திற்கான அத்தியாவசிய முன்நிபந்தனைகளை' கோடிட்டுக் காட்டியுள்ள மார்க்ஸ், 1848ம் ஆண்டுப் புரட்சியை, சோசலிச புரட்சிக்கு உடனடியான பீடிகை என்றுதான் கருத்தை தெரிவித்துள்ளார். முதலாளித்துவ உலகம் இன்னும் இருக்கிறது என்பதன் காரணமாக, மார்க்ஸ் பிழையாக புரிந்து கொண்டுள்ளார் என்பதற்கு, 60 ஆண்டுகளுக்குப் பின் ஆழ்ந்த ஆராய்ச்சி ஒன்றும் ஒருவருக்கு தேவைப்படவில்லைதான். ஆனால் மார்க்ஸ் இத்தகைய பிழையை எவ்வாறு செய்திருக்கக் கூடும்? அனைத்து தொழிற்துறை பிரிவுகளிலும் மிகப் பெரிய நிறுவனங்கள் இன்னும் ஆதிக்கம் செலுத்தும் நிலைமைக்கு வந்துவிடவில்லை என்பதை அவர் உணரவில்லையா?; உற்பத்தியாளர்களின் கூட்டுறவுகள் பெருநிறுவன உற்பத்தி முயற்சிகளுக்கும் இன்னும் தலைமை தாங்கிவிடவில்லை என்பதை அவர் அறியவில்லையா?; மக்களில் பெரும்பாலானவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் முன்வைத்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் இன்னும் ஒற்றுமையாகிவிடவில்லை என்பதை அறிந்திருக்கவில்லையா? இவ்விஷயங்களை நாமே இன்னும் பார்க்கவில்லை என்றால், இதுபோன்ற எதுவும் 1848ல் இருந்ததில்லை என்று மார்க்ஸ் ஏன் உணராமல் போனார்? அப்படியானால், இப்பொழுதுள்ள பல பிழையற்ற, ஒழுங்குடைய மார்க்சிச கோட்பாடுகளுடன் ஒப்பிடும்போது 1848ம் ஆண்டு மார்க்ஸ் தன்னுடைய இளமைக்கால கற்பனையில் இருந்தார் போலும்!

தோழர் ரோஜ்கோவ் மார்க்சினை விமர்சிப்பவர்களில் ஒருவர் இல்லை என்பதை நாம் பார்த்தாலும் கூட, பாட்டாளி வர்க்கப் புரட்சி சோசலிசத்திற்கு இன்றியமையாத முன்நிபந்தனை என்ற கருத்தை அவர் முற்றிலுமாக நிராகரித்துள்ளதை காண்கிறோம். எமது கட்சியிலேயே இரு பிரிவுகளிலும் உள்ள கணிசமான மார்க்சிஸ்டுகள் தெரிவித்துள்ள கருத்துக்களைத்தான் ரோஜ்கோவ் தொடர்ந்து தெரிவித்து வருவதால், கொள்கை மற்றும் வழிவகைகளின் அடித்தளத்தில் அவர் செய்துள்ள பிழைகளை பற்றி அணுகுவது அவசியமாகிறது.

ரோஜ்கோவ் கூட்டுறவுகளின் போக்கைப் பற்றி கூறியுள்ள வாதம் அவருடைய சொந்தக் கருத்துக்கள்தாம் என்பதை முதலில் ஒருவர் கூறியாகவேண்டும். உற்பத்தியை ஒருமுகப்படுத்தலின் இத்தகைய எளிமையான தங்குதடையற்ற முன்னேற்றத்தை, மற்றும் மக்கள் பாட்டாளி வர்க்க மயமாதல், அதே நேரத்தில் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு முன் உற்பத்தியாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கங்களின் மேலாதிக்கம் ஏற்படும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ள சோசலிஸ்டுகளை எங்கும், எப்பொழுதும் நாம் சந்தித்ததில்லை. இந்த இரு முன்நிபந்தனைகளையும், தலையில் புகுத்தி ஒன்றுபடுத்துவது எப்போதும் சாத்தியமற்றது என எங்களுக்கு தெரிகின்றபோதிலும், ஒருவருடைய தலையில் ஒன்றுபடுத்துவதைவிட பொருளாதர வளர்ச்சியில் ஒன்றுபடுத்துவது என்பது கடினமானது ஆகும்.

ஆனால், நாம் மற்றய இரு 'முன்நிபந்தனைகளை' பற்றிக் கூறுவோம், இவை மிகவும் எடுத்தக்காட்டான பாரபட்சங்களை கொண்டிருக்கின்றன. ஐயத்திற்கிடமின்றி, உற்பத்தியின் ஒருங்குவிப்பு, தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, மக்களிடையே நனவின் வளர்ச்சி ஆகியவை சோசலிசத்திற்கான முன்நிபந்தனைகளில் இன்றியமையாதவைதாம். ஆனால் இந்த போக்கு ஒரே நேரத்தில் நிகழ்வதுடன், இவை ஒன்றுக்கொன்று உந்துதலை கொடுப்பதோடு மட்டும் இல்லாமல், ஒன்றையொன்று தாமதப்படுத்தி, வரம்பிற்கும் உட்படுத்திவிடும். ஒரு உயர்ந்த அளவில் நிகழும் இந்த இரு போக்குகளில் ஒவ்வொன்றும் மற்ற போக்கின் ஒரு குறைந்த அளவிலான ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை வேண்டிநிற்கின்றது. ஆனால் ஒவ்வொன்றினதும் முழுமையான வளர்ச்சி மற்றையதின் முழுமையான வளர்ச்சியுடன் பொருந்தாததாக இருக்கும்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது சந்தேகத்திற்கு இடமின்றி இயற்கையின் கருவறையில் இருந்து மூலப் பொருட்களை எடுத்து, நுகர்வதற்கான முடிவுற்ற பொருட்களின் வடிவில் மனிதனுடைய காலடியில் வைக்கும் தனி ஒரு தானியங்கி இயங்குமுறையில் அதன் சிறந்த வரம்பை காண்கிறது. முதலாளித்துவ அமைப்பின் இருப்பானது, வர்க்க உறவுகளினாலும் அதில் இருந்து எழும் புரட்சிகரப் போராட்டத்தினாலும் வரம்பிற்குட்படுத்தப்படாவிடின், அந்த தொழில்நுட்பம் தனி ஒரு தானியங்கி இயங்குமுறையாக முதலாளித்துவ அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் சிறந்த கட்டத்தை அடையும் என்றும், அதன் மூலம் இயல்பாக அது முதலாளித்துவத்தை இல்லாதொழித்துவிடும் என்றும் நாம் கருத காரணங்கள் உண்டு.

போட்டியின் விதிகளால் விளையும் உற்பத்தி ஒருங்குவிப்பு, இயல்பாகவே முழு மக்களையும் பாட்டாளி வர்க்கமாக ஆக்கும் போக்கை கொண்டுள்ளது. இந்தப் போக்கை தனிமைப்படுத்திவிட்டால், முதலாளித்துவம் தன்னுடைய வேலையை இறுதிவரை செய்து முடிக்கும் என்று நாம் கருதினால் அது சரியாக இருக்கும்; பாட்டாளி வர்க்க மயமாக்கும் நிகழ்ச்சிப்போக்கு புரட்சியினால் குழப்பப்படாமல் இருக்குமானால் இது சாத்தியமாகும்; ஆனால், ஒரு குறிப்பிட்ட சக்திகளின் உறவுமுறையை எடுத்துக்கொண்டால், மிக முன்னதாகவே தேசத்தின் பெரும்பான்மையான மக்களை முதலாளித்துவம் ஓர் சேமிப்பில் உள்ள படையாக மாற்றும் முன்னர், அதாவது சிறைபோல் உள்ள பாசறைகளுள் அடைக்கும் முன்னர் இது தவிர்க்கப்பட முடியாதது ஆகும்.

மேலும், அன்றாட போராட்டத்தினாலும், சோசலிச கட்சிகளின் நனவான முயற்சிகளினாலும் நனவானது சந்தேகத்திற்கு இடமின்றி முற்போக்கான திசையில் வளர்கிறது; இந்தப் போக்குகளை தனிமைப்படுத்தி பார்த்தால், இந்த வளர்ச்சி பெரும்பாலான மக்கள், ஒற்றுமையுணர்வினாலும், ஒருமித்த இலக்கினாலும் தொழிற்சங்கங்களில் அல்லது அரசியல் கட்சிகளில் சேர்க்கப்பட்டுவிட்ட நிலையை நாங்கள் கற்பனை செய்து பார்க்கமுடியும். இந்தப் போக்கு உண்மையிலேயே பண்பு நீதியாக பாதிப்பை ஏற்படுத்தாது அளவுரீதியாக அதிகரிக்குமானால், சோசலிசம் மிக அமைதியான முறையில், முழு நனவுடன் கூடிய 'குடிமக்கள் செயற்பாடுகளின்படி' 21 அல்லது 22ம் நூற்றாண்டுகளில் அடையப்பட முடியும்.

வரலாற்றளவில் சோசலிசத்திற்கு தேவையான முன்நிபந்தனைகள் தனிமைப்பட்ட முறையில் வளர்வதில்லை என்பதும், ஒன்றையொன்று வரம்பிற்கு உட்படுத்தும் என்பதும், ஒரு கட்டத்தை அடைவதானது கணக்கிலடங்கா சூழ்நிலைகளை பொறுத்துத்தான் நிர்ணயிக்கப்படும்; எவ்வாறிருந்தபோதிலும் இந்த போக்கு எண்கணித வரம்புகளில் இருந்து வெகுதூரத்திலுள்ளது; இவை பண்புரீதியான மாறுதலுக்குட்பட்டு மற்றும் அவற்றின் சிக்கல்கள் நிறைந்த சேர்க்கையில் சமூகப்புரட்சி என்ற பெயரில் நாம் விளங்கிக்கொள்வதை நோக்கி கொண்டுசெல்கின்றது.

கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ள, அதாவது நனவின் வளர்ச்சி என்ற போக்கில் இருந்து தொடங்குவோம். நாம் அறிந்துள்ளபடி, இது ஒன்றும் கல்விக்கூடங்களில் தோன்றுவதில்லை; அப்படி இருக்கமுடியுமாயின் செயற்கையாக பாட்டாளி வர்க்கத்தை ஐம்பது, நூறு அல்லது ஐந்நூறு ஆண்டுகளுக்கு அதே இடத்தில் நிறுத்தி வைக்க முடியும்; ஆனால் முதலாளித்துவ சமுதாயத்தின் அனைத்துக் கூறுபாடுகளின் போக்கில் இது இடைவிடா வர்க்கப் போராட்டத்தின் மூலம் விளைகிறது. இந்த பாட்டாளி வர்க்கத்தின் நனவின் வளர்ச்சியானது இந்த வர்க்கப் போராட்டத்தின் தன்மையை மாற்றுகிறது, அதற்கு ஆழ்ந்த, கூடுதலான நோக்கத்தையுடைய தன்மையை கொடுக்கிறது, அதையொட்டி ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்திடம் அது தொடர்பான பிரதிபலிப்பை ஏற்படுத்துகின்றது. முதலாளித்துவத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் இந்த போராட்டம் பெரும் நிறுவனங்கள் தொழிற்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் ஆதிக்கத்தை செலுத்த தொடங்குவதற்கு முன்பே ஏற்பட்டு விடுகிறது.

மேலும், அரசியல் நனவின் வளர்ச்சியானது, பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கை பெருக்கத்தில் தங்கியுள்ளது என்பது உண்மைதான், மற்றும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பது முதலாளித்துவ எதிர்ப்புரட்சி தடைகளை கடக்கும் ஆற்றலை பெற்றிருக்கும் வகையில் பாட்டாளி வர்க்கம் கணிசமான முறையில் கூடுதலான எண்ணிக்கையை பெற்றிருப்பதாகும். "அபரிமித பெரும்பான்மையான" மக்கட்தொகையினர் பாட்டாளிகளாக இருந்தாக வேண்டும் என்றோ, பாட்டாளி வர்க்கத்தின் "அபரிமித பெரும்பான்மை" நனவான சோசலிஸ்டுகளாக இருக்கவேண்டும் என்றோ பொருள் கிடையாது. ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் நனவான புரட்சிகர இராணுவம் மூலதனத்தின் எதிர்ப்புரட்சி படையைவிட வலிமையானதாக இருக்கும் என்றும், இடைப்பட்ட, சந்தேகம் நிறைந்த அல்லது பக்கம் சாராத மக்கள் தட்டுக்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியின் தன்மையினால் புரட்சியின் பக்கம் ஈர்க்கப்படுவர் என்றும் எதிரிகளின் பக்கம் தள்ளப்பட மாட்டார்கள் என்பதும் தெளிவாகும். இயல்பாகவே, பாட்டாளி வர்க்கத்தின் கொள்கை இதை நனவுபூர்வமாக கட்டாயம் கருத்தில் எடுத்துக் கொள்ளும்.

இவை அனைத்துமே, விவசாயத்துறையின் மீது தொழில்துறையின் மேலாதிக்கம் என்ற முன்நிபந்தனையையும், நாட்டுப்புறத்தின் மீதாக நகர்ப்புறத்தின் ஆதிககம் என்ற முன்நிபந்தனையையும் கொண்டவை ஆகும்.

இந்த சோசலிசம் பற்றிய முன்நிபந்தனைகளை பொதுத்தன்மையின் குறைந்துசெல்லும் ஒழுங்கிலும், சிக்கல் வாய்ந்த தன்மையின் அதிகரித்துச்செல்லும் ஒழுங்கிலும் இப்பொழுது ஆராயமுற்படுவோம்.

1. சோசலிசம் என்பது வெறும் சமமான பங்கீட்டு முறை பற்றிய பிரச்சினை மட்டும் அல்ல; அது திட்டமிட்ட உற்பத்தி முறை பற்றிய பிரச்சினையும் கூட ஆகும், அதாவது மிகப் பெரிய அளவிலான கூட்டுறவு உற்பத்தியாகும், அது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியானது பெரியளவிலான நிறுவனங்கள் சிறியவற்றைவிடக் கூடுதலான உற்பத்தித் திறனை கொண்டிருக்கும் கட்டத்தை அடையும்பொழுதுதான் சாத்தியமாகும். சிறிய நிறுவனங்களைவிட பெரிய நிறுவனங்கள் கூடுதலான ஆற்றலைப் பெற்றிருக்கும் நிலையில்தான், அதாவது கூடுதலான தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இயக்கப்படும் நிலையில்தான், சமூகமயப்பட்ட உற்பத்தி முறை பொருளாதாரரீதியில் கூடுதலான அனுகூலங்களைப் பெறும் என்பதால், அதன் விளைவாக திட்டமிட்ட உற்பத்தி முறையின் அடிப்படையிலான சம விநியோகத்தின் விளைவினால் முழு மக்கட்தொகையின் கலாச்சார மட்டமும் உயர்ந்த அளவில் இருக்கும்.

சோசலிசத்திற்கான முதல் புறநிலையான முன்நிபந்தனை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது; உற்பத்தித்துறையில் உழைப்புப் பிரிவினைக்கு வழிவகுத்த சமூக உழைப்புப் பிரிவினை ஏற்பட்ட காலத்தில் இருந்தே இது உள்ளது. இன்னும் கூடுதலான முறையில், உற்பத்தி முறைக்கு பதிலாக, ஆலை, இயந்திரமுறை உற்பத்தி வந்ததுடனேயே இது தொடர்ந்திருந்தது. பெரிய நிறுவனங்கள் கூடுதலான நன்மைகளை கொண்டுள்ளன; இதன் பொருள் இத்தகைய பெரிய அமைப்புக்கள் சமூகமயமாக்கப்பட்டால், சமுதாயம் பெருகிய நிலையில் செல்வக்கொழிப்பை பெறும் என்பதாகும். அனைத்து கைவினை தொழிற்கூடங்களும் அனைத்து கைவினையாளர்களின் பொதுஉடைமைக்கு கொண்டுவரப்பட்டால் பிந்தைய முறையில் எந்தச் செல்வவள பெருக்கமும் ஏற்பட்டிருக்காது; ஆனால் உற்பத்திப் பொருட்களின் பொதுஉடைமை என்பது சிறு தொழிலாளர்களுக்கு மாற்றப்படுதல் என்பது, அதாவது ஆலைகள் அங்கு வேலைசெய்து கொண்டிருக்கும் தொழிலாளர்களின் கைகளுக்கு மாற்றப்படுவது என்பது, வேறுவிதத்தில் சிறப்பாகக் கூறுவது என்றால் பெரும் ஆலையின் உற்பத்தி முறைகள் அனைத்தும் முழுமக்கட்தொகுப்பின் கட்டுப்பாட்டிற்குள் மாற்றப்பட்டுவிட்டது என்று கூறினால், அது ஐயத்திற்கிடமின்றி மக்களுடைய சடம்சார்ந்த தரத்தை (Material Level) உயர்த்தும்; மிகப் பெரிய உற்பத்தி முறையில் அதிஉயர் கட்டத்தைப் பொறுத்து மக்களுடைய சடம்சார்ந்த தர உயர்வும் கூடுதலாக இருக்கும்.

சோசலிச இலக்கியத்தில் இந்நிகழ்வு அடிக்கடி இங்கிலாந்து பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவர் தொடர்பாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது: 1696ம் ஆண்டில், Babeuf  சதிக்கு நூறாண்டுகள் முன்பாக பெல்லெர்ஸ் என்னும் பாராளுமன்ற உறுப்பினர் தங்களின் சொந்த தேவைகள் அனைத்தையும் தாங்களே அளித்துக் கொள்ளும் ஆற்றல் படைத்த கூட்டுறவுச் சங்கங்களை நிறுவுதல் பற்றிய திட்டம் ஒன்றை அளித்திருந்தார். இந்த நடவடிக்கையின்படி, உற்பத்தியாளர்களின் இக்கூட்டுறவுச் சங்கங்கள் இருநூறில் இருந்து முன்னூறு உறுப்பினர்களை கொண்டிருக்கவேண்டும். இந்த வாதத்தை நாம் சோதிக்க இயலாது என்பதுடன் நம்முடைய நோக்கத்திற்கு அது தேவையும் இல்லை; கூட்டுப் பொருளாதாரம் 100, 200, 300 அல்லது 500 உறுப்பினர்களைக் கொண்ட முறையில் கருத்தாய்வாக எடுத்துக் கொள்ளப்படுவது 17ம் நூற்றாண்டின் இறுதியிலேயே உற்பத்தி தொடர்பான பார்வையில் கூடுதலான நலன்களைக் கொண்டதாக நினைக்கப்பட்டது என்பதுதான் முக்கியத்துவம் வாய்ந்தது.

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஃபூரியே (Fourier) 2,000 த்தில் இருந்து 3,000 பேர்கள் அடங்கிய தன்னுடைய phalansteriesஎனப்படும் உற்பத்தியாளர்-நுகர்வோர் அமைப்புகள் பற்றிய வகையில் திட்டங்களை தயாரித்தார். இவருடைய மதிப்பீடுகள் துல்லியமான தன்மைக்கு பிரசித்தி பெறவில்லை; ஆயினும்கூட உற்பத்தி முறையில் அப்பொழுது ஏற்பட்டிருந்த வளர்ச்சி, அவருக்கு மேற்கூறிய உதராணங்களில் இருந்ததைவிட பரந்த வகையில் பொருளாதார கூட்டுறவுச் சங்கங்களுக்கான கருத்துக்களை புலப்படுத்தின. ஜோன் பெல்லெர்சின் சங்கங்களும், ஃபூரியே இன் "phalansteries" உம் தங்களுடைய இயல்பில் அராஜக கோட்பாடுடையவர்கள் (Anarchists) கனவு கொண்டிருந்த தடையற்ற பொருளாதார கம்யூன்களின் இயல்பை ஒத்திருந்தன என்பது தெளிவானதே; அமெரிக்காவில் இருந்த கம்யூனிச கூட்டுமுறைகள் அவ்வாறு இருக்க முடியும் என்று நிரூபித்திருந்தபோதிலும், இதன் கற்பனாவாதம் அவற்றின் 'சாத்தியமற்ற தன்மை அல்லது 'இயற்கைக்கு புறம்பானது' என்பதால் அல்லாது பொருளாதார முன்னேற்றத்தின் வளர்ச்சியில் 100 அல்லது 200 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் இருந்தது என்பதிலேயே இருந்தது.

ஒரு புறத்தில் உழைப்பின் சமூகப் பிரிவும், மறுபுறத்தில் இயந்திர முறையில் உற்பத்தியும் இப்பொழுது கூட்டு உற்பத்தி முறையின் நலன்களை பரந்த முறையில் பிரயோசனப்படுத்தக்கூடிய ஒரே அமைப்பு அரசுதான் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதையும்விடக் கூடுதலான முறையில், பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக, சோசலிச உற்பத்தி முறை தனிப்பட்ட அரசுகளின் வரம்பிற்குள் அடக்கப்பட்டுவிட முடியாது என்பதை தெரிவிக்கிறது.

ஒரு ஜேர்மன் சோசலிஸ்டாக இருந்த அட்லான்டிக்கஸ், மார்க்சிச பார்வையை ஏற்காதவர், கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஜேர்மனியினுள் சோசலிச பொருளாதாரத்தை அறிமுகப்படுத்துவதால் ஏற்படும் பொருளாதார நலன்களை மதிப்பீடு செய்துள்ளார். கற்பனை சிறகடித்துள்ள முறையில் அட்லாண்டிக்கஸ் பெருமையடையவில்லை. அவருடைய கருத்துக்கள் பொதுவாக முதலாளித்துவ பொருளாதார நடைமுறை வட்டத்திற்குள்தான் அடிப்படையை கொண்டிருந்தன. அவர் தனது விவாதங்களை ஆளுமைமிக்க நவீன நம்பிக்கைக்குரிய பயிற்றுவிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொறியியலாளர்களை அடித்தளமாக கொண்டிருந்தார். இது அவருடைய வாதங்களை வலுவிழக்கச் செய்துவிடவில்லை; சொல்லப்போனால் இது அதற்கு வலிமை கொடுக்கிறது; ஏனெனில் மிக்ககூடுதலான நம்பிக்கையிலிருந்து அவரைக் காப்பாற்றுகிறது. எப்படிப்பார்த்தாலும், 19ம் நூற்றாண்டின் 90களின் நடுப்பகுதிகளில் இருந்த தொழில்நுட்ப இருப்புக்களை பயன்படுத்தி சோசலிச பொருளாதாரம் முறையாக அமைக்கப்பட்டால், தொழிலாளர்களுடைய வருமானம் இரட்டிப்பு ஆகும் அல்லது மூன்று மடங்குகூட ஆகும் என்றும், வேலைநாளின் காலஅளவு அரைவாசியாக குறைக்கப்படலாம் என்றும் அவர் முடிவிற்கு வந்தார்.

ஆனால் அட்லான்டிகஸ்தான் சோசலிசத்தின் பொருளாதார நலன்களை முதலில் வெளிப்படுத்தியவர் என்று நினைக்கவேண்டிய தேவையில்லை. பெரிய நிறுவனங்களில் அதிகமான உழைப்பின் உற்பத்தித்திறன் ஒருபுறமும், பொருளாதார நெருக்கடிகளுக்கேற்ப உற்பத்தியை திட்டமிடுதலுக்கான தேவை மறுபுறமும், அட்லாண்டிக்கின் சோசலிச கணக்கு வைப்பு முறையை விடக் கூடுதலான வகையில் சோசலிசம் தேவை என்பதற்கு சான்றாக இருந்துள்ளது. அவருடைய பணி இந்த நலன்களை தக்க புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டதில்தான் இருக்கிறது.

மேலே கூறப்பட்டவற்றில் இருந்து, இன்னும் கூடுதலான வகையில் மனிதனுடைய தொழில்நுட்ப சக்தி வளர்தல் என்பது சோசலிசத்தை இன்னுக் கூடுதலான அனுகூலமுடையதாக ஆக்கும் என்ற முடிவிற்கு வருவதை நியாயப்படுத்தும்; கூட்டு உற்பத்தி முறைக்குத் தேவையான தொழில்நுட்ப முன்தேவைகள் ஏற்கனவே நூறு, இருநூறு ஆண்டுகளாக இருந்துவருகின்றன; இப்பொழுது சோசலிசம் என்பது தொழில்நுட்ப வகையில் அனுகூலத்தை தேசிய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் கொடுக்கும்.

சோசலிசத்தினுடைய வெறும் தொழில்நுட்ப சாதகங்கள் மட்டும் அதை அடையப்போதும் என்று கருதப்படவேண்டாம். 18, 19ம் நூற்றாண்டுகளில், பெரிய அளவு உற்பத்தி முறையின் சாதகங்களை சோசலிச முறையில் மட்டுமல்லாது ஒரு முதலாளித்துவ வடிவத்திலும் தங்களை காட்டியது. பெல்லெர்சுடைய திட்டங்களோ, பூரியேவுடைய திட்டங்களோ நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஏன் நடக்கவில்லை? ஏனெனில் அக்காலத்தில் அவற்றை ஏற்று செயல்படுத்தக்கூடிய சமூக சக்திகள் இருக்கவில்லை.

2. இப்பொழுது நாம் சோசலிசத்தின் உற்பத்தி-தொழில்நுட்ப முன்நிபந்தனைகளிலிருந்து சமூக-பொருளாதார முன்நிபந்தனைகளுக்கு செல்வோம். ஒரு வர்க்க முரண்பாடுகளால் பிளவுற்றிருக்கும் சமூகத்தைப் பற்றி ஆய்வு செய்யவில்லையென்றால், நனவுடன் தன்னுடைய பொருளாதார அமைப்பை தேர்ந்தெடுத்துள்ள ஒரே தன்மையுடைய சமூகம் பற்றிப் பேசுகிறோம் என்றால், அட்லான்டிக்கசுடைய கணக்குகள் சந்தேகத்திற்கிடமில்லாமல் ஒரு சோசலிச அமைப்பை நிறுவுவதற்குப் போதுமானவை. ஒரு கொச்சையான சோசலிசவாதியாக அட்லான்டஸ் இருந்ததால் தன்னுடைய பணியையும் அவ்வாறே கருதினார். அத்தகைய கருத்து இந்நாளில் ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் தனிப்பட்ட வணிகத்தின் வரம்பிற்குள்தான் பிரயோகிக்கப்பட முடியும். ஒரு புதிய இயந்திரத்தை புகுத்துதல், புதிய மூலப் பொருட்களை கொள்ளுதல், தொழிலாளரை நிர்வாகிப்பதற்கு ஒரு புது வகையான நிர்வாகத்தை கொள்ளுதல், புதிய வகையிலான ஊதியங்கள் அளித்தல் போன்ற திட்டங்கள் வணிக நலன்களை பெருக்கும் என்றாலே, உரிமையாளர்களால் நன்மை தரக்கூடியவை என்று அறியப்பட்டவுடன், அவை நடைமுறைப்படுத்தப்படும் என்ற கருத்து நியாயமானதே. ஆனால் சமுதாயத்தின் பொருளாதாரம் என்ற முறையில் நலன்களைப் பற்றி ஆய்வு செய்யும்போது, இது போதாது. இங்கு ஒன்றுக்கொன்று எதிரான நலன்கள் முரண்படுகின்றன. ஒரு பிரிவிற்கு அனுகூலமானவை என்று கருதப்படுபவை மற்றொரு பிரிவிற்கு பிரதிகூலமானவை என்ற கருத்து உண்டு. ஒரு வர்க்கத்தின் சுயநலம் மற்றொன்றின் சுயநலத்திற்கு எதிராக செயலாற்றுவது மட்டுமல்லாமல் முழுச்சமுதாயத்தின் நலன்களுக்கும் பிரதிகூலமாக இருக்கின்றது. எனவே சோசலிசத்தை அடைவதற்கு, முதலாளித்துவ சமுதாயத்தில் உள்ள முரண்பாடான வர்க்கங்களுக்கிடையே, சோசலிசத்தை அடைய வேண்டும் என்ற அக்கறையுடைய சமூக சக்தி, தன்னுடைய புறநிலை இருப்பினால் அது சக்திவாய்ந்ததாக இருந்து, சோசலிசத்திற்கு எதிரான போக்குகளையும், தடைகளையும் கடக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.

விஞ்ஞான சோசலிசத்தால் செய்யப்பட்ட அடிப்படை சேவைகளின் ஒன்று, அவ்வாறான சமூக சக்தியை தத்துவார்த்த ரீதியாக பாட்டாளி வர்க்கத்திடம் கண்டுபிடித்ததும், இந்த வர்க்கம் முதலாளித்துவத்துடன் கூடி தவிர்க்கமுடியாத வகையில் வளர்ச்சியடைவதையும், இது தனது விடுதலையை சோசலிசத்தில் மட்டுமே அடையமுடியும் என்பதையும், பாட்டாளி வர்க்கத்தின் முற்றுமுழுதான நிலைமையும் சோசலிசத்தை நோக்கிக் கொண்டு செல்வதையும், சோசலிச கொள்கைவழி பாட்டாளி வர்க்கத்தின் தத்துவமாக வேண்டியதன் அத்தியாவசியத்தையும் எடுத்துக்காட்டுவதாகும்.

எனவே "உற்பத்தி சாதனங்களை அரசின் கைகளுக்கு மாற்றிவிட்டால் பொதுநலம் அடையப்பட்டுவிடும் என்பதுடன், ஒரு நாளில் வேலைநேரம் குறைக்கப்படும்; இதன்பின் மூலதனக் குவிப்பு தத்துவம் மற்றும் சமுதாயத்தில் இடைப்பட்ட வர்க்கங்கள் மறைந்து விடுதல் உறுதியாகுமா, ஆகாதா போன்றவை பொருட்டின்றிப் போய்விடும்" என்று அட்லான்டிக்கஸ் கூறுவது பெரும் பிற்போக்கான நடவடிக்கை என்று அறிந்து கொள்ளுதல் எளிதாகி விடும்.

சோசலிசத்தின் நன்மைகள் நிரூபிக்கப்பட்ட உடனேயே, "பொருளாதார வளர்ச்சி என்பதைப் பற்றிய வற்புறுத்தல்கள் நிறைந்த கருத்துக்களோடு நிற்காமல், மிகப் பரந்த முறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முற்றிலும் விரிவான, பரந்த தயாரிப்பை தனியார் உற்பத்தி முறையில் இருந்து அரசு அல்லது "சமுதாய" உற்பத்தி முறைக்கு மாற்றுவதற்கான ஆரம்ப செயற்பாடுகள்(!) வேண்டும்." [2] என்பது அட்லான்டிக்கசுடைய கருத்தாகும்

சமூக ஜனநாயகவாதிகளின் முற்றிலும் எதிர்ப்பு நிறைந்த தந்திரோபாயங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து, சோசலிசத்திற்கு மாறுவதற்கு உடனடியான தயாரிப்புக்கள் "ஆரம்பிக்கப்பட வேண்டும்" என்று கூறுகையில், சமூக ஜனநாயகவாதிகள் இதைச் செய்வதற்கான சக்தியை இன்னும் கொண்டிருக்கவில்லை என்பதையும், இரண்டாம் வில்ஹலெம், பல்லோ மற்றும் ஜேர்மன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்கள் இதைச் செய்யும் சக்தியை கொண்டுள்ள போதிலும், சோசலிசத்தை அறிமுகப்படுததுவதற்கு சிறிதும் விருப்பமற்றவர்களாக உள்ளதையும், அட்லான்டிக்கஸ் மறந்து விடுகிறார். அதிகாரத்திற்கு மீட்கப்பட்டிருந்த போர்பன்களுக்கு (Bourbons) ஃபூரியேயுடைய திட்டங்களை செயல்படுத்துவதற்கு உடன்பாடு இல்லையோ, அதேபோல்தான் ஹோஹன்ஜோலர்களுக்கு (Hohenzollerns) அட்லான்டிக்சுடைய சோசலிச திட்டங்களிடத்தில் நம்பிக்கை இல்லை; ஃபூரியேயுடைய அரசியல் கற்பனாவாதம் பொருளாதார கொள்கையின் தீவிர ஆர்வத்தை தளமாக கொண்டிருந்தது; அட்லான்டிக்கஸசுடைய போக்கு கற்பனாவாத அரசியல் நிறைந்திருந்தாலும், அவர் தன்னுடைய பிலிஸ்தீனிய - நிதானப் போக்குடைய கணக்கு எழுதும் முறையில்தான் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோசலிசத்தின் இரண்டாம் முன்நிபந்தனை அடையப்படுவதற்கு சமூக வேறுபாடுகளின் தரம் எத்தன்மையை கொண்டிருக்க வேண்டும்? வேறுவிதமாகக் கூறினால், பாட்டாளி வர்க்கத்தின் ஒப்புமையிலான எண்ணிக்கையின் வலிமை எவ்வாறு இருக்கவேண்டும்? மக்கட்தொகையில் அது ஒரு பாதியாக அல்லது மூன்றில் இரு பங்கு அல்லது பத்தில் ஒன்பது பங்கு என்று இருக்க வேண்டுமா? சோசலிசத்திற்கான இரண்டாம் முன்நிபந்தனை இத்தகைய வெறும் எண்கணித வரம்பிற்குள் வரையறுத்துக் கூறுதல் என்பது முற்றிலும் நம்பிக்கையற்ற செயற்பாடாகும். முதலில், இத்தகைய திட்டமிட்ட முறையில், 'பாட்டாளி வர்க்கம்' என்ற பிரிவினுள் எவர் சேர்க்கப்படவேண்டும் என்ற கேள்விக்கு நாம் விடையைக் கொண்டிருக்க வேண்டும். ஏராளமான அரை-பாட்டாளி, அரை-விவசாயிகளையும் நாம் இதில் சேர்த்துக் கொள்ளவேண்டுமா? நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்தின் இருப்பு படையாகவுள்ள மக்கட்தொகையையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டுமா? இவர்கள் ஒருபக்கம் ஒட்டுண்ணித் தொழிலாள வர்க்கத்தின் பிச்சைக்காரர்கள், திருடர்கள் என்ற தொகுப்பில் இணைந்துள்ளனர்; மறுபுறமோ, பொருளாதார அமைப்பு ஒட்டுமொத்தம் தொடர்பானதில் ஒரு ஒட்டுண்ணிப் பாத்திரத்தை ஆற்றும் சிறு வணிகர்கள் போல நகரத் தெருக்களில் நிறைந்துள்ளனர். இதற்கான விடை காணுதல் எளிமையானது அன்று.

பாட்டாளி வர்க்கத்தின் முக்கியத்துவம் பாரியவகை உற்பத்தியில் அது கொண்டுள்ள பங்கைத்தான் முற்றிலும் நம்பகமாகக் கொண்டுள்ளது. தன்னுடைய அரசியல் ஆதிக்கத்திற்கான போராட்டத்தில் முதலாளித்துவம் தன்னுடைய பொருளாதார சக்தியைத்தான் நம்பியுள்ளது. அது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பு, நாட்டின் உற்பத்தி சாதனங்கள் அனைத்தையும் தன்னுடைய கைகளில் குவிக்கும் முயற்சியில் கவனத்தைச் செலுத்துகிறது. இதுதான் சமுதாயத்தில் அதன் கனபரிமாணத்தை உறுதி செய்கிறது. அனைத்துக் கூட்டுறவுக் கற்பனைக் கருத்துக்கள் இருந்தபோதிலும், தொழிலாளர் வர்க்கம், சோசலிச புரட்சி உண்மையில் ஏற்படும் வரை உற்பத்திச் சாதனங்களின் மீதான கட்டுப்பாட்டைப் பெற முடியாது. அதனுடைய சமூக சக்தியின் உறைவிடம், முதலாளித்துவத்தின் கையில் இருக்கும் உற்பத்திச் சாதனம் இதன் மூலம்தான் இயக்கப்படமுடியும் என்பதில்தான் இருக்கிறது. முதலாளித்துவ பார்வையின்படி, உற்பத்தி சாதனங்களின் பலவழிவகைகளில் தொழிலாள வர்க்கமும் ஒன்று; மற்றவற்றுடன் இணைந்து ஓர் ஒன்றுபடுத்தப்பட்ட இயக்கத்தின் உற்பத்திசாதனமாகும். ஆனால், இந்த இயக்க முறையில் தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் தானியங்கி என்ற முறையில் இல்லாத பிரிவாகும்; எவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டலாம், அது தன்னியக்கமுள்ளதாக குறைமதிப்பிற்குட்படாது. இந்த நிலைமைதான் தொழிலாள வர்க்கத்திற்கு தன் விருப்பத்தின்படி நிமிர்ந்து நிற்பதற்கு, பகுதியாகவோ, முழுமையாகவோ சமூகத்தின் பொருளாதாரச் செயற்பாடு சரியாக இயங்குவதற்கு, பகுதி அல்லது முழு வேலைநிறுத்தத்தின் மூலம் கிடைக்கிறது. ஒரே மாதிரியான எண்ணிககை இருக்கும் என்று கொண்டால், தொழிலாளர் வர்க்கத்தின் முக்கியத்துவம் இது ஆரம்பிக்கின்ற உற்பத்தி சக்திகளின் அளவைப் பொறுத்து விகிதாசாரத்தில் பெருகும். மற்றவை சமமாக இருந்தால், ஒரு பெரிய தொழிற்சாலையில் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்தவர், கைவினைஞரைவிடக் கூடுதலான முறையில், நகர்ப்புற தொழிலாளர், கிராமப்புற தொழிலாளரைவிடக் கூடுதலான முறையில் சமூக முக்கியத்துவத்தை பெற்றிருப்பார். வேறுவிதமாகக் கூறினால், பெரிய அளவு உற்பத்திமுறை சிறு உற்பத்தியை விட ஆதிக்கம் செலுத்துவது போல், தொழிற்துறை விவசாயத்துறையை விட ஆதிக்கம் செலுத்துவது போல், நகர்ப்புறம் கிராமப்புறத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவது போல், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் பங்கு பெருகிய முறையில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது ஆகும். ஜேர்மனி அல்லது இங்கிலாந்தின் வரலாற்றை, இந்நாடுகளில் இருந்த தொழிலாள வர்க்கம் இப்பொழுது ரஷ்யாவில் தொழிலாள வர்க்கம் கொண்டுள்ள நிலையை, அக்காலக்கட்டத்தில் பெற்றிருந்தால், அவை இத்தகைய பங்குளை செலுத்தவில்லை என்பதுடன், புறநிலை ரீதியாக இன்றைய ரஷ்ய தொழிலாளர் ஆற்றும் பங்கை அவர்கள் ஆற்றியிருக்கவும் இயலாத நிலையில்தான் இருந்தனர் என்பதை அறிய முடியும்.

இதேபோன்ற நிலைதான், நாம் ஏற்கனவே பார்த்துள்ளபடி சிறுநகரங்களின் பங்கிற்கும் பொருந்தும். ஜேர்மனியில் நகரங்களிலிருந்த மக்கள் எண்ணிக்கை, நாட்டின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவிகிதமாகத்தான், இன்று ரஷ்யாவில் இருப்பதைப்போல், இருந்தபோது, இன்று ரஷ்ய சிறுநகரங்கள் நாட்டின் அரசியலில் கொண்டுள்ள பங்கைப் போல், அப்பொழுது ஜேர்மனியிலும் சிறுநகரங்கள் கொண்டிருக்க முடியும் என்பது நினைத்தும் பார்க்க முடியாததாகும். சிறு நகரங்களில் பெரிய தொழிற்துறை, வணிக அமைப்புக்கள் குவிந்திருப்பது, ரயில் போக்குவரத்து மூலம் சிறுநகரங்களும் பல மாநிலங்களும் தொடர்பை கொண்டுள்ளது, நம்முடைய நகரங்களுக்கு அவற்றில் வாழும் மக்களின் எண்ணிக்கை விகிதத்தைவிட கூடுதலான முக்கியத்துவத்தை அளித்துள்ளது; அவற்றின் முக்கியத்துவம் பெருகியது அவர்களுடைய மக்கள் எண்ணிக்கையைவிடக் கூடுதலான விகிதத்தை கொண்டுள்ளமை; சிறுநகரங்களின் வளர்ச்சி நாட்டு மக்களுடைய இயற்கையான மக்கட்தொகை வளர்ச்சியைவிட பெருகிய தன்மையில் முக்கியத்துவம் கொண்டுள்ளது. ...1848ம் ஆண்டு இத்தாலியில், வெறும் தொழிலாளர்கள் என்றில்லாமல், சொந்தக் கைவினைஞர்களையும் சேர்த்த தொகுப்பின் எண்ணிக்கை நாட்டின் மக்கட்தொகையில் கிட்டத்தட்ட 15 சதவிகிதம் என்று இருந்தது; அதாவது இன்றைய ரஷ்யாவில் கைவினைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தைவிட குறைவானது அல்ல என்ற தன்மையை கொண்டிருந்தது. ஆனால் இன்றைய ரஷ்ய தொழிற்துறை தொழிலாள வர்க்கம் ஆற்றும் பங்கை விட மிகக் குறைந்த அளவில், ஒப்பிடமுடியாத நிலையில்தான் அவர்களின் பங்கு அங்கு இருந்தது.

மேலே கூறப்பட்டதில் இருந்து, அரசியல் அதிகாரத்தை வெற்றிகொள்ளும் நேரத்தில் முழு மக்கட்தொகையில், எந்த விகிதம் தொழிலாள வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என வரையறுக்கும் முயற்சி, பயனற்ற செயல் என்பது தெளிவாகும். அதற்குப் பதிலாக, இப்பொழுது பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ள சில நாடுகளில் தொழிலாள வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஒப்புமையில் எந்த எண்ணிக்கையில் உள்ளனர் என்பதைப்பற்றி அண்ணளவாக கொடுப்போம். 1895ல் ஜேர்மனியின் மக்கட்தொகையில் வேலைபார்ப்பவர்கள் எண்ணிக்கை 20,500,000 (இராணுவம், அரசாங்க அதிகாரிகள், குறிப்பிட்ட வேலை என்று பார்க்காதவர்கள் சேர்க்கப்படாத எண்ணிக்கை) என்று இருந்தது. இந்த எண்ணிக்கையில் 12,500,000 பேர் பாட்டாளி வர்க்கத்தினராக (விவசாயத் துறை, தொழிற் துறை, வணிகத்துறை, வீட்டுப் பணியாளர்கள் என்று ஊதிய வேலையில் இருப்பவர்கள் அடங்கியது) உள்ளனர்; விவசாய, தொழிற்துறை தொழிலாளர்கள் 10,750,000 என்று இருந்தது. எஞ்சியுள்ள 8,000,000 பேரும் உள்ளூர் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் போன்றவர்கள், குடும்பத்தின் உழைக்கும் உறுப்பினர்கள் ஆவர்.

விவசாயத்துறையில் கூலித் தொழிலாளர்களை தனியே பார்க்கும்போது 5,750,000 என்ற எண்ணிக்கையில் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கட்தொகையில் 36 சதவீதத்தினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 1895 புள்ளிவிவரம் என்பது மறுபடியும் வலியுறுத்தப்படுகிறது. அதற்குப் பின் 11 ஆண்டுகள் கடந்துள்ளமை ஐயத்திற்கு இடமின்றி மகத்தான மாறுதல்களை தோற்றுவித்திருக்கலாம்; நகர்ப்புற மக்கள், விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் விகிதத்தில் பெருகியிருப்பதில், (1882ல் மொத்தத்தில் 42 சதவீதத்தினர் விவசாய சார்புடையவர்களாக இருந்தனர்), விவசாயத்துறை பாட்டாளி வர்க்கத்திற்கு தொழிற்துறை பாட்டாளி வர்க்கத்தின் வீதம் அதிகரிப்பில் மற்றும் இறுதியாக, 1895ஐ ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஒரு தொழிற்துறை தொழிலாளிக்கு உற்பத்தி மூலதனத்தின் தொகையில் அதிகரிப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் 1895 புள்ளிவிவரங்கள் கூட நீண்டகாலத்திற்கு முன்னரே ஜேர்மன் பாட்டாளி வர்க்கம் நாட்டின் ஆதிக்கம் செலுத்தும் உற்பத்தி சக்தியாக இருந்தது என்பதை காட்டியுள்ளன.

7,000,000 மக்களை கொண்டுள்ள பெல்ஜியம் ஒரு முழுமையான தொழிற்துறை வளர்ச்சி பெற்ற நாடாகும். ஏதோ வேலையில் ஈடுபட்டுள்ள 100 பேர்களில் 41 பேர் தொழிற்துறை என்று சரியாக ஏற்கக்கூடிய துறையில் உள்ளனர்; 21 சதவீதத்தினர்தான் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். 3,000,000த்தை ஒட்டி இருக்கும் ஊதியத்திற்கு வேலைபார்ப்போரில் 1,800,000 அல்லது கிட்டத்தட்ட 60 சதவிகிதத்தினர் பாட்டாளி வர்க்கத்தினராவர். இந்த எண்ணிக்கை தீவிரமாக வேறுபடுத்தப்பட்டுள்ள பாட்டாளி வர்க்கம், அத்துடன் தொடர்புடைய சமூக உறவுகளையும் சேர்த்துக்கொண்டால், அதாவது "சுதந்திரமான" உற்பத்தியாளர்கள் என்று வடிவத்தில் மட்டும் சுதந்திரமான, ஆனால் உண்மையில் மூலதனத்திற்கு அடிமைப்படுத்தப்பட்டு இருப்போர், மற்றும் கீழ்மட்ட அதிகாரிகள், படைவீரர்கள் ஆகியோரையும் சேர்த்துக் கொண்டால் இன்னும் கூடுதலான வெளிப்பாட்டைக் காட்டும்.

ஆனால் பொருளாதாரத்தை தொழிற்துறை மயமாக்கியதிலும், மக்களை பாட்டாளி வர்க்கமாக்கியதிலும் முதலிடம் சந்தேகத்திற்கிடமின்றி பிரிட்டனுக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும். 1901ம் ஆண்டு விவசாயம், வனத்துறை மற்றும் மீன்பிடிப்பு இவற்றில் ஈடுபட்டிருந்த மக்களின் எண்ணிக்கை 2,300,000 என்றும் தொழிற்துறை, வணிகம், போக்குவரத்து இவற்றில் ஈடுபட்டிருந்தவர் 12,500,000 என்றும் இருந்தது. எனவே முக்கிய ஐரோப்பிய நாடுகளின் நகரங்களில் இருந்த மக்கள் எண்ணிக்கையில் கிராமப்புற மக்களைவிடக் கூடுதலாக இருந்தனர் என்று அறிகின்றோம். ஆனால் நகரப்புற மக்களின் பெரிய ஆதிக்கம் இதன் கூறுபாடான மிகப் பெரிய உற்பத்தி சக்திகளில் மேலாதிக்கம் செலுத்துவது என்று மட்டும் இல்லாமல், கூறுபாட்டில் காணப்படும் பண்புரீதியான நபர்களின் சேர்க்கையிலும் தங்கியுள்ளது. நகர்ப்புறம் நாட்டுப்புறத்திலுள்ள சக்திவாய்ந்த, தகைமைகொண்ட மற்றும் புத்திஜீவி பிரிவுகளை ஈர்க்கின்றது. ஒப்புமையில் நகரப்புற மக்கள், கிராமப்புற மக்கள் ஆகியோருடைய வயது தன்மை மறைமுகச் சான்று கொடுக்கக்கூடும் என்றாலும், இதைப் புள்ளிவிவரப்படி நிரூபிப்பது கடினமாகும். பிந்தைய உண்மை அதனுடைய முக்கியத்துவத்தை தானே கொண்டிருக்கிறது. ஜேர்மனியில் 1896ம் ஆண்டு விவசாயத்துறையில் 8,000,000 மக்களும் 8,000,000 மக்கள் தொழில்துறையிலும் இருந்தனர். ஆனால் மக்களுடைய மொத்தத் தொகை வயதுப் பிரிவுகளையொட்டி வகுத்தோம் என்றால், விவசாயத்துறையில் 1,000,000 வலுவான நபர்கள் 14 - 40 வயதுவரை இருப்பவர்கள், தொழிற்துறையில் இருப்பவர்களைவிடக் குறைவாக இருக்கின்றனர். இது "வயதானவர்கள்-இளைஞர்கள்" என்று கிராமப்புறத்தில் கூடுதலாக இருப்பதைக் காட்டும்.

இவை அனைத்தும் பொருளாதார வளர்ச்சியில், அதாவது தொழில் வளர்ச்சி, பெரு நிறுவன வளர்ச்சி, நகரங்கள் வளர்ச்சி, பொதுவாக தொழிலாள வர்க்க வளர்ச்சி, குறிப்பாக தொழிற்துறையில் தொழிலாள வர்க்க வளர்ச்சி என்ற நிலையில், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் என்பதற்கான அரங்கு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது என்று மட்டும் இல்லாமல் இந்த அதிகாரம் வெற்றியடைவதற்கான வகையும் தயாரிக்கப்பட்டுவிட்டது என்றே பொருளாகும்.

3. இப்பொழுது நாம் சோசலிசத்தின் மூன்றாம் முன்நிபந்தனையான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு வருவோம். சோசலிசத்திற்கான புறநிலை முன்நிபந்தனைகள் அகநிலையான தேவைகளோடு குறுக்கிடுவதுதான் அரசியல் இருக்கும் தளமாகும். சில குறிப்பான சமூக- பொருளாதார நிலைமைகளில், ஒருவர்க்கம் நனவுடன் தனக்கு சில நோக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுகிறது: அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுதல், தன்னுடைய சக்திகளை ஒன்றுதிரட்டிக் கொள்ளுதல், எதிரியின் வலிமையைக் கணித்தல், நிலைமையை நன்கு மதிப்பீடு செய்தல் ஆகியவையே அவை. ஆயினும், மூன்றாம் படிநிலையில்கூட பாட்டாளி வர்க்கம் முற்றிலும் சுயாதீனமானதாக இல்லை. அகநிலைக்காரணிகளான நனவு, தயார்நிலையில் இருத்தல், முயற்சிகொள்ளுதல் ஆகியவற்றின் வளர்ச்சி தத்தம் தர்க்கத்தைக் கொண்டிருந்தபோதிலும், பாட்டாளி வர்க்கம் தன்னுடைய கொள்கையை எடுத்துச் செல்லும்போது ஆளும் வர்க்கங்களின் கொள்கை, நடைமுறையில் இருக்கும் அரசு நிறுவனங்கள் (இராணுவம், வர்க்கப் பள்ளிகள், திருச்சபை பிரிவுகள்), சர்வதேச உறவுகள் போன்ற ஏராளமான புறநிலை காரணிகளையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

நாம் முதலில் அகநிலை சூழ்நிலைகளைக் கவனிப்போம்: அதாவது சோசலிசப் புரட்சிக்காக பாட்டாளி வர்க்கத்தின் தயார் நிலையை பற்றிக் காண்போம். சமூக உழைப்பின் உற்பத்தித் திறனின் பார்வையில், தொழில்நுட்ப முறையின் தரம் சோசலிசப் பொருளாதாரத்தை நலன்கள் நிறைந்ததாக ஆக்கியுள்ளது மட்டும் போதுமானதல்ல. அதேபோல், இந்த தொழில்நுட்ப முறையின் அடிப்படையிலான சமூக வேறுபாடு ஒரு பாட்டாளி வர்க்கத்தை தோற்றுவித்து, அது முக்கிய வர்க்கமாக தன்னுடைய எண்ணிக்கையினாலும், பொருளாதாரப் பங்கினாலும், சோசலிசத்தில் புறநிலைரீதியாக அக்கறை கொண்டதாக இருந்தாலும் மட்டும் போதாது. இந்த வர்க்கம் தன்னுடைய புறநிலை நலன்கள் பற்றி முழு நனவை கொண்டிருக்கவேண்டும்; சோசலிசத்தை தவிர வேறு எதுவும் இல்லை என்பதை அது புரிந்திருக்க வேண்டும். ஒரு வெளிப்படையான போரில் அரசியல் அதிகாரத்தை வெற்றிக் கொள்ளுவதற்கு போதுமான ஆற்றல் படைத்த வகையில் பெரும்படையாகவும் இருக்கவேண்டும்.

இக்காலக்கட்டத்தில், பாட்டாளி வர்க்கம் இவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்ற தேவையை மறுப்பது மடத்தனமாகிவிடும். பழைய முறையிலான பிளாங்குவிஸ்டுகள்தான் (ஙிறீணீஸீஹீuவீsts) இரகசிய சதி அமைப்புக்களின் முயற்சிகளால் மக்களிடம் இருந்து பிரிந்த தனியான முறையில் விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியும். இதேபோல் அவ்வகையிலான எதிர்ப்புறத்திலுள்ள அராஜகவாதிகள்தாம் அத்தகைய சுயாதீனமான, இயற்கையான மக்கள் எழுச்சி தோன்றும், அதன் முடிவை ஒருவரும் கூறமுடியாது என நம்பிக்கை கொள்வர். சமூக ஜனநாயகவாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்று கூறும்போது, ஒரு புரட்சிகர வர்க்கத்தின் நனவான நடவடிக்கை என்றே கருதுகின்றனர்.

ஆனால் பல சோசலிச சிந்தனையாளர்களும் (சிந்தனையாளர்கள் என்ற சொல்லின் இழிபொருளில், தலைகீழாக நிற்போரிடையே எனக் கொள்ளவேண்டும்), பாட்டாளி வர்க்கத்தை சோசலிசத்திற்காக தயாரிக்கவேண்டும் என்று பேசுகையில், அது நன்னெறிசார்ந்த வகையில் ஒரு புது உத்வேகத்தைப் பெறவேண்டும் என்ற முறையில்தான் கூறுகின்றனர். பாட்டாளி வர்க்கம், மற்றும் ஏன் 'மானுடமே' பொதுவாக, முதலில் தன்னுடைய சுயநலமிக்க இயல்பை விட்டொழித்து, சமூக வாழ்வில் அனைவருடைய நலன்களும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதை ஆதிக்கம் செலுத்தும் கருத்தாக கொள்ளவேண்டும். நாம் இத்தகைய நிலையில் இருந்து மிகவும் அப்பால் உள்ள படியால், "மனித இயல்பும்" வெகு தாமதமாகத்தான் மாறுகிறபடியால், சோசலிசம் பல நூற்றாண்டுகள் தள்ளிப்போடப்படுகிறது. அத்தகைய கண்ணோட்டம் யதார்த்தமானதும், பரிமாணவளர்ச்சி தன்மை உடையதும் போல தோன்றும்; ஆனால் அது ஒரு வெற்று கூடுபோன்ற நன்னெறி உரைதான்.

சோசலிச உளவியல் சோசலிசம் வருவதற்கு முன்பு வளர்க்கப்படவேண்டும் என்ற ஒரு முன்கருத்து உள்ளது; வேறுவிதமாகக் கூறினால், முதலாளித்துவத்தின் கீழ் சாதாரண மக்கள் ஒரு சோசலிச உளவியலை அடையக்கூடும் எனத் தோன்றும். இங்கு சோசலிசத்தை அடைவதற்கான நனவுபூர்வமான முயற்சியை வெறும் சோசலிச உளவியலுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. பொருளாதார வாழ்வில் முற்றிலும் தன்னல நோக்கங்கள் இருக்கக்கூடாது என்ற கருத்தை பிந்தையது கொண்டுள்ளது; ஆனால் சோசலித்தை அடைவதற்கான பெரும் முயற்சிகளும் போராட்டங்களும், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உளவியலில் இருந்துதான் தோன்றும். ஆனால் பாட்டாளி வர்க்கத்தின், வர்க்க உளவியிலுக்கும் வர்க்கமற்ற சோசலிச உளவியிலுக்கும் இடையே பல தொடர்பு முனைகள் இருக்கக்கூடும் என்றாலும், ஒரு பெரும் பிளவு அவற்றிற்கிடையே உள்ளது.

சுரண்டலுக்கு எதிரான கூட்டுப் போராட்டமானது, உயர் சிந்தனைகள், தோழமை ரீதியான ஒற்றுமை மற்றும் சுயநலத் தியாகம் ஆகியவற்றை உருவாக்குவதுடன், ஆனால் அதேநேரத்தில் தனிப்பட்ட வாழ்விற்கான போராட்டம், எப்பொழுதும் பெருகிவரும் பிளவான ஏழ்மை என்ற பள்ளம், தொழிலாளர்கள் பிரிவுகளுக்குள்ளேயே வேறுபாடுகள் இருத்தல், கீழிருக்கும் அறியாமை மிகுந்த மக்களுடைய அழுத்தம், முதலாளித்துவ கட்சிகளின் ஊழல் நிறைந்த செல்வாக்கு ஆகியவை இந்த சிறந்த சக்திகள் வளர்ச்சியுறச் செய்ய அனுமதிப்பதில்லை. இருந்தபோதிலும், முதலாளித்துவ வர்க்கத்தின் சராசரி பிரதிநிதியைவிட அவரின் நாகரீகமற்ற பண்பற்ற சுயநலங்கள் தொடர்ந்து இருக்கின்றபோதிலும் மற்றும் அவரின் ''மனிதத்தன்மை'' அதிகமாக இல்லாதபோதிலும், சராசரி தொழிலாளி அனுபவத்தினால் தன்னுடைய மிக எளிமையான தேவைகளும் இயல்பான விருப்பங்களும் முதலாளித்துவ அமைப்பின் அழிவில்தான் அமைத்துக் கொள்ள முடியும் என்பதை அறிந்துள்ளார்.

உயர்சிந்தனையாளர்கள் பின்னர் வரக்கூடிய தலைமுறை பற்றி சோசலிசம் என்னும் வகையில் பெருமைப்படக் கூடிய வகையில் கொண்டுள்ள தோற்றம், கிறிஸ்தவர்கள் எவ்வாறு தங்கள் முதல் கிறிஸ்தவ கம்யூன்கள் இருந்தன என்பதைப் பற்றிய சித்திரிப்புப் போலத்தான் உள்ளது.

கிறிஸ்தவ சமயத்தின் முதல் மதமாற்றம் செய்பவர்களிடையே எத்தகைய உளவியல் கூறுபாடுகள் இருந்ததோ --சீடர்களின் செயல்களில் இருந்து பொதுச் சொத்துக்கள் அபகரித்தல் இருந்தது பற்றி நாம் அறிந்துள்ளோம்-- எப்படியாயினும் இன்னும் பரந்த வகையில் அது விரிவடைந்த பின்னர், கிறிஸ்தவ மதம் எல்லா மக்களுடைய ஆன்மாக்களுக்கும் புத்துயிர்ப்பு கொடுக்கும் நிலையில் அது தோல்வியுற்றதுடன், தானே சீரழிந்து பொருள்சார் நிலையையும், அதிகாரத்துவ முறையையும் கொள்ளத்தொடங்கியது; சகோதரத்துவ முறையில் ஒருவருக்கு ஒருவர் கற்பித்தல் என்னும் பழக்கத்தில் இருந்து அது ஒரு உயர்பீடாதிபதி நிலையை உருவாக்கியது; அலைந்து திரிந்து, இரந்து வாழ்ந்து உபதேசிக்கும் நிலையில் இருந்து, மடாலயங்களை எழுப்பி ஒட்டுண்ணி முறையில் வாழ்க்கையை நடத்த முற்பட்டது; சுருங்கக் கூறின், கிறிஸ்தவம் தான் பரப்பிவரும் சமூக சூழலின் சமூகத்தின் நிலைமையை தனக்கு அடிபணிய செய்யத்தவறியது மட்டுமல்லாமல், தன்னையே அவற்றால் அடிபணிதலுக்கு ஆளாக்கிக் கொண்டது. இது ஒன்றும் திருச்சபை தந்தையர் அல்லது கொள்கை பரப்பாளருடைய திறமையின்மையினாலோ, பேராசையாலோ நிகழ்ந்துவிடவில்லை; மாறாக சமூக வாழ்வு, உழைப்பு என்ற நிலைகளுக்கு மனித உளவியிலின் தவிர்க்கமுடியாத விதிகளில் தங்கியிருக்கும் தன்மையின் விளைவு ஆகும்; கிறிஸ்தவ தந்தையர்களும் ஆசிரியர்களும் தங்களுடைய சொந்த நபர்களில் இந்த நம்பிக்கையிருக்க வேண்டிய தன்மையை காட்டினர்.

சோசலிசம் ஒரு புதிய மனித இயல்பை பழைய சமுதாயத்தின் வரம்பிற்குள் தோற்றுவிக்கவேண்டும் என்ற இலக்கைக் கொண்டால், அது அறநெறிமிக்க கற்பனாவாதத்தின் புதிய பதிப்பாகத்தான் இருக்கும். சோசலிச உளவியலை, சோசலிசத்திற்கான ஒரு முன்நிபந்தனையாக கொள்ள சோசலிசம் இலக்கு கொள்ளவில்லை; மாறாக வாழ்வின் சோசலிச நிலைமைகளை தோற்றுவிப்பதை சோசலிச உளவியிலுக்கான முன்நிபந்தனையாகக் கொண்டுள்ளது.

Notes

1. N. Rozhkov, On the Agrarian Question, pp. 21 and 22.—L.T.[RETURN TO TEXT]

2. Atlanticus, The State of the Future, published by ‘Dyelo’. St. Petersburg. 1906. pp. 22 and 23.—L.T. [RETURN TO TEXT]