Permanent Revolution & Results and Prospects
WSWS : Tamil : Ëôè‹

 

Preface
The Peculiarities of Russian Historical Development
The Towns and Capital
1789---1848---1905
Revolution and the Proletariat
The Proletariat in Power and the Peasantry
The Proletarian Regime
The Prerequisites of Socialism
A Workers’ Government in Russia and Socialism
Europe and Revolution
The Struggle for Power
Further Reading

 

VIII. ரஷ்யாவில் ஒரு பாட்டாளி அரசாங்கமும் சோசலிசமும்

Use this version to print | Send feedback

முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் பொருளாதார வளர்ச்சியினால் ஒரு சோசலிசப் புரட்சிக்கான புறநிலை முன்நிபந்தனைகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டன என்பதை மேலே காட்டியுள்ளோம். ஆனால் ரஷ்யாவை பொறுத்தவரையில் இது பற்றி நாம் என்ன கூறவியலும்?

ரஷ்ய பாட்டாளி வர்க்கத்திடம் அதிகாரம் மாற்றப்படுவது என்பது நம்முடைய தேசியப் பொருளாதாரத்தை ஒரு சோசலிச தன்மையாக்குவதற்கான ஆரம்பம் என நாம் எதிர்பார்க்கமுடியுமா? நாம், ஒரு கட்டுரையில் ஓராண்டிற்கு முன் இந்த வினாவிற்கு விடையளித்திருந்தோம்; அதற்கு எமது கட்சியில் இரு பிரிவுகளில் இருந்தும் கடுமையான விமரிசனங்கள் எழுந்தன. அக்கட்டுரையில் நாம் கூறியிருந்ததாவது:

"பாரிஸ் தொழிலாளர்கள் தங்களுடைய கம்யூன்களிடமிருந்து அதிசயங்களை கோரவில்லை என்று மார்க்ஸ் நமக்குத் தெரிவிக்கிறார். நாமும் இன்று பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் இருந்தும் உடனடியாக அதிசய செயல்களை எதிர்பார்க்கக் கூடாது. அரசியல் அதிகாரம் என்பது சகல சக்தியும் வாய்ந்தது அல்ல. பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு, முதலாளித்துவத்திற்கு பதிலாக இனி சோசலிசம் என்று சில ஆணைகளைப் பிறப்பித்தல் போதுமானது என்று நாம் நினைத்தால் அது மிகவும் அபத்தமானது ஆகும். ஒரு பொருளாதார அமைப்புமுறை என்பது அரசாங்க நடவடிக்கைகளின் விளைபொருள் அல்ல. பாட்டாளி வர்க்கம் செய்யக் கூடியதெல்லாம், சாத்தியமான முழு ஆற்றலுடனும் கூட்டாண்மை (நீஷீறீறீமீநீtவீஸ்வீsனீ) நோக்கி செல்லும் பொருளாதார வளர்ச்சிப்பாதையின் நீளத்தை குறைத்து, அதை எளிமையாக்குவதற்கு அதனுடைய அரசியல் அதிகாரத்தை பிரயோகிப்பதுதான்.

"குறைந்தபட்ச திட்டம் என்ற முறையில் இச்சீர்திருத்தங்களை பாட்டாளி வர்க்கம் ஆரம்பிக்கும்; அதன் பின்னர் அந்த நிலைப்பாட்டின் தர்க்க ரீதியான தன்மையில் இருந்து, அது கூட்டாண்மை முறைக்கு செல்லும் நடவடிக்கைகளை செய்யும் கட்டாயத்திற்குள்ளாகும்.

"எட்டு மணி-நேர வேலைநாள் அறிமுகப்படுத்தப்படுதல், உயர் வருமானத்திற்கு கூடுதலான வரிவிதிப்பு போன்றவை எளிதில் செயல்படுத்தப்படலாம்; இங்கும்கூட வெறுமே "சட்டத்தை" இயற்றுவதில் ஈர்ப்பு மையம் இருக்காமல், நடைமுறையில் இவற்றை செயல்படுத்துவதில்தான் கவனம் இருக்கும். ஆனால் இதில் முக்கியமான கஷ்டம் என்னவென்றால் --அதில்தான் கூட்டுமுறைக்கு மாறுதலில் சிரமத்தை காணமுடியும்-- இந்தச் சட்டங்களை இயற்றுவதற்கு பதிலளிக்கும் வகையில் அவற்றின் முதலாளிகளால் மூடப்பட்டுவிட்ட ஆலைகளில் உற்பத்தியை அரசு ஒழுங்கமைப்பிற்குள் கொண்டுவருவதுதான். சொத்துரிமையை வாரிசாகக் கொள்வதை இல்லாதொழிக்கும் சட்டத்தை கொண்டுவருவதும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் ஒப்புமையில் எளிதாகும். பண மூலதனம் என்ற பெயரில் வரும் மரபுரிமைசொத்துக்கள் தொழிலாளர்களுக்கு சங்கடத்தையோ அல்லது பொருளாதாரத்திற்கு சுமையையோ அளிக்காது. ஆனால் நிலம் மற்றும் தொழிற்துறை மூலதனத்திற்கு வாரிசு என்ற முறையில் நடந்து கொள்ளுவதற்கு தொழிலாளர் அரசு சமூகஉற்பத்தியை ஒழுங்கமைக்கவேண்டிய தயாரிப்புக்களுக்கு கட்டாயம் உட்படவேண்டும்.

"இதேபோன்றுதான் கூடுதலான பரந்த முறையில், இழப்புத்தொகை அளித்து அல்லது அளிக்கப்படாமல் அபகரிப்புக்கள் அல்லது எடுத்துக் கொள்ளுபவை பற்றியும் கூறப்பட வேண்டியுள்ளது. இழப்பீட்டுத் தொகை கொடுத்து சொத்துக்களை எடுத்துக் கொள்ளுவது என்பது அரசியல் ரீதியாக அனுகூலமானதாக இருந்தாலும் நிதிரீதியில் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தும்; ஆனால் இழப்புத் தொகை கொடுக்காமல் அபகரித்துக் கொள்ளுவது என்பது நிதிரீதியில் ஆதாயங்களை கொடுத்தாலும், அரசியல்ரீதியில் இடர்ப்பாடுகளை கொடுக்கும். எல்லாவற்றையும் விடக் கடினமான செயல் உற்பத்தியை ஒழுங்கமைப்பதினுள்ளேயே எதிர்கொள்ளவேண்டி இருக்கும். தொழிலாளர் அரசாங்கம் என்பது அதிசயங்களை செய்யக்கூடிய அரசாங்கம் அல்ல என்பதை மீண்டும் கூறுகிறோம்.

"உற்பத்தி சமூகமயமாக்கப்படல் என்பது, முதலில் மிகக் குறைந்த கஷ்டங்களை கொடுக்கக்கூடிய தொழிற்துறை பிரிவுகளில் தொடங்கவேண்டும். முதல் காலக்கட்டத்தில் சமூக உற்பத்திமுறை, பொருள்களின் சுற்றோட்டம் பற்றிய விதிகளுடன் தனியார் நிறுவனங்கள் செய்வதுடன் தொடர்பு கொண்டுள்ள ஏராளமான சுலபமான நடவடிக்கைகள் போலிருக்கும். சமூக உற்பத்திமுறை விரிவு செய்யப்பட்ட பின்னர், அதன் பொருளாதார நன்மைகள் வெளிப்படையாக கூடுதல் தன்மையை அடைவதோடு, புதிய ஆட்சியும் அதிக உறுதித்தன்மையை உடையதாக உணரும்; பாட்டாளி வர்க்கத்தின் பொருளாதார நடவடிக்கைகள் இன்னும் தைரியமுடையதாக இருக்கும். இந்த நடவடிக்கைகளுக்கு தேசிய உற்பத்தி சக்திகளை மட்டும் நம்பலாம் அல்லது நம்பி இருக்க வேண்டும் என்றில்லாமல் உலகம் முழுவதிலும் இருக்கும் தொழில்நுட்பத்தையும் நம்ப வேண்டும்; ஏனெனில் அதனது புரட்சிகர கொள்கையினை போன்று அது தனது நாட்டில் மட்டும் இருக்கும் வர்க்க உறவுகளின் அனுபவங்களில் மட்டுமல்லாது சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்களை கருத்தில் எடுத்துக் கொள்ளுகிறதோ, அவ்வாறுதான் உற்பத்தி சக்திகளின் தொழில்நுட்பத்திலும் இருக்கவேண்டும்.

பொருளாதாரத்தில் அடிமைப்பட்டிருப்பது என்பது, பாட்டாளி வர்க்கம் அதன் அரசியல் மேலாதிக்கத்தை கொண்டிருப்பதுடன் பொருந்தா நிலையில் இருக்கும். எந்த அரசியல் கொடியின்கீழ் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்திற்கு வந்திருந்தாலும், அது ஒரு சோசலிச கொள்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கும். ஒரு பூர்சுவா புரட்சியின் உட் செயற்பாட்டின் அரசியல் மேலாதிக்கத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள பாட்டாளி வர்க்கம் அது விரும்பினாலும், பூர்சுவாக்களின் சமூகஆதிக்கத்திற்காக ஒரு குடியரசு-ஜனநாயக நிலைமைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பது மிகப் பெரிய கற்பனையாகும். தற்காலிகமானதாக இருந்தாலும் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கம், அரசின் ஆதரவையே எப்பொழுதும் நம்பியிருக்கும் மூலதனத்தின் எதிர்ப்பை மிகப் பெரியளவில் வலுவிழக்க செய்துவிடுவதுடன், பாட்டாளி வர்க்கம் மிகப் பரந்த முறையில் நன்மைகளை பொருளாதார போராட்டத்தில் பெறுவதற்கு வழிவகை செய்துவிடும். ஒரு புரட்சிகர அரசாங்கத்தில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தக்க பாதுகாப்பு வகையை தொழிலாளர்கள் கேட்டே தீருவர்; தொழிலாளர்களை நம்பியிருக்கும் அரசாங்கம் இந்தக் கோரிக்கையை புறக்கணிக்க இயலாது. ஆனால் தொழிலாளர் சேமப் படையின் தாக்கத்தை செயலிழக்க வைக்கும் இது தொழிலாளர்களின் ஆதிக்கத்தை அரசியலில் மட்டும் இல்லாமல் மற்றும் பொருளாதார துறையிலும் ஏற்படுத்தும்; அவ்விதத்தில் உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடமையை மாறுதலுக்கு உட்படுத்துவது என்பது ஒரு கட்டுக் கதையாகிவிடும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் இத்தகைய தவிர்க்கமுடியாத சமூக பொருளாதார விளைவுகள், அரசியல் அமைப்பு முறையை ஜனநாயகமயமாக்கும் போக்கு முழுமை பெறுவதற்கு முன்னரே, வெகு விரைவில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டுவிடும். "குறைந்த பட்ச", "அதிகூடிய" வேலைத்திட்டத்திற்கிடையே இருக்கும் தடை, பாட்டாளி வர்க்கம் அதிகாரத்திற்கு வந்த உடனேயே மறைந்துவிடும்.

அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் பாட்டாளி வர்க்க ஆட்சி செய்யவேண்டிய முதல் செயல், ரஷ்யாவின் பெரும்பாலான மக்களுடைய வருங்காலம் பிணைந்திருக்கும் விவசாய பிரச்சினைக்கு தீர்வு காணுதலாகும். மற்றைய வினாக்களை போன்றே, இந்த பிரச்சினையிலும் பாட்டாளி வர்க்கம் தன்னுடைய பொருளாதார கொள்கையின் அடிப்படை நோக்கத்தினால் வழிகாட்டப்படும்; அதாவது சோசலிச பொருளாதார ஒழுங்கமைப்பை எந்த அளவிற்கு அதிகமான முறையில் மேலாதிக்கம் செய்ய வைக்கமுடியுமோ, அந்த அளவிற்குச் செய்தல் என்பதேயாகும் அது. எவ்வாறிருந்தபோதிலும், இந்த விவசாய கொள்கையின் வடிவமைப்பு, விரைவு இரண்டும் பாட்டாளி வர்க்கத்திடம் உள்ள பொருள்சார் வளங்களினால் தீர்மானிக்கப்படுவதுடன், சாத்தியமான நட்பு சக்திகளை எதிர்ப்புரட்சிகர அணிகளிடையே எறிந்துவிடாத வகையிலும் இது கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விவசாயப் பிரச்சினை, அதாவது சமூகஉறவுகளில் விவசாயத்தின் விதி பற்றிய பிரச்சினை நிலத்துடனான பிரச்சினையுடன், அதாவது நிலவுடைமையின் வடிவங்கள் பற்றிய பிரச்சினைகளுடன் முற்றிலும் காலியாகிப்போய்விடுவதில்லை. ஆயினும், விவசாய வளர்ச்சியை முன்கூட்டியே உறுதிசெய்யாவிடினும் கூட, நிலப்பிரச்சினைக்கான முடிவு, குறைந்தபட்சம் பாட்டாளி வர்க்கத்தின் விவசாய கொள்கை பற்றிய முன்னுறுதியை கொடுத்துவிடும்: அதாவது, பாட்டாளி வர்க்க ஆட்சியானது, நிலம் பற்றி என்ன செய்யப் போகிறது என்பது விவசாய வளர்ச்சியின் தேவைகள், இயக்கப்படவேண்டிய முறை பற்றிய பொது அணுகு முறை இவற்றுடன் நெருங்கிய தொடர்பைக் கட்டாயமாகக் கொண்டிருக்கும். அந்தக் காரணத்தினால் நிலப்பிரச்சினை முதல் இடத்தை வகிக்கும்.

சோசலிசப்-புரட்சியாளர்களுக்கு (ஷிஷீநீவீணீறீவீst-ஸிமீஸ்ஷீறீutவீஷீஸீணீக்ஷீவீமீs) குறைகாணமுடியா புகழை வழங்கிய நிலப்பிரச்சினைக்கு கொடுத்துள்ள தீர்வு அனைத்து நிலங்களும் சமூகஉடைமையாக்கப்பட வேண்டும் என்பதாகும்: இந்த வார்த்தையின் ஐரோப்பிய அரிதாரத்தை களைந்தால், இதன் பொருள் 'நிலத்தை பயன்படுத்தலை சமத்துவப்படுத்துதல்' (அல்லது 'கள்ளத்தனமான முறையில் மறு பகிர்வு செய்தல்') என்பதாகும். நிலத்தை சமபங்கீடு செய்யும் வேலைத்திட்டம் என்பது இவ்வாறு அனைத்து நிலங்களையும் பறிமுதல்செய்தலை, பொதுவாக தனியார் உடைமையில் இருக்கும் நிலம் என்று மட்டும் இல்லாமல், தனியார் உடைமையில் இருக்கும் விவசாய நிலம் மற்றும் பொதுநிலத்தையும் பொதுநலனுக்காக பறிமுதல்செய்தலை முன்நிபந்தனையாகக் கொள்கிறது. முதலாளித்துவ-பொருட்கள் உறவுகள் இன்னும் முற்றிலும் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் அதேவேளை, இந்த சொத்துப் பறிமுதல், புதிய ஆட்சியின் முதல் செயற்பாடுகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை மனத்தில் கொண்டோம் என்றால், பின் இந்த சொத்துப் பறிமுதலின் முதல் "பாதிப்பாளர்கள்" (அல்லது இன்னும் சொல்லப்போனால் அவ்வாறு தங்களை நினைத்துக் கொள்ளக்கூடியவர்கள்) விவசாயிகள்தான் என்பதை அறிதல் வேண்டும். கடந்த பல தசாப்தங்களில் விவசாயிக்கு கொடுத்துள்ள மீட்புப் பணம் ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தை அவருக்கு உரிமையான சொத்தாக மாற்றியிருக்கும் வகையில் உள்ளது என்பதை மனத்தில் கொண்டால், கணிசமான தியாகத்தின் மூலம் அந்த விவசாயிகளில் சற்று வசதி படைத்தவர்கள் இப்பொழுதுள்ள தலைமுறயிலேயே நிறைய நிலத்தை தனி உடைமையாகக் கொண்டுள்ளனர் என்பதை நினைவில் கொண்டால், பொது மற்றும் சிறு அளவிலான சொந்த உடைமைகள் ஆக்கப்பட்டுள்ள நிலங்களை அரசின் உடைமையாக மாற்றும் முயற்சிக்கு எத்தகைய மகத்தான எதிர்ப்பு எழுச்சியுறும் என்பதை எளிதில் கற்பனை செய்து பார்த்துக் கொள்ள முடியும். அந்தபாணியில் அது நடந்து கொண்டால், புதிய ஆட்சி தனக்கெதிராக விவசாயிகள் மத்தியில் இருந்து பாரிய கிளர்ச்சியை எதிர்கொள்ளும் நிலையில் ஆட்சியைத் துவங்க நேரிடும்.

அப்படியானால் எந்த நோக்கத்திற்காக சிறிய அளவிலான தனியார் நிலங்கள் மற்றும் பொது நிலங்கள் அரசு உடைமைகளாக்கப்பட வேண்டும்? ஏதோ ஒரு விதத்தில் இப்பொழுது நிலம் இல்லாத விவசாயிகள், மற்றும் விவசாய தொழிலாளிகள் உட்பட அனைத்து நிலஉடமையாளர்களினதும் பொருளாதார பயன்பாட்டிற்காக "சமமான முறையில்" நிலைத்தை பகிர்ந்து கொடுப்பதற்காக இது செய்யப்பட வேண்டும். இவ்வாறு புதிய ஆட்சி பொருளாதார ரீதியில் சிறு உடைமைகள், பொது நிலங்களை எடுத்துக் கொள்ளுவதில் எதையும் ஆதாயமாக பெறாது; ஏனெனில் மறுபகிர்வு செய்த பின்னர் அரசாங்க அல்லது பொதுநிலங்கள் தனியார் உடைமைகளாகத்தான் சாகுபடிக்கு உட்படுத்தப்படும். அது ஏராளமான விவசாயிகளை, புரட்சிகர கொள்கைக்கு தலைமை தாங்கும் நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக திரட்டிவிடுமானால் அரசியல்ரீதியில், புதிய ஆட்சி மிகப் பெரும் தவறு செய்வதாகிவிடும்.

மேலும், நிலத்தை சமமாக பங்கிட்டுக் கொடுத்தல் என்பது, தொழிலாளர்களை ஊதியத்திற்கு வாடகைக்கு அமர்த்தும் முறை சட்டத்தின்படி தடுக்கப்படுவதற்கு முன்நிபந்தனையாக இருக்கும். கூலித்தொழிலாளர் இல்லாமல்போவது என்பது பொருளாதார சீர்திருத்தத்தில் ஒரு விளைவாகத்தான் வரக்கூடும், வரவேண்டும்; அது சட்ட நெறித் தடைகளினால் முன்னுறுதி செய்யப்பட முடியாதது ஆகும். முதலாளித்துவ நிலப்பிரபுக்களை கூலித்தொழிலாளரை அமர்த்துவதை தடை செய்தால் மட்டும் போதாது; முதலில், நிலமற்ற தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு போதிய பாதுகாப்புத்தன்மை இருப்பதற்கு வகை செய்யவேண்டும்; இது சமூகப்பொருளாதார பார்வையில் அறிவுபூர்வமாக உயிர்பிழைத்திருக்க வேண்டிய தன்மையை கொண்டிருக்க வேண்டும். நிலத்தின் பயன்பாடு சமத்துவம் அளிக்கப்பட்ட முறையில், கூலித்தொழிலாளரை நியமித்தல் தடை என்றால், ஒருபுறத்தில் நிலமற்ற தொழிலாளர்கள் ஒரு சிறிய நிலத்தில் குடியேற வேண்டும் என்றும், மறுபுறத்தில் அரசாங்கம் அவர்களுக்கு தேவையான மூலப் பொருட்கள், கருவிகள் ஆகியவற்றை அவர்களுடைய சமூகரீதியில் அறிவுபூர்வமற்ற உற்பத்திமுறைக்கு அளித்திடலும் வேண்டும் என்று ஆகும்.

பாட்டாளி வர்க்கம், விவசாயத்துறையின் ஒழுங்கமைப்பில் தலையீடு செய்வதானது சிதறிக் கிடக்கும் தொழிலாளர்களை சிதறிக் கிடக்கும் நிலத்துண்டுகளில் பிணைக்கச் செய்வதை ஆரம்பிக்கும் முயற்சி என்றில்லாமல், பெரிய நிலப்பண்ணைகளை அரசு அல்லது பொதுக் குழுக்கள் (கம்யூன்கள்) பயன்படுத்துதலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதேயாகும். இத்தகைய சமூக வகையிலான உற்பத்திமுறை, தானே செழிக்கும் வகையில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர்தான், சமூகமயமாக்கும் வழிவகை, கூலித்தொழிலாளரை வாடகைக்கு அமர்த்தும் தடை என்ற இன்னும் கூடுதலான முறைக்கு முன்னோக்கி செல்லமுடியும். அத்தகைய முறை சிறு முதலாளித்துவ முறையிலான விவசாயத்தை நடத்த முடியாமற் செய்துவிடும்; ஆனால் வாழ்விற்கு போதுமான அல்லது பகுதியளவு போதுமான நில உரிமைகளை வைத்திருப்பதற்கு இடம் கொடுக்கும்; இதை பலாத்காரமாக அபகரித்துக் கொள்ளுதல் சோசலிச பாட்டாளி வர்க்கத்தின் திட்டங்களில் எவ்வகையிலும் பயன்படாது.

எந்த வகையில் பார்த்தாலும், நாம் சமமான பங்கீடு என்ற முறையை செயல்படுத்த முடியாது; ஏனெனில் ஒரு புறத்தில் அது இலக்கற்ற வகையில் சிறு நிலங்களை முறையாக அபகரித்தல் என்ற முன்நிபந்தனையைத்தான் கொண்டிருக்கும்; மறுபுறத்தில் மிகப் பெரிய நிலங்களை மிகச் சிறிய பகுதிகளாக துண்டாட வேண்டிய தேவைகளை ஏற்படுத்தும். இந்தக் கொள்கை, பொருளாதார கண்ணோட்டத்தில் நேரடியாக பிரயோசனமற்றதால், பிற்போக்கான கற்பனாவாத மறைமுகமான நோக்கத்தை கொண்டிருக்கும் என்பதோடு, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு புரட்சி கட்சியை அரசியலில் வலுவிழக்கவும் செய்துவிடும்.

ஆனால் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச கொள்கையானது, எந்த மட்டத்திற்கு ரஷ்யாவின் பொருளாதார நிலைமைகளில் செயல்படுத்தப்பட முடியும்? ஒன்றை மட்டும் நாம் இங்கு உறுதியாக கூறமுடியும்: நாட்டின் பின்தங்கிய தொழில்நுட்பத்தில் தடுமாறுவதை விட விரைவாக அரசியல் தடைகளை அது எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வரும். நேரடியாக ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தின் அரசு ஆதரவு இல்லாமல், ரஷ்யாவின் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது என்பதுடன், அதன் தற்காலிக ஆதிக்கத்தை நீடித்த சோசலிச சர்வாதிகாரமாகவும் மாற்றமுடியாது. இந்த நிலைப்பாட்டைப்பற்றி ஒரு கணமேனும் சந்தேகப்படவேண்டிய தேவையில்லை. ஆனால் மேற்கு நாடுகளில் ஒரு சோசலிசப் புரட்சி என்பது, நமக்கு நேரடியாக தொழிலாள வர்க்கத்தின் தற்காலிக ஆதிக்கத்தை ஒரு சோசலிச சர்வாதிகாரமாக மாற்றக் கூடிய வகையில் வகைசெய்யும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

1904ம் ஆண்டு, ரஷ்யாவின் சமூக அபிவிருத்தி பற்றியும் விரைவில் தோன்றக்கூடிய புரட்சி பற்றிய சாத்தியப்பாடுகளையும் கணிப்பிட்டு விவாதிக்கும்போது காவுட்ஸ்கி எழுதினார்: 'ரஷ்யாவில் புரட்சி என்பது உடனடியான சோசலிச ஆட்சியை ஏற்படுத்திவிடாது. நாட்டின் பொருளாதார நிலைமைகள் இந்த நோக்கத்திற்கு கிட்டத்திலும் பக்குவப்படவில்லை.' ஆனால் ரஷ்ய புரட்சி எஞ்சியுள்ள ஐரோப்பிய நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு வலுவான ஊக்கத்தை உறுதியாக தரும்; அதன் விளைவாக, தொழிலாள வர்க்கம் ஜேர்மனியில் அதிகாரத்தை கைப்பற்றும்' என காவுட்ஸ்கி தொடர்ந்தார். "இத்தகைய விளைவு ஐரோப்பா முழுவதிலும் ஒரு செல்வாக்கை பெறும். மேற்கு ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்திற்கு அது வழிவகுக்கும் என்பதோடு கிழக்கு ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கும் தங்களுடைய வளர்ச்சியில் சில கட்டங்களை குறைத்துக் கொள்ளும் வாய்ப்பை கொடுத்து, ஜேர்மனியரின் முன்னுதாரணத்தை எடுத்துக்கொள்ளும் திறனைக் கொடுத்து, சோசலிச அமைப்புக்களை செயற்கையாக ஏற்படுத்த உதவும். சமுதாயம் முழுமையாக செயற்கையாக தன்னுடைய வளர்ச்சி கட்டங்களை தாண்டிவிட முடியாது; ஆனால் சமுதாயத்தின் சில கூறுபாடுகள் தாமதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள தன்னுடைய வளர்ச்சியை மிக முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் வளர்ச்சியைப் போலவே விரைவாக்க செய்யலாம்; அதன் விளைவாக தங்களுடைய நிலையையும் வளர்ச்சியின் முன்னணியில் நிறுத்திக் கொள்ள முடியும்; இதற்கு காரணம் அவர்கள் பழைய நாடுகள் இழுத்துச் செல்லப்பட வேண்டிய கட்டாயமான மரபுச் சுமைகளில் ஆழ்ந்திருக்க வேண்டிய தேவையில்லை ...இது நடக்கக் கூடும். ஆனால் நாம் ஏற்கனவே கூறியுள்ளபடி, தவிர்க்கமுடியாதது என்ற நிலைமையில் இருந்து, சாத்தியமானது என்ற நிலைப்பாட்டிற்கு நுழைய வேண்டும், எனவே விஷயங்கள் வேறுவிதமாக நிகழும்.

இந்த வரிகளானது, ஜேர்மன் சமூக ஜனநாயக கோட்பாட்டாளரால் புரட்சி முதன் முதலில், ரஷ்யாவிலா அல்லது மேற்கிலா ஏற்படக்கூடும் என்ற வினாவை அவர் பரிசீலித்துக் கொண்டிருந்தவேளையில் எழுதப்பட்டவை. பின்னர், ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகள் அவர்களின் மிகவும் நம்பிக்கையுடைய மனப்பாங்கிலும் கூட அவர்களால் எதிர்பார்த்திராத வகையில், ரஷ்ய பாட்டாளி வர்க்கம் தன்னுடைய மகத்தான வலிமையை வெளிப்படுத்தியது. ரஷ்ய புரட்சியின் போக்கு அதன் அடிப்படை கூறுபாடுகளின் தன்மையை பொறுத்தவரையில் முடிவு செய்யப்பட்டுவிட்டது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் முன்னால் சாத்தியமானது என்று நினைக்கப்பட்டது அல்லது நிகழ்க்கூடியதாக அணுகப்பட்டது, தவிர்க்கமுடியாததாக ஆகும் விளிம்பில் உள்ளது என்ற உண்மையை அனைத்தும் சுட்டிக்காட்டுகின்றன.