ரென்சியின் இராஜினாமா இத்தாலிய அரசாங்கத்தை வீழ்த்த அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதனன்று, முன்னாள் இத்தாலிய பிரதம மந்திரி மத்தேயோ ரென்சியின் இத்தாலி விழிப்புணர்வு (Italy Alive – Itialia Viva - IV) கட்சி பிரதம மந்திரி ஜோசெப்பே கொன்தேயின் அரசாங்கத்தில் இருந்து இராஜிநாமா செய்தார். நேற்று, செனட் மன்றத்தில் அவசரப் பேச்சுக்கள் நடந்தன, அங்கு கொன்தேயின் ஐந்து நட்சத்திர இயக்கம் (Five-Star Movement - M5S)- ஜனநாயகக் கட்சி (Democratic Party - PD) கூட்டணியானது, IV வெளியேறிய பின்னர் ஒரு பாராளுமன்ற சவாலைத் தாக்குப்பிடிப்பதற்கு போதுமான வாக்குகளை கொண்டிருக்கமுடியாது. கொன்தே செவ்வாயன்று காலை செனட்டிடம் தன்னுடைய அரசாங்கம் மற்றும் புதிய தேர்தல்களின் வீழ்ச்சியை தவிர்க்க பேசுவார்.

COVID-19 மீதான ஆளும் உயரடுக்கின் கொலைகார "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கை மீதான அதிகரித்துவரும் தொழிலாள வர்க்கத்தின் சீற்றங்கள் மற்றும் ஜனவரி 6 ம் திகதி வாஷிங்டனில் அமெரிக்க நாடாளுமன்றம் மீதான பாசிசத் தாக்குதலில் ஏற்பட்ட அரசியல் அதிர்ச்சி அலைகள் உலகம் முழுவதும் பரவியதற்கு மத்தியில் இத்தாலிய அரசாங்கம் சரிவை எதிர்கொள்கிறது.

இத்தாலியின் முன்னாள் பிரதமர் மத்தேயோ ரென்சி

ஆரம்பத்தில் இத்தாலிதான் இந்த வைரஸினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடாக இருந்தது, ஆனால் இத்தாலிய கார், எஃகு மற்றும் பொறியியல் துறையில் திடீர் வேலைநிறுத்தங்களால் தொற்றுநோய்க் குறைப்பு செய்ய ஒரு பொது முடக்கத்தை ஏற்குமாறு கொன்தேயை நிர்பந்தித்தது. அப்போதிருந்து, ஐரோப்பிய ஒன்றியம் (EU) தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் தள்ளுதல் மற்றும் இளைஞர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்புதல் என்ற "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையை ஏற்றது, அது பின்னர் வைரஸின் ஒரு வெடிப்புத் தன்மை கொண்ட மீள்எழுச்சிக்கு வழிவகுத்தது. கடந்த மாதம் வெடிப்பு அழுத்தத்தை தணிக்க, இத்தாலியின் தொழிற்சங்க கூட்டமைப்புகள் ஒரு சுருக்கமான, அடையாள ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தத்தை நடத்தின.

புதனன்று தன்னுடைய இராஜிநாமா உரையில் ரென்சி, பெருந்தொற்று நோய்க்கு இத்தாலியின் விடையிறுப்பை மேம்படுத்துவதற்கு தனது கட்சி அரசாங்கத்தை விட்டு விலகுவதாக கூறினார். அவர் கூறினார்: "நிலைமையோடு ஒட்டிக்கொள்வதை விட ஒரு அரசாங்கப் பதவியை விட்டு விலகுவது என்பது மிகவும் கடினம். நாம் ஒரு பெரிய அரசியல் நெருக்கடியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், பெருந்தொற்று நோயுடன் தொடர்புடைய ஆபத்துக்கள் பற்றி நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நெருக்கடியை எதிர்கொள்வதில், பொறுப்புணர்வு என்பது பிரச்சினைகளை தீர்ப்பதே தவிர அவற்றை மறைக்கக் கூடாது.”

ரென்சியின் சூழ்ச்சியானது நேற்று M5S மற்றும் PD இல் இருந்த அவரது முன்னாள் கூட்டாளிகளிடம் இருந்து கடுமையான விமர்சனங்களையும், புதிய தேர்தல்களுக்கான நவ-பாசிச லெகா (Lega) மற்றும் இத்தாலியின் சகோதரர்கள் (Brothers of Italy - Fratelli d'Italia) கட்சிகளிடமிருந்து அழைப்புக்களும் விடப்பட்டன. லெகாவும், ஃப்ரடெல்லியும் (Fratelli) தற்போது அத்தகைய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்று சில்வியோ பெர்லுஸ்கோனியின் இத்தாலி முன்னிலை (Forward Italy-Forza Italia) கட்சியுடன் தேர்தல் கூட்டணியாக உள்ளன. அதாவது PD க்கு முன்னால், Lega 23 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும், மற்றும் M5S க்கு முன்னால், Fratelli 16 சதவிகிதமும், மற்றும் Forza Italia 6 சதவிகிதமும் பெற்றுக்கொள்ளும்.

கொன்தே கூட்டணியின் முன்னணி கட்சியான M5S இலிருந்து, வெளியுறவு மந்திரி லூய்கி டி மாயோ என்பவர் ரென்சியின் சூழ்ச்சியை ஒரு “பொறுப்பற்ற சைகை” என்று அழைத்தார் மற்றும் ஐரோப்பிய தொழிலதிபர்களிடம் “இத்தாலியின் மீட்பிற்காக” பணியாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார். M5S இன் நிறுவனர், நகைச்சுவை நடிகர் பெப்பே கிரில்லோ, எந்தவொரு கட்சியிலும் உறுப்பினராக இல்லாத சட்டப் பேராசிரியரான கொன்தேக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார், ஆனால் M5S பலமுறை உயர் பதவிக்கு பெயரிட்டுள்ளது.

ரென்சியின் முன்னாள் கட்சியான PD யின் தலைவர்களும் அவரது கட்சியின் சூழ்ச்சியைக் கண்டித்தனர். PD யின் துணைச் செயலாளர் ஆண்ட்ரியா ஆர்லாண்டோ கூறினார்: "ஒரு நாளைக்கு 500 இறப்புகள் மற்றும் கட்டுப்படுத்தமுடியாத பொருளாதார நெருக்கடி, ஆனால் இத்தாலி அலைவ் (Alive) கட்சி ஒரு நெருக்கடியைத் தூண்டுவதற்கு தன்னைத்தானே எடுத்துக் கொண்டது, இது நாட்டை நிச்சயமற்ற மற்றும் குழப்பத்திற்குள் தள்ளியுள்ளது."

முன்னாள் PD பிரதம மந்திரி ரோமனோ புரோடி, COVID-19 பெருந்தொற்று நோய் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, நிலைமை குறித்து கவலைப்படத் தொடங்கியிருப்பதாக அவர் கூறினார்: "நான் உண்மையில் கவலைப்பட்ட முதல் நாள். நம்மிடம் உள்ள பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மீட்பு நிதியம் [ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு நிதியம்], பொஸ்னியா மற்றும் லிபியாவிலுள்ள அகதிகள் மற்றும் G20 உச்சிமாநாட்டைத் தயாரித்தல் ஆகியவையும் இது சாத்தியமற்றது. ... இது ஒரு சாதாரண இராஜினாமா அல்ல. நாடு தான் இராஜினாமா செய்து கொண்டிருக்கிறது" என்றார்.

லெகா தலைவர் மத்தேயோ சால்வினி மற்றும் ஃப்ரேடெல்லி தலைவர் ஜோர்ஜியா மெலோனி ஆகியோர் ரென்சியின் இராஜிநாமாவிற்கு விடையிறுக்கையில், இது COVID-19 தொற்றுக்களின் தற்போதைய மீள்எழுச்சியை விரைவுபடுத்தும் என்றாலும், புதிய தேர்தல்களை நடத்த வேண்டும் என்று கோரினர். மெலோனி கூறினார், "அவர்கள் அனைவரும் ஏன் [காரணங்கள்] கண்டுபிடித்துள்ளனர், அவர்கள் இன்னும் மீண்டும், சுதந்திரமான தேர்தல்களில் இத்தாலிய மக்கள் முன் தங்களை முன்வைக்க தவிர்க்க வேண்டும். நாம் ஒரு வாக்களிப்பை வைக்க முடியாது என்பது ஒரு பொய். உடனடியாக தேர்தலை நடத்துங்கள்!"

சால்வீனி ட்டுவிட் செய்தார்: "இந்த அரசாங்கம் எல்லாவற்றிற்கும் எதிராக போராடவேண்டும் மற்றும் விரைவில் வீட்டிற்கு செல்லும் என்று நாங்கள் நாட்டை எச்சரித்தோம். இன்னும் ஒரு அரசாங்கம் இருக்கிறதா?" அரசியல் ஸ்தாபகம் "இத்தாலிய மக்களை நம்ப வேண்டும், அவர்கள் தங்கள் வார்த்தையை மீண்டும் கொடுக்க வேண்டும்" என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

இத்தாலிய ஆளும் வர்க்கத்திற்குள் ஒரு மிருகத்தனமான கோஷ்டி மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு கன்னையும் போலியான பாசாங்குகளின் கீழ் தன்னை தொழிலாளர்களுக்கு முன்வைக்கிறது. உண்மையில், ரென்சி ஐரோப்பிய ஒன்றிய "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையை எதிர்க்கவில்லை, இது இத்தாலியில் 80,000 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்டுள்ளது, மற்றும் ஐரோப்பா முழுவதும் 600,000 உயிர்களைப் பலி கொண்டுள்ளது, இத்தாலிய நவ-பாசிஸ்டுகள் மக்களின் விருப்பத்தை விட வேறு பிரதிபலிப்பதற்கு அர்ப்பணித்துள்ளனர். பெரிதளவில், அனைத்து முக்கிய நேட்டோ நாடுகளிலும் அரசியல் உடைவிற்கு மத்தியில், "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" மற்றும் சிக்கனக் கொள்கைகளை எவ்வாறு திணிப்பது என்பது குறித்து கடுமையான பிளவுகள் வெடித்துவருகின்றன.

டிசம்பர் 17 திகதியன்று ரென்சி குரியேர் டெல்லா சேரா (Corriere della Sera) பத்திரிகையில் ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டார். இது கொன்தேயின் அரசாங்கம் பற்றிய அவரது விமர்சனங்களை வெளியிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 750 பில்லியன் யூரோக்கள் பெருநிறுவன பிணையெடுப்பு நிதியில் இத்தாலிக்கு ஒதுக்கப்பட்ட 209 பில்லியன் யூரோக்களை COVID-19 பெருந்தொற்று நோய்க்கு மத்தியில் எவ்வாறு செலவிடுவது மற்றும் கொன்தே அரசாங்கத்தின் பூகோள மூலோபாய நோக்குநிலை பற்றிய விமர்சனங்கள் என்பது பற்றிய கருத்து வேறுபாடுகளை அவர் பிரதானமாக எழுப்பினார்.

ஐரோப்பிய ஒன்றியம் இந்த பெருந்தொற்று நோயைக் கொலைகாரமுறையில் கையாண்டதால் தூண்டிவிடப்பட்டுள்ள அரசியல் நெருக்கடி பற்றிய அவரது அவநம்பிக்கையான பார்வையை ரென்சி வலியுறுத்தத் தொடங்கினார். வைரஸின் வெடிப்புத்தன்மையான வளர்ச்சிக்கு தொழிலாளர்களை பொய்யாக குற்றம் சாட்டும் உத்தியோகபூர்வ சொல்லாட்சி இனி நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்று ரென்சி எழுதினார்:

"அந்த 200 பில்லியன் யூரோக்கள் எங்கள் கடைசி வாய்ப்பு. [ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைவர்] மரியோ திராகி மிகத் தீவிரமாக குறிப்பிட்டதைப் போல, "பார்ப்பதை விட பிரச்சினை இன்னும் மோசமாக உள்ளது, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." பிரதமர், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஐரோப்பாவில் மிகையாக COVID இறப்புக்கள் எம்மிடம் உள்ளன. 'எல்லாம் நன்றாகப் போகிறது' என்ற இந்த சொல்லாட்சியைத் தொடர்வது பயனற்றது. ... அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை ஒழுக்கத்துடன் பின்பற்றிய குடிமக்களை நாங்கள் குறை கூறக்கூடாது, மாறாக என்ன தவறு நடந்துள்ளது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்… ”

"பசுமை வேலை வாய்ப்புக்கள்" மற்றும் செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் "இணையவழி விடயங்கள்" போன்ற உயர் தொழில்நுட்ப தொழிற்துறைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய மானியங்களை கையளித்து செலவிட அழைப்பு விடுத்த அவர், இத்தாலிய சுகாதார செலவினங்கள் "ஐரோப்பிய ஸ்திரத்தன்மை இயங்குமுறையிலிருந்து 36 பில்லியன் யூரோக்களை மேலும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்றார். ஆனால், 2008 ஆண்டு பொருளாதாரச் சரிவிற்குப் பின்னர் கிரீஸில் ஏற்பட்டது போல், ஐரோப்பிய ஒன்றியம் "முக்கூட்டு" (EU-ECB-IMF) நிதியியல் கண்காணிப்பாளர்களை இத்தாலிக்கு அனுப்ப அனுமதிக்கும் என்பதால், கொன்தே அரசாங்கம் இதுவரை அதை மறுத்துள்ளது.

வெளியுறவுக் கொள்கை குறித்து ரென்சி மேலும் ஒரு பெரிய கூற்றைக் கோரினார்; அங்கு கொன்தே அரசாங்கம் மாஸ்கோவுடன் உறவுகளை வளர்த்துள்ளது மற்றும் சீனாவின் பூகோள ஒரே இணைப்பு ஒரே பாதை உள்கட்டமைப்பு திட்டங்களில் (Belt and Road Initiative infrastructure projects) பங்கு பெற ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அவர் எழுதினார்:

"பைடெனின் அமெரிக்கா மற்றும் புதிய ஐரோப்பாவின் புதிய உலகில் இத்தாலியின் இடத்தை நாம் ஒன்றாக முடிவு செய்வோம். நாம் எப்படி [அமெரிக்க-ஐக்கிய அரபு எமிரேட்ஸ்] ஆபிரகாம் அமைதி ஒப்பந்தம் (Abraham Peace Deal) மற்றும் ஆசிய நூற்றாண்டின் பெரும் சவால்களை நம்மை எவ்வாறு நிலைநிறுத்துகிறோம். உங்கள் முதல் அரசாங்கத்தின் பாதுகாப்பு ஆணைகளின் சொல்லாட்சியுடன் அல்லாமல் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்காக நாங்கள் ஆபிரிக்காவிற்குச் செல்கிறோம். நாம் மத்தியதரைக்கடலில் ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை வகிக்கிறோம், அங்கு சமீபத்திய ஆண்டுகளில் எங்கள் பிரசன்னம் குறைவாக உள்ளது, ரஷ்யா மற்றும் துருக்கியின் தாக்கம் வலுவாக உள்ளது."

ரென்ஸிக்கு சிறிய ஆதரவும் இல்லை, இத்தாலி விழிப்புணர்வு (IV) கட்சி 3 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ளன, மேலும் அவர் எதைச் சாதிப்பார் என்று தெளிவாகத் தெரியவில்லை. சில ஆசிரிய தலையங்கள், கொன்தேயுடனான ஒரு புதிய அரசாங்க ஒப்பந்தத்தில் அவர் ஒரு கடினமான பேரம் பேசுவதற்கும் அதிக செல்வாக்கைப் பெறுவதற்கும் முயலக்கூடும் என்று ஊகித்துள்ளனர், இருப்பினும் M5S அதிகாரிகள் நேற்றிரவு ரென்சி “இனி ஒரு இடைத்தரகு பேச்சாளர் அல்ல” என்று அவர்கள் பேசுவதாகக் கூறினர். அவரது சூழ்ச்சி புதிய தேர்தல்களிலும், புதிய பாசிஸ்டுகளின் அதிகாரத்திற்கு வருவதிலும் முடிவடையும் வாய்ப்பு உள்ளது.

ஜனவரி 6 ம் திகதி வாஷிங்டனில் நடந்த ஆட்சி சதிக்குப் பின்னர், ஐரோப்பா முழுவதிலுமுள்ள அதி-வலது வட்டாரங்களில் அரசியல் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. — இன்னமும் ட்ரம்பை புகழ்ந்து வருவதும் மற்றும் ஸ்பெயினின் பாசிச இராணுவ அதிகாரிகளை ஸ்பெயினில் "26 மில்லியன்" மக்களை படுகொலை செய்து ஒரு ஆட்சி கவிழ்ப்பிற்கு அழைப்பு விடுத்து வரும் ஸ்பெயினின் பாசிச வோக்ஸ் கட்சி (Vox party) ஆனது Fratelli d’Italia இன் மெலோனி (Meloni) மற்றும் அமெரிக்க குடியரசுக் கட்சி வரி-எதிர்ப்பு குரோவர் நோர்குவிஸ்ட் (Grover Norquist) செயற்பாட்டாளர்களையும் பார்சிலோனாவில் இன்று சந்திக்கிறார்கள்.

எவ்வாறெனினும், இந்த பிற்போக்கு சக்திகள் எதுவும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளுக்கும், தாங்கமுடியாத மட்டத்திலான சமூக சமத்துவமின்மைக்கும், இத்தாலிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் நிலவுகின்ற போருக்கும் எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்புக்காக பேசவில்லை என்பது தெளிவாகிறது. தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச இயக்கத்தைக் கட்டமைப்பதும் மற்றும் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகள் மற்றும் எதேச்சாதிகார ஆட்சியின் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச அளவில் அரசியல் பொது வேலைநிறுத்தங்களை தயாரிப்பதும் தான் முன்னோக்கிய பாதையாக இருக்கின்றன.

Loading