அலெக்ஸி நவால்னிக்கு ரஷ்ய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புட்டின் அரசாங்கத்தின் எதிர்ப்பாளர் அலெக்ஸி நவால்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாஸ்கோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2014 மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் தனது நன்னடத்தை விதிகளை மீறியதற்காக குற்றம் சாட்டப்பட்டார். நீதிமன்றம், நவால்னி ஏற்கனவே வீட்டுக் காவலில் இருந்து தனது சமீபத்திய தண்டனைக்காக செலவழித்தார் என்று பல மாதங்கள் கணக்கிடப்பட்டது, இதனால் அவரது தண்டனைக் காலம் இரண்டு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் என்று குறைக்கப்பட்டது. அவரது சட்ட பாதுகாப்புக் குழு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்.

ஐந்து மாதங்கள் ஜேர்மனியில் கழித்த பின்னர், ஜனவரி மாதம் நவால்னி ரஷ்யாவிற்குத் திரும்பினார், ஆகஸ்ட் 2020 இல் சைபீரியாவிலிருந்து மாஸ்கோவிற்கு வந்த ஒரு விமானத்தில் நோய்வாய்ப்பட்டு அவர் அங்கு சென்றடைந்தார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து நவால்னி, கிரெம்ளின் சார்பில் நோவிசோக் என்ற விஷம் தனக்கு வைத்தது என்று வலியுறுத்துகிறார். இந்தக் கூற்றுக்கள் ஆரம்பத்திலிருந்தே முரண்பாடுகள் நிறைந்தவையாக இருக்கின்றன. ரஷ்யாவிற்குத் திரும்பினால் அவர் கைது செய்யப்படுவார் என்று கிரெம்ளினால் எச்சரிக்கப்பட்ட நவால்னி, ஜனவரி 17 அன்று மாஸ்கோவிற்கு வந்ததும் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில், நவால்னி தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சட்டவிரோதமானவை என்று வாதிட்டார். புட்டினை "உள்ளாடைக்குள் விஷம்" வைத்திருப்பவர் என்று அவரைக் கண்டித்தார், ரஷ்ய அரசாங்கத்தால் அவர் கிட்டத்தட்ட கொல்லப்பட்ட கதையின் சமீபத்திய பதிப்புகளில் ஒன்றைக் குறிப்பிட்டார். நவால்னி ஒரு உயரடுக்கு FSB (இரகசிய சேவை) சிறு குழுவினால் தனது உள்ளாடைகளில் நோவிசோக் நஞ்சை தடவியதாக கூறுகிறார்.

விசாரணை நடைபெற்ற நீதிமன்றக் கூடம் ஒரு பாரிய பொலிஸ் சுற்றிவளைப்புக்கு உட்பட்டிருந்ததுடன், குறைந்தது முந்நூறு ஆர்ப்பாட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டனர். நாட்டின் பிற பகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு நவால்னி ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

முந்தைய இரண்டு வார இறுதிகளில் மாஸ்கோ, பீட்டர்ஸ்பேர்க் மற்றும் டஜன் கணக்கான நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நவால்னியை பாதுகாப்பதற்காக வீதிகளில் இறங்குவதைக் காணக்கூடியதாகவிருக்கிறது. கிரெம்ளினின் வன்முறை ஒடுக்குமுறைகள் மற்றும் ஆயிரக்கணக்கான கைதுகளுடன் பதிலளித்துள்ளது. நவால்னியின் பல முக்கிய கூட்டாளிகள் இப்போது வீட்டுக் காவலில் உள்ளனர்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், தேசிய பாதுகாப்புப் படை மாஸ்கோவில் அணிதிரட்டப்பட்டது, கிரெம்ளினின் முன் இருந்த சதுக்கம் பார்வையாளர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மூடப்பட்டது. அமெரிக்க ஆதரவு தாராளவாத எதிர்க் கட்சிகளான PARNAS மற்றும் Yabloko ஆகியவை இந்த வார இறுதியில் நவால்னிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்தன.

ரஷ்யாவிலுள்ள போலி-இடதுகளின் பரந்த பிரிவுகளின் ஆதரவையும் எதிர்த்தரப்புவாதி (நவால்னி) அனுபவித்து வருகிறார். செய்தி ஊடகத் தகவல்களின்படி, புட்டின் அரசாங்கத்தின் ஒரு முக்கிய முட்டுகொடுக்கும் கட்சியான ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி (KPRF) ஆனது நவால்னி தொடர்பாக பிளவின் விளிம்பில் உள்ளது, ஏனெனில் கட்சியின் ஒரு கணிசமான பிரிவு இப்போது அவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறது.

இந்தத் தீர்ப்பு ஏகாதிபத்திய சக்திகளின் உடனடிக் கூக்குரலை தூண்டியது. சமீபத்திய ஆண்டுகளில் சமூக எதிர்ப்புக்களை மிருகத்தனமாக நசுக்கிய பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், "அரசியல் கருத்து வேறுபாடு ஒருபோதும் ஒரு குற்றமாகாது" என்பதால், இந்த தீர்ப்பை "ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அறிவித்தார்.

ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி Annegret Kramp-Karrenbauer மற்றும் அமெரிக்க வெளிவிவகார செயலர் அந்தோனி பிளிங்கன் இருவரும் நவால்னியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி டொமினிக் ராப் அவரது தண்டனை "மூர்க்கமானது" என்று கண்டனம் செய்தார்.

நவால்னியை சுற்றி உள்நாட்டிலும் சர்வதேசரீதியிலும், வெளிப்பட்டுள்ள அரசியல் அழுத்தங்கள் பரந்த நெருக்கடியின் வெளிப்பாடாகும். கொரோனா வைரஸ் பெருந்தொற்று ரஷ்யா மற்றும் உலகம் முழுவதும் சமூகத்தை ஆழமாக உறுதிகுலைத்துள்ளது. நாட்டில் பல பத்தாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டதோடு, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை வேலைவாய்ப்பின்மைக்குள் தள்ளியுள்ளது. மேலும் பல மில்லியன் மக்கள் வறுமையிலும் உள்ளனர். ரஷ்ய பொருளாதாரம் கடந்த ஆண்டு 3.1 சதவீதம் சுருங்கியது.

பல ஆண்டுகளாக பொருளாதாரச் சரிவிற்கு பின் இது வருகிறது, உக்ரேன் மீதான மோதல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த பொருளாதாரத் தடைகளால் தூண்டப்படுகிறது. ரஷ்ய செல்வந்த தட்டு இந்த மோதலின் முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது கொண்டு வந்துள்ளது. பெருந்தொற்று நோய் தாக்கப்படுவதற்கு முன்பே ஆறு ஆண்டுகளாக உண்மையான ஊதியங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. கடந்த ஆண்டு வருமானங்கள் 3.5 சதவிகிதம் சரிந்தன, அதே நேரத்தில் பணவீக்கம் 4.9 சதவீதமாக இருந்தது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், ரஷ்யாவில் சமூக சமத்துவமின்மையானது எந்தவொரு பெரிய பொருளாதாரத்திலும் மிக உயர்ந்ததாக இருக்கிறது. 2017 ஆம் ஆண்டில், உயர் 10 சதவீதம் பேர் நாட்டின் செல்வத்தில் 89 சதவீதத்தை வைத்திருந்தனர். பெரும்பான்மையான தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்கு சில நூறு டாலர்களில் வாழ வேண்டும், அதே நேரத்தில் பத்து செல்வந்த ரஷ்ய தன்னலக்குழுக்கள் மொத்தமாக 151.6 பில்லியன் டாலர்கள் செல்வத்தை வைத்திருக்கின்றனர்.

கருங்கடலில் புட்டின் கட்டிய அரண்மனை என்று கூறப்படும் ஒரு காட்சியை அம்பலப்படுத்தும் ஒரு வீடியோவுடன் இந்த சமூக அதிருப்தியை தட்டியெழுப்ப நவால்னி முயன்றார். இந்த வீடியோ 100 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. கிரெம்ளின் இப்பொழுது புட்டினின் நெருங்கிய கூட்டாளியான Arkadi Rotenberg க்கு சொந்தமானதாக இந்த அரண்மனை உள்ளது என்று வாதிடுகிறது. ஜனவரி 23 அன்று 24 வயதான எதிர்ப்பாளர் ஒருவர், அல் ஜசீராவிடம், இந்த வீடியோவால் அவர் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார், மருத்துவ தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் முன்னணியில் இருந்தவர்கள் வறுமை ஊதியங்கள் பெறும் நிலையில், "மருத்துவர்கள் என்ன மாதிரியான போனஸ் பெறுகிறார்கள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியும்: சுமார் 17,000 ரூபிள்கள் (223 டாலர்கள்)” என்று கிண்டலாக அவர் கூறினார்.

ரஷ்யாவை இறுக்கும் அரசியல் நெருக்கடியும், நவால்னியைச் சுற்றி வெடித்துக் கொண்டிருக்கும் பதட்டங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதும், பரந்த அளவில் உலக முதலாளித்துவத்தின் பொறிவின் ஒரு அறிகுறியாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, ரஷ்ய தன்னலக்குழுவிற்குள் ஏற்பட்ட அழிவுகரமான உள்மோதல்கள் வர்க்கப் பதட்டங்களின் அதிகரிப்பால் எரியூட்டப்படுகின்றன.

ரஷ்யாவில் பெருகிவரும் வர்க்க கோபத்தால் பீதியடைந்த நவால்னியும் அவரது ஆதரவாளர்களும் இத்தகைய உணர்வுகளை ஒரு பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் செலுத்த முயல்கின்றனர். தீவிர வலதுசாரிகளுடன் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட உறவுகளைப் பராமரிக்கும் நவால்னி, தன்னலக்குழுவின் ஒரு அடுக்குக்காக பேசுகிறார், இது அமெரிக்காவுடன் அதிக நேரடி ஒத்துழைப்பை நோக்கியதாகும். அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் ரஷ்யாவிற்குள் பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டிவிடுவது பிராந்தியத்தில் அமெரிக்க ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழியாக கருதுகிறது.

இந்தக் காரணத்திற்காகத்தான் புட்டினின் சொத்து பிரச்சினை தனிப்பட்ட ஊழல்களில் ஒன்றாக முன்வைக்கப்பட்டுள்ளது; இந்த அடிப்படையில் முடியாட்சிவாதிகள் மற்றும் அதிதீவிர தேசியவாதிகள் உட்பட மிகவும் பிற்போக்கான சக்திகள் அணிதிரட்டப்பட முடியும். இதற்கிடையில், நவால்னி முதல் பப்லோவாத ரஷ்ய சோசலிச இயக்கத்தின் (Pabloite Russian Socialist Movement) அவரது ஆதரவாளர்கள் வரை, "முதலாளித்துவம்" என்ற வார்த்தையின் எந்தவொரு குறிப்பும் எதிர்ப்புக்களில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சக்திகளால் தடைசெய்யப்பட்டுள்ளது.

ரஷ்ய ஆளும் வர்க்கத்திற்குள் உள்ள மோதல்களும் அது எதிர்கொள்ளும் பூகோள அரசியல் பதட்டங்களும் அதன் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியால் தூண்டப்படுகின்றன. 1991ல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பிலிருந்து வெளிவந்த பின்னர், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்துடனும் கைகோர்ப்புக்கு கொண்டு வந்தது, ரஷ்யாவின் தன்னலக்குழுக்கள் உலக ஏகாதிபத்தியத்தை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் சார்ந்திருக்கின்றன.

பல ஆண்டுகளாக, புட்டின் ஆட்சி, ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் ஒரு கணிசமான பகுதியுடனான அதன் உறவுகளை ஆழப்படுத்துவதன் மூலம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அதிகரித்து வரும் ரஷ்யாவின் சுற்றிவளைப்புகளை எதிர்கொள்வதற்கு முயன்றது. உக்ரேனில் 2014 ரஷ்யா-விரோத ஆட்சி சதியை ஜேர்மனி ஆதரித்தபோதிலும், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை ஆதரித்தது மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான இராணுவ கட்டமைப்பை அதிகரித்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையே, குறிப்பாக எரிசக்தி துறையில், பொருளாதார உறவுகள் நெருக்கமாக உள்ளன.

ரஷ்யாவை நோக்கிய ஒரு ஆக்கிரோஷக் கொள்கையுடன் தொடர்புடைய புள்ளி விவரங்களை பைடென் நிர்வாகம் கொண்டுள்ள நிலையில், ஜேர்மனிய-ரஷ்ய உறவுகள் இப்பொழுது அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே வளர்ந்து வரும் பதட்டங்களின் மையப் புள்ளியாக மாறிவிட்டன. இதன் அப்பட்டமான வெளிப்பாடு நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாய்த் திட்டம் பற்றிய மோதல் ஆகும். உக்ரேனை சுற்றி, இந்த குழாய்த் திட்டம் இன்னும் கூடுதலான ரஷ்ய எரிவாயுவை நேரடியாக ஜேர்மனிக்கு வழங்க உள்ளது.

வரலாற்று ரீதியாக அனைத்து ஜேர்மன்-ரஷ்ய குழாய்த் திட்ட முன்முயற்சிகளையும் எதிர்க்கும் அமெரிக்கா, நோர்ட் ஸ்ட்ரீம் 2 க்கு காங்கிரஸில் இரு கட்சி ஆதரவுடன் எதிர்ப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது, இது கடந்த ஆண்டு அதன் கட்டுமானத்தை திறம்பட தடுத்தது. சூரிச் காப்பீட்டுக் குழு மற்றும் ஜேர்மனிய கட்டுமான மற்றும் பொறியியல் குழுவான Bilfinger SE உட்பட பல பெரிய நிறுவனங்கள் இப்பொழுது இந்த திட்டத்தில் இருந்து பின்வாங்கத் தொடங்கிவிட்டன.

பிரெஞ்சு ஐரோப்பிய விவகாரங்களுக்கான பிரெஞ்சு மந்திரி Clément Beaune செவ்வாயன்று ஜேர்மனிக்கு திட்டத்தை முடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். பாரிஸ் அத்தகைய கோரிக்கையை எழுப்பியிருப்பது இதுவே முதல் தடவையாகும். ஆனால் ஜேர்மனிய அரசாங்கம் இதுவரை நோர்ட் ஸ்ட்ரீம் 2 க்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஜேர்மன் செய்தி ஊடகத்தில், நவால்னி வழக்கின் பின்னணியில் இத்திட்டம் பற்றி காரசாரமான விவாதங்கள் உள்ளன.

தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை, உலக முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு விடையறுக்கும் வகையில், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தன்னலச் செல்வந்ததட்டுக்கள் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் மோதலிடும் பிரிவுகளிலிருந்து சுயாதீனமாக அதன் சொந்த நலன்களை முன்கொண்டு செல்வதே ஆகும். இதற்கு 1917 அக்டோபர் புரட்சியின் வரலாறு பற்றிய முழுமையான ஆய்வு தேவைப்படுகிறது – அதாவது பல தசாப்தங்களாக தற்போது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பேரழிவுக்கான நிலைமைகளை தோற்றுவித்த ரஷ்யாவிலும் சர்வதேச அளவிலும் புரட்சியை காட்டிக்கொடுத்து இறுதியில் USSR ஐ கலைக்க நகர்ந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச போராட்டத்தை கற்க வேண்டும்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது பற்றி மேலும் அறிய, WSWS தலைப்புப் பக்கத்தைப் பார்க்கவும்

Loading