போல்சனாரோவுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களும் பிரேசிலில் சோசலிசத்திற்கான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

2021 ஜூலை 3 சனிக்கிழமையன்று பிரேசிலின் சாவ் பாவ்லோவில் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ பதவி விலக வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பாலிஸ்டா அவென்யூவில் அணிவகுத்துச் சென்றனர்.(AP Photo/Nelson Antoine)

கடந்த ஒரு மாதத்தில், பிரேசில் மூன்று நாட்கள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களைக் கண்டது. இது ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் நிர்வாகத்திற்கும் கோவிட்-19 தொற்றுநோய்க்கான குற்றவியல்ரீதியான பிரதிபலிப்பிற்கும் பதிலுக்கும் எதிராக நூறாயிரக்கணக்கான மக்களை வீதிகளுக்கு கொண்டு வந்துள்ளது.

ஆர்ப்பாட்டங்களின் அளவும், எதிர்ப்பாளர்களின் விடாமுயற்சியும் பிரேசிலிய மக்களின் பரந்த அடுக்குகளிடையே தற்போதுள்ள சமூக ஒழுங்கின் மீது வளர்ந்து வரும் அதிருப்தியை வெளிப்படுத்துவதுடன், பிரேசிலில் உண்மையான சோசலிச கொள்கைக்கான போராட்டத்தின் அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றது.

சமீபத்திய மாதங்களில் பராகுவே மற்றும் கொலம்பியாவில் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்களுடன், பிரேசிலில் ஆர்ப்பாட்டங்கள் கோவிட்-19 தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக உலகம் முழுவதும் ஆளும் வர்க்கங்கள் மேற்கொண்ட படுகொலை கொள்கைகளுக்கு எதிராக வீதிகளில் வெகுஜன எதிர்ப்பின் ஆரம்ப வளர்ச்சியைக் குறிக்கின்றன.

அவை தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாக்கலின் உலகளாவிய அலையின் ஒரு பகுதியாகும். இது முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுரண்டல் நிலைமைகளுக்கு எதிராக ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வேலைநிறுத்தங்களை நடத்தியதோடு, பெருநிறுவன ஆதரவு தொழிற்சங்கங்களின் ஆதிக்கத்திற்கு சவால் விடுத்துள்ளன.

இந்த நிகழ்வுகள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) மார்க்சிச முன்கணிப்பை உறுதிப்படுத்துகின்றன, இது கோவிட்-19 தொற்றுநோய் வெடிப்பை ஒரு தூண்டுதல் நிகழ்வு எனவும், இது சர்வதேச மட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பதிலைத் தூண்டும் எனவும் பகுப்பாய்வு செய்திருந்தது.

போல்சனாரோவினதும் அவரது கூட்டாளிகளினதும் குற்றங்கள்

பிரேசிலில், கொரோனா வைரஸுக்கு தேவையில்லாமல் இழந்த அரை மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைத் தவிர, தொற்றுநோய்க்கான முதலாளித்துவ பிரதிபலிப்பு, உழைக்கும் மக்களின் மோசமான நிலைமைகளையும், ஏற்கனவே சமூக சமத்துவமின்மையின் கொடூரமான நிலைகளையும், நாட்டில் முதலாளித்துவ ஆட்சியின் கொடூரத்தையும் மோசமாக்கியுள்ளது.

பாசிச ஜனாதிபதி போல்சனாரோவின் உருவத்தில் வெளிப்படும் பிரேசிலிய முதலாளித்துவத்தின் படுகொலைக் கொள்கை அதன் மிக தீவிரமான மற்றும் கடுமையான வெளிப்பாடாகும். தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை நிறுத்துவத்தைக் கோரி, தொற்றுநோயை ஆளும் வர்க்கம் ஒரு போராக எதிர்கொள்ள வேண்டும் என்று போல்சனாரோ வலியுறுத்தினார்.

உயிர்களைக் காப்பாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியும் இலாப நலன்களுடன் முரண்பட அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கையை தொடர்ந்து பின்பற்றி, போல்சனாரோ விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களால் முன்வைக்கப்பட்ட கொள்கைகளை மீண்டும் மீண்டும் தாக்கினார். முகக்கவசங்களை அணிவதையும், சமூக விலகியிருத்தலையும் எதிர்த்து, எந்தவொரு விஞ்ஞான அடிப்படையுமின்றி ஊக்குவிக்கப்பட்ட மருந்துகளை நோய்க்கான அதிசய குணப்படுத்துதல்களாக அவர் ஊக்கப்படுத்தியுள்ளார். “பூட்டுதல்” கட்டளைகளுக்கு கீழ்ப்படியாதிருப்பதை ஊக்குவித்து மற்றும் நாட்டில் தடுப்பூசி பிரச்சாரத்தை நாசப்படுத்தினார்.

தொற்றுநோய்களின் போது, போல்சனாரோ பிரேசிலில் ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான தனது திட்டமிட்ட முயற்சிகளை ஆழப்படுத்தியுள்ளார். அவர் தனது அரசாங்கத்தின் ஒவ்வொரு துறைக்கும் இராணுவ அதிகாரிகளை பதவியிலிருத்தினார். கொரோனா வைரஸுக்கு தனது குற்றவியல் பிரதிபலிப்பை ஒருங்கிணைப்பதை ஒரு பதவியிலுள்ள தளபதியிடம் ஒப்படைத்து மற்றும் ஆயுதப்படைகளை தனது அரசாங்கத்தின் 'பூட்டுதல்களுக்கு எதிரான போர்' கொள்கைக்கு இழுக்க முயன்றார்.

கடந்த ஆண்டு பிரேசிலிய மக்களுக்கு எதிரான தாக்குதல்களில் போல்சனாரோ மிகவும் கண்ணுக்குத்தெரியும் நபராக இருந்தபோதிலும், முழு ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் கட்டமைப்பும் இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றங்களில் தொடர்புபட்டுள்ளன.

பிரேசிலிய முதலாளித்துவத்தின் பல்வேறு தொழில்துறை மற்றும் வணிக சங்கங்களின் பிரதிநிதிகள், பாசிச ஜனாதிபதியுடன் பிரேசிலின் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று, பிரேசில் இதுவரை 10,000 கோவிட்-19 இறப்புகளை எட்டாதபோது முன்னெடுக்கப்பட்ட சமூக விலகியிருத்தலை மேம்படுத்துவதற்கான அற்ப நடவடிக்கைகளை நீக்குமாறு 'போதும்!' என்று கோரினர்.

இந்த இரக்கமற்ற உத்தரவு முதலாளித்துவ ஸ்தாபகத்தின் அனைத்து தரப்பினரும், தொழிலாளர் கட்சியின் (PT) ஆளுநர்கள் முதல் வலதுசாரி பிரேசில் சமூக ஜனநாயகக் கட்சி (PSDB) வரை அனைவராலும் அடிமைத்தனமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. அவை அனைத்தும் பொருளாதாரம் மற்றும் பள்ளிகளை மீண்டும் திறப்பதை ஊக்குவித்து, பேரழிவு தரும் விளைவுகளை பற்றி அலட்சியமாக இருந்தன.

சமூக எதிர்ப்பானது முதலாளித்துவ அரசின் பின்னால் இணைக்கப்படுகிறது

சமூக எதிர்ப்பின் வளர்ச்சி முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் வெளிப்படையான போராட்டமாக மாறக்கூடும் என்ற அச்சத்தில், ஆளும் வர்க்கத்திற்குள் இருக்கும் போல்சனாரோவின் போட்டியாளர்கள் மக்கள் கோபத்தை முதலாளித்துவ அரசின் பின்னால் திசைதிருப்புவதன் மூலம் அதைத் தீர்க்க முயற்சிக்கின்றனர்.

சமீபத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்த அரசியல் சக்திகளான தொழிலாளர் கட்சி மற்றும் அதன் அரசியல் தொங்குதசைகள் மற்றும் அவர்கள் கட்டுப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக இயக்கங்களும் போல்சனாரோ நிர்வாகத்திற்கு எதிரான அரசியல் எதிர்ப்பில் உள்ள எந்தவொரு வர்க்க உள்ளடக்கத்தையும் அடக்குவதற்கு தீவிரமாக செயல்படுகின்றன.

அவர்களின் முயற்சிகள், ஆர்ப்பாட்டங்களுக்கு குறுகிய அரசியல் வரம்புகளை உருவாக்குவதையும், முதலாளித்துவம் மற்றும் அதன் அரசு மீதான அழுத்தத்தின் ஒரு வடிவத்தினுள் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த அரசியல் முன்னோக்கின் படி, மக்களின் நடவடிக்கையானது பிற்போக்குத்தனமான அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் மக்களின் முதுகுக்குப் பின்னால் முதலாளித்துவ நலன்களுக்காக செயல்படுத்தப்படும் ஒப்பந்தங்களுக்கு ஒரு ஜனநாயக அல்லது 'முற்போக்கான' மூடுதிரையை வழங்கவும் அதை நியாயப்படுத்தவும் உதவ வேண்டும்.

ஆர்ப்பாட்டங்கள், தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டாளிகளுக்கும் பிரேசிலிய அரசியல் ஸ்தாபகத்தின் மிகவும் வலதுசாரி சக்திகளுக்கும் இடையில் ஒரு பிற்போக்குத்தனமான கூட்டணியை உருவாக்குவதற்கு அரசியல் ரீதியாக அடிபணிய செய்யப்பட்டன. அவர்களின் திட்டம், கோவிட் பாராளுமன்ற விசாரணை ஆணையத்தின் (CPI) பணி மற்றும் போல்சனாரோ மீதான பதவிவிலக்கல் குற்றச்சாட்டுக்கான அழைப்புகள் மீதான காங்கிரஸ் வாக்குகளுக்கான அட்டவணை ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு மிருகத்தனமாக உயிர்களை தியாகம் செய்வது, ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் போல்சனாரோ அரசாங்கத்தின் கீழ் பிரேசிலிய மக்கள் பெருமளவில் வறுமைக்குள் தள்ளப்படுவது ஆகியவற்றை எதிர்க்க போராட்டங்களில் இணைந்தவர்களின் உண்மையான கோபம் இவ்வாறு அரசியல் சதுப்பு சகதிக்குள் தள்ளப்படுகிறது.

ஆர்ப்பாட்டங்கள் அடிபணிந்து வரும் கோவிட் பாராளுமன்ற விசாரணை (CPI) ஆணையம், முதலாளித்துவ சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை முன்னெடுப்பதன் மூலம் பிரேசிலிய அரசு செய்த குற்றங்களை மூடிமறைக்கிறது. தடுப்பூசிகளை வாங்குவதில் அரசாங்கத்தின் 'ஊழல்' குறித்து விசாரணை கவனம் செலுத்தி, இது தொற்றுநோய் தொடர்பான போல்சனாரோவின் 'மறுப்பை' (அதாவது முதலாளித்துவ பொருளாதாரத்தில் தலையிடும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க மறுத்ததை) அவரின் வெறும் தனியார் நிதி நலன்களுக்கானதாக காட்டி மூடிமறைக்க முயல்கின்றது.

போல்சனாரோவிற்கான 'எதிர்த்தரப்பின்' குற்றச்சாட்டுக்கான அழைப்புகள், போல்சனாரோவின் ஆத்திரமூட்டல்களால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக, பிரேசிலில் முதலாளித்துவ ஆட்சியின் ஸ்திரத்தன்மையை பிற்போக்குத்தனமாக பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டவை.

இந்த முதலாளித்துவ வழிமுறைகள் மற்றும் அரசியல் முன்னோக்கில் அடிப்படையில் போல்சனாரோ தூக்கியெறியப்படுவதற்கு முற்போக்கான உள்ளடக்கம் கிடையாது. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படாது.

இத்தகைய விளைவு, மாறாக, கோவிட்-19 தொற்றுநோயை குற்றவியல் புறக்கணிப்பு, முதலாளித்துவத்தின் கீழ் சமூக சமத்துவமின்மையை ஆழப்படுத்துதல் மற்றும் ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகார அரசாங்க வடிவங்களுக்கு திரும்புவதற்கான கொள்கையைத் தொடர வழிவகுக்கும்.

முதலாளித்துவ அரசியலுக்கு வக்காலத்துவாங்கும் போலி-இடதுகள்

இத்தகைய பிற்போக்குத்தனமான அரசியல் முடிவை நியாயபூர்வமாக்குவதற்கான முயற்சிக்கு முதலாளித்துவத்தை பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அரசியல் சக்திகளுக்கு இடையில் உழைப்பு பங்கீடு தேவைப்படுகிறது. இதில் நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற அடுக்குகளின் நலன்களைப் பிரதிபலிக்கும் போலி-இடது அமைப்புகள் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன.

ஸ்ராலினிசம், பப்லோவாதம் மற்றும் அதன் இலத்தீன் அமெரிக்க மொரேனோ வாத வகையறாக்களிலிருந்து தோன்றிய, கல்விசார் அடையாள அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் அனைத்தும் போல்சனாரோவுக்கு எதிரான மனச்சோர்வடைந்த முதலாளித்துவ எதிர்ப்பிற்கு ஒரு இடதுசாரி மறைப்பை வழங்க தங்களை அர்ப்பணித்து வருகின்றன.

தொழிலாளர் கட்சி (PT) அரசாங்கங்கள் ஆதரித்த மோசமான முதலாளித்துவ ஒப்பந்தங்களுக்கு ஒரு இடதுசாரி மாற்றாக நிறுவப்பட்ட பிரேசில் சமூக ஜனநாயகக் கட்சி (PSOL), வலது மற்றும் தீவிர வலதுசாரிகளுடன் கூட ஒரு வெளிப்படையான கூட்டணிக்கான முன்னணி வக்காலத்து வாங்குபவர்களாக மாறியுள்ளது. இந்த சக்திகளை அவை தேசிய முதலாளித்துவத்தின் முற்போக்கான பிரிவுகளாக சித்தரிக்கிறது.

இந்த மோசமான அரசியல் கூட்டணி, போல்சனாரோ மீதான 'சிறந்த' பதவிவிலக்கல் குற்றச்சாட்டு மனுவை, பாசிச ஜனாதிபதியை முதலில் தேர்ந்தெடுப்பதில் ஆதிக்கம் செலுத்தி, பின்னர் சந்தர்ப்பவாத கரணங்களுக்காக அவரது நிர்வாகத்துடன் முறித்த வலதுசாரி நபர்களுடன் பிரேசில் சமூக ஜனநாயகக் கட்சி சேர்ந்து கூட்டாக தாக்கல் செய்ததில் வடிவெடுத்தது.

இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டதை அடுத்து, பிரேசில் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்கள் போல்சனாரோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் வலதுசாரிக் கட்சிகளின் பங்களிப்பை உற்சாகமாக ஊக்குவித்தனர். பிரேசில் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் ஜூலியானோ மெடிரோஸ் 'டுகானோஸ் [Tucanos- வலதுசாரி PSDB புனைப்பெயர்] உடன் அதே மேடையில் இருப்பது அபத்தமானது என்று கூறும் எந்தவொரு 'குறுங்குழுவாத குரல்களையும்' தாக்கி, 'பதவிவிலக்கல் குற்றச்சாட்டை விரும்பும் எந்தவொரு கட்சியும் வரவேற்கத்தக்கது' என்று கூறினார்.

பிரேசில் சமூக ஜனநாயகக் கட்சியின் மொரேனோ வாத பிரிவான, ரெசிஸ்டான்சியா (Resistência), 'அரசாங்கத்திற்கு எதிரானதாக இருப்பதாக் கூறும் அனைத்து பிரிவுகளையும், வலதுசாரிகளின் பிரிவுகளையும் கூட அழைக்க வேண்டும், போல்சனாரோவை வெளியேற்றுவதற்கான ஆர்ப்பாட்டங்களில் சேரவேண்டியது அவசியம்' என்று அறிவித்தது. இந்த மோசமான கொள்கையை போலி-தீவிர வார்த்தையாடல்களுடன் நியாயப்படுத்த முயன்று, ரெசிஸ்டான்சியாவின் தலைவரான வலேரியோ ஆர்கரி (Valerio Arcary), “போல்சனாரோவின் மீது மெதுவான அழுத்தம்கொடுக்கும் தந்திரோபாயத்தை” எதிர்த்து நடவடிக்கைக்கு முதலாளித்துவத்துடனான ஐக்கியம் அவசியமானதும், முற்போக்கானதும்' என்றார்.

போலி-இடதுகளின் சில பிரிவுகள் தங்களது சந்தர்ப்பவாதத்தை டிரான்சியோ சோசலிஸ்டாவைப் (Transição Socialista) போல வெளிப்படையாக முன்வைக்கின்றன. தீவிர வலதுசாரி மற்றும் முதலாளித்துவத்துடன் இணைந்த நடவடிக்கைக் கொள்கையை முன்னோடியாகக் கொண்டதாக கூறியுள்ள இந்தக் குழு (சரியாக) இப்போது முழு பிரேசிலிய போலி-இடதுகளாலும் பரிந்துரைக்கப்படுகிறது. தொழிலாளர் கட்சி தலைவர் தில்மா ரூசெப்பின் பதவி விலக்கல் குற்றச்சாட்டுக்கு 'ஜனரஞ்சகமான' திரைமறைப்பாக பணியாற்றிய பிற்போக்கு நடுத்தர வர்க்க ஆர்ப்பாட்டங்களை அது ஊக்குவித்தது.

'ஒருவர் யதார்த்தமாக இருக்க வேண்டும்' என்ற மனச்சோர்வடைந்த கூற்றை அடிப்படையாகக் கொண்டு, 'ஒவ்வொரு பிரிவினருடனும் ஐக்கியம்... தாராளவாதிகளுடன் கூட' என்று டிரான்சியோ சோசலிஸ்டா மீண்டும் வாதிடுகிறது. மேலும் 'பொது வேலைநிறுத்தமாக' இல்லாது அடிவானத்தில் தோன்றும் சாத்தியமான எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றது. 'வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாள வர்க்கத்தை வரலாற்று மாற்றத்திற்கான விடயமாக எடுத்துக்கொள்ளாது என்றும், அதற்கு பதிலாக ஒருவர் இருப்பதை, அதாவது முதலாளித்துவத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அப்பட்டமாக அவர்கள் வெட்கமின்றி கூறுகின்றனர்.

பிரேசிலிய ஆளும் வர்க்கத்தை அழுத்திக்கொண்டிருக்கும் ஆழ்ந்த அரசியல் நெருக்கடிக்கு இந்த போலி-இடது குழுக்களின் பிற்போக்குத்தனமான பிரதிபலிப்பு அவர்களை தொழிலாள வர்க்கத்தின் தீவிர எதிரிகளாக அம்பலப்படுத்துகிறது.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கத்திற்கு!

பிரேசிலிய சோசலிச சமத்துவக் குழு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) ஐக்கியப்பட்டு, போல்சனாரோ மற்றும் முழு முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிராக வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பைத் தகர்த்தெறிய முயலும் முதலாளித்துவ மற்றும் அதன் போலி-இடது முகவர்களின் சூழ்ச்சிகளை சமரசமற்ற முறையில் எதிர்க்கிறது.

போல்சனாரோவின் பாசிச அரசாங்கத்தை தூக்கியெறிந்து, பிரேசிலிய மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கான உண்மையான விருப்பத்துடன் சமீபத்திய ஆர்ப்பாட்டங்களில் இணைந்த நூறாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களை இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய ஒரே சமூக சக்தியான தனது சொந்த போராட்ட முறைகள் மற்றும் அரசியல் வேலைத்திட்டங்களின் அடிப்படையில் சுயாதீனமாக அணிதிரளும் தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புமாறு நாங்கள் அழைக்கிறோம்.

Over the past year, the working class has demonstrated its objectively revolutionary social character by responding with a wave of strikes and militant opposition to the capitalist attacks carried out in the context of the COVID-19 pandemic.

கடந்த ஆண்டு, கோவிட்-19 தொற்றுநோயின் சூழலில் மேற்கொள்ளப்பட்ட முதலாளித்துவ தாக்குதல்களுக்கு, வேலைநிறுத்தங்கள் மற்றும் போர்க்குணமிக்க எதிர்ப்பின் மூலம் பதிலளிப்பதன் மூலம் தொழிலாள வர்க்கம் புறநிலை ரீதியாக அதன் புரட்சிகர சமூக தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் கொரோனா வைரஸின் பரவல் தன்னியல்பான தொழில்துறை வேலைநிறுத்தங்களின் அலைகளைத் தூண்டி ஆளும் வர்க்கத்தை பூட்டுதல் கொள்கைகளை பின்பற்ற கட்டாயப்படுத்தியது. பிரேசிலில், இதேபோன்ற தன்னியல்பான வேலைநிறுத்தங்கள் 2020 மார்ச்சில் நாடு முழுவதும் உள்ள அழைப்பு நிலையங்களின் (call centers) தொழிலாளர்கள் மத்தியில் அவர்கள் பணியிடத்தில் எதிர்கொண்ட கொடிய அபாயங்களை எதிர்த்து வெடித்தன.

பணியிடங்களில் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு எதிரான தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பிற போக்குவரத்துத் தொழிலாளர்கள், பயன்பாட்டு விநியோகத் தொழிலாளர்கள், Petrobras இல் உள்ள எண்ணெய் தொழிலாளர்கள், வாகனத் தொழிலாளர்கள், இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் பிற தொழில்துறை துறைகளில் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களில் பிரேசிலிய தொழிலாளர்களின் போர்க்குணமிக்க பதில் தொடர்ந்தது. டஜன் கணக்கான ஆசிரியர் வேலைநிறுத்தங்கள் பிரேசில் முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு எதிராக தொடர்ந்து அழைக்கப்படுகின்றன.

இந்த இயக்கங்கள் அனைத்தும், தொழிற்சங்க கூட்டமைப்புகள் மற்றும் உள்ளூர் தொழிற்சங்கங்களின் தீவிர எதிர்ப்பை எதிர்கொண்டன. இவ்வமைப்புக்கள் வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தவும், உடைக்கவும் நனவுடன் செயல்பட்டன. தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மரணத்தின் இழப்பில் நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளின் செயல்பாட்டை அவை உத்தரவாதம் செய்தன.

பிரேசிலிய தொழிலாள வர்க்கத்தின் போராட்டமானது, தொழிலாளர் கட்சி, அதன் போலி-இடது சுற்றுவட்டங்கள் மற்றும் அவர்கள் வழிநடத்தும் பெருநிறுவன-சார்பு தொழிற்சங்கங்களுடனான ஒரு உறுதியான அரசியல் முறிவின் மூலம் மட்டுமே முன்னேற முடியும், அவை முதலாளித்துவத்தின் பொலிஸ் படைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

பிரேசிலிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முதலாளித்துவத்தின் 'முற்போக்கான' பிரிவுகளுக்கு அல்ல, மாறாக உலகெங்கிலும் உள்ள சக தொழிலாளர்களிடம் அழைப்புவிட வேண்டும், அவர்கள் கோவிட்-19 தொற்றுநோயின் கட்டுப்பாடற்ற பரவல், சமூக சமத்துவமின்மையின் பாரிய அதிகரிப்பு மற்றும் அரசாங்கத்தின் ஜனநாயக வடிவங்களை அழித்தல் ஆகிய அதே ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர்.

உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த வளர்ந்து வரும் போராட்டங்களை ஒன்றிணைத்து, அவற்றை முதலாளித்துவத்திற்கு எதிராக வழிநடத்தும் கண்ணோட்டத்துடன், கடந்த மே தினத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு சாமானிய தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) உருவாக்க அழைப்பு விடுத்தது.

பிரேசிலிய தொழிலாளர்கள் இந்த முன்முயற்சியில் இணையவேண்டும். ஒவ்வொரு பணியிடத்திலும் சாமானிய தொழிலாளர்களின் குழுக்களை அமைத்து, பல்வேறு தொழில்களிலும், தேசிய எல்லைகளிலும் தங்கள் சகாக்களுடன் தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் அறிக்கை தெளிவுபடுத்தியபடி, சாமானிய தொழிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) சோசலிசத்தின் பதாகையை உயர்த்த வேண்டும். தொழிலாள வர்க்கத்தை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, முதலாளித்துவ வங்கிகள் மற்றும் நிறுவனங்களை அபகரித்து மற்றும் நிதிய மற்றும் பெருநிறுவன தன்னலக்குழுவால் திரட்டப்பட்டுள்ள பாரிய வளங்களை உலக மக்களின் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய திருப்பபடவேண்டும்.

கோடிக்கணக்கான உயிர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் கோவிட்-19 தொற்றுநோயின் கட்டுப்பாடற்ற பரவல், சமூக சமத்துவமின்மையின் பாரிய வளர்ச்சி மற்றும் ஜனநாயக ஆட்சி முறைகளை முறையாக அழித்தல் ஆகியவை உலகளாவிய பிரச்சினைகள், அவை உலக முதலாளித்துவ அமைப்பின் தீர்க்கமுடியாத நெருக்கடியில் வேர்களைக் கொண்டுள்ளன என்பதை பிரேசிலிய தொழிலாளர்களும் இளைஞர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அச்சுறுத்தல்களை, முதலாளித்துவத்திற்கும் அதன் காலாவதியான தேசிய அரசுகளுக்கும் எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் தற்போதைய சக்திவாய்ந்த போராட்டங்களை சர்வதேச அளவில் ஒன்றிணைப்பதன் மூலம் மட்டுமே எதிர்கொள்ள முடியும்.

இந்த இயக்கம் சோசலிசத்தின் பதாகையை உயர்த்த வேண்டும். இது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்திற்காக போராடுவதுடன், வங்கிகள் மற்றும் நிறுவனங்களை அபகரிப்பது மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தால் திரட்டப்பட்ட பரந்த செல்வத்தை உலக மக்களின் பரந்த சமூக நலன்களுக்காக பயன்படுத்த வேண்டும்.

இந்த போராட்டத்தின் தலைவிதி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியாக பிரேசிலிய தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புவதை பொறுத்துள்ளது. பல தசாப்தங்களாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் மற்றும் பப்லோவாத திருத்தல்வாதத்தால் காட்டிக் கொடுக்கப்பட்ட மார்க்சிசத்தின் சோசலிச மற்றும் சர்வதேசிய கொள்கைகளை தனித்து நின்று பாதுகாத்துள்ளது.

இன்று, இந்த வரலாற்றுப் போராட்டத்தின் வெற்றிகள் தொழிலாள வர்க்கத்தின் புறநிலை இயக்கத்துடன் ஒன்றிணைந்து, சர்வதேச சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சிகளை நிர்மாணிப்பதற்கான பாதையைத் திறக்கின்றன.

Loading