தென்னிந்தியாவில் இலட்சக்கணக்கான விசைத்தறி இயக்குபவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 200,000 விசைத்தறி இயக்குபவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம், நூலை துணியாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள நாட்டின் முக்கிய ஜவுளி மற்றும் துணி உற்பத்தி மையங்களில் ஒன்றை முடக்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த நடவடிக்கை விசைத்தறி உரிமையாளர்கள்-இயக்குபவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆனால் அது நூறாயிரக்கணக்கான மற்ற விசைத்தறித் தொழிலாளர்களினால் ஆதரிக்கப்படுகிறது, அவர்களது சொந்த ஊதியம் உரிமையாளர்-இயக்குபவர்கள் மற்றும் நிர்வகிக்கும் (Master) நெசவாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட வேலை விதிமுறைகளில் நேரடியாக சார்ந்துள்ளது. பிந்தையவர்கள் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டனில் இருந்ததைப் போன்ற ஒரு மிருகத்தனமான 'வெளியே செயல்படுத்தப்படும்' உற்பத்தி முறையை நிர்வகிக்க பெரிய உள்நாட்டு மற்றும் பூகோள ஆடை நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் இடைத்தரகர்கள் ஆவர்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக இரு மாவட்டங்களிலும் விசைத்தறி துறையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணிபுரியும் அரை மில்லியனுக்கும் அதிகமான உரிமையாளர்களாக இருக்கும் இயக்குபவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணியை நிறுத்தியுள்ளனர். வேலைநிறுத்தம் நாளொன்றுக்கு 600 மில்லியன் ரூபாய் மதிப்பிலான உற்பத்தி இழப்பை ஏற்படுத்துவதாகவும், இது தொடர்ந்தால், ஜவுளி ஏற்றுமதித் தொழிலை முடக்கும் என்றும் இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

இந்திய விசைத்தறி இயக்குபவர்கள் வேலைநிறுத்தம் (apparelresources.com)

விசைத்தறி உரிமையாளர்கள்- இயக்குபவர்கள் அல்லது அவர்களுடன் கூடவே பணிபுரியும் கூலித்தொழிலாளர்களுக்கு 2014 முதல் ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. கடைசியாக வேலைநிறுத்தத்தைத் தூண்டும் துரும்பாக இருந்தது என்னவென்றால் கடந்த நவம்பரில் பெரிய ஆலைகள் இயக்குபவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி மிக சிறிதளவிலான துண்டு வீத அதிகரிப்பை வழங்க அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

நூலை துணியில் நெய்வதற்கு உரிமையாளர்- இயக்குபவர்களுக்கு பெரிய ஆலைகள் அற்ப ஊதியம் வழங்குகின்றன. இந்த வேலையை செய்வதற்கு அவர்கள் ஐந்து அல்லது ஆறு தொழிலாளர்கள் வரை துண்டு வேலைகளில் அமர்த்துகின்றனர். 2014 ஆம் ஆண்டு ஒரு அறிக்கைப்படி, தொழிலாளர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணிநேரம் வரை உழைக்கிறார்கள், ஆனால் தேவை அதிகமாக இருக்கும் போது 16 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட இரட்டை ஷிப்ட்களை முடிக்க வேண்டும்.

பெருகிவரும் கோவிட்-19 பெரும் தொற்றுநோய் நிலைமைகளின் கீழ், நூறாயிரக்கணக்கானவர்களை உள்ளடக்கிய விசைத்தறி வேலைநிறுத்தத்தின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது, தொழிலாளர்கள் தங்களுக்கு எதிரான முதலாளித்துவ வர்க்கத்தின் தாக்குதலை செயலற்ற முறையில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அது எடுத்துக் காட்டுகிறது.

இந்த இரண்டு தமிழக மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விசைத்தறி தொழிலை நம்பி வாழ்கின்றனர். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் ஜவுளி உற்பத்தியுடன் தொடர்புடைய அண்டை மாவட்டங்களின் பணிகளும் வேலைநிறுத்தம் காரணமாக முடங்கியுள்ளன.

உள்ளூர் விசைத்தறி தொழிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் 2014 ஆம் ஆண்டிலிருந்து எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. உண்மையில், உரிமையாளர்-இயக்குபவர்கள் தங்கள் இயக்கச் செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ள போதிலும் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பள குறைப்புகளைச் சகிக்க வேண்டியிருந்தது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விசைத்தறி தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும் துணியைப் பயன்படுத்தும் பெரிய ஆலைகள், GAP மற்றும் IZOD போன்ற மாபெரும் மேற்கத்திய சில்லறை விற்பனையாளர்களுக்கு உற்பத்தி செய்யப்படும் முடிக்கப்பட்ட ஆடைகளின் ஒரு பகுதியையாவது ஏற்றுமதி செய்கின்றன. சிறு மற்றும் நடுத்தர விசைத்தறி உரிமையாளர்கள்-இயக்குபவர்களுக்கு நெசவின் பெரும்பகுதியை வெளியில் ஒப்பந்தம் செய்கிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு ஒரு துண்டு விலை கொடுப்பதனால் அதிக லாபம் கிடைக்கும். விசைத்தறித் தொழிலே காலாவதியான தொழில்நுட்பமான சிறிய தறிகளை அடிப்படையாகக் கொண்டது. கடந்த நவம்பரில், நிர்வகிக்கும் நெசவாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள்- இயக்குபவர்கள் மற்றும் தொழிலாளர் துறையின் பிரதிநிதிகள் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட ஒப்பந்தம், துண்டு கூலியில் 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இது டிசம்பரில் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் நிர்வகிக்கும் நெசவாளர்கள் அதை மறுத்து விட்டனர்.

திருப்பூரில் உள்ள விசைத்தறி தொழிலாளி எம். மனோகரன் IANS இடம் கூறியதாவது: நாங்கள் மோசமாக நடத்தப்படுகிறோம். நாம் பருத்தி நூலை அழகான பொருளாக நெசவு செய்கிறோம், அல்லது பருத்தி நூலை அழகான துணி பொருட்களாக மாற்றுகிறோம், ஆனால் எங்களுக்கு எந்த அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை, நாங்கள் அதை விரும்பவில்லை.

“எங்களக்கு ஊதிய உயர்வு தேவை,அது 2014ல் இருந்து தேக்க நிலையில் உள்ளது. முத்தரப்பு பேச்சுவார்த்தையில் 20 முதல் 25 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்படும் என்று முடிவு செய்த பிறகும், எதுவும் நடக்கவில்லை, நாங்கள் இந்த வேலைநிறுத்தத்தை நாட வேண்டியிருந்தது. இனியாவது அதிகாரிகள் கண் திறப்பார்கள் என நம்புகிறோம்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த துணி உற்பத்தியாளர்கள் கடந்த ஜனவரி 8ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில், பல்லடம் ரக துணிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 20 சதவீத ஊதிய உயர்வு, 10 சதவீதம் உடனடியாகவும், இரண்டாவது 10 சதவீதம் பின் குறிப்பிட்ட தேதியில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் விசைத்தறி உரிமையாளர்களிடம் தெரிவித்தனர். சதவீத உயர்வு பிற்காலத்தில் ஆனால், இந்த சலுகையை விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்கள் நிராகரித்தன. விலைவாசி உயர்வால் உரிமையாளர்-இயக்குனர்கள் நசுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து பணியாற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் எதிர்வினை குறித்தும் அவர்கள் அஞ்சுகின்றனர். கோவிட்-19 தொற்றை இந்திய அதிகாரிகள் தவறாகக் கையாண்டதால் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பிந்தையவர்களுக்கு ஊதிய உயர்வுகள் மிகவும் தேவைப்படுகின்றன.

கோயம்புத்தூர் தொழிலாளர் இணை ஆணையர் வேலைநிறுத்தத்தைத் தடுக்க முயன்றார், இது ஒட்டுமொத்த தொழிலையும் முடக்கும். திருப்பூர் மற்றும் பல்லடத்தைச் சேர்ந்த துணி உற்பத்தியாளர்கள் மற்றும் பணிபுரியும் விசைத்தறி யூனிட் உரிமையாளர்கள் சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தையின் முடிவிற்கு ஜனவரி 11, செவ்வாய்க்கிழமை காத்திருக்க வேண்டும் என்றும், நேரடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்றும் விசைத்தறி யூனிட் உரிமையாளர்கள் சங்கங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் செய்தியாளர்களிடம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2014 முதல் 7 ஆண்டுகளாக ஊதிய உயர்வு முழுமையாக கிடைக்கவில்லை. அதிக விலைவாசி உயர்வு காரணமாக பலர் இந்த தொழிலை கைவிட்டுள்ளனர் மற்றும் பிற வழிகளை (வாழ்வதற்கு) தேடுகின்றனர்.

”இந்நிலையில், மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் பல்லடம் ரகத்துக்கு 20 சதவீதமும், சோமனூர் ரகத்துக்கு 23 சதவீதமும் உயர்த்தப்பட்டதை நடைமுறைப்படுத்த ஜவுளி உற்பத்தியாளர்கள் காலதாமதம் செய்கின்றனர். 2020ஆம் ஆண்டு முதல் புதிய ஊதிய உயர்வுக்கான பல கட்டப் பேச்சுவார்த்தை 24.11.2021 அன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

”இந்த மந்தமான போக்கைக் கண்டித்து, இரண்டு மாவட்டங்களில் (விசைத்தறி) நெசவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு எடுத்த முடிவின்படி, 9.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.”

விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 300 ரூபாய் (US $ 4) ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் துண்டு-விகிதத்தில் வேலை செய்வதால், ஒரு தொழிலாளி இந்த ஊதியத்தைப் பெற நீண்ட நேரம் உழைக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி அல்லது மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட எந்த சமூகப் பாதுகாப்புப் பலன்களுக்கும் தொழிலாளர்களுக்கு உரிமை இல்லை.

அவர்கள் 'வேலை இல்லை என்றால் ஊதியம் இல்லை' கொள்கையின் கீழ் வேலை செய்கிறார்கள், அதாவது விடுமுறை நாட்களில் அவர்களுக்கு ஊதியம் இல்லை. தங்குமிடம் வழங்கப்படும் சில தொழிலாளர்கள் தங்குமிடம் வழங்கப்படுவதால் அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுவதால் அதிக நேரம் கூட வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உழைக்கும் விசைத்தறி உரிமையாளர்கள் பலர் வங்கிகளுக்கு கடனில் உள்ளனர் மற்றும் பலர் திவாலானதால் மூட வேண்டியுள்ளது.

வேலைநிறுத்தத்திற்கு தலைமை தாங்கும் விசைத்தறி தொழிலாளர் சங்கங்கள் தற்போதைய வேலை நடவடிக்கையை சுற்றி மற்ற தொழிலாள வர்க்கத்தின் ஆதரவை திரட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, அவர்களின் நோக்குநிலையானது, இழிந்த தொழிலாள வர்க்க விரோதப் பதிவைக் கொண்டுள்ள பெருவணிக திமுக தலைமையிலான மாநில அரசாங்கத்திடம் முறையிடுவதை நோக்கியே உள்ளது.

இரண்டு முக்கிய ஸ்ராலினிசக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆதரவுடன் கடந்த மே மாதம் ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான அரசாங்கம், அதன் முன்னோடிகளின் உந்துதலைத் தொடர்ந்தது. இந்தியாவின் பேரழிவு தரும் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் பொருளாதாரத்தை திறந்தது. அது அவர்கள் சார்பாக தலையிட வேண்டும் என்ற உரிமையாளர்-இயக்குபவர்களின் முறையீடுகளை நிராகரித்துள்ளது. அது முன் கூட்டியே ஊகிக்க கூடியது. ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிபிஐயுடன் இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்புகள் முறையே இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) ஆகியவை தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்கவும் தனிமைப்படுத்தவும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன. விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவை திரட்டவோ அல்லது கூலித்தொழிலாளிகளை சுதந்திர சக்தியாக அணிதிரட்டவோ அவர்கள் எதுவும் செய்யவில்லை.

விசைத்தறி தொழிலாளர்களின் போராட்டம் என்பது, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளின் பரந்த பிரிவுகளை உள்ளடக்கிய, வளர்ந்து வரும் சமூகப் போராட்ட அலையின் ஒரு பகுதியாகும்.

இரண்டு வருட கால பெரும் தொற்றுநோய்க்கு மத்தியில், அரசாங்கத்திற்கு சொந்தமான மருத்துவமனைகள் உட்பட முதலாளிகள் தொழிலாளர்களுக்கு முறையான PPE மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளை வழங்குவதில் தோல்வியடைந்தது அல்லது அவர்களின் வழக்கமான ஊதியத்தை வழங்க தவறியது. இவை குறித்து பெரும் கோபம் நிலவுகிறது.

இந்தியாவின் தீவிர வலதுசாரி, நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி மத்திய அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் உந்துதல், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் எஃகு, மின்சாரம் மற்றும் வங்கி ஊழியர்கள் உட்பட அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (MSRTC) தொழிலாளர்கள் இப்போது 70 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், இது இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலத்தில் நகரங்களுக்கு இடையேயான பேருந்துப் போக்குவரத்தை முடக்கியுள்ளது. பேருந்து சேவையை உடைத்து தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டங்களைத் தடுக்கும் வகையில், அரசுக்குச் சொந்தமான MRSTCயை மாநில அரசாங்கத்துடன் இணைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.

கடந்த வியாழன், ஆயிரக்கணக்கான டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் டெல்லி யூனியன் பிரதேச அரசாங்கத்தின் நிதி வெட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் இணைந்தனர், நிதி வெட்டுக்களின் விளைவாக அவர்களின் ஊதியம் மற்றும் பலன்கள் பல மாதங்களாக வழங்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை, உத்தரபிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர் அல்லது கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட 10,000 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், மேலும் COVID-19 இலிருந்து இறந்த சக ஊழியர்களின் குடும்பங்களுக்கு சிறந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரினர். இந்த தொழிலாளர்கள் இந்தியாவின் டெல்டா மாறுபாட்டால் இயக்கப்படும் தொற்றுநோயின் இரண்டாம் அலைக்கு மத்தியில், பாஜக மாநில அரசாங்கம் ஆம்புலன்ஸ் ஒப்பந்தத்தை மற்றொரு நிறுவனத்திற்கு வழங்கியபோது தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

Loading