ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் உந்துதலை பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் ஆதரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதன் இரவு, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தனது முயற்சியை அறிவிப்பதற்குச் சற்று முன்னதாக தேசத்திற்கு ஒரு பிரதம நேர உரையில், இமானுவல் மக்ரோன் ரஷ்யாவிற்கும் உக்ரேனில் நேட்டோ-சார்பு ஆட்சிக்கும் இடையே வேகமாக அதிகரித்து வரும் போரைப் பற்றி பேசினார்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், இரண்டாவது இடதுபுறம், வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 25, 2022, பாரிஸில் உள்ள பிரெஞ்சு இராணுவத் தலைமையகத்தில் நேட்டோ உறுப்பினர்களுடன் வீடியோ மாநாட்டின் போது திரையைப் பார்க்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு சவால் விடுவதற்கு எவ்வளவு தூரம் செல்லலாம் என்று நேட்டோ தலைவர்கள் சந்தித்தனர். (AP Photo/Michel Euler, Pool)

பிரெஞ்சு மக்களில் 70 சதவீதம் பேர் மோதலில் நுழைவதை எதிர்க்கின்றனர் என ஒரு கருத்துக்கணிப்பு வெளிவந்த சிறிது நேரத்திலேயே அவர் பேசினார். மக்களின் கருத்தை மீறி, மக்ரோன் அண்டை நாடான ருமேனியாவிற்கு பிரெஞ்சு துருப்புக்களை அனுப்பினார், அத்துடன் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை)யம் அப்பிராந்தியத்திற்கு அனுப்பினார். எனவே அவரது பேச்சு ரஷ்யா-நேட்டோ போரின் பெருகும் ஆபத்தில் உள்ள தொழிலாளர்களை தூங்க வைக்க முயன்றது, அதே நேரத்தில் பிரெஞ்சு மக்கள் நேட்டோ போர் கொள்கைகளை ஆதரிக்க வேண்டும் என்றும் பாரிய இரத்தக்களரி மற்றும் பரந்த பொருளாதார தியாகங்களை ஏற்க வேண்டும் என்றும் கோரினர்.

'பெப்ரவரி 24 அன்று உக்ரேனுக்கு எதிராக [ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்] புட்டின் நடத்திய மிருகத்தனமான தாக்குதலைக் கண்டித்து,' மக்ரோன் எச்சரித்தார்: 'எதிர்வரும் நாட்கள் பெருகிய முறையில் கடினமாக இருக்கும். … நமது கண்டத்தின் சமநிலையும் நமது அன்றாட வாழ்வின் பல அம்சங்களும் ஏற்கனவே இந்தப் போரினால் மாற்றப்பட்டுவிட்டன, மேலும் வரும் மாதங்களில் ஆழமான மாற்றத்திற்கு உள்ளாகும்.'

மக்ரோன், நேட்டோவின் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவை மோசடியான அடிப்படையில் வேண்டுகோள் விடுத்தார், போரை முழுவதுமாக ரஷ்ய ஆட்சி மீது குற்றம் சாட்டினார். எவ்வாறாயினும், படையெடுப்பைத் தொடங்குவதற்கு கிரெம்ளின் பொறுப்பாக இருக்கும் அதே வேளையில், நேட்டோ சக்திகள் ரஷ்யாவை அச்சுறுத்தவும் அதனுடன் பேச்சுவார்த்தைகளை துண்டிப்பதற்கும், புட்டினை இராணுவ நடவடிக்கைக்கு தள்ளவும் திட்டமிட்டு செயற்பட்டன. இதன் விளைவாக, ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோவை ஆதரிக்குமாறு பிரெஞ்சு மக்களிடம் மக்ரோனின் வேண்டுகோளானது, பொய்கள், திரிபுகள் மற்றும் அரை உண்மைகளின் வரிசையாக சரிந்துள்ளது.

'பிரான்சோ, ஐரோப்பாவோ, உக்ரேனோ அல்லது நேட்டோ கூட்டணியோ இந்தப் போரை விரும்பவில்லை. மாறாக, அதைத் தவிர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்,” என்று மக்ரோன் கூறினார். புட்டினுடனான தனது சொந்தப் பேச்சுக்களை சுட்டிக்காட்டி, அவர் மேலும் கூறியதாவது: “ஜூன் 2021 இல் ஜெனிவாவில் ஜனாதிபதி புட்டினை சரீர ரீதியாக சந்தித்த பின்னர், அமெரிக்க ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஜனாதிபதி புட்டின் போரைத் தேர்ந்தெடுத்தார், இது உண்மையில் தனியாகவும், வேண்டுமென்றே நாடுகளின் சமூகத்திற்கு அவர் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக மீறுவதாகவும் உள்ளது”.

புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தனது சொந்த முயற்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அது தெளிவாகத் தோல்வியடைந்தது, புட்டினுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் 'பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார்' என்ற மக்ரோனின் கூற்று ஒரு மோசடியாகும். புட்டினின் 'சிவப்புக் கோடுகளை' தான் மதிக்கவில்லை என்று பைடென் கூறியுள்ளார், அதாவது இது போருக்கு வழிவகுக்கும் 'சிவப்பு கோட்டை' தாண்டியதாக புட்டின் எச்சரித்தபோதிலும் கூட, வாஷிங்டன் அது விரும்பும் எந்த நடவடிக்கையையும் எடுக்கும். அனைத்து முக்கிய நேட்டோ சக்திகளும் உக்ரேனுக்கு நேட்டோவில் சேர வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தின, அதன் பின்னர், ரஷ்யாவை இலக்காகக் கொண்ட நேட்டோ ஆயுதங்கள் உக்ரேனிய மண்ணில் நேரடியாக ரஷ்யாவின் எல்லைகளில் குறிவைத்தன.

படையெடுப்பை நியாயப்படுத்த ரஷ்ய அதிகாரிகள் முன்வைத்த வாதங்களை மக்ரோன் மறுக்க முயன்று, நேட்டோ ஆற்றிய ஆக்கிரமிப்புப் பாத்திரத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். தற்போது, “உக்ரேனில் நேட்டோ படைகளோ அல்லது தளங்களோ இல்லை. இவை பொய்கள். இந்த போர், சகிக்க முடியாத வகையில் பிரச்சாரம் செய்வது போல, 'நாசிசத்திற்கு' எதிரான போராட்டம் அல்ல. இது பொய்' என்றார்.

உக்ரேனில் நேட்டோ துருப்புக்கள் தொழில்நுட்ப ரீதியாக நிரந்தரமாக நிலைநிறுத்தப்படவில்லை என்பது உண்மைதான் என்றாலும், மக்ரோனின் அறிக்கை ஒரு இழிந்த ஏமாற்று வேலையாகும். பிப்ரவரி 2014 இல், நேட்டோ சக்திகள் ஒரு சதியை ஆதரித்தன, இது Right Sector குழுவின் நவ-நாஜிகளால் வழிநடத்தப்பட்டது, இது உக்ரேனில் நேட்டோ சார்பு அரசாங்கத்தை நிறுவியது. அப்போதிருந்து, CIA ஆலோசகர்கள் மற்றும் தனியார் நிறுவனமான அகாடமியின் (முன்னர் பிளாக்வாட்டர்) அமெரிக்க கூலிப்படையினர் உக்ரேனின் ரஷ்ய மொழி பேசும் பகுதிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துவதற்கு உக்ரேனியப் படைகளுக்கு உதவியுள்ளனர்.

உக்ரேனை 'நாஜிமயமற்றதாக்கும்' நோக்கமாகக் கொண்டிருப்பதாக புட்டினின் கூற்றும் ஒரு அரசியல் பொய்யாகும், ஏனெனில் அவரது சொந்த ஆட்சி தீவிர வலதுசாரி குழுக்களுடன் நெருக்கமான கூட்டணியை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும், மக்ரோனின் கருத்துக்கள், நேட்டோவின் உக்ரேனிய கைப்பாவை ஆட்சியில் Right Sector அல்லது அசோவ் படையணி போன்ற நவ-நாஜி படைகள் ஆற்றிய மகத்தான பங்கை மூடி மறைத்தன. உண்மையில், போராளிகள் அல்லாதவர்களைக் கொன்று வெகுஜன புதைகுழிகளில் புதைத்த குற்றச்சாட்டின் பேரில், நேட்டோ-சார்பு உக்ரேனிய ஆட்சிக்காக போராட உக்ரேனுக்குச் சென்ற அமெரிக்க நவ-நாஜிக்கள் மீது FBI விசாரணை நடத்தி வருவதாக கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது.

மக்ரோனின் பேச்சுக்கு அடியில் ஒரு வெளிப்படையான முரண்பாடு உள்ளது: நேட்டோ கொள்கையை மிதமானது என்றும், ரஷ்ய நடவடிக்கை முற்றிலும் தூண்டப்படாதது என்றும் அவர் வலியுறுத்தினார், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்தவொரு முயற்சியிலும் நேட்டோ எடுக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அவர் வலியுறுத்தினார். 'பல பெரிய ரஷ்ய வங்கிகள் சர்வதேச கொடுப்பனவு முறையிலிருந்து விலக்கப்பட்டுள்ளன, பல பரிவர்த்தனைகளை சாத்தியமற்றதாக்கி ரூபிள் சரிவைத் தூண்டுகிறது. ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரேனுக்கு நேட்டோவின் 'சிவில் மற்றும் இராணுவ உபகரணங்களை' வழங்கியதை பெருமையாகக் கூறி, ரஷ்ய பிரச்சார நிலையங்கள் இனி ஐரோப்பாவில் ஒளிபரப்ப முடியாததை வவரவேற்றார்.

உடனடி எச்சரிக்கைகள் செய்யப்படவேண்டி உள்ளது. நேட்டோவும் மக்ரோன் அரசாங்கமும் அணு ஆயுத வல்லரசான ரஷ்யாவுடன் நேரடி இராணுவ மோதலை நோக்கி செல்கின்றன. இந்த ஆபத்து குறித்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அரசியல்ரீதியாக எச்சரிப்பதும், அணுசக்தி போரால் மனிதகுலத்தை அச்சுறுத்தும் நேட்டோவின் கொள்கைகளுக்கு எதிர்ப்பை அணிதிரட்டுவதும் இன்றியமையாததாகும்.

மக்ரோனின் உரையை ஆராய்கையில், நேட்டோ சக்திகள் ரஷ்யாவிற்கு எதிரான போர் உந்துதலுடன் ஒடுக்க முற்படும் வெடிப்புமிக்க உள் வர்க்க மோதல்களையும் வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே போருக்கு முன்பே, வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் நேட்டோ சக்திகளால் பின்பற்றப்பட்ட COVID-19 உடன் வெகுஜன தொற்று கொள்கைகளுக்கு எதிராக எதிர்ப்புகள் பெருகின. நேட்டோவிற்குள் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் COVID-19 காரணமாக இறந்தாலும், வங்கி பிணை எடுப்பின் ஒரு பகுதியாக முதலீட்டாளர் வர்க்கங்களுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் மற்றும் யூரோக்களை விநியோகம் செய்தது பணவீக்கத்தை பெருமளவில் தூண்டியுள்ளது.

தொற்றுநோயை உத்தியோகபூர்வமாக கையாண்டதால் ஏற்பட்ட பெருகிவரும் சமூக மற்றும் பொருளாதார துன்பங்களுக்கு ரஷ்யாவை பொய்யாக குற்றம் சாட்டுவதற்கு நேட்டோ போரைப் பயன்படுத்த முயற்சிக்கும் ஒரு கட்டமைப்பை மக்ரோன் வகுத்தார். சர்வதேச வர்த்தகத்தில் இருந்து ரஷ்யாவை துண்டிக்க நேட்டோ சக்திகள் செயல்படுகின்றன என்பதை ஒப்புக்கொண்ட அவர், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகத் தடை நேட்டோ உருவாக்கும் விரைவான பணவீக்கம் மற்றும் பொருளாதார சீர்குலைவு ஆகியவற்றிற்கு ரஷ்யாவை குற்றம் சாட்டினார்.

ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவுகளை, மக்ரோன் பட்டியலிட்டார்: “எங்கள் விவசாயம், தொழில்துறை, பல பொருளாதாரத் துறைகள் ரஷ்யா அல்லது உக்ரேனில் இருந்து மூலப்பொருட்களை நம்பியிருப்பதால் அல்லது அந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் பாதிக்கப்படும். நமது தற்போதைய உயர் பொருளாதார வளர்ச்சி தவிர்க்க முடியாமல் பாதிக்கப்படும். எண்ணெய், எரிவாயு மற்றும் மூலப்பொருட்களுக்கான விலைகள் உயர்வது, நமது வாங்கும் சக்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்: நாளை, உங்கள் தொட்டியை நிரப்புவது, உங்கள் வீட்டை சூடாக்குவது, முக்கிய பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும்.

உண்மையில், கோவிட்-19 தொற்றுநோய், முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி மற்றும் நேட்டோ சக்திகளின் போருக்கான உந்துதலின் மகத்தான விரிவாக்கத்தைத் தூண்டியுள்ளது என்பது வெளிப்படையானது. 1991ல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்பின் கொடிய அரசியல் மற்றும் இராணுவ விளைவுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. 1990 களில் யூகோஸ்லாவியப் போர்களின் போது சேர்பியாவை நசுக்க முயன்ற அல்லது 2014 இல் உக்ரேனில் ரஷ்ய சார்பு ஆட்சிக்கு எதிராக, ரஷ்யாவின் நட்பு நாடுகளுக்கு எதிராக ஐரோப்பா முழுவதும் நேட்டோ நடத்திய பினாமிப் போர்கள், இப்போது உலகப் போரைத் தூண்டிவிட அச்சுறுத்தும் ஒரு நெருக்கடியாக சீரழிந்துள்ளன.

ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவத்தின் வரலாற்று ரீதியாக வேரூன்றிய அனைத்து முரண்பாடுகளும் தற்போதைய போரில் மீண்டும் தோன்றுகின்றன. பேர்லினின் சமீபத்திய முடிவு, அதன் இராணுவச் செலவை 150 பில்லியன் யூரோக்களாக மும்மடங்காக உயர்த்தி, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறைந்தபட்சம் 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக ஒதுக்குவது ஜேர்மன் இராணுவவாதத்தின் உத்தியோகபூர்வ மறுவாழ்வுக்கு சமம். இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்பை எதிர்த்துப் போராடி 27 மில்லியன் சோவியத் குடிமக்கள் இறந்தனர்.

அந்தப் போரில் பிரான்சைக் கைப்பற்றிய பின்னர் முதல்முறையாக ஜேர்மனி பிரான்ஸை விட சக்திவாய்ந்த இராணுவத்தைக் கொண்டிருக்க முடியும் என்பதும் இதன் பொருள். ஏகாதிபத்திய நேட்டோ சக்திகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு எதிராக அணிதிரளும் நிலையில், மக்ரோனின் பேச்சு, இந்த ஆபத்தான அபிவிருத்திகளில் நேட்டோ சக்திகளுக்கு இடையே வளர்ந்து வரும் பதட்டங்கள் பற்றிய சில குறிப்பையும் கொடுத்தது.

பைடெனும் மற்ற நேட்டோ நாட்டுத் தலைவர்களும் புட்டினைச் சந்திக்கப் போவதில்லை என்று வலியுறுத்தும் அதே வேளையில், ஜேர்மனிக்கு எதிராக பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ரஷ்யாவுடனான பாரம்பரியக் கூட்டணியைக் குறிப்பிடுவதாகவும் மக்ரோன் கூறினார். 'ஜனாதிபதி புட்டினுடன் என்னால் முடிந்த அளவு மற்றும் தேவையான அளவு தொடர்பில் இருப்பேன்' என்று உறுதியளித்த பின்னர், 'ரஷ்யா மற்றும் உக்ரேனின் வரலாறு, நாஜிசத்திற்கு எதிராக எங்களுடன் இணைந்து போராடிய முந்தைய தலைமுறைகளின் நினைவகம்' என்று மக்ரோன் பாராட்டினார்.

மக்ரோனிடமிருந்து வரும் இந்தக் குறிப்பு பாசாங்குத்தனமானது மற்றும் அரசியல் ரீதியாக ஆபாசமானது. உக்ரேனில் உள்ள தீவிர வலதுசாரி ஆட்சியுடன் கூட்டு சேர்ந்து ரஷ்யாவை அச்சுறுத்தும் அதே வேளையில், படுகொலையில் ஈடுபட்ட உக்ரேனிய SS பிரிவுகளில் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆயினும்கூட, மக்ரோன் இராணுவ செலவினங்களை பெருமளவில் அதிகரிப்பதற்கான தனது வாக்குறுதியையும் அறிவித்தார். ரஷ்யாவிற்கு எதிரான ஒரு போர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஜேர்மன் மறுஆயுதமயமாக்கல் நேட்டோவிற்குள்ளேயே ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்களையும் தீவிரப்படுத்துகிறது என்பது வெளிப்படையானது.

மக்ரோன் தனது உரையை நிறைவுசெய்து, ஏப்ரல் 2022 ஜனாதிபதித் தேர்தல்களைப் பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டார், மேலும் அவர் விவாதித்த கொள்கைகளின் பரந்த தன்மைகள் எதுவும் -அவை கிட்டத்தட்ட ஒவ்வொரு முக்கிய வேட்பாளரும் பகிர்ந்து கொள்ளக்கூடியவை- விவாதத்திற்கு வராது என்பதை தெளிவுபடுத்தினார். 'இந்தப் பிரச்சாரம் தேசத்திற்கு முக்கியமான ஜனநாயக விவாதத்திற்கு இடமளிக்கும், ஆனால் அத்தியாவசியமானவற்றில் நாம் ஒன்றுபடுவதைத் தடுக்காது' என்று அவர் கூறினார்.

மக்ரோனின் கருத்துக்கள், நீடித்த சமூக சமத்துவமின்மை, தொற்றுநோய் மற்றும் ஏகாதிபத்திய போரை நோக்கிய உந்துதல் ஆகியவற்றின் தாக்கத்தின் கீழ், பிரெஞ்சு ஜனநாயகத்தின் விரைவான சரிவை எடுத்துக்காட்டுகின்றன. இந்த பிரச்சினைகள் எதுவும் தேசிய மட்டத்திலோ அல்லது 2022 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவராலுமோ தீர்க்கப்பட முடியாதது. உலகப் போரின் உடனடி ஆபத்துக்கு எதிராகவும், பாரிய கோவிட் கொள்கைகளுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதுதான் முக்கியமான கேள்வி.

Loading