இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஐரோப்பாவின் முன்னணி போர்வெறியராக உரிமை கோருகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏப்ரல் 8 சனிக்கிழமையன்று, பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியை கியேவில் சந்தித்தார், இந்த விஜயம் அறிவிக்கப்படாதது ஆனால் பல வாரங்களாக திட்டமிடப்பட்டது.

உக்ரேனுக்கு பயங்கர ஆயுதங்களை அனுப்பும் நேட்டோ சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜோன்சனுக்கு, இந்த விஜயம் அவரை ஐரோப்பாவின் மிகவும் தீவிரமான போர்வெறியராக காட்டுவதற்காக ஒரு மோசமான புகைப்படமாக இருந்தது.

மனநிறைவு அடைந்த ஊடகங்கள் இந்த வருகையை தங்களின் முதல் பக்கமாக வைத்து கொண்டாடின. சண்டே டைம்ஸ் பத்திரிகை, ஜோன்சனும் செலென்ஸ்கியும் மிரட்டும் வகையில் ஆயுதமேந்திய காவலர்கள் புடை சூழ நடந்து வரும் புகைப்படக் காட்சிகளை ‘ஆயுதமேந்திய சகோதரர்கள்’ என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டது.

09.04.2022 அன்று, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், உக்ரேனின் கியேவ் நகரில் வோலோடிமிர் செலென்ஸ்கியை சந்தித்தார். இந்தப் புகைப்படம் உக்ரேனிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. (Number 10/Flckr)

போர் மண்டலத்திற்குள் விஜயம் செய்வதானது, 190,000 க்கும் மேற்பட்ட கோவிட் இறப்புக்களை மேற்பார்வையிட்டும், தொற்றுநோய் பூட்டுதல்களின் போது விருந்துகளை நடத்தியும் பெருநகர காவல்துறையின் விசாரணை போன்ற நெருக்கடியில் சிக்கியுள்ள தனது அரசாங்கத்தின் மீதான கவனத்தை திசைதிருப்பும் என்று ஜோன்சன் கணக்கிட்டார். மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வாழ்க்கைச் செலவின நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் அதை அவர்களின் வருமானத்தின் மீதான ‘வரலாற்று அதிர்ச்சி’ என்று விவரித்தார்.

ஜோன்சன் கியேவுக்குச் சென்றபோதும், சான்சிலர் ரிஷி சுனக், இந்தியாவின் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அவரது மனைவி ஒரு இங்கிலாந்து குடியிருப்புவாசி அல்ல, இங்கிலாந்து வரி செலுத்துபவர் அல்ல [வரி செலுத்தாமல் இங்கிலாந்தில் வசிக்கிறார்] என்ற நிலையில் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டார்.

கியேவுக்கு செல்வதற்கு ஜோன்சன் எவ்வளவு அவநம்பிக்கையுடன் இருந்தார் என்பது ஞாயிற்றுக்கிழமை மெயில் பத்திரிகையில் விவரிக்கப்பட்டது, அது “கடந்த மாதம், இங்கிலாந்து பிரதமர், உக்ரேனின் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு உக்ரேனின் தலைநகருக்குச் செல்வது குறித்த நடைமுறைத்தன்மை மற்றும் மதிப்பை ஆராயுமாறு அவர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், திரு. ஜோன்சன் ஒரு போர் மண்டலத்திற்குள் செல்வதற்கான வாய்ப்புகள் ‘உறுதியானது இல்லை’ என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூறப்பட்டது. ஆனால், அதைச் செயல்படுத்த முடிந்தால், பிரதமர் அங்கு ‘போக விரும்புகிறார்’ என்று வொயிட்ஹால் வட்டாரம் தெரிவித்தது” என்று குறிப்பிட்டது.

என்னவானாலும், ஆபத்தான பயணம் மேற்கொள்ளப்பட்டது. இது, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரேலுடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் வெள்ளிக்கிழமை உக்ரேனுக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து நடந்தது. உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம், “முழு அளவிலான போரின் தொடக்கத்திலிருந்து உக்ரேனுக்கு வரும் முதல் ஜி7 தலைவரான போரிஸ் ஜோன்சனை கியேவில் நாங்கள் வரவேற்கிறோம். நமது ஜனநாயக நாடுகளின் கூட்டமைப்பை நாம் வலுப்படுத்துகிறோம். போரிஸைப் போல தைரியமாக இருங்கள். உக்ரேனைப் போல தைரியமாக இருங்கள்” என்று ட்வீட் செய்தது.

ஜேர்மன் சான்சிலர் ஒலாஃப் ஷோல்ஸூடன் இணைந்து டவுனிங் ஸ்ட்ரீட் செய்தியாளர் சந்திப்பில் முந்தைய நாளில் ஜோன்சன் தனது விஜயத்திற்கான இராணுவவாத நிகழ்ச்சி நிரலை வகுத்தார். “ஒரே இரவில் சம்பந்தப்பட்ட நமது எரிசக்தி அமைப்புகளை மாற்ற முடியாது, அதேபோல புட்டினின் போரும் ஒரே இரவில் முடிவுக்கு வராது என்பதையும் நாங்கள் அறிவோம். அதனால்தான் பிரிட்டனும் ஜேர்மனியும் உக்ரேனுக்கு தற்காப்பு ஆயுதங்களை வழங்க டஜன் கணக்கான நட்பு நாடுகளுடன் இணைந்து கொண்டுள்ளன. கடந்த வாரம், இங்கிலாந்து ஒரு நன்கொடையாளர் மாநாட்டை நடத்தியது, இது உக்ரேனுக்காக 1.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை, அல்லது 2.5 மில்லியன் இராணுவப் பொருட்களைத் திரட்டியது” என்று கூறி ரஷ்யாவின் எரிசக்தி விநியோகத்தின் மீதான ஜேர்மனியின் நம்பிக்கைக்கு இங்கிலாந்து பிரதமர் மற்றொரு குழி தோண்டினார்.

மேற்கத்திய சக்திகள் வழங்கிய இராணுவ வன்பொருட்களைக் கொண்டு உக்ரேனிய துருப்புக்கள் சண்டையிடும் நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோவினால் ஒரு பினாமி யுத்தம் நடத்தப்படுகிறது என்பதை ஜோன்சனின் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன. இன்னும் பல ஆயுதங்களை வாரி வழங்குவதாக அறிவித்து, “ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் Starstreak விமான எதிர்ப்பு ஏவுகணைகள், மற்றொரு 800 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், மற்றும் தங்கள் இலக்கை சென்றடையும் வரை வானில் நிலைத்து நிற்கும் திறன் கொண்ட துல்லியமான வெடிமருந்துகள் ஆகியவை உட்பட, உக்ரேனின் ஆயுதப் படைகளுக்கு மேலும் 100 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள உயர்தர இராணுவ உபகரணங்களை இங்கிலாந்து அனுப்பும்” என்று கூறினார்.

“இங்கிலாந்து ஏற்கனவே அனுப்பியுள்ள உயிர்களை கொல்லாத 200,000 இராணுவ உபகரணங்களுக்கு மேலதிகமாக தலைக்கவசங்கள், இரவு பார்வை கருவிகள் மற்றும் உடல் கவசங்கள் ஆகியவற்றை நாங்கள் அனுப்புவோம்” என்றும் கூறினார்.

உக்ரேனில், புட்டின் “தோல்வியை சந்தித்துள்ளார். ஆனால் அவர் பின்வாங்குவது தந்திரோபாயமானது, அவர் இப்போது டொன்பாஸிலும் கிழக்குப் பகுதியிலும் தனது அழுத்தத்தை தீவிரப்படுத்தப் போகிறார்” என்று கியேவின் எல்லையில் இருந்து விலகுவதற்கான மாஸ்கோவின் முடிவைப் பற்றி ஜோன்சன் கூறினார்.

பாராளுமன்ற ஒப்புதலுக்குட்படுத்தி, உலக வங்கியின் மூலம் உக்ரேனுக்கு கிடைக்கக்கூடிய கடனுக்கான தனது உத்தரவாதத்தை 1 பில்லியன் டாலர் அளவிற்கு பிரிட்டன் இரண்டு மடங்காக உயர்த்தும் என்று ஜோன்சன் உறுதியளித்தார். மேலும், இங்கிலாந்துக்கான உக்ரேனின் ஏற்றுமதிகள் மீதான வரிகளும் மற்றும் சுங்கச் சோதனைகளும் தளர்த்தப்படும் என்றார்.

உக்ரேனின் பாதுகாப்பு அமைச்சகம், செலென்ஸ்கி மற்றும் ஜோன்சனின் குறுகிய கால சந்திப்பு பற்றி, “இதுதான் ஜனநாயகம் போன்றது” என்று ட்வீட் செய்தது.

என்ன ஒரு வெட்கக்கேடு! 2019 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட செலென்ஸ்கி அரசாங்கம், வலது பிரிவு மற்றும் நவ-நாஜி ஸ்வோபோடா கட்சி போன்ற தீவிர வலதுசாரி அதிர்ச்சித் துருப்புக்களுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளது. இந்த படைகள் 2014 ஆம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற ஆட்சிக்கவிழ்ப்புக்கு வழிவகுத்தது, இது ரஷ்ய சார்பு ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை பதவி நீக்கம் செய்தது. இன்று செலென்ஸ்கி, ஆட்சிக்கவிழ்ப்பில் முக்கிய பங்கு வகித்த நவ நாஜி அசோவ் படையணி உள்ளிட்ட பாசிச சக்திகளின் கையாளாக இருக்கிறார்.

ஜோன்சனின் கியேவ் விஜயத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, வியாழக்கிழமை அன்று, செலென்ஸ்கி கிரேக்க பாராளுமன்றத்தில் ஒரு வீடியோ செய்தியில் உரையாற்றினார். செலென்ஸ்கி தனது உரையை நிறைவு செய்கையில், “கிரீஸின் உதவியுடன் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றே நான் நம்புகிறேன். நான் சொல்வதை மட்டும் கேட்காதீர்கள். இரண்டு போராளிகள் கூறுவதையும் கேளுங்கள்” என்று மேலும் கூறினார்.

அப்போது அசோவ் படையணியைச் சேர்ந்த ஒரு சிப்பாயும் பேசினார். 59,000 கிரேக்க யூதர்களைக் கொன்றதான (இது மொத்த யூத மக்கள்தொகையில் 83 சதவீதமாகும், ஐரோப்பாவின் மிக உயர்ந்த சதவீதங்களில் ஒன்றாகும்) ஹிட்லரின் பாசிச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு நாட்டின் பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றினார். “நான் மரியுபோலில் தான் பிறந்தேன் என்பதால், ரஷ்ய நாஜிக்களிடமிருந்து நகரத்தைப் பாதுகாப்பதில் நான் பங்கேற்கிறேன்” என்று அந்த பாசிஸ்ட் அறிவித்தார்.

செலென்ஸ்கியின் கீழ் ஆயுதமேந்திய பாசிஸ்டுகளின் முக்கிய பங்கு முழுமையாக பிரிட்டனின் ஊடகங்களில் இருந்து அகற்றப்பட்டது, கிரேக்கத்தில் நடந்த சம்பவம் பற்றி எங்கும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக, ரஷ்யாவிற்கு எதிரான போர் முடுக்கிவிடப்பட வேண்டும் என்ற வெறித்தனமான கோரிக்கைகளை ஜோன்சனின் வருகை தூண்டியது. போர் ஆதரவு கார்டியனின் ஞாயிறு பத்திரிகையான அப்சர்வர், “விளாடிமிர் புட்டினின் குரூரத்தன்மையை எதிர்கொள்கையில், நேட்டோ மிகவும் கடினமான விருப்பங்களைக் கையிலெடுக்க வேண்டும்” என்று தலையங்கச் செய்தி வெளியிட்டது.

“ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளும் உக்ரேனுக்கான ஆயுத விநியோகங்களும் ஒரு முன்நிகழ்ந்திராத, ஒருங்கிணைந்த வெற்றியாக கருதப்பட்டு மேற்கத்திய அரசாங்கங்களால் கொண்டாடப்படுகின்றன. அவர்கள் என்ன ஒரு நல்ல வேலை செய்கிறார்கள் என்று ஒருவருக்கொருவர் கூறிக் கொள்கின்றனர். ஆனால் அது வேலை செய்யவில்லை” என்று அப்சர்வர் புகார் அளிக்கிறது.

“பக்கவாட்டில் இருந்து எழும் தொடர்ச்சியான, வெட்கக்கேடான, வீணான மேற்கத்திய கூச்சல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. விரைவில் [அமெரிக்க ஜனாதிபதி] பைடெனும் மற்றவர்களும் தங்கள் கைகளைப் பிசைவதை நிறுத்திவிட்டு விஷயங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளத் தொடங்கினால் சிறந்தது.”

“மேற்கத்திய தலைவர்கள் அவசரமாக பரிசீலிக்க வேண்டிய கடினமான தேர்வுகள் இருந்தன. முதலாவதாக, இடம்பெயர்ந்த மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்கு பதிலாக அங்கு ஒன்றுகூடலாம் என்பதால் மேற்கு உக்ரேனில் மக்களுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடத்தை உருவாக்குவதில் அவர்கள் நேரடியாக தலையிடலாம். மாஸ்கோவிற்கு அதன் இருப்பிடம் மற்றும் எல்லைகளை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இது கியேவ் மூலம் அழைக்கப்பட்ட நேட்டோ வான்படை மற்றும் தரைப்படைகளால் பாதுகாக்கப்படும் என்பதில் தெளிவாக இருங்கள்.” மற்ற தேர்வுகளில், ரஷ்ய பீரங்கிகள் மீது நேட்டோ தாக்குதல்கள் நடத்தப்படுவது அடங்கும்.

நேட்டோவின் போர்விமானங்களின் படையணிகளின் ஆதரவுடன் கூடிய, முழு அளவிலான போருக்கான இந்த வசைமாரி, “போரை நிறுத்துவதில் மேற்கத்திய நாடுகள் தீவிரமாக இருக்குமானால்[!], இவையும் இதேபோன்ற வலுவான நடவடிக்கைகளும்தான் எஞ்சியிருக்கும் ஒரே வழியாகும்” என்று முடித்தது.”

டெய்லி டெலிகிராஃபின் முன்னாள் ஆசிரியர் சார்லஸ் மூர் இவை எதனுடனும் உடன்படவில்லை. கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் பாராளுமன்ற செய்தியிதழில் வெள்ளிக்கிழமை குறிப்பிடுகையில், ஐரோப்பிய சக்திகளில் மாஸ்கோவை இராணுவ ரீதியாக தோற்கடிக்க இங்கிலாந்து மட்டுமே தயாராக இருப்பதாக அவர் அறிவித்தார். “பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியைப் பொறுத்தவரை, நாடு வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வு அதிகம் இல்லை, மாறாக கொலை நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான்… அதாவது, Jaw-jaw not war-war is the cliché என்பதாகும்.”

இதற்கெல்லாம், டெய்லி டெலிகிராப்பின் முன்னாள் ஆசிரியர் சார்லஸ் மூர் எந்த தவறும் காணவில்லை. வெள்ளிக்கிழமை பழமைவாத அரசாங்கத்திற்கு மிக நெருக்கமான இந்த செய்தித்தாளில் எழுதுகையில், ஐரோப்பிய சக்திகளில், ஐக்கிய இராச்சியம் மட்டுமே மாஸ்கோவை இராணுவ ரீதியாக தோற்கடிக்க தயாராக உள்ளது என்று கூறினார். 'பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியைப் பொறுத்தவரை, நாடு வெற்றிபெற வேண்டும் என்ற உணர்வு அதிகம் இல்லை, ஆனால் கொலை நிறுத்தப்பட வேண்டும் ... பேச்சுவார்த்தை என்பது குறிச்சொல் போர் அல்ல.'

பாராளுமன்றத்தின் பாதுகாப்புத் தேர்வுக் குழுவின் தலைவர் டோபியாஸ் எல்வுட்.MP., ஜோன்சனின் விஜயம் “நாங்கள் பயப்பட மாட்டோம் என்று புட்டினுக்கு நேரடியாக விடுக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த செய்தியாகும்” என்று கூறினார். போலந்து மற்றும் ஸ்லோவாக்கியா உட்பட பிற நாடுகளுக்கு பிரிட்டன் தலைமை தாங்குகிறது, அவை 'நேட்டோ சுயமாக விதித்த வரம்புகளிலிருந்து விடுபடுகின்றன' மற்றும் உக்ரேனுக்கு அதிகரித்த இராணுவ ஆதரவை வழங்குகின்றன.

'படையெடுப்பிற்கு முன்பு அங்கு செல்ல ஒரு நேட்டோ பிரிவை நான் கேட்டேன், ஆனால் நேட்டோ அதை அறிய விரும்பவில்லை. அந்த முடிவுக்கு அவர்கள் இப்போது வருந்துகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்... எனவே பிரதமர் முன்னேறி, கொஞ்சம் தலைமைத்துவத்தை ஏற்பது” அவசியமாக இருந்தது, “ஏனென்றால், நேட்டோவின் பெரும்பகுதி நேட்டோ கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, அதனால் 'நேட்டோவும் அவர்களும் அந்த ஆதரவிலிருந்து உக்ரேனை விட்டு வெளியேறினர்” என்று எல்வூட் பெருமையடித்தார்.

Loading