முன்னோக்கு

ஒட்டுமொத்த அமெரிக்கர்களில் பாதி பேர் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் முக்கால்வாசி பேர் குழந்தைகளாவர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) செவ்வாயன்று, மிக சமீபத்தில் ஓமிக்ரோன் BA.1 துணை மாறுபாட்டின் அலை ஓயத் தொடங்கிய நேரமான பெப்ரவரி 2022 இறுதிக்குள் அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒருமுறையாவது கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்துள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையும் கூட, அதே ஆய்வில் குறைந்தது ஒரு முறையாவது பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் 75 சதவிகிதம் அதிகமாக உள்ளது.

இது அமெரிக்க வரலாற்றில் முன்நிகழ்ந்திராத பொது சுகாதார பேரழிவாகும். இது ஒரு ‘இயற்கை’ பேரழிவு அல்ல, மாறாக, வேண்டுமென்றே பின்பற்றப்பட்ட பாரிய தொற்றுக் கொள்கையின் விளைவாகும், இது முதலில் ட்ரம்ப் நிர்வாகத்தாலும், இப்போது பைடென் நிர்வாகத்தாலும் மேற்கொள்ளப்படுகிறது. பெருநிறுவன வணிகத்தின் செயல்பாடுகளை பேணுவதற்கும், அமெரிக்க முதலாளித்துவ தன்னலக்குழுவிற்கு தடையின்றி இலாபம் கிடைப்பதை உறுதிசெய்வதற்கும் என குடியரசுக் கட்சியும், பின்னர் ஜனநாயகக் கட்சியும் ஒரு மில்லியன் உயிர்களை —இன்னும் எண்ணப்படும்— தியாகம் செய்து தங்கள் வர்க்கத் தன்மையை நிரூபித்துள்ளன.

ஏப்ரல் 19, 2022, செவ்வாய்க்கிழமை, ஆர்லிங்டனில் உள்ள ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் பயணிகள் வரிசையில் காத்திருக்கின்றனர். [AP Photo/Evan Vucci] [AP Photo/Evan Vucci]

கோவிட்-19 நோய் ஒரு மில்லியன் மக்களை கொன்ற மற்றும் 200 மில்லியன் மக்களைப் பாதித்த அதே காலகட்டத்தில், பங்குச்சந்தை சாதனை உச்சத்தை எட்டியது மற்றும் நிதியப் பிரபுத்துவத்தின் அதிர்ஷ்டம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்வு கண்டது. அமெரிக்க பில்லியனர்களின் சொத்து மதிப்பு 70 சதவீதத்திற்கும் மேலாக, அதாவது 5 டிரில்லியன் டாலருக்கு அதிகமாக உயர்ந்தது. பாரிய மரணம் மற்றும் முன்நிகழ்ந்திராத செல்வ குவிப்பு இரண்டு விளைவுகளும் பிரிக்க முடியாத வகையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. வோல் ஸ்ட்ரீட்டின் மிடாஸ் அணுகுமுறை (Midas touch) பாரிய துன்பத்தையும் மரணத்தையும் தங்கமாக மாற்றியுள்ளது.

மேலும், SARS-CoV-2 அதன் கொடிய வேலையை இன்னும் முடிக்கவில்லை. அதற்கு வெகுகாலம் பிடிக்கும். அனைத்து தணிப்பு நடவடிக்கைகளையும் திறம்பட முடிவுக்குக் கொண்டு வந்தது, பணியிடங்கள், பள்ளிகள், சாமான் கொள்முதல் மையங்கள், சமூக ஒன்றுகூடல்கள், பாரிய போக்குவரத்து மற்றும் பாரிய அரங்கு நிகழ்வுகள் என அனைத்து வகைகளிலும் ‘இயல்பு’ வாழ்க்கையை மீளத் தொடங்கியது, மற்றும் முகக்கவச பயன்பாடு மற்றும் பிற வரையறுக்கப்பட்ட வடிவிலான பாதுகாப்புக்களை முடிவுக்குக் கொண்டு வந்தது, இதனால் வைரஸ் பெரும்பாலும் புதிய பாதிப்பாளர்களை வரம்பற்று உருவாக்குவதுடன், பிறழ்வுக்கான புதிய வாய்ப்புக்களை வைரஸூக்கு வழங்குகிறது.

100 மில்லியன் அமெரிக்கர்களுக்கு முற்றிலும் தடுப்பூசி வழங்கப்படவில்லை, 130 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, ஆனால் பூஸ்டர் தடுப்பூசி போடப்படவில்லை, மேலும் பூஸ்டர் தடுப்பூசி பெற்ற 100 மில்லியன் பேருக்கு அவர்களின் தடுப்பூசித் திறன் வேகமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் இந்த பெரிய மற்றும் வேறுபட்ட சிக்கல்களானது, மாற்றப்பட்ட நிலைமைகளுக்கு ஏற்ப வைரஸ் விரைந்து பிறழ்வடைய உகந்த நிலைமைகளை வழங்குகின்றன. SARS-CoV2 ஆனது மனித வாழ்வில் நிரந்தர வசிப்பிடத்தை மேற்கொள்வது மட்டுமின்றி, அதிக தொற்றும், தடுப்பூசிகளுக்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட மற்றும் மிகவும் ஆபத்தான புதிய வகைகளை உருவாக்கவும் வழிவகுக்கும்.

வைரஸை கட்டுப்பாடின்றி பரவ அனுமதிக்கும் கொள்கையின் குறிப்பிடத்தக்க கொடூரமான அம்சம், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் மீதான அதன் தாக்கமாகும். 75 சதவீத நோய்தொற்று விகிதம் என்பது, உலக சோசலிச வலைத் தளமும் (WSWS), சாமானிய கல்வியாளர் பாதுகாப்பு குழுவின் ஆசிரியர்கள் பலரும் எச்சரித்தபோதிலும், நேரடி கற்பித்தலுக்காக பள்ளிகள் மீளத்திறக்கப்பட்டதால் கல்வி அமைப்பு தொற்றுநோய் பரவலில் முக்கிய இயக்கியாக மாறியது என்பதை நிரூபிக்கிறது. குழந்தைகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என் ட்ரம்ப் மற்றும் பைடென் இருவரும் பொய்யாகக் கூறினர், அதற்கு முற்றிலும் மாறாக அவர்கள் சமமாகவோ அல்லது இன்னும் அதிகமாகவோ இந்த கொடிய நோய்க்கு ஆளாகிறார்கள் என்பதே உண்மை.

அமெரிக்காவில் ஏற்கனவே 1,500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கோவிட்-19 நோயால் இறந்துள்ளனர். தொற்றுநோய் அதன் மூன்றாம் ஆண்டிற்குள் தான் நுழைந்துள்ளது, மேலும் ஏற்கனவே அங்கு நெடுங்கோவிட் —அதாவது, மூளை, இதயம், நுரையீரல் மற்றும் பிற முக்கிய உறுப்புக்கள் சேதமடைவது உட்பட, நோய்தொற்றின் தொடர்ச்சியான விளைவுகளை ஒட்டுமொத்தமாக குறிக்கும் நோய்— உச்சபட்சமாக 30 சதவீதம் இருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அப்பாவி குழந்தைகள் மீது இவ்வளவு பயங்கரமான விகிதங்களில் மருத்துவ பரிசோதனை நடத்த அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

ஓமிக்ரோன் எழுச்சியின் போது நோய்தொற்றின் அசாதாரண முடுக்கம் இருந்தது பற்றி CDC அறிக்கை குறிப்பிட்டது. ஓராண்டுக்கு முன்னர் தொடங்கி இலையுதிர் காலத்தில் உச்சத்தை எட்டிய டெல்டா அலையின் போது, அமெரிக்காவில் உருவான நோய்தொற்றுக்கள் மாதத்திற்கு அமெரிக்க மக்கள்தொகையில் சராசரியாக 1 முதல் 2 சதவீத அளவிற்கு (அதாவது 3.3 மில்லியன் முதல் 6.6 மில்லியன் தொற்றுக்கள் என்றளவிற்கு) இருந்தது. ஆனால் பெப்ரவரி 2022 இல் முடிவடைந்த மூன்று மாதங்களில், சுமார் 80 மில்லியன் புதிய நோய்தொற்றுக்கள் இருந்தன, அதாவது மாதத்திற்கு 25 மில்லியனுக்கும் அதிகமான நோய்தொற்றுக்கள் உருவாகின. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 21 மில்லியன் குழந்தைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஓமிக்ரோன் மாறுபாடு இலேசானது என்று அதனை வகைப்படுத்தும் முயற்சிகள் இருந்தாலும், ஓமிக்ரோன் பாதிப்பு ஏற்கனவே ஒட்டுமொத்த கோவிட்-19 இறப்புகளில் கிட்டத்தட்ட 5 க்கு 1 என்ற வீதத்தில் உள்ளது. மேலும் இப்போது அசல் ஓமிக்ரோன் BA.1 துணை மாறுபாட்டின் இடத்தை BA.2 துணை மாறுபாடு பிடித்துள்ளது, இது அதிக தொற்றும் தன்மையுள்ளது மற்றும் அதிக வீரியம் மிக்கது என்பதால், தொற்றுநோயின் புதிய எழுச்சி விண்ணை முட்டுகிறது. BA.1 ஆல் ஏற்படும் நோய்தொற்று வெளிப்படையாக, BA.2 மூலம் மீண்டும் மீண்டும் உருவாகும் நோய்தொற்றுக்கு எதிராக சிறிதளவு அல்லது முற்றிலும் நோய் எதிர்ப்பை உருவாக்காது.

இந்த மோசமான புள்ளிவிபரங்கள் எதிர்கொள்ளப்படும் நிலையில், பைடென் நிர்வாகம் பாரிய நோய்தொற்றுக் கொள்கையுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது, இது ஒரு காலத்தில் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்’ என்று விவரிக்கப்பட்டது, மேலும் இப்போது நிரந்தர நோய், அல்லது ‘வைரஸூடன் வாழ்வது’ என்பது போன்ற வெவ்வேறு முத்திரைகளில் அது தொடர்கிறது. ட்ரம்ப், ஐவர்மெக்டின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்ற போலி மருந்துகளை ஆதரித்தார் என்றாலும், பைடென் வெள்ளை மாளிகை கோவிட்-19 ஐ தடுக்கலாம் அல்லது தடுக்கப்பட வேண்டும் என்ற எந்தவொரு பாசாங்குத்தனத்தையும் வெறுமனே கைவிட்டு விட்டது.

புதிதாக நியமிக்கப்பட்ட வெள்ளை மாளிகை தொற்றுநோய் பணி ஒருங்கிணைப்பாளரான டாக்டர். ஆஷிஷ் ஜா, செவ்வாயன்று, “அமெரிக்காவில் எவருக்கும் கோவிட் வராது என்பதை உறுதிசெய்வது கடினமாக இருக்கும். இது ஒரு கொள்கை இலக்கு கூட அல்ல” என்பதை தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாக அறிவித்தார். வெள்ளை மாளிகையின் செய்தியாளர் குழுவில் உள்ள எவரும் அந்த வலியுறுத்தல் குறித்து கேள்வி கேட்கவில்லை, ஏனெனில் பெருநிறுவன ஊடகங்கள் தடுப்பு என்பது சாத்தியமற்றது மற்றும் விரும்பத்தகாதது என்ற முன்மாதிரியை ஏற்றுக்கொள்கிறது.

தொற்றுநோய் விவகாரத்திற்கான பைடெனின் தலைமை ஆலோசகரான டாக்டர். அந்தோனி ஃபவுசி, அதே நாளில் அமெரிக்கா இப்போது “தொற்றுநோய் கட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டது,” என்று கூறியதுடன், தினசரி இறப்புக்கள் ஜனவரியில் 3,000 ஆக இருந்தது கடந்த வாரம் சராசரியாக 300 ஆக குறைந்துள்ளது குறித்து பாராட்டினார். “நாம் நிரந்தர நிலைக்கு மாறுகிறோம் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார், இது கோவிட்-19 என்பது அமெரிக்க வாழ்க்கையின் ஒரு நிரந்தர, மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சமாக மாறியுள்ளதையே குறிக்கிறது.

கோவிட்-19 ஐ ‘இயல்பாக்கும்’ பிரச்சாரத்தின் மேம்பட்ட ஒரு படியாக, பைடென் கூட வேண்டுமென்றே நோய்தொற்றை ஏற்பது போல் தெரிகிறது, பாக்ஸ்லோவிட் மற்றும் பிற சிகிச்சை முறைகள் உட்பட வெள்ளை மாளிகைக்கு கிடைக்கும் அபரிமிதமான மருத்துவ ஆதாரங்களுடன் அவர் சிறிய தனிப்பட்ட ஆபத்தை எதிர்கொள்கிறார் என்பது அறிந்ததே. துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸூக்கு நோய்தொற்று உறுதிசெய்யப்பட்ட பின்னர் கூட, பைடெனின் வேலை அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை, மற்றும் வெள்ளை மாளிகை உதவியாளர்களும் 79 வயதான ஜனாதிபதிக்கு நோய்தொற்றின் சாத்தியமான தாக்கம் ஏற்படுவது குறித்து தாங்கள் தேவையற்ற அக்கறை காட்டவில்லை என்று முரண்பாடாக பரிந்துரைத்தனர்.

பைடெனின் பொறுப்பற்ற நடவடிக்கைகளில், உத்தியோகபூர்வ துக்கப்படுபவர்களால் நிரம்பிய தேசிய கதீட்ரலில் புதன்கிழமை நடந்த நினைவு அஞ்சலியில் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் மேடலின் ஆல்பிரைட்டுக்கு அவர் புகழஞ்சலி செலுத்தியது அடங்கும். சனிக்கிழமை இரவு, சுமார் 2,600 அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையோருடன் அடித்தள ஹோட்டல் நடனமாடும் அறையில் நடைபெறும் வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கத்தின் ஆண்டு இரவு விருந்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவிருக்கிறார். கடந்த மாதம் இதேபோன்ற ஆனால் சிறிய கிரிடிரான் மனமகிழ் மன்ற இரவு விருந்தின் விளைவாக 10 பங்கேற்பாளர்களுக்கு ஒருவர் வீதம் கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்டது.

உலகிலேயே பணக்கார நாடாகவும், மருத்துவ தொழில்நுட்பத்தில் முதன்மை நாடாகவும் இருந்தபோதிலும், கோவிட்-19 இறப்புக்களில் அமெரிக்கா உலகில் முன்னணியில் உள்ளது, காரணம் அமெரிக்க மக்கள்தொகை வேறெந்த தொழில்மயமான சமுதாயத்தை விட சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் உட்பட மிகக் குறைவான சமூக நலன்களையே கொண்டுள்ளனர், அதேவேளை ஆளும் வர்க்கம் குறைவான வரம்புகளைக் கொண்டுள்ளது. ஆனால், கோவிட்-19 தொற்றுநோய்க்கான அமெரிக்க நிதிய தன்னலக்குழுவின் பதிலளிப்பின் பொறுப்பற்ற தன்மையும் குற்றத்தன்மையும் உலகம் முழுவதிலும் உள்ள ஆளும் வர்க்கங்களுக்கு உத்வேகத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளன.

ஐரோப்பாவில் கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 2 மில்லியனை நெருங்குகிறது. இலத்தீன் அமெரிக்காவில் சுமார் 1.7 மில்லியன் பேர் இறந்துள்ளனர், மேலும் மெக்சிகோ, பிரேசில், பெரு மற்றும் பிற நாடுகளின் இறப்பு விகிதங்களானது அமெரிக்க இறப்பு விகிதத்திற்கு போட்டியாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ உள்ளன. இந்திய துணைக்கண்டத்தில் எண்ணிலடங்காத மில்லியன் கணக்கானோர் இறந்துள்ளனர், அதாவது புது டெல்லியில் நரேந்திர மோடியைப் போல, வலதுசாரி அரசாங்கங்கள் பாதிக்கப்பட்டவர்களைக் கணக்கிட மறுப்பதால் மட்டுமே அவை மூடிமறைக்கப்படுகின்றன. இந்தோனேஷியா, தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நோய்தொற்றுக்களின் பெரும் புதிய வெடிப்புக்கள் நிகழ்கின்றன. தென்னாபிரிக்கா பாரிய உயிரிழப்புக்களை எதிர்கொண்டுள்ளது, மேலும் தொற்றுநோய் அந்த கண்டம் முழுவதிலும் வெடித்துப் பரவி வருகிறது.

சீனாவில் மட்டுமே விஞ்ஞான அடிப்படையிலான பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதன் விளைவாக டிசம்பர் 2019 இல் நோய்தொற்று தொடங்கியதிலிருந்து 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில் 5,000 க்கும் குறைவான கோவிட் இறப்புக்களே ஏற்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நோய்தொற்றின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்னர், முதல் நான்கு மாதங்களில் மட்டுமே நிகழ்ந்தவையாகும்.

சில சமயங்களில் COVID-19 ஐ முதல் உலகப் போரைத் தொடர்ந்து வந்த காய்ச்சல் தொற்றுநோயுடன் ஒப்பிடப்படுகிறது, அது பயங்கரமான படுகொலையை விட சுமார் 50 மில்லியன் உயிர்களை காவு வாங்கியது. தற்போதைய தொற்றுநோயைப் பொறுத்தவரை, உலகப் போரைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அது வெடிப்பதற்கு முன்னதாகவே அவ்வாறு இருக்கலாம். ஆனால் ஒரு தெளிவான இணைப்பு உள்ளது: தொற்றுநோயால் ஏற்படும் மில்லியன் கணக்கான இறப்புகளை ஏற்றுக்கொண்டு ஊக்குவிக்கும் அதே ஆளும் வர்க்கம், மூன்றாம் உலகப் போரில் இருந்து பின்வாங்காது, ஏனெனில் மில்லியன் கணக்கான, பத்து மற்றும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் கூட அணுஆயுதப் போரால் இறக்கக்கூடும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் சமீபத்திய மைல்கல், WSWS உம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) அழைப்பு விடுத்த மே தின பேரணிக்கு சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது, மேலும் இது பேரணியின் அடிப்படையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொழிலாள வர்க்கம் அதன் ஜனநாயகம் மற்றும் சமூக உரிமைகள் மற்றும் அதன் பௌதீக உயிர்வாழ்வுக்காக உலகளாவிய ரீதியில் ஒன்றோடொன்று இணைந்த ஒரு போராட்டத்தை எதிர்கொள்கிறது. இந்நிலையில், சோசலிசத்திற்கான மற்றும் போர், நோய் மற்றும் பிற அனைத்து சமூக நோய்களுக்கும் அடிப்படைக் காரணமாகவுள்ள முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறிவதற்கான ஒரு நனவான புரட்சிகரப் போராட்டமாக மட்டுமே முன்னேற முடியும்.

Loading