கனேடிய ஏகாதிபத்தியத்தின் பாசிச நண்பர்கள்: ஹிட்லரின் கூட்டாளிகள், உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு

பகுதி - 2

[பகுதி - ஒன்று] [பகுதி இரண்டு] [பகுதி மூன்று] [பகுதி நான்கு] [பகுதி ஐந்து]

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பின் (OUN) நடவடிக்கைகள் மற்றும் மரபுகள் ஆகியவை அரசு அனுசரணை பெற்ற உக்ரேனிய கனேடிய காங்கிரஸால் கொண்டாடப்படுகின்றன, இது சமகால உக்ரேனில் இத்தகைய முக்கியமான மற்றும் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை வகிக்கும் பாசிச சக்திகளின் அரசியல்-கருத்தியல் மூலமாகும்.

1940 ஆம் ஆண்டில், உக்ரேனிய தேசிய அரசைப் பாதுகாக்க நாஜி ஜேர்மனியுடன் எவ்வாறு ஒத்துழைப்பது என்பது குறித்து OUN இரண்டு குழுக்களாகப் பிரிந்தது. அந்த ஒத்துழைப்பையும், பாசிச அரசு பற்றிய அவர்களின் போட்டியான பார்வைகளையும் தொடரவும் இரு பிரிவுகளும் கொடூரமான குற்றங்களைச் செய்தன. அவை இரண்டும் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாஜிகளின் அழிப்புப் போரை ஆதரித்தன, இது 27 மில்லியனுக்கும் அதிகமான சோவியத் குடிமக்களின் உயிர்களைக் கொன்றதோடு, ஐரோப்பிய யூதர்களின் படுகொலையிலும் பங்கேற்றது.

OUN (Melnyk) நாஜி ஜேர்மனியின் ஆக்கிரமிப்பு ஆட்சியினுள் இணைந்து வேலை செய்ய முயன்றதுடன் மற்றும் நாஜி உளவுப்படையான Waffen SS இன் கலீசியா பிரிவின் உருவாக்கத்தை ஊக்குவித்தது. கனடாவின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃபிரீலாண்டின் தாத்தா இந்த அமைப்பைச் சேர்ந்தவராவார்.

14வது Waffen SS கலிசியனுக்கான ஆட்சேர்ப்பு சுவரொட்டி Krakivski Visti இன் முதல் பக்கத்தில் காட்டப்படுவதும், அதே போல் ஒரு கேலிச்சித்திர யூதரை வாளால் கொலை செய்யப் போகும் Waffen SS சிப்பாயும்

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில், OUN (பண்டேரா) உறுப்பினர்கள் பலர் கனடாவில் தஞ்சம் புகுந்தனர், அதன் படைகளை நாஜி இராணுவ எந்திரம் மற்றும் ஜேர்மன் ஆக்கிரமித்த போலந்தில் அதன் அடக்குமுறை எந்திரத்திலும், பின்னர் சோவியத் ஒன்றியத்திலும் முறையாக ஒருங்கிணைத்தனர். ஆனால் OUN (B) அதன் நாஜி ஆதரவாளர்களும் கூட்டாளிகளும் கொடுத்த வரம்புகளுக்கு அப்பால் ஒரு 'தீவிரமான நிலைப்பாட்டை' எடுத்தது. சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்த நாஜிப் படையின் ஒரு பகுதியாக, ஜூன் 1941 இல் எல்வோவிற்குள் (Lvov) நுழைந்த பின்னர், அவர்கள் ஒரு 'சுதந்திர' உக்ரேனிய அரசை உருவாக்குவதாக அறிவித்தனர். இது நாஜி தலைமையிலான 'புதிய ஐரோப்பாவின்' ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக உரசல்கள் ஏற்பட்டன. ஆனால் இரு தரப்பினரும் தங்கள் கூட்டணியைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றதுடன், மேலும் போர் முடியும் வரை பண்டேரா தலைமையிலான OUN (B) மற்றும் அதன் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் (UPA) நாஜிக்கள் மற்றும் வேர்மாஹ்ட் உடன் இணைந்து செம்படை மற்றும் சோவியத் கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்துப் போராடி, மக்களை பயமுறுத்தி உக்ரேனின் யூதர்களை அழித்தனர். இனரீதியாக 'தூய்மையான' உக்ரேனைப் பின்தொடர்வதில் பல்லாயிரக்கணக்கான போலந்து மக்களையும் இவர்கள் கொன்றனர்.

OUN மற்றும் உக்ரேனிய பாசிசத்தின் மூலங்கள்

OUN இன் தற்கால வக்காலத்து வாங்குபவர்கள், இரண்டாம் உலகப் போரின் போது அவர்கள் ஒரு சாத்தியமற்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர் என்றும் மேலும் அவர்கள் நாஜி ஆதரவையும் அதன் யூத-விரோதத்தையும் சந்தர்ப்பவாதமாக ஏற்றுக்கொண்டதாக குற்றம் சாட்டப்படலாம் என்றும் வலியுறுத்துகின்றனர். இந்தக் கூற்றுகள் எந்த வரலாற்று அடிப்படையும் அற்றவை. OUN அதன் தொடக்கத்திலிருந்தே ஒரு பாசிச அமைப்பாகும். அது நீண்டகாலமாக நாஜி ஆதரவை நாடியதுடன் மற்றும் உக்ரேனின் யூதர்களை பெருமளவில் அழிப்பதில் அதன் பங்கு அரசியல்ரீதியாக தயாரிக்கப்பட்டு, 1939 இல் போர் வெடிப்பதற்கு முந்தைய தசாப்தத்தில் அதன் நடவடிக்கைகளில் முன்மாதிரியாக இருந்தது.

பல தீவிர வலதுசாரி அமைப்புகளின் இணைப்பின் மூலம் 1929 இல் OUN நிறுவப்பட்டது. அவற்றில் உக்ரேனிய பாசிசவாதிகளின் ஒன்றியம் மற்றும் உக்ரேனிய இராணுவ அமைப்பு (UVO) ஆகியவற்றிலிருந்து எழுந்த உக்ரேனின் விடுதலைக்கான லீக் இருந்தது. 1917 அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து வந்த உள்நாட்டுப் போரின் போது போல்ஷிவிக்குகளுக்கு எதிராக போரிட்ட உக்ரேனிய தேசியவாதப் படைகளின் முன்னாள் அங்கத்தவர்களை உள்ளடக்கிய UVO ஆனது OUN இன் ஆரம்பத் தலைமையின் பெரும்பகுதியை வழங்கியது.

சமூகரீதியில், OUN ஆனது விரக்தியடைந்த மற்றும் மன உளைச்சலுக்கு ஆளான குட்டிமுதலாளித்துவ பிரிவினரைக் கொண்டிருந்ததோடு, அத்துடன் பறிக்கப்பட்ட நில உடமையாளர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்களையும் கொண்டிருந்தது. அரசியல்ரீதியாக, இது அக்டோபர் புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியத்தின் மீதான முற்றுமுழுதான வெறுப்பால் உயிரூட்டப்பட்டது. கருத்தியல் ரீதியாக, இது முதலாம் உலகப் போரின் பின்னரான முன்னுதாரணமற்ற வன்முறை மற்றும் அழிவுகளினால் உருவாகிய பரந்த பாசிச, இராணுவவாத மற்றும் சமத்துவ எதிர்ப்பு போக்கின் ஒரு பகுதியாக இருந்தது. மேலும், அவை ரஷ்ய புரட்சிக்கும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் சோசலிச உந்துதலுக்குமான நேரடி பிரதிபலிப்பாகும்.

ஆனால், OUN மற்றும் அதன் ஆதரவாளர்கள் குறிப்பாக கோபம் மற்றும் ஆத்திரமடைந்தனர். அவர்களின் கண்ணோட்டத்தில், ரஷ்யா மற்றும் உக்ரேனில் நடந்த சோசலிசப் புரட்சி அவர்கள் ஆட்சி செய்ய விரும்பிய உக்ரேனிய அரசின் பிறப்புரிமையையும் அதே போல், பல சந்தர்ப்பங்களில், அவர்களின் சொத்து மற்றும் பிற சலுகைகளை பறித்துவிட்டது. மேலும், அவர்கள் தங்கள் இனப் போட்டியாளர்களாக கருதியவர்கள் பலப்படுத்தப்பட்டனர் என்று உணர்ந்தனர். உக்ரேனிய தேசியவாதிகளால் விரும்பப்பட்ட பிரதேசம் மற்றும் உக்ரேனிய சிறுபான்மையினரை அடக்கிய பிரதேசம் உட்பட இப்போது ஒரு போலந்து குடியரசாக உள்ளது. நீண்ட காலமாக படுகொலைகள் மற்றும் ஜார் அரசாங்கத்தின் கறுப்பு நூற்றவரின் கிளர்ச்சியின் இலக்காக இருந்த உக்ரேனின் யூதர்கள், ரஷ்யப் புரட்சியின் விளைவாக, முன்னோடியில்லாத சுதந்திரத்தை அனுபவித்தனர்.

வெள்ளை ரஷ்ய குடியேறியவர்களைப் போலவே, உக்ரேனிய தீவிர வலதுசாரிகளும் யூத-போல்ஷிவிசத்தின் கட்டுக்கதையை வடிவமைக்கவும் ஊக்குவிக்கவும் உதவினர். இது யூதர்களை புரட்சிக்கு பொறுப்பாக்கி, அவர்களுக்கு கிறிஸ்தவ எதிர்ப்பு அவதாரத்தை கொடுத்தது. யூத-விரோதத்தின் வெளிப்படையான பாசிச வடிவமான ஜூத-போல்ஷிவிசம் என்பது இனப்படுகொலையைத் தூண்டுவதற்கு நாஜிக்கள் மற்றும் OUN இல் உள்ள அவர்களது உக்ரேனிய கூட்டாளிகளால் பயன்படுத்தப்பட்டது.

ட்ரொட்ஸ்கியை பற்றிய யூத எதிர்ப்பு கேலிச்சித்திரத்துடன் எதிர்ப்புரட்சிகர வெள்ளையர்களின் சுவரொட்டி [Photo: Unknown] [Photo: Unknown]

அக்டோபர் புரட்சியும் உக்ரேனும்

1918 மற்றும் 1921 க்கு இடையில், முன்னாள் ஜாரிச பேரரசின் உக்ரேனிய-பெரும்பான்மை பிரதேசங்களில் ஒரு முதலாளித்துவ உக்ரேனிய அரசை நிறுவ பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, மேலும் முதலாம் உலகப் போரின் தோல்வி மற்றும் கலீசியாவில் பல-இன ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய பேரரசின் சரிவு ஏற்பட்டன. இந்த முயற்சிகள் அனைத்தும் குறுகிய காலமே நீடித்தன.

வரலாற்று ரீதியாக ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு உக்ரேனில் உள்ள உக்ரேனிய தேசியவாதிகள் ஜேர்மன் ஏகாதிபத்திய ஆதரவை நாடியதோடு, உதவிகளையும் பெற்றனர். இருப்பினும், நேச நாடுகளினால் ஏற்படுத்தப்பட்ட இராணுவத் தோல்வியினாலும் மற்றும் நவம்பர் 1918 தொழிலாளர் புரட்சி காரணமாக பெற்ற இரட்டை அடியினாலும் ஜேர்மனியில் கைசரின் ஆட்சி சரிந்தபோது, அவர்கள் பேர்லினில் இருந்த தங்களுக்கு ஆதரவளிப்பவர்களை இழந்தனர்.

1917 அக்டோபர் புரட்சியால் ஸ்தாபிக்கப்பட்ட புரட்சிகர தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம், எதிர்ப்புரட்சிகர சக்திகளின் ஒரு தொடர் பிரிவினருக்கு எதிராக களமிறங்கியதுடன், உக்ரேன் பின்னர் உள்நாட்டுப் போரில் ஒரு முக்கிய களமாக மாறியது. இவற்றுள் ரஷ்யாவின் நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவ உயரடுக்கின் அடிப்படையிலான ஏகாதிபத்திய ஆதரவு வெண்காவலர் படைகள், உக்ரேனிய முதலாளித்துவ தேசியவாதிகள் மற்றும் பில்சுட்ஸ்கி தலைமையில் புதிதாக நிறுவப்பட்ட போலந்து குடியரசு ஆகியவை அடங்கும்.

உக்ரேனிய தேசியவாதிகள் போல்ஷிவிக்குகளின் தலைமையில் உக்ரேனின் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நடத்திய சமூகப் புரட்சியை கடுமையாக எதிர்த்து மற்றும் ஏகாதிபத்திய ஆதரவை வேண்டி நின்றனர். 200,000 யூதர்கள் வரை கொல்லப்பட்ட உள்நாட்டுப் போரின் போது வெண்காவலர்களைப் போலவே அவர்களது தேசியவாதப் படைகளும் படுகொலைகளை மேற்கொண்டன.

வெகுஜனங்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயகத் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தை போல்ஷிவிக்குகள் முன்னெடுத்ததால், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் அவர்கள் மேலோங்கி நின்றனர். பல நூற்றாண்டுகளாக உக்ரேனின் பெரும்பான்மையான விவசாய மக்களை கொடூரமாக சுரண்டிய நிலப்பிரபுக்களின் நிலங்களை செம்படை பறிமுதல் செய்தது.

1919 இல் பெட்ரோகிராட்டில் புரட்சிகர தொழிலாளர்கள் கூட்டத்தில் லெனின் உரையாற்றுகிறார். ட்ரொட்ஸ்கி வலதுபுறம் நிற்கிறார்

நீண்ட காலமாக ஜாரிச ஆட்சியாலும், இப்போது அதன் வாரிசுகளான வெண்காவலர்களின் தலைமையில் நசுக்கப்பட்டுவரும் உக்ரேனிய மக்களின் தேசிய ஜனநாயக அபிலாஷைகளுக்கு அரசியல் ஆதரவை வழங்க வேண்டியதன் அவசியத்தை போல்ஷிவிக்குகள் நன்கு அறிந்திருந்தனர். இது நிலைமையின் தேவைகருதி செய்யப்பட்ட விஷயமாக இருக்கவில்லை. போல்ஷிவிக்குகள், மகா ரஷ்ய பேரினவாதத்திற்கு எதிரான போராட்டத்தையும், ரஷ்யாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தையும், தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம், அரசியல் சுயாதீனம் மற்றும் அதன் மேலாதிக்கத்திற்கான போராட்டத்தின் மையமாக வைத்தனர். 1917 இல் லெனின் எழுதினார், 'இந்த உரிமைக்கான தடையற்ற அங்கீகாரம் மட்டுமே உக்ரேனியர்கள் மற்றும் பெரும் ரஷ்யர்களின் ஒரு சுதந்திர ஒன்றியத்தை ஆதரிக்கிறது ... மொழி, பிரதேசம் மற்றும் வரலாறு ஆகியவற்றில் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருக்கும் இரண்டு மக்களும் பரஸ்பர ஒன்றிணைப்பைக் கொண்டு வருவதற்கு எல்லாம் செய்யப்பட்டபோது, உண்மையில் இந்த சபிக்கப்பட்ட ஜாரிச கடந்த காலத்தை முழுமையாகவும் திரும்பிவர முடியாமலும் முறியடிக்கப்படும். 1919 இல் ட்ரொட்ஸ்கியால் உருவாக்கப்பட்ட ஒரு ஆவணம், இந்தப் பிரச்சினையில் போல்ஷிவிக்குகளின் உறுதியான போராட்டத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. அது அறிவித்தது, 'உக்ரேனிய கலாச்சாரம் ... பல நூற்றாண்டுகளாக ஜாரிசம் மற்றும் ரஷ்யாவின் சுரண்டும் வர்க்கங்களால் நசுக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு, உக்ரேனிய மொழி மற்றும் கலாச்சாரத்தின் சுயாதீனமான வளர்ச்சிக்கான அனைத்து தடைகளையும் நீக்குவதற்கு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் எல்லா வகையிலும் உதவுவதைக் கடமையாக்குகிறது. இந்த சோசலிச சர்வதேசிய கருத்துருக்கள், 1922 இல் சோவியத் ஒன்றியத்தை ஸ்தாபிப்பதற்கு சோவியத் உக்ரேன் உட்பட சோவியத் குடியரசுகளின் தன்னார்வ கூட்டமைப்பாக ஸ்தாபிப்பதை உயிர்ப்பித்தன.

1930களில் OUN: உக்ரேனிய இனப்படுகொலை தேசியவாதத்தின் வளர்ச்சி

OUN இன் பாசிசம், போல்ஷிவிக்குகளின் சர்வதேசிய சோசலிச வேலைத்திட்டத்திற்கும் ஒரு பல்தேசிய சோசலிச அரசில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் முயற்சிக்கு எதிரான பிரதிபலிப்பாக வளர்ந்ததாலும், ஐரோப்பாவின் பெரும்பகுதியில் பாசிச இயக்கங்களின் தோற்றம் மற்றும் அதிகாரத்திற்கு வந்ததன் மூலம் அது சித்தாந்த ரீதியாக மேலும் தீவிரமயப்படுத்தப்பட்டது.

1930 களில் OUN இன் தலைமையகம் ரோமில் இருந்தமை முசோலினி ஆட்சியுடனான அதன் ஆரம்பகால உறவை பிரதிபலிக்கிறது. ஆனால் 1933 இல் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பின்னர், கருத்தியல் மற்றும் புவிசார் அரசியல் காரணங்களுக்காக, அது பெருகிய முறையில் நாஜி ஆட்சியை நோக்கிச் சென்றது. இது ஒரு இளைய தலைமுறை தலைவர்களுக்கு குறிப்பாக மிகவும் உண்மையாக இருந்தது. அவர்களில் ஸ்டீபன் பண்டேரா மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். முன்னணி OUN உறுப்பினர்கள் நாஜி ஜேர்மனி மற்றும் பாசிச இத்தாலியின் உளவுத்துறை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினர். மேலும் அதன் போலந்து மற்றும் சோவியத் அதிகாரிகளை படுகொலை செய்யும் இயக்கத்தில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்கள் நாஜிக்கள் 1941 ஏப்பிரலில் ஆட்சியில் அமர்த்திய குரோஷிய பாசிச இயக்கமான உஸ்டாஷாவின் (Ustasha) உறுப்பினர்களுடன் சேர்ந்து இத்தாலியில் பயிற்சி பெற்றனர்.

யூதப் படுகொலைகளில் நாஜிக்களின் உதவியாளர்களாக OUN இன் வகித்த பாத்திரம் மற்றும் உக்ரேனில் இருந்த பிற எதிரிகளுக்கு எதிரான இனப்படுகொலை வன்முறை என்பன 1930 களில் அதன் சித்தாந்தம் மற்றும் பாதையின் வளர்ச்சியில் முன்னறிவிக்கப்பட்டு அரசியல் ரீதியாக தயாரிக்கப்பட்டது. பாரிய கொலைக்கான திட்டங்கள் OUN சித்தாந்தவாதிகளின் எழுத்துக்களிலும் அவர்களின் மாநாட்டிலும் விவாதிக்கப்பட்டு விரிவாகக் கூறப்பட்டன.

பல OUN மாநாடுகள் மற்றும் பிற OUN கூட்டங்களில் விளக்கக்காட்சிகள் மூலம் உருவாக்கப்பட்ட அத்தகைய ஒரு ஆவணம், 'உக்ரேனிய தேசியவாதிகளின் போர் கோட்பாடு' என்று தலைப்பிடப்பட்டது.

'எங்கள் எழுச்சி, அரசியல் ஒழுங்கமைப்பை மட்டும் மாற்றும் நோக்கம் கொண்டதல்ல' என்று அது அறிவித்தது. இது உக்ரேனை அன்னிய மற்றும் விரோத பிரிவுகளில் மற்றும் நமது பரிதாபகரமான பிரிவினலிருந்து சுத்தப்படுத்த வேண்டும். … எழுச்சியின் போது அன்னிய பிரிவினர் எவ்வளவு அதிகமாக கொல்லப்படுகின்றனரோ, அந்தளவுக்கு உக்ரேனிய அரசை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மற்றும் அது வலுவாக இருப்பதற்கும் எளிதாக இருக்கும்”.

அது யூதர்களை பெருமளவில் அழித்தொழிப்பதை ஆதரித்து, 'அரை மில்லியன்' ஆக அவர்கள் இருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகளை மேற்கோள் காட்டி, 'ஏனெனில் எழுச்சியின் போது அதிகமான யூதர்கள் கொல்லப்படுவது, உக்ரேனிய அரசுக்கு நன்மை' என்றது.

OUN இன் அரசியலைப் போலவே தீங்கு விளைவிக்கும், உக்ரேனிய தேசியவாதம், தீவிர போல்ஷிவிச எதிர்ப்பு மற்றும் தீவிர யூத எதிர்ப்பு ஆகியவற்றின் நச்சுத்தன்மையான கலப்பானது, தென்கிழக்கு போலந்தின் பெரும்பான்மையான உக்ரேனிய மக்கள் வசிக்கும் பகுதியில் சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்ட கோபம், ஏமாற்றம், குழப்பம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு அதிகரித்துவரும் ஆதரவைப் பெற முடிந்தது. தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அரசியல் அதிகாரத்தை அபகரித்ததன் மூலம், அதிகாரத்துவம் சோசலிச சர்வதேசவாத வேலைத்திட்டத்தை நிராகரித்தது மற்றும் பெரும் ரஷ்ய பேரினவாதத்தின் மோசமான மரபுகளுக்கு புத்துயிர் அளித்தது. 1930 களின் முற்பகுதியில் ஸ்ராலின் ஆட்சியின் உடனடி மற்றும் மிருகத்தனமான கட்டாய கூட்டுமயமாக்கல் சோவியத் உக்ரேனில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வுகளைப் பற்றி விவாதித்து, ட்ரொட்ஸ்கி 1939 இல் பின்வருமாறு எழுதினார், 'பழைய போல்ஷிவிக் கட்சியின் கருத்தாக்கத்தில் சோவியத் உக்ரேன் ஒரு சக்திவாய்ந்த அச்சாக மாறியதுடன், அதைச் சுற்றி உக்ரேனிய மக்களின் இதர பிரிவுகள் ஐக்கியப்படலாம். சோவியத் உக்ரேன் தோன்றிய முதல் காலக்கட்டத்தில், தேசிய ரீதியிலும், போலந்தால் அடிமைப்படுத்தப்பட்ட மேற்கு உக்ரேனின் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் புரட்சிகர அறிவுஜீவிகளை அதற்கு எதிர்த்துப் போராடத் தூண்டியது என்பது மறுக்க முடியாதது. ஆனால் தேர்மிடோரியன் பிற்போக்குத்தனத்தின் ஆண்டுகளில், சோவியத் உக்ரேனின் நிலைமையும் மற்றும் அதனுடன் சேர்ந்து உக்ரேனிய கேள்வியின் ஒட்டுமொத்த நிலைப்பாடும் கடுமையாக மாறியது. தூண்டப்பட்ட நம்பிக்கைகள் எவ்வளவு ஆழமானதாக இருந்தனவோ, அவ்வளவிற்கு ஏமாற்றமும் ஆழமாக இருந்தது. பெரும் ரஷ்யாவிற்குள்ளும் மக்களை அதிகாரத்துவம் கழுத்தை நெரித்து கொள்ளையடித்தது. ஆனால் உக்ரேனில் தேசிய நம்பிக்கைகளின் படுகொலையால் விவகாரங்கள் மேலும் சிக்கலாயின. அதிக சுதந்திரம் மற்றும் விடுதலைக்கான உக்ரேனிய மக்களின் சக்திவாய்ந்த, ஆழமாக வேரூன்றிய ஏக்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் உக்ரேனில் செய்தது போல், கட்டுப்பாடுகள், சுத்திகரிப்புகள், அடக்குமுறைகள் மற்றும் பொதுவாக எல்லாவிதமான அதிகாரத்துவ குண்டர்த்தனமும் மிக்க இத்தகைய கொலைவெறி வேறெங்கும் நடக்கவில்லை. சர்வாதிகார அதிகாரத்துவத்திற்கு, சோவியத் உக்ரேன் ஒரு பொருளாதார அலகின் நிர்வாகப் பிரிவாகவும் சோவியத் ஒன்றியத்தின் இராணுவ தளமாகவும் மாறியது.

'... இப்போது தனது எல்லைகளுக்கு வெளியேயுள்ள உக்ரேனின் பகுதிகளை பொறுத்தவரை, இன்று கிரெம்ளினின் அணுகுமுறை, அனைத்து ஒடுக்கப்பட்ட தேசியங்கள், அனைத்து காலனிகள் மற்றும் அரை-காலனிகளைப் போன்றே, ஏகாதிபத்திய அரசாங்கங்களுடனான அதன் சர்வதேச தொடர்புகளிலும் பார்க்க ஒரு சிறிய மாற்றம் போன்றதாக' இருந்தது.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் குற்றவியல் கொள்கைகள், சோவியத் உக்ரேனின் எல்லைகளுக்கு அப்பால் உக்ரேனிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீது ஏற்படுத்திய பேரழிவுகரமான தாக்கத்தை பற்றி ட்ரொட்ஸ்கி கலந்துரையாடினார்.

'கிரெம்ளின் மீதான மேற்கு உக்ரேனிய மக்களின் முன்னைய நம்பிக்கை மற்றும் அனுதாபத்தின் ஒரு தடயமும் இல்லை' என்று அவர் எழுதினார். 'உக்ரேனில் சமீபத்திய கொலைகார 'களையெடுப்பிற்குப்' பின்னர், சோவியத் உக்ரேன் என்ற பெயரை தொடர்ந்து கொண்டிருக்கும் கிரெம்ளின் துணைக்கோளின் ஒரு பகுதியாக மாற விரும்பவில்லை. மேற்கு உக்ரேனில், புகோவினாவில், கார்பதோ-உக்ரைனில் உள்ள தொழிலாளி மற்றும் விவசாயிகள் குழப்பமான நிலையில் உள்ளனர்: எங்கு திரும்புவது? என்ன கோருவது? என்ற நிலைமையில் இருந்தனர். இந்த நிலைமை இயற்கையாகவே தலைமைத்துவத்தை, உக்ரேனிய மக்களை ஒரு ஏகாதிபத்தியத்திற்கு அல்லது இன்னொரு ஏகாதிபத்தியத்திற்கு விற்க முற்படுவதன் மூலம் கற்பனையான சுதந்திரத்திற்கான வாக்குறுதியை வழங்க முற்படும் மிகவும் பிற்போக்குத்தனமான உக்ரேனிய குழுக்களுக்கு மாற்றுகிறது. இந்த சோகமான குழப்பத்தின் மீதுதான் ஹிட்லர் உக்ரேனியப் பிரச்சினையில் தனது கொள்கையை அடித்தளமாகக் கொண்டார்.

கிழக்கு ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முதல் கட்டம் மற்றும் OUN இல் பிளவு

ட்ரொட்ஸ்கி இந்த வார்த்தைகளை எழுதிய சில மாதங்களுக்கு பின்னர், ஏகாதிபத்திய சக்திகளுடன் ஸ்ராலினின் எதிர்-புரட்சிகர சூழ்ச்சி உச்சக்கட்டத்தை அடைந்தது. இவை அனைத்தும் மிகவும் இழிந்த மற்றும் அரசியல்ரீதியாக கண்டிக்கத்தக்க 'கூட்டினால்' இது உக்ரேனிய மக்களை நேரடியாக பாதித்ததோடு, உலகத்தில் பிற்போக்குத்தனத்தை வலுப்படுத்தி ஹிட்லர்-ஸ்ராலின் ஒப்பந்தத்தில் முடிவடைந்தது.

செப்டம்பர் 1, 1939 அன்று, ஹிட்லர்-ஸ்ராலின் ஒப்பந்தம் கையெழுத்தான ஒன்பது நாட்களுக்குப் பின்னர், நாஜி ஜேர்மனி போலந்து மீது படையெடுத்து, இரண்டாம் உலகப் போரைத் தூண்டியது. போலந்தில் உள்ள OUN காரியாளர்கள், முக்கியமாக பண்டேராவின் பிரிவு, போலந்து இராணுவப் படைகளுக்கு எதிராக நாசகார செயல்களை மேற்கொண்டு நாஜி படையெடுப்பாளர்களுக்கு ஆதரவளித்தனர். அவர்கள் போலந்து குடிமக்கள் மீது இனரீதியான நோக்கம்கொண்ட தாக்குதல்களை நடத்தினர். ஒரு மதிப்பீட்டின்படி, இதில் 3,000 பேர் கொல்லப்பட்டனர். உக்ரேனிய பாசிசவாதிகளை 'ஒருங்கிணைந்த தேசியவாதிகள்' (“integral nationalists,”) என்று முத்திரை குத்தி அவர்களின் வரலாற்றை சுத்திகரிக்க உதவிய ஒரு அமெரிக்க அரசியல் விஞ்ஞானி ஜோன் ஆம்ஸ்ட்ராங் (John Armstrong) கூட, போரின் தொடக்கத்திலிருந்தே OUN ஒரு 'விசுவாசமான ஜேர்மன் துணைப் படையாக' செயல்பட்டதை ஒப்புக்கொண்டார்.

ஹிட்லருடனான தனது ஒப்பந்தத்தின் இரகசிய நெறிமுறைகளை செயல்படுத்திய ஸ்ராலின், கிழக்கு போலந்து மீது படையெடுக்க செம்படைக்கு உத்தரவிட்டபோது, OUN படைகள் நாஜி ஆக்கிரமித்த போலந்திற்கு தப்பி ஓடின. கிராகோவ் நகரம் விரைவில் உக்ரேனிய தீவிர வலதுசாரி நடவடிக்கையின் மையமாக மாறியது. ஏனென்றால், இது நாஜிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தின் மூன்றாம் குடியரசு பகுதி மற்றும் இப்போது நாஜி ஆட்சியின் கீழ் உள்ள போலந்து மற்றும் உக்ரேனிய எல்லைப் பகுதிகளின் நிர்வாக மையத்துடன் இணைக்கப்படவில்லை.

ஆண்ட்ரி மெல்னியேக் (Andriy Melnyk) இற்கு விசுவாசமான OUN இன் மிகவும் பழமைவாத பிரிவு, உக்ரேனிய மத்திய குழுவை (UTsK) ஒழுங்கமைத்தது. இது உக்ரேனிய மொழி பேசும் மக்களுடன் தொடர்புகொள்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஒரு பொறிமுறையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திடம் வெற்றிகரமாக மனுவை முன்வைத்தது. நாஜி அதிகாரிகள் உள்ளூர் மக்களை அவர்களின் இனவாத சித்தாந்தம் மற்றும் படிநிலையின் பட்டக கண்ணாடி மூலம் பார்த்தனர். ஆனால் அவர்கள் UTsK இன் மதிப்பை இனப் பதட்டங்களை சுரண்டுவதற்கும் தூண்டுவதற்கும் ஒரு வழிமுறையாக அங்கீகரித்தனர். எனவே போலந்தினரும் உக்ரேனியர்களும் 'ஒருபோதும் ஒன்றிணையமாட்டார்கள்', ஹான்ஸ் பிராங்கின் வார்த்தைகளைப் பயன்படுத்துவதானால், மூனிச் நகர மதுபான சதியின் மூத்தவர் ஹிட்லர் மத்திய அரசுத் தலைவராக்கப்பட்டார்.

இதுவரை முன்னறியப்படாத உக்ரேனிய புவியியலாளரான வோலோடிமியர் குபியோவிச் (Volodymyr Kubiyovych) தலைமையில், UTsK உத்தியோகபூர்வமாக ஒரு 'சமூக நலன்புரி' அமைப்பாக இருந்தது. ஏனெனில் நாஜி அல்லாத அனைத்து அரசியல் அமைப்புகளையும் நாஜிக்கள் கலைத்தனர். UTsK உண்மையில் ஆழமான அரசியல்ரீதியானதாக இருந்தது. மேலும் அதன் தலைவர்கள் நாஜிக்களால் கையகப்படுத்துதலை தமது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கு ஒரு வாய்ப்பாகவும் தங்கள் இன மற்றும் அரசியல் 'எதிரிகளுக்கு' எதிராக பழிவாங்குவதற்கான வாய்ப்பாகவும் கருதினர்.

மெல்னிய்க் பிரிவு OUN உறுப்பினர்களை நாஜி ஆட்சியின் இராணுவ-பாதுகாப்பு எந்திரத்தினுள் தங்களை ஒருங்கிணைக்குமாறு வலியுறுத்தியது. எவ்வாறாயினும், நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட மத்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட அரசியல் மற்றும் நிர்வாக கட்டமைப்புகளுக்குள் வேலை செய்வதிலேயே அதன் கவனம் இருந்தது. இப்போது போலந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பண்டேராவைச் சுற்றியிருந்தவர்கள், மறுபுறம், நாஜிக்களின் அடக்குமுறை இயந்திரம் மற்றும் இராணுவ இயந்திரத்தில் தங்களை இணைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தினர்.

போலந்தைக் கைப்பற்றிய உடனேயே, நாஜிக்கள் OUN இன் 120 உறுப்பினர்களை இரண்டு ஜேர்மன் அதிகாரிகளின் கீழ் Zakopane இல் உள்ள கெஸ்டாபோ (Gestapo) போலீஸ் பள்ளியில் பயிற்சி பெற நியமித்தனர். உக்ரேனியர்களின் தளபதியான மைகோலா லெபெட் பின்னர் OUN (B) இன் இரக்கமற்ற SB பாதுகாப்பு சேவைகளின் தலைவராகவும், போருக்குப் பின்னர் வாழ்நாள் முழுவதும் CIA கையாளாகவும் இருந்தார்.

பின்னர், பண்டேராவின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான ரோமன் ஷுகேவியிச், Nachtigall பட்டாலியனின் முன்னணி உக்ரேனிய அதிகாரியானார். இது ஜேர்மன் இராணுவ உளவுத்துறையான Abwehr அமைத்த பண்டேரா ஆதரவாளர்களால் பெரும்பாலும் உருவாக்கப்பட்ட இரண்டு பட்டாலியன்களில் ஒன்றாகும். உக்ரேனிய கிளர்ச்சி இராணுவத்தின் வருங்கால தளபதி ஷுகேவியிச் மற்றும் அவர் இயக்கிய Nachtigall பட்டாலியன் ஜூன் மற்றும் ஜூலை 1941 க்கு இடையில் மேற்கு உக்ரேனில் ஆயிரக்கணக்கான யூதர்களை படுகொலை செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.

விக்டர் யுஷ்செங்கோவின் அரசாங்கம், கனடா மற்றும் பிற மேற்கத்திய ஏகாதிபத்திய அரசாங்கங்களின் உதவியுடன் அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது OUN பாசிசவாதிகளை ஊக்குவிக்கவும் நினைவுகூரவும் நிறைய செய்தது. இதைவிட, நாஜி போர்க் குற்றவாளியும் UPA தளபதியுமான ரோமன் ஷுகேவிச்சைக் கௌரவிக்கும் வகையில் 2007 இல் அவருக்கு தபால்தலை வெளியிடப்பட்டது.

உக்ரேனிய அரசு மற்றும் இனரீதியாக சுத்திகரிக்கப்பட்ட 'உக்ரேனியர்களுக்கான உக்ரேன்' என்ற இலக்கை அடைவதில் நாஜி ஆதரவை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் பயன்படுத்துவது என்பதில் உள்ள வேறுபாடுகள், பிப்ரவரி 1940 இல் முறையான பிளவுக்கு இட்டுச் சென்றது. இரண்டு போட்டிப் பிரிவினரும் தம்மையே தலைவராக கோரிக்கொண்டு இப்பெயரை இணைத்து OUN (M-மெல்னிய்க்) மற்றும் OUN (B-பண்டேரா) என பெயரிட்டுக்கொண்டன.

ஹிட்லரின் ஆதரவாளர்களும் உடந்தையாளர்களும்: OUN தலைமையிலான உக்ரேனிய மத்திய குழு மற்றும் Krakivski Visti இன் வரலாறு

டிசம்பர் 1939 அளவில், போலந்தின் நாஜி ஆக்கிரமிப்பாளர்கள் UTsK இன் ஆதரவுகளால் மிகவும் திருப்தி அடைந்தனர். அவர்கள் அதை க்ராக்கோவை தளமாகக் கொண்ட யூத செய்தித்தாள் Nowy Dzennik இடமிருந்து திருடப்பட்ட அச்சகத்தைப் பயன்படுத்தி ஒரு பதிப்பகத்தை நிறுவ அனுமதித்தனர். அதன் உரிமையாளர்கள் பின்னர் Belzec மரண முகாமில் கொலை செய்யப்பட்டனர்.

UTsK விரைவில் அதன் சொந்த செய்தித்தாளான Krakivski Visti (Krakow News) ஐ நிறுவியது. மத்திய அரசாங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்ட ஒரே உக்ரேனிய மொழி செய்தித்தாள் இதுவாகும். மேலும் மூன்றாம் குடியரசின் எதிர்வரவிருக்கும் சரிவு மார்ச் 1945 இன் இறுதியில் வெளியீட்டை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் வரை நாஜி ஆட்சியில் இருந்த ஐரோப்பாவில் மிகவும் செல்வாக்கு மிக்க உக்ரேனிய செய்தித்தாள் இதுவாகும்.

ஜனவரி 7, 1940 அன்று, பழைமைவாத கிறிஸ்துமஸ் தினத்தன்று தொடங்கப்பட்டKrakivski Visti பத்திரிகை, நவம்பர் 1940 லிருந்து தினசரியாக வெளிவந்தது. கனடாவின் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃபிரீலாண்டின் தாய்வழி தாத்தாவான மைக்கைலோ சோமியாக், Krakivski Visti இன் சில ஆரம்ப இதழ்களைத் தவிர மற்ற அனைத்திற்கும் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். இவருக்கு முன்பு பொறுப்பில் இருந்தவரை, ஜேர்மன் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் அவர் போதுமானளவு நாஜிக்களுக்கு இணக்கமாக இல்லாததால் பதவி நீக்கம் செய்தனர்.

சோமியாக், நாஜி-சார்பு பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டதற்காக நன்கு வெகுமதியளிக்கப்பட்டு, போலந்தின் யூதர்களின் வெளியேற்றத்திலிருந்து தனிப்பட்ட முறையில் பலனடைந்தார். 15 ஸ்டாரோவிஸ்ல்னாவில் (15, Starowiślna) உள்ள புகெடோவ் அரண்மனையில் அவருக்கு ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்பட்டது. இது நாஜிக்களால் 'யூத மருத்துவர் பிங்கெல்ஸ்ரைனிடமிருந்து' அவரின் தளவாடங்களுடன் திருடப்பட்டதாகும். சோமியாக் இரண்டாவது திருடப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பிற்கு குடியேறியபோது, இது 'என்னிடம் ஒப்படைக்கப்பட்டதாக' அவர் புத்திசாலித்தனமாக விவரித்தார். செப்டம்பர் 19, 1940 இல், ஃப்ரீலாண்டின் அன்பான தாத்தா, யூதர்களின் சொத்துக்களை பறித்ததாக உத்தியோகபூர்வமாக குற்றம் சாட்டப்பட்ட கொள்ளையடிக்கும் ஜேர்மன் அரசு நிறுவனமான Treuhandstelle இற்கு ஒரு கடிதம் அனுப்பினார். இந்த இரண்டாவது அடுக்குமாடி குடியிருப்பை 'விடுவிக்க' அவர் செலவழித்த 190 ஸ்லோட்டியை திருப்பித் தருமாறு கோரினார். மூன்று நாட்களுக்கு முன்பு, மத்திய அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து யூத சொத்துக்களும் உத்தியோகபூர்வமாக Haupttreuhandstelle Ost இன் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. இதனால் கிராகோவில் யூதப்படுகொலைகளில் இருந்து இலாபமடைவதில் சோமியாக் மிகவும் முன்னணியில் இருந்ததாகத் தெரியவருகிறது

சோமியாக் செப்டம்பர் 19, 1940 அன்று Treuhandstelle க்கு எழுதிய கடிதம் (Image credit, COAT)

சோமியாக் மற்றும் UTsK இன் வழிகாட்டுதலின் கீழ், Krakivski Visti நாளிதல்நாஜி ஆட்சி மற்றும் நாஜி-உக்ரேனிய கூட்டுறவின் நற்பண்புகளைப் போற்றியது. உத்தியோகபூர்வ நாஜி பத்திரிகையான Völkischer Beobachter உட்பட நாஜி ஜேர்மன் பத்திரிகைகளில் இருந்து கட்டுரைகளை இது தொடர்ந்து மறுபதிப்பு செய்து வந்தது. Krakivski Visti ஜூன் 1941 இல் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாஜி அழிப்புப் போரை 'வரலாற்றில் மிகவும் நியாயமான போர்' என்று அறிவித்து, பின்னர் Waffen SS உளவுப்படையின் அனைத்து உக்ரேனிய பிரிவை உருவாக்குவதை ஊக்குவித்தது.

அதன் முதல் இதழ்களிலிருந்தே, Krakivski Visti யூதர்களுக்கு எதிரான ஆத்திரமூட்டலிலும், கடுமையான யூத-விரோத உரைகளையும் மற்றும் கேலிச்சித்திரங்களையும் வெளியிட்டு, யூதச் சொத்துக்களைக் கைப்பற்ற வலியுறுத்துவதில் ஈடுபட்டது.

நாஜிக்களுடன் உக்ரேனிய பாசிஸ்டுகளின் ஆர்வமுள்ள ஒத்துழைப்பு மற்றும் போலந்து மற்றும் உக்ரேன் யூதர்கள் மீதான துன்புறுத்தல், வெளியேற்றம் மற்றும் அடுத்தடுத்த அழிவிலிருந்து இலாபம் ஈட்டுவதற்கான அவர்களின் முயற்சிகள் பற்றிய கூடுதல் சான்றுகள் ஜேர்மன் அதிகாரிகளுடன் UTsK இன் தொடர்புபற்றிய ஆயிரக்கணக்கான பக்கங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

Krakivski Visti இன் தொடக்க இதழில், நாஜி ஆட்சியின் கீழ் உக்ரேனியர்களுக்கான புதிய வாழ்க்கை நிலைமைகள் குறித்து ஜெனரல் ஹான்ஸ் ஃபிராங்கின் பின்வரும் பகுப்பாய்வைப் படிக்கலாம்:

உங்கள் புத்திஜீவித்தனம், ஆளும் வர்க்கத்தின் மூர்க்கத்தனமான கொள்கையின் நிர்ப்பந்தத்திலிருந்து விடுபட்டு, பெரும் ஜேர்மனியின் சக்திவாய்ந்த பாதுகாப்பின் கீழ் பணியாற்றுவதற்கான பொதுக் கடமையை நிறைவேற்றுவதன் மூலம் உங்கள் சொந்த நலனுக்காக அனைத்தையும் செய்யுங்கள். நீதியான ஆட்சியின் கீழ், எல்லோரும் ஒரு வாழ்க்கையை சம்பாதிப்பார்கள். ஆனால், ஜேர்மன் மேலாதிக்கத்தின் கீழ், அரசியல்ரீதியாக தூண்டுபவர்கள், பொருளாதார நரிகள் மற்றும் வட்டிக்குப் பணம் கொடுக்கும் யூத சுறாக்களுக்கு எந்த இடமுமில்லை.

Krakivski Visti' இன் ஜனவரி 7, 1940 தொடக்க இதழிலிருந்து. மத்திய அரசாங்கத்தின் தலைவர் ஹான்ஸ் பிராங்கிற்கு உக்ரேனிய தேசியவாத வாழ்த்துக்கள்

எதிர் பக்கத்தில் 'தேசிய உடையில்' உக்ரேனியர்களின் பாசிச பிரச்சார புகைப்படம் உள்ளது. விருந்தோம்பலின் பாரம்பரியமாக பிராங்கிற்கு ரொட்டி மற்றும் உப்பு வழங்கப்படுகின்றது. இந்த படம், மற்ற எதையும் விட, UTsK இன் நாஜி அரசு மற்றும் உக்ரேனிய தேசியவாதிகள் ஏகாதிபத்தியத்துடனான உறவுக்கான தொனியை காட்டுகின்றது.

Krakivski Visti நாஜி ஜேர்மன் மற்றும் உக்ரேனிய தேசியவாத பாதை மற்றும் போராட்டத்தின் பொதுவான நோக்கங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை வழக்கமாக வலியுறுத்தியது. ஹிட்லர் தலைமையிலான ஜேர்மன் தேசிய மறுமலர்ச்சி என்று அழைக்கப்படுவதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளுமாறும், உக்ரேனிய தேசத்தின் 'எதிரிகளான' ரஷ்ய-போல்ஷிவிக்குகள், போலந்துகாரர்கள் மற்றும் யூதர்களுக்கு மரண அடிகளை வழங்குவதில், ஜேர்மனியை நட்பு நாடாகவும், நாஜிக்களை பாதுகாவலர்களாகவும் பார்க்குமாறு உக்ரேனியர்களை அது வலியுறுத்தியது.

அது 'மேற்குப் போர் எதைப் பற்றியது?' என்ற கேள்வியை முன்வைப்பதன் மூலம், சோமியாக் மற்றும் OUN(M) உக்ரேனிய பாசிஸ்டுகள் பின்வரும் பதிலை வழங்கினர்:

1918 இல் உலகிற்கு ஆணையிட்ட சோவியத் தீர்வை என்றென்றும் நிலைநிறுத்த முயன்ற அதே தூண்டுதல் மற்றும் கருத்துவேறுபாட்டின் விளைவாகவே மேற்கின் போர் ஏற்பட்டது. உக்ரேனியர்களாகிய நாமும் அதில் பாதிக்கப்பட்டவர்களாகவும், பரிசோதனைகளுக்கு உட்பட்டவர்களாக இருந்தோம். ... ஜேர்மனி இந்த ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை அமைப்புக்கு எதிராக போராடியது. உக்ரேனியர்களாகிய நாங்களும் விதிவிலக்காக கடினமான சூழ்நிலைகளில் போராடினோம். எனவே, சரியாக இல்லாத மற்றும் சரியாக இருக்க முடியாதவற்றுக்கு எதிரான போராட்டத்தை எதிர்த்து நிற்கும் நபர்களிடையே பரஸ்பர அனுதாபத்தின் தன்னிச்சையான மற்றும் நேர்மையான பதில்: வேர்சாயில் ஒழுங்கமைக்கப்பட்ட தன்னிச்சையான தன்மைக்கு எதிரான இருப்பாகும். ஜேர்மன் மக்கள் தங்கள் சொந்த மண்ணில் இறையாண்மையைப் பெற்றபோது, ஜேர்மன் வெற்றியை நாங்கள் அனுதாபத்துடன் பார்த்தோம், திறமையான மக்களின் ஒத்துழைப்புடன் தடைகளை உடைத்துக்கொண்டோம் …

ஏப்ரல் 24, 1940 இல் Krakivski Vist அடோல்ஃப் ஹிட்லரின் பிறந்தநாளின் போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து, அவரை '20 ஆம் நூற்றாண்டின் சிறந்த உருவம்' என்று எடுத்துக்காட்டும் ஒளிரும் உருவப்படத்துடன் வரைந்தது.

Krakivski Visti ஹிட்லரின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது

மீண்டும், முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து ஜேர்மனி இழந்த பகுதிகளை ஹிட்லரின் இராணுவம் மீண்டும் கைப்பற்றுவதற்கும், அனைத்து ஜேர்மானியர்களையும் ஒரே தேசிய அரசின் கீழ் ஐக்கியப்படுத்துவதற்கும் இடையேயான தொடர்பை உக்ரேனிய தேசியவாதிகள் பின்பற்றுவதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இது முன்னெடுக்கப்பட்டது:

அவர் உலகில் வாழும் அனைத்து ஜேர்மனியர்களிடமும் தேசிய சமூக உணர்வை புதுப்பித்து, ஒரு சொந்த கருத்து மற்றும் அமைப்பாக அவர்களை ஒன்றிணைத்தார். வேர்சாய் உடன்படிக்கையின் தடைகளை அவர் தூக்கி எறிந்து, ஜேர்மன் ஆயுதப்படைகளை நிலம், கடல் மற்றும் ஆகாயத்தில் முன்னோடியில்லாத விகிதத்தில் புத்துயிர் அளித்தார். படிப்படியாக, ஆனால் இரும்புபோன்ற நிலைத்தன்மையுடனும் உறுதியுடனும் போருர்ஜா, ஆஸ்திரியா, சுடெடன்லாந்து மற்றும் செக் குடியரசு போன்ற ஒரு காலத்தில் இழந்த நிலங்களையும் மாகாணங்களையும் அவர் திரும்பப் பெற்றார்...

யூத விரோத வெறுப்பும் கொள்ளையும்

ஜனவரி 25, 1940 அன்று வெளியிடப்பட்ட அதன் ஆறாவது இதழில், Krakivski Visti நாஜி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊக வணிகர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை அதன் முதல் பக்கத்தில் பதித்தது. 'ஊக வணிகர்களுக்கு மரண தண்டனை' என்ற தலைப்பில் ஒரு கொடூரமான யூத எதிர்ப்பு கேலிச்சித்திரத்தை அது வரைந்தது.

இந்த பிரச்சாரம் கிராகோவில் உள்ள யூதர்களின் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கான சாக்குப்போக்காக பயன்படுத்தப்பட்டது. எனவே, அவர்கள் Krakivski Visti இன் ஆசிரியருக்கு அவரது அரண்மனை குடியிருப்பை வழங்கிய Treuhandstelle மூலம் கையகப்படுத்தப்படக்கூடியதாக இருந்தது. ஜனவரி முதல் மார்ச் 1940 வரை, நாஜி அதிகாரிகள் கிராகோவில் உள்ள யூதர்களை அனைத்து சொத்துக்களையும் பதிவு செய்யும்படி கட்டாயப்படுத்தினர். Krakivski Visti ஆல் வெளியிடப்பட்ட யூத-விரோத கேலிச்சித்திரம் இந்தப் பிரச்சாரத்தின் உச்சக்கட்டத்தில் கிராகோவில் பரவியதாகக் கூறப்படுகிறது. இதனை பல ஆயிரம் பேர் பார்த்திருப்பார்கள். யூத மக்களை பொருளாதார வாழ்க்கையிலிருந்து அகற்றுவதற்கான ஊகவணிக எதிர்ப்பு முன்னெடுப்பிற்கும் நாஜி பிரச்சாரத்திற்கும் இடையிலான தொடர்பை அதன் தலைப்பு முற்றிலும் தெளிவாக்குகிறது: 'இல்லை, ஊக வணிகர்களே... நீங்கள் எங்கள் கூரையின் கீழ் உங்கள் வாழ்க்கையை சம்பாதிக்க மாட்டீர்கள்.'

நாஜி ஆக்கிரமிப்பு ஆட்சியின் 'ஊகங்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு' ஆதரவாக Krakivski Visti யூத எதிர்ப்பு கார்ட்டூன்

அதே இதழில், புதிதாக உருவாக்கப்பட்ட உக்ரேனிய கூட்டுறவு வங்கி பற்றிய ஒரு கதையைக் காண்கிறோம். அது நமக்குத் தெரிவிக்கிறது:

போலந்து-யூத ஆட்சியின் போது, உக்ரேனியர்கள் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் கடினமான தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதை நிறுத்துவது மிகவும் கடினமாக இருந்ததுடன், பின்னர் ஒவ்வொரு பகுதியிலும், குறிப்பாக பொருளாதாரப் பகுதியில் நமது வாழ்க்கையின் வளர்ச்சியை முற்றிலுமாக மழுங்கடித்தது. ... எல்லா இடங்களிலும், முற்றிலும் உக்ரேனிய குடியிருப்புகளில், நாங்கள் ஒரு யூதர், ஒரு போலந்துக்காரர், ஒரு யூதர் மற்றும் மீண்டும் ஒரு யூதரை மட்டுமே கண்டோம். நமது கிராமங்களிலும் நகரங்களிலும் பொருளாதார வாழ்வில் முழுமையாக தேர்ச்சி பெற்று ஏழை உக்ரேனியர்களை பயங்கரமான முறையில் சுரண்டிய பாடகர்கள் யூதர்கள். ... முக்கிய நிலைமைகள் மாறிவிட்டன. ... சனோக்கின் சுதேச தோட்டத்தில் ... [கடை அடையாளங்கள்] உக்ரேனிய, ஜேர்மன் மற்றும் போலிஷ் மொழிகளில் உள்ளன. இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக நாம் இன்னும் சீயோனின் பல ஐந்து ஆயுத நட்சத்திரங்களையும் 'யூத கடை' என்ற பதாகையையும் காண்கிறோம். நகரின் மையத்தில் 'உக்ரேனிய கூட்டுறவு வங்கி' என்ற பதாகையுடன் ஒரு புதிய அடையாளத்தையும் காண்கிறோம்.

OUN (M) தலைமையிலான உக்ரேனிய மத்திய குழுவும் அதன் பத்திரிகையான Krakivski Visti யும் உக்ரேனிய 'கூட்டுறவு இயக்கத்தை' ஊக்குவிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டின. இது Treuhandstelle மூலம் நாஜி அதிகாரிகளால் அபகரிக்கப்பட்டு , பறிக்கும் உக்ரேனிய குட்டி முதலாளித்துவத்திற்கு பங்கிட்டு கொடுக்கப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில் செழித்து வளர்ந்தது. இந்த வணிகங்களில் பல இதற்கு பதிலாக Krakivski Visti இல் விளம்பரங்களை வாங்கியுள்ளன.

நாஜிகள், ஜேர்மன் முதலாளித்துவத்தின் நெருக்கடியை இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சமாளிக்க முயன்றபோது, உக்ரேனிய பாசிசவாதிகள் தங்களை வளப்படுத்திக் கொள்ளவும், உக்ரேனிய முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவத்தின் வரலாற்று பலவீனத்தை நாஜிகளால் அமுலாக்கப்பட்ட இனக் கொள்ளை மூலம் ஈடு செய்யவும் முயன்றனர். ஹிட்லரின் மூன்றாம் குடியரசிற்குச் சேவை செய்வதன் மூலம் தங்களுக்கு ஒரு அரசியல் இடத்தை உருவாக்கிக் கொள்ள அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே, OUN நாஜிகளுடன் ஒத்துழைத்து உக்ரேனிய முதலாளித்துவத்தை விரிவுபடுத்த முயன்றது. மற்றும் அவர்களின் இனப் போட்டியாளர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கொள்ளையில் ஒரு பங்கைப் பெற வாதிட்டது.

மே 4, 1940 இல் வெளியிடப்பட்ட Krakivski Visti இன் 35வது இதழ், 'பழைய யூத சந்தையில் இருந்த அனைத்து சிறந்த கடைகளையும் உக்ரேனிய தனியார் வணிகர்கள் கைப்பற்றியுள்ளனர்' என்று ஒரு கொண்டாட்ட தொனியில் அறிவித்தது.

Krakivski Visti ஆல் ஊக்குவிக்கப்பட்ட யூத-விரோத வெறுப்பு, பாரம்பரிய யூத-விரோத போக்குகள் மற்றும் சமீபத்தில் உருவாக்கப்பட்ட மற்றும் வெளிப்படையாக பாசிச யூத-போல்ஷிவிக் நோய்க்கிருமிகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது. 1940 ஈஸ்டர் அன்று, கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்றும், அவர் சிலுவையில் அறையப்பட்டதற்கு யூதர்கள் பொறுப்பாளிகள் என்றும், படுகொலைகளுக்கு மத்தியகால ஆத்திரமூட்டல்களைத் திரும்பத் திரும்ப அதன் வாசகர்களுக்கு Krakivski Visti தெரிவித்தது. 1943 ஆம் ஆண்டில், Waffen-SS இன் 'கலிசியா பிரிவை' உருவாக்குவதற்கான பிரச்சாரத்தின் போது, ஃபிரீலாண்டின் தாத்தாவால் தொகுக்கப்பட்ட செய்தித்தாள் யூதர்களுக்கு எதிராக தொடர்ச்சியான புனைகதைகளை வெளியிட்டது. அவை யூத-போல்ஷிவிக் முட்டாள்த்தனங்களையும் கொண்டிருந்தன. இந்தக் கட்டுரைகளில் எழுத்தாளரும் கனடாவில் எதிர்காலத்தில் குடியேறியவருமான ஒலேனா கிசிலெவ்ஸ்காவின் கட்டுரையும் இருந்தது. 'ஹட்சுல் பகுதியை அழித்தது யார்?' இது கார்பாத்தியன் மலைகளின் தென்கிழக்குப் பகுதியைப் பற்றியதாகும்.

இக்கட்டுரையின் துணைத்தலைப்புகள் பின்வரும் குற்றச்சாட்டுக்களை கொண்டிருந்தன: “யூதர்கள் ஹட்சுல் செல்வத்தை எவ்வாறு அழித்தார்கள் ... யூதர்கள் ஹட்சுலை அதனது வீட்டிலிருந்து எப்படி விரட்டியடித்தார்கள் ... யூதர்கள் தரைவிரிப்பு தயாரிப்பை எப்படி அழித்தார்கள் ... யூதர்களும் போல்ஷிவிசத்தை பரப்புதலும் ...” கிசிலெவ்ஸ்காவின் கூற்றுப்படி, இருப்பினும் அனைத்தும் இழக்கப்படவில்லை. யூதப்படுகொலைகளின் மத்தியில் எழுதுகையில், 'யூதர்கள் இப்போது கார்பாத்தியன் மலைகளில் இருந்து வெளியேறிவிட்டார்கள்' என்ற அவதானத்துடன் தனது யூத-எதிர்ப்புப் வசைபாடலை முடிக்கிறார்.

Krakivski Visti பத்திரிகையின் பக்கங்கள் மூலம், உக்ரேனிய பாசிசவாதிகள் தீவிரமான ரஷ்ய எதிர்ப்பு மற்றும் போலந்து எதிர்ப்பு பேரினவாதத்தை ஊக்குவித்துள்ளனர்.

போலந்து மக்களுக்கு சொந்தமான வணிகங்கள் மற்றும் சொத்துக்களைக் கைப்பற்றுவதை உள்ளடக்கிய Treuhandstelle இன் ஆணையின் விரிவாக்கத்தை அவர்கள் வரவேற்றனர். நவம்பர் 1941 இல், நேரில் பார்த்த சாட்சிகளின் அடிப்படையில் உளவுத்துறை அறிக்கையில், போலந்தில் உள்ள முன்னாள் அமெரிக்க துணைத் தூதர், நாஜி அதிகாரிகளுடன் இணைந்து ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் சில உக்ரேனியர்கள் பாதுகாக்க முடிந்த சிறப்புரிமை நிலை குறித்து கவனத்தை ஈர்த்தார்:

போலந்தில் உள்ள உக்ரேனிய பிரிவினர் ஒரு சலுகை பெற்ற வர்க்கத்தை உருவாக்குகிறது ... மேலும் Reich மற்றும் Volksdeutsch போன்ற அடையாள அட்டைகளில் ஜேர்மன் கடைகளில் இருந்து உணவைப் பெறலாம். அவர்கள் கிராகோவ், வார்சோ மற்றும் மாகாண மாவட்டங்களில் உள்ள ஜேர்மன் அலுவலகங்களில் பணிபுரிகின்றனர். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் யூதர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்களை கொண்ட Treuhanders நபர்களாகும் (நிர்வகிப்பதற்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்).

Krakivski Visti யை பற்றிய ஒரு தவறில்லாத குறிப்பில், அமெரிக்க இராஜதந்திரி மேலும் கூறினார். 'போலந்தில் உள்ள உக்ரேனிய பத்திரிகை ஹிட்லர் மற்றும் நாஜிகளைப் புகழ்ந்து பேசுகிறது.' நாஜி பாதுகாப்பு அமைப்பில் அதிக எண்ணிக்கையிலான உக்ரேனியர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். அவை உக்ரேனிய பாசிஸ்டுகளால் அவர்கள் அடிக்கடி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட பதவிகளாகும். “மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தெற்குப் பகுதியில் உள்ள பெரும்பாலான சிறைகளில் உக்ரேனியர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் ஜேர்மனியர்களை விட போலந்து மக்களை மிகவும் கடுமையாக நடத்துகிறார்கள். இதற்கு சிறப்பு போலீஸ் பள்ளிகளில் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது”.

Krakivski Visti 1943-44 இல் உக்ரேனியர்களுக்கும் போலந்து மக்களுக்கும் இடையிலான கலப்புத் திருமணங்களினால் 'தேசியவாதத்தை அழிக்கும்' பாதிப்பைக் கண்டித்து தொடர் கட்டுரைகளை வெளியிட்டது. அவர்களின் சக உக்ரேனிய பாசிஸ்டுகள் மற்றும் பண்டேராவின் UPA இல் உள்ள மோசமான போட்டியாளர்களும் ஒரே நேரத்தில் 'latynnyky' பிரச்சனைக்கு தங்கள் பயங்கரமான 'தீர்வை' வழங்கினார்கள். போலந்து மக்களை இலக்காகக் கொண்ட அவர்களின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் போது, உக்ரேனியர்கள் தங்களின் போலந்து வாழ்க்கைத் துணையை கொல்லுமாறு கோரினர்.

அவர் ஜூன் 1941 சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்பு, உக்ரேனிய பாசிஸ்டுகளுக்கு போலந்து மற்றும் உக்ரோனின் யூத மக்களை துன்புறுத்துதல், அகற்றுதல் மற்றும் அழித்தல் ஆகியவற்றிலிருந்து இலாபம் பெற புதிய வாய்ப்புகளை வழங்கியது.

சோவியத் ஒன்றியத்தின் மீதான இராணுவதாக்குதலான Barbarossa தொடங்கப்பட்ட சில வாரங்களில், OUN (M) இன் ஆதிக்கம் செலுத்தும் UTsK மற்றும் Krakivski Visti இன் வெளியீட்டாளரான வோலோடிமையர் குபியோவிச், கலீசியாவிலிருந்து யூதர்கள் மற்றும் போலந்து மக்களை வலுக்கட்டாயமாக அகற்றுவதற்கான திட்டங்களை வகுக்கும் ஆவணங்களை ஹிட்லர் ஆட்சிக்கு சமர்ப்பித்தனர். இது நாஜி மாதிரியில் இனவாத 'உக்ரேனிய மக்கள் கூட்டமைப்பு (Ukrainische Volksgemeinschaft') அல்லது 'உக்ரேனிய மக்கள் சமூகத்தை (Ukrainian People's Community)' உருவாக்குவதாகும்.

ஜேர்மன் அதிகாரிகள் UTsK இன் கோரிக்கைகளை தங்கள் சொந்த விளக்கவுரையுடன் பதிவு செய்தனர்

1941 மத்திய அரசாங்க அறிக்கை யூத வணிகங்களால் முன்னர் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் நிறுவப்பட்ட உக்ரேனிய கூட்டுறவுகளின் 'வெற்றியை' விவரிக்கிறது. 'மத்திய அரசாங்கத்தில் உள்ள உக்ரேனியர்கள் உக்ரேனிய கூட்டுறவு அமைப்பிலிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்' என்ற தலைப்பில் ஆவணத்தின் பக்கம் 3 குறிப்பிடுகிறது:

மத்திய அரசாங்கத்தில் உக்ரேனிய குடியேற்றப் பகுதியைப் பாதுகாப்பதற்காக, உக்ரேனியப் பகுதியின் எல்லைகளை உறுதிப்படுத்துமாறு உக்ரேனியர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். அதில் போலந்து மற்றும் யூத வெளியேற்றப்பட்டவர்கள் நிலை நிறுத்தப்படக்கூடாது. கூடுதலாக, இந்த பகுதிகளிலிருந்து போலந்து மற்றும் யூத பிரிவினரை அகற்றுமாறு அவர்கள் கேட்கிறார்கள்…

உக்ரேனியர்கள் போலந்து மக்கள் மற்றும் யூதர்களிடமிருந்து வேறுபட்டவர்களாக அடையாளம் காணப்பட வேண்டும். எனவே தனி அடையாள அட்டை அல்லது 'அடையளப்படுத்தும் அட்டை (Kennkarte)' அடிப்படையில் சட்டத்தின் கீழ் தனித்தனியாக நடத்தப்பட வேண்டும். இது நாஜி அதிகாரிகள் உடனடியாக ஒப்புக்கொண்ட ஒரு நடவடிக்கையாகும்.

ஆகஸ்ட் 29, 1941 இல், குபியோவிச் யூதர்களின் நிலத்தைக் கைப்பற்றுவதற்கான கூடுதல் கோரிக்கைகளை ஹான்ஸ் பிராங்கிற்கு எழுதினார்:

யூதர்களின் சொத்துக்கள் அனைத்தும் ஆரம்பத்தில் உக்ரேனிய மக்களுக்கு சொந்தமானது என்பதையும், யூதர்கள் இரக்கமற்றமுறையில் சட்டத்தை மீறுவதன் மூலமும், உக்ரேனிய மக்களின் உறுப்பினர்களை அவர்கள் சுரண்டுவதன் மூலமும் மட்டுமே யூதர்களின் உடைமையானது என்று கருதுகிறோம். உக்ரேனிய மக்களுக்கு தார்மீக மற்றும் பொருள் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, பறிமுதல் செய்யப்பட்ட யூத சொத்தில் கணிசமான பகுதியை உக்ரேனிய மக்களுக்கு திருப்பித் தர வேண்டும் என நீதியின் தேவையை கோருகின்றோம். குறிப்பாக, யூதர்களின் சொத்துக்கள் அனைத்தும் உக்ரேனிய விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

ஜேர்மன் ஆக்கிரமிப்பு அதிகாரிகள் உக்ரேனிய மத்தியக் குழுத் தலைவரும் Krakivski Visti வெளியீட்டாளருமான குபியோவிச்சின் ‘உக்ரைனிய மக்கள் கூட்டமைப்பு’ முன்மொழிவுகளைப் பற்றி விவாதிக்கின்றனர்.

1941 இல் மத்திய அரசாங்கத்தின் அறிக்கை யூத வணிகங்களால் முன்னர் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் நிறுவப்பட்ட உக்ரேனிய கூட்டுறவு அமைப்புகளின் 'வெற்றியை' விவரிக்கிறது. 'மத்திய அரசாங்கத்தில் உள்ள உக்ரேனியர்கள் உக்ரேனிய கூட்டுறவு அமைப்பிலிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள்' என்ற ஆவணத்தின் பக்கம் 3 குறிப்பிடுகிறது:

நகரங்கள் மற்றும் கிராமங்களில் வர்த்தகத்தில் இருந்து யூத மதத்தை அகற்றுவது உக்ரேனிய மக்களுக்கு காணாமல் போன வர்த்தக அமைப்பை வர்த்தக கூட்டுறவுகளுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. இது சம்பந்தமாக, கிழக்கு கலீசியாவில் போருக்கு முன்பே உக்ரேனிய கூட்டுறவு அமைப்பு சிறந்த பெறுதிகளை அடைந்தது. அதில் தேசிய ஒற்றுமையின் மூலம் யூத மதத்தை முதலில் வர்த்தகத்திலிருந்தும் பின்னர் தொழில்துறையிலிருந்தும் பெரிய அளவில் படிப்படியாக விலக்க முடிந்தது.

இந்த விபரங்களிலிருந்து தெரியவருவது என்னவென்றால், 'தொழில்துறையிலிருந்து வெளியேற்றப்பட்ட' யூதர்கள், சித்திரவதை மற்றும் வதை முகாம்களுக்குள்ளும், பின்னர் எரிவாயு அறைகளுக்குள் அல்லது துப்பாக்கிச் சூடு படைகளுக்கு முன்பும் அனுப்பப்பட்டனர். இந்த கொலைகளின் பெரும்பகுதி உக்ரேனிய பாசிசவாதிகளின் உந்துதல் உதவி மற்றும் உறுதுணையுடன் மேற்கொள்ளப்பட்டது. கைப்பற்றப்பட்ட யூத சொத்துக்கள் 'உக்ரேனிய கூட்டுறவு சங்கங்களாக' மாற்றப்பட்டன. இது 1939 இல் 200 இல் இருந்து 1941 இல் 900 க்கும் அதிகமாக அதிகரித்தது. திருடப்பட்ட போலந்தினரினதும் மற்றும் யூதர்களினதும் சொத்துக்களை கைப்பற்றுவதற்கும் சுரண்டுவதற்கும் UTsKயின் கொள்கைகள் எந்த அளவிற்கு உதவியது என்பது வரலாற்றாசிரியர்களால் இன்னும் முழுமையாக ஆராயப்படாத ஒரு விஷயமாகும். ஆழமான வரலாற்று ஆய்வு இல்லாவிட்டாலும், அதன் வெளியீட்டாளரால் விளம்பரப்படுத்தப்பட்ட இந்தத் திட்டங்களைக் குறிப்பிடாமல் Krakivski Visti இன் பங்கைக் கருத்தில் எடுத்துக்கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது.

இந்தத் தொடரின் முதல் பகுதியில் நாம் விளக்கியது போல், 2017 இல் ஃபிரீலாண்டின் அரசியல் பரம்பரை பகிரங்கமாக அம்பலப்படுத்தப்பட்டபோது, அரசியல் ஸ்தாபகமும் பெருநிறுவன ஊடகங்களும் கனடாவின் துணைப் பிரதம மந்திரி 'ரஷ்ய தவறான தகவல் பிரச்சாரத்தின்' இலக்கு என்று கூறி அவரைப் பாதுகாக்க விரைந்தன.

ஃப்ரீலாண்டைப் பாதுகாப்பதன் ஒரு பகுதியாக, ஊடகங்கள் ஒரு முக்கிய நாஜி ஒத்துழைப்பாளராக அவரது தாத்தாவின் நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிட முயன்றன. பல தசாப்தங்களுக்கு முன்னர் சோமியாக்கின் மருமகனால் எழுதப்பட்ட இரண்டு ஆய்வுக்கட்டுரைகள், ஒரு சந்தர்ப்பத்தில் ஃபிரீலாண்டின் உதவியுடன் Krakivski Visti இரண்டு வருந்தத்தக்க நிகழ்வுகளைத் தவிர யூதர்களுக்கு எதிராக அட்டூழியங்கள் செய்யவில்லை என்ற கூற்றை உருவாக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

விடுவிக்க முற்படும் இந்த வாதத்தின்படி, இந்த நிகழ்வுகளில் முதலாவது பல ஆயிரம் கைதிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் தூண்டப்பட்ட ஜூலை 1941 இல் வந்தது. அவர்கள் ஸ்ராலினிச ஆட்சியின் இரகசிய காவல்துறையான NKVD இன் முகவர்கள், இராணுவ தாக்குதலான Barbarossa இன் ஆரம்ப உந்துதல்களுக்கு முன் தப்பி ஓடியபோது கொலை செய்யப்பட்டனர். இந்த குற்றம் நாஜிகளாலும் அவர்களது கூட்டாளிகளாலும் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் பாரிய யூத-விரோத வன்முறையை தூண்டி, நியாயப்படுத்த மற்றும் விரிவுபடுத்துவதற்காக கைப்பற்றப்பட்டது. ஜூலை 8, 1941 Krakivski Visti இதழ் NKVD படுகொலையைப் பற்றி அறிவித்தது, “இதையெல்லாம் கிரெம்ளினில் உள்ள யூத வல்லமையாளர்களின் கணக்கில் வைக்கிறோம். உலகம் முழுவதற்கும் எதிரான அவர்களின் குற்றங்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்.” யூத எதிர்ப்புத் தூண்டுதலின் Krakivski Visti பிரச்சாரத்தின் புகழ்பெற்ற இரண்டாவது மற்றும் இறுதி நிகழ்வு 1943 இல் ஒரு நாஜி பத்திரிகை அதிகாரியின் கோரிக்கையின் பெயரில் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொடர் ஆகும். இதில் 'ஹட்சுல் பிராந்தியத்தை அழித்தது யார்?' என்ற கிசிலெவ்ஸ்காவின் முன்னர் விவாதிக்கப்பட்ட கட்டுரையும் அதில் அடங்கும்.

* * *

நாங்கள் மேலே வழங்கிய அனைத்து தகவல்களையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது (இது ஒரு பகுதி மற்றும் பூர்வாங்கக் கணக்கு மட்டுமே) அவுஷ்விட்ஸ் எரிவாயு அறையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராகோவில் உள்ள Krakivski Visti யின் ஆசிரியர் அலுவலகங்களில் இருந்து இரண்டு தடவைகள் மட்டுமே யூதர்கள் மீது கடுமையான வெறுப்பைத் தூண்டியது என்ற வெளிப்படையான தவறான கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை!

இருப்பினும், இந்த கூற்றுக்கு அடிப்படையாக இருந்த 1990 களில் இருந்து இரண்டு கட்டுரைகள் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஜோன்-பௌல் ஹிம்காவால் எழுதப்பட்டது. ஃபிரீலாண்டின் மாமாவாக இருக்கும் ஹிம்கா, உக்ரேனிய பாசிசவாதிகளைப் பற்றிய தனது கருத்துக்கள் அவர்களின் செயல்பாடுகள் மற்றும் உக்ரேனில் யூதப்படுகொலைகள் பற்றிய தீவிர வரலாற்று ஆய்வுகள் அதன் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே இருந்த1990 களின் நடுப்பகுதியில் இருந்து கணிசமாக வந்துள்ளன என ஒத்துக்கொண்டுள்ளார். ஸ்டீபன் பண்டேரா, அவரது OUN (B) மற்றும் UPA ஆகியவற்றின் கொடூரமான குற்றங்களை அம்பலப்படுத்த ஹிம்கா இதில் அவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட உக்ரேனிய தேசியவாதிகள் மற்றும் படுகொலை:OUN மற்றும் UPA இன் பங்கேற்பு உக்ரேனிய யூதர்களின் அழிவு, 1941-1944 என்பதன் மூலம் தானே அதிகம் செய்துள்ளார். சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அழிப்புப் போரின் போது உக்ரேனிய பாசிசவாதிகளின் செயல்பாடுகளை நாங்கள் ஆராயும்போது, பகுதி 3 இல் இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். கடந்த கால் நூற்றாண்டில் ஹிம்கா தனது சொந்த முந்தைய அறிவார்ந்த எழுத்தின் சில பகுதிகளுடன் பிரச்சினையை எடுக்க வேண்டியிருந்தது. கடந்த கால் நூற்றாண்டில் ஹிம்கா தனது சொந்த முந்தைய அறிவார்ந்த எழுத்தின் சில பகுதிகளை பண்டேராவாதிகள் தேச விடுதலைக்கான போராளியாக காட்ட உதவினார். 'எனக்கு புராணக்கதை நன்றாகத் தெரியும்,' என்றும், 'ஏனென்றால் நான் அதை விளம்பரப்படுத்த உதவினேன்' என்றும் அவர் 2010 ஆம் ஆண்டு விமர்சனத்தில் எழுதினார்.

சோமியாக்கின் பேத்தி ஃபிரீலாண்ட், அவரைப் பகிரங்கமாக வணங்குவதைத் தொடர்ந்து UPA சின்னங்களையும் சடங்குகளையும் சிறப்பாக காட்டப் பயன்படுத்துவதால், Krakivski Visti இன் பாத்திரத்தை குறைத்து மதிப்பிடும் முயற்சியை சவால் செய்யத் தவறியதற்காக ஹிம்காவிற்கு நன்றி கூறத்தேவையில்லை. ஆனால் ஹிம்காவின் அரசியல் வரம்புகள் மற்றும் தார்மீகத் தோல்விகள் எதுவாக இருந்தாலும், ஃபிரீலாண்டின் அரசியல் வம்சாவளியை பற்றிய எந்தவொரு தீவிர விசாரணைக்கும் கனேடிய ஆளும் ஸ்தாபகத்தின் விரோதப் போக்கை அவர்கள் விளக்கத் தொடங்கவில்லை. உக்ரேனில் போரைத் தயாரிப்பதிலும், தூண்டிவிடுவதிலும், இப்போது நடத்துவதிலும் கனேடிய ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள அரசு ஆதரவுடன் செயல்படும் UCC மற்றும் சமகால உக்ரேனிய தீவிர வலதுசாரி சக்திகளால் கொண்டாடப்படும் OUN பாசிசவாதிகளின் நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் மௌனமாக இருப்பதற்கும் கணக்கு கூறத்தேவையில்லை.

உக்ரேனின் கணிசமான யூத சிறுபான்மையினரை அகற்றுதல், இடப்பெயர்ச்சி மற்றும் அப்பட்டமான அழிப்பு ஆகியவை, உக்ரேனிய பாசிச OUN இன் இரண்டு பிரிவினரும் ஒரு பலம்வாய்ந்த உக்ரேனிய தேசிய அரசையும், முதலாளித்துவ ஆளும் உயரடுக்கையும், நாஜி தலைமையிலான ஜேர்மன் ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்து உருவாக்குவதற்கான சித்தாந்தத்திலும் வேலைத்திட்டத்திலும் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது என்பதை எமது ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

Loading