பணவீக்கத்திற்கு எதிராகவும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாகவும் ஊர்வலம் சென்ற தொழிலாளர்கள் மீது பிரெஞ்சு போலீஸ் தாக்குதல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் 18, 2022, செவ்வாய்கிழமை, மேற்கு பிரான்சின் நான்ந் இல் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது, போலீஸ் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசுகையில், ஒரு எதிர்ப்பாளர் தப்பி ஓடுகிறார். அதிகரித்து வரும் பணவீக்கத்தைத் தொடர்ந்து ஊதிய உயர்வுகளுக்காக பிரான்ஸ் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை கட்டுப்படுத்திய மற்றும் நாடு முழுவதும் பெட்ரோல் பற்றாக்குறையைத் தூண்டிய பல வார வெளிநடப்புகளுக்குப் பின்னர் தொழிலாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மோதலைத் தூண்டியுள்ளது. [AP Photo/Jeremias Gonzalez]

பணவீக்கம் மற்றும் நாடு தழுவிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தத்தை நசுக்க மக்ரோன் அரசாங்கத்தின் முயற்சிகளை எதிர்த்து 300,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நேற்று பிரான்சில் ஒரு நாள் நடவடிக்கையில் அணிவகுத்தனர். சுத்திகரிப்பு நிலையங்கள், அணுசக்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி, அத்துடன் கல்வி மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடப்பட்டன. பல ஆயிரக்கணக்கானோர் Bordeaux, Le Havre, Lille, Marseille, Lyon, Toulouse மற்றும் Rennes ஆகிய இடங்களில் அணிவகுத்துச் சென்றனர், தொழிற்சங்க அதிகாரிகள் பாரிஸில் நடந்த அணிவகுப்பில் 70,000 பங்கேற்றதாக கணக்கிட்டனர்.

தொடர்ச்சியான சுத்திகரிப்பு எண்ணெய் வேலைநிறுத்தம் காரணமாக பிரெஞ்சு எரிவாயு நிலையங்களில் சுமார் 25 சதவிகிதம் குறைந்தது ஒரு வகை எரிபொருளில் குறைவாக இருக்கையில், சுத்திகரிப்பு தொழிலாளர்களுடன் ஒற்றுமையுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் பரவின. பாரிஸ் மற்றும் முல்ஹவுஸில் டஜன் கணக்கானவர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

சமூக சமத்துவமின்மைக்கு எதிரான 2018-2019 'மஞ்சள் சீருடை' போராட்டங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை அடக்குமுறையைத் தொடர்ந்து, பிரெஞ்சு கலகத் தடுப்புப் போலீஸார் பாரிஸில் அமைதியான போராட்டக்காரர்களை மீண்டும் மீண்டும் தாக்கினர். அவர்கள் ஸ்ராலினிச தொழிலாளர் கூட்டமைப்பு (CGT) தொழிற்சங்கத்தின் பாதுகாப்புப் பிரிவின் உறுப்பினர்களைத் தாக்கினர், தலையில் வெடிப்பு காயத்துடன் ஒருவர் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

சிரிய பத்திரிகையாளர் சகாரியா அப்தெல்காஃபி பிரெஞ்சு காவல்துறையினரால் சுடப்பட்ட இரப்பர் தோட்டா அவரது புருவத்தைத் தாக்கியதில் அவருக்கு அதிக இரத்தம் கொட்டியது, இருப்பினும் அவரது கண் காயமடையவில்லை என்று கூறப்படுகிறது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

சட்டபூர்வமான, அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட சமூகப் போராட்டங்களை அச்சுறுத்துவதற்கும் ஊக்கமிழக்கச் செய்வதற்கும் நோக்கம் கொண்ட இந்த காட்டுமிராண்டித்தனமான பொலிஸ் வன்முறை, மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. அவரது அரசாங்கமும், அவரது கொள்கைகளை ஆதரிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் தொழிலாளர்களுக்கு விரோதமானவை மற்றும் பணவீக்கம், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்திய போர் ஆகியவற்றின் கொள்கைகளை ஆதரிக்கின்றன, அவை தொழிலாள வர்க்கத்தை வறுமையில் ஆழ்த்துகின்றன. பிரான்சிலும், சர்வதேச அளவிலும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியில் ஒரு இயக்கத்தை உருவாக்குவதே முன்னோக்கி செல்லும் வழியாகும்.

அத்தகைய இயக்கத்தை வளர்ப்பதற்கு, தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, சர்வதேச எல்லைகளுக்கு அப்பால் தொழிலாளர்களின் போராட்டங்களை ஒன்றிணைக்க போராடும் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை உருவாக்குவது அவசியமாகும். இதற்கு ஜோன்-லூக் மெலோன்சோன் போன்ற குட்டி-முதலாளித்துவ பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு ஆழமான அரசியல் இடைவெளி தேவைப்படுகிறது, அவர்கள் பிரான்சில் உள்ள தொழிலாளர்களை தேசியவாத மற்றும் ஜனரஞ்சகவாத சொல்லாட்சியுடன் சர்வதேச அளவில் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளிடமிருந்து பிரிக்க முற்படுகிறார்கள்.

நேற்று, மெலோன்சோன் BFM-TV இடம் 'நீங்கள் விரும்பினால், இரண்டு முனைகளில், ஒன்றாக அணிவகுத்து வரும் இரண்டு யதார்த்தங்கள் உள்ளன: சம்பளத் தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சங்கங்களில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளனர், மேலும் நாங்கள் மக்களை அழைக்கிறோம்,' என்று அவர் கூறினார். மக்ரோனுக்கு எதிரான இயக்கம், 'அரசாங்கத்துடனான ஒரு வகையான வலிமையின் சோதனை, படிப்படியாக மே 1968 பொது வேலைநிறுத்தம்' என்று அவர் மேலும் கூறினார்.

உண்மையில், தயாராகிக் கொண்டிருப்பது படிப்படியாக அல்ல, ஆனால் வெடிக்கும் சர்வதேச இயக்கம், முதலாளித்துவத்தின் தோல்விக்கு தொழிலாள வர்க்கத்தில் ஆழமாக வேரூன்றிய எதிர்ப்பால் இயக்கப்படுகிறது. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் —பணவீக்கம், உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போர் மூன்றாம் உலகப் போராக அதிகரிக்கக்கூடிய ஆபத்து மற்றும் கோவிட் -19 தொற்றுநோய்—இயல்பிலேயே சர்வதேசமானது. இந்த இயக்கத்தில், பிரெஞ்சு தொழிலாளர்களின் மிக முக்கியமான கூட்டாளிகள் மற்ற நாடுகளில் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகள் ஆவர்.

பாரிஸில் நடந்த அணிவகுப்பில் WSWS நிருபர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தத்தை பாதுகாக்க தொழிலாளர்களை அணிதிரட்ட அழைப்பு விடுக்கும் துண்டு பிரசுரத்தை விநியோகித்தனர் மற்றும் அணிவகுப்பில் தொழிலாளர்களை பேட்டி கண்டனர்.

சுத்திகரிப்பு வேலைநிறுத்தத்தை நசுக்கும் மக்ரோனின் முயற்சியை கண்டித்த பாரிஸில் உள்ள CGT-எனேர்ஜி கூட்டமைப்பின் உறுப்பினரான செடெரிக் லியேச்சி (Cédric Liétchi) உடன் அவர்கள் பேசினர்: “சுத்திகரிப்பு தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப கட்டாயப்படுத்தும் அவர்களின் முயற்சி வேலைநிறுத்தம் செய்யும் உரிமையின் மீதான தாக்குதலாகும். சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் முன்னோக்கி செல்லும் வழியைக் காட்டுகின்றனர். … தொழிலாள வர்க்கத்திற்கு மகத்தான முன்னோக்குகளைத் திறக்கக்கூடிய ஒரு மாபெரும் சமூக வெற்றியைப் பெற, அனைத்துத் தொழிற்சாலைகளும் ஒன்றிணைந்து, உற்பத்தியைத் தடுத்து, இந்த அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும்.'

'அனைவருக்கும் ஊதிய உயர்வுக்கு' அழைப்பு விடுத்த செடெரிக், 'பிரான்சில் எங்களிடம் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், எங்களிடம் ஏராளமான மின்சாரம் மற்றும் எரிவாயு தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களின் சம்பளம் வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடுகையில் சரிந்துள்ளது. எங்களுக்கு வழங்கப்படும் ஆரம்ப ஊதியம் குறைந்தபட்ச ஊதியத்தை விட 200 யூரோக்களுக்குக் குறைவாக உள்ளது, எனவே புதிய பணியாளர்களுக்கு உண்மையில் அதற்கு மேல் ஊதியம் வழங்குவதற்கு நாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். நாங்கள் கோருவது என்னவென்றால், மகத்தான நமது உழைப்பின் பலன்கள், இந்த ஆண்டு தொழில்துறை முழுவதும் அதிக இலாபம் ஈட்டிய எரிசக்தி நிறுவனங்கள், செல்வத்தின் ஒரே உற்பத்தியாளர்களான தொழிலாளர்களுக்கு மறுபகிர்வு செய்யப்பட வேண்டும்.”

உற்பத்தி செலவுகள் 50 யூரோக்கள் மட்டுமே இருக்கும் அதேசமயம், ஒரு மெகாவாட்-மணிநேரத்திற்கு 1,000 யூரோக்கள் வரை எரிசக்தி விலையை ஏலம் எடுக்கும் ஊக வணிகர்களைக் கண்டித்து, செடெரிக் கூறினார்: “13 மில்லியனுக்கும் அதிகமான பிரெஞ்சு மக்கள் தங்கள் வீடுகளை சூடாக்க எரிசக்தியை அணுக முடியாத நிலையில் வாழ்கின்றனர். எனவே நாங்கள் பகிர விரும்பும் செய்தி ஒன்று உள்ளது: முதலாளித்துவ சந்தையின் பிடியில் இருந்து எரிசக்தியை விடுவியுங்கள்.”

உக்ரேனில் ரஷ்யாவுடனான நேட்டோ போர் குறித்து கேட்கப்பட்டபோது, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் பேரழிவு தரும் எரிசக்தி பணிநீக்கங்களுக்கு வழிவகுக்கும் என்று செட்ரிக் எச்சரித்தார். 'இது உண்மையில் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒரு போராகும், நேட்டோ ஏகாதிபத்தியம் உக்ரேனை ஒரு மேம்பட்ட தளமாக பயன்படுத்துகிறது. … மின்சார வெட்டுக்களுக்கான காட்சிகள், அவற்றை நாங்கள் ஏற்கனவே பெற்றுள்ளோம். எங்கள் நிறுவனத்தில், நுகர்வோருக்கு அவர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும்போது அவர்கள் எம்மை அழைக்கும் போது நாம் என்ன சொல்ல வேண்டும் என்பதற்கான காட்சிகளைக் கொண்ட கோப்புகள் ஏற்கனவே எங்களிடம் உள்ளன. நாங்கள் திட்டமிடுவது நடுத்தர மின்னழுத்த வலையமைப்பில் (medium-voltage network) இரண்டு மணி நேர மின்தடையை ஏற்படுத்துவதாகும்.”

லெட்டிஷியா மற்றும் கிறிஸ்தோப்

WSWS நிருபர்கள் லெட்டிஷியா அத்தோடு கிறிஸ்தோப் உடனும் பேசினர், அவர்கள் சுகாதாரப் பராமரிப்பில் பணிபுரிகின்றனர் மேலும் கோவிட்-19 தொற்றுநோயை உத்தியோகபூர்வமாக கையாள்வதில் தங்கள் சீற்றத்தைப் பற்றிப் பேசினர். “பொதுத்துறை ஊழியர்கள் வெளிப்படையாகவே இராஜினாமா செய்கிறார்கள். பொது மருத்துவமனைகள் அழிக்கப்படுகின்றன,” என்று லெட்டிஷியா கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோயின் முதல் அலையின் போது, அவர் கூறினார், “நாங்கள் நோயாளிகளை பராமரிக்க குப்பை சேகரிக்கும் பைகளை அணிந்தோம். எங்களுக்கு பாதுகாப்புக்கான வழிமுறைகள் இல்லை,, முகக்கவசங்கள் கூட இல்லை. அவர் மேலும் கூறினார், இப்போது, 'நான் சோதனைகள் செய்யும் ஒரு ஆய்வகத்தில் வேலை செய்கிறேன், அந்த வேலையைச் செய்ய எங்களிடம் போதுமான உபகரணங்கள் இல்லை. நெருக்கடியை சமாளிக்கத் தேவையான ஆட்கள் எங்களிடம் இல்லை. … பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எதுவும் இல்லை, நாங்கள் PCR சோதனைகளுடன் வேலை செய்கிறோம், அது எங்கள் விசைப்பலகைகளில் வருகிறது, எல்லா இடங்களிலும், எங்களை குழப்பமடைய வைக்கிறது.”

'COVID என்பது பணத்தைப் பற்றியது' என்று லெட்டிஷியா கூறினார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் அன்னியேஸ் புஸான் டிசம்பர் 2019 இல் தொடங்கி தொற்றுநோயைப் பின்தொடர்ந்ததாக ஒப்புக் கொண்டதைப் பற்றி கேட்டதற்கு, மக்ரோனுக்குத் தெரிவித்த பின்னர் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை, கிறிஸ்தோப் கூறினார், 'அவர்களின் கைகளில் இரத்தம் உள்ளது.'

மருத்துவமனை ஊழியர்களின் குழந்தைகளுக்கான பராமரிப்பு நிலையத்தில் பணிபுரியும் கிறிஸ்தோப் மேலும் கூறியதாவது: “என்னுடன் கோவிட் மற்றும் 42°c காய்ச்சல் இருந்த சக ஊழியர் ஒருவர் இருந்தார். மன்னிக்கவும், நீங்கள் வேலைக்கு வர வேண்டும் என்று அப்பெண்ணுக்கு கூறப்பட்டது. மேலும், அவர் 42°c காய்ச்சலுடன், நோய்த்தொற்று இல்லாத குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள எழுந்திருக்க வேண்டியிருந்தது!”

Wsws நிருபர்கள் Roissy-Charles de Gaulle விமான நிலையத்தில் ஓய்வு பெற்ற CGT அதிகாரியான பிலிப் உடன் பேசினர், அவர் நடுத்தர வர்க்க Lutte ouvrière (LO, தொழிலாளர்கள் போராட்டம்) கட்சியின் உறுப்பினராக உள்ளார். ஒல்னேயில் PSA (இப்போது ஸ்டெல்லாண்டிஸ்) வாகன ஆலையை 2013 இல் மூடியதில் LO இன் பங்கு குறித்தும், CGT மற்றும் LO அதிகாரி ஜோன்-பியர் மேர்சியே இன் வேலைநிறுத்த அழைப்புகளை ஆலையில் தொழிலாளர்கள் ஏன் புறக்கணித்தனர் என்றும் கேட்டதற்கு, தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டதில் நீண்ட, கசப்பான அனுபவங்கள் உள்ளன என்று பிலிப் கூறினார்.

பிலிப் விளக்கினார்: 'தேசிய மட்டத்தில், தொழிற்சங்க அதிகாரிகள் அரசு எந்திரத்தில் முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர், அவர்களுக்கு வரம்புகள் உள்ளன. அவர்கள் முதலாளித்துவ ஒழுங்கை சீர்குலைக்க விரும்பவில்லை, அவர்கள் புரட்சியை விரும்பவில்லை, தொழிலாளர்கள் முதலாளிகளை அபகரிப்பதை அவர்கள் விரும்பவில்லை. ... தேசிய தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும், அரசு எந்திரத்தின் பற்களாக மாறிவிட்டனர்.”

தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அவர்களின் நடுத்தர வர்க்க அரசியல் கூட்டாளிகளான மெலோன்சோன் மற்றும் LO போன்றவற்றின் நிறுவன பிடிக்குள் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது சாத்தியமற்றது. முன்னோக்கி செல்லும் வழி, இந்த அதிகாரத்துவங்களுக்கு எதிரான தொழிலாளர்களின் கிளர்ச்சி மற்றும் சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) இன் கட்டுமானம் ஆகும், இது பணவீக்கம், போர், அடக்குமுறை மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் முழு பலத்தையும் அணிதிரட்டும்.

Loading