சுனாக், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கான பிரிட்டன் அரசாங்கத்தை வெளிப்படுத்துகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிட்டத்தட்ட ஒரு பில்லியனராக அவரே உருவடிவமாக உள்ள நிதிய தன்னலக்குழுவின் கட்டளைகளுக்கு இணங்கி அவர் செயல்படுவார் என்பதை டவுனிங் வீதியில் நுழைந்ததுமே பழமைவாத கட்சியின் புதிய பிரதம மந்திரி ரிஷி சுனாக்கின் உரை தெளிவுபடுத்தியது.

'உங்களின் புதிய பிரதம மந்திரியாக இங்கே நான் நிற்கிறேன்,' என்று மெல்லிய குரலில் முனங்கிய அவர், “இப்போது நம் நாடு ஓர் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கோவிட்டுக்குப் பின்னர் இன்னமும் நீடிக்கிறது. உக்ரேனில் புட்டினின் போர் உலகம் எங்கிலும் எரிபொருள் சந்தைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்துள்ளது,” என்றார்.

UK Prime Minister Rishi Sunak speaking as he arrives in Downing Street. October 25, 2022, London, United Kingdom [Photo by Lauren Hurley/No 10 Downing Street/Flickr / CC BY-NC-ND 2.0]

அவரால் பதவியில் இருந்து இறக்கப்பட்ட பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ், 'சில தவறுகள்' செய்திருந்தார், “… இந்த அரசாங்கத்தினது திட்டநிரலின் இதயதானத்தில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையை நிலைநிறுத்துவேன். கடினமான முடிவுகள் வரவிருக்கின்றன என்பதே இதன் அர்த்தம்,” என்றார்.

சுனாக், முன்னாள் சான்சிலராக இருந்து, இந்தப் பெருந்தொற்று தொடங்கிய போது பெருநிறுவனங்களுக்கு பல நூறு பில்லியன் பிணை வழங்கியதை அவரின் சாதனைகளாக முன்வைத்தார்.

அதுபோன்றவொரு தாக்குதலை உடனடியாக செய்யத் தயாராக இல்லாததற்காக ட்ரஸைப் பதவியில் இருந்து இறக்கிய சந்தைகளால் கோரப்படும் அவர் குறிப்பிடும் இந்தக் 'கடினமான முடிவுகள்', தொழிலாள வர்க்கம் மீது இன்னும் அதிக கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்கான குறியீட்டு சொல்லாகும். நிதி ஒதுக்கீடு இல்லாமல் பெருவணிகங்களுக்கு வரி விட்டுக்கொடுப்புகள் வழங்கிய வரவுசெலவுத் திட்டக்கணக்கைப் புறக்கணித்து, “கலங்கடிக்கும்' கடுமையான சிக்கன நடவடிக்கைகள் கொண்ட ஒன்றால் அதைப் பிரதியீடு செய்ய, குவாசி குவார்டெங்கிற்குப் பதிலாக சான்சிலராக ஜெர்மி ஹன்ட்டை உடனடியாகக் கொண்டு வர நிதிய உயரடுக்கு வலியுறுத்தியது.

சுனாக் முக்கியமாக இப்போது ட்ரஸின் 11 அமைச்சர்களை மாற்றி உள்ளார், ஆனால் ஹன்ட் சான்சிலராக இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளார். உலகளாவிய நிதிய பிரபுத்துவம் கோரியவாறு, ஹன்ட், ஒரு வாரத்திற்குள், அக்டோபர் 31 இல், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக விரிவாக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளில் ஒருமுனைப்பட்ட அவசர நிதி அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்வார்.

மக்களுக்கான பொது செலவுகளில் அதிகரிப்பு இருக்காது, அதேவேளையில் போர் எந்திரத்திற்கு இன்னும் கூடுதலாக பில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கப்படும். “முடிவில் வெற்றியாகக் காண வேண்டிய ஒரு பயங்கர போருக்கு' உதவியாக 'நம் ஆயுதப் படைகளை ஆதரிப்பதை' முன்னுரிமையாக சுனாக் அறிவித்தார்.

இந்த அடிப்படையில் அவர் பென் வாலஸைப் பாதுகாப்பு அமைச்சராகத் தக்க வைத்துக் கொண்டார். கடந்த வாரம், ட்ரஸ் அப்புறப்படுத்தப்பட்டு கொண்டிருந்த போதும் கூட, வாலஸ், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான நேட்டோ போருக்குப் பிரிட்டனின் முழு ஆதரவைப் பைடென் நிர்வாகத்திற்கு உறுதியளிக்க வாஷிங்டனுக்குச் சென்றார். பைடென் செவ்வாய்கிழமை ட்வீட் செய்து சுனாக்கிற்கு வாழ்த்து தெரிவித்தார், “உக்ரேனுக்கான நம் பலமான ஆதரவைத் தொடர்வது உட்பட, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் செல்வ செழிப்புக்கு முக்கியமான பிரச்சினைகளில் நம் கூட்டுறவை விரிவாக்க நான் எதிர் நோக்குகிறேன்,” என்றவர் குறிப்பிட்டு இருந்தார்.

சுனாக் டவுனிங் வீதியில் நுழைந்துள்ள இந்த வேளையில், ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலத்தில் நடந்திராத மிகப் பெரிய போர் ஒத்திகைகளுக்காக பிரிட்டிஷ் இராணுவம் ஏறக்குறைய 3,500 துருப்புக்களையும் 800 வாகனங்களையும் ஐரோப்பாவுக்கு அனுப்பியது. இந்தத் துருப்புகள், ஒரு மிகப்பெரிய கட்டளையகப் பயிற்சியாக ஜேர்மனியில் நடக்கும் Exercise Cerberus 22 இன் பாகமாக சென்றன. ரஷ்யாவுக்கான ஓர் அச்சுறுத்தலில், பிரிட்டிஷ் ஆயுதப்படை அறிக்கை ஒன்று குறிப்பிட்டது, “முன்னர் பிரிட்டனில் சாலிஸ்பரி சமவெளி பயிற்சி பகுதியில் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சி' “மிகப் பெரியளவில் சிப்பாய்களையும் தளவாடங்களையும் நகர்த்தும் அதன் ஆற்றலைப் பரிசோதிக்கவும் மற்றும் உள்நாட்டுக்கு நெருக்கமாக இருப்பதை விட சாகச முறைகளில் செயல்படவும் அதன் புதிய மத்திய ஐரோப்பிய இடத்தில்' நடத்தப்படுகிறது.

இந்தப் பயிற்சியை நடத்தி வரும் 3வது யுனைடெட் கிங்டம் பிரிவு (3 (UK) Div) தலைமையகங்களின் தலைமை தளபதி கர்னல் ஓவைன் லூக் கூறுகையில், “இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் பிரிகேட் படைப்பிரிவுகளுக்குக் கூடுதலாக… அமெரிக்கன் முதல் குதிரைப்படைப் பிரிவில் இருந்து 3 வது பிரிகேட் போர்க் குழுவும் எங்களுடன் இணைகிறது. இந்தப் பயிற்சி அமெரிக்கப் படைகளுடன் நாங்கள் ஒன்றிணைந்து இயங்கும் முறைகளைக் கட்டமைப்பது அத்துடன் நேட்டோ நெறிமுறைகளுடன் ஒத்திசைந்து செயல்படுவது மற்றும் கூட்டு அதிரடி படைப்பிரிவுகளின் தலைமையகங்களில் செயல்படுவது சம்பந்தப்பட்டதாகும்,” என்றார்.

ட்ரஸ் செய்ததைப் போல, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் இராணுவச் செலவை GND இல் 3 சதவீதத்திற்கு (கூடுதல் நிதி ஒதுக்கீடாக 157 பில்லியன் பவுண்டு) அதிகரிக்க சுனாக் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றாலும், அவ்வாறு செய்ய நிச்சயமாக அவருக்கு வாஷிங்டனிடம் இருந்து குறிப்புகள் வந்துவிடும்.

ட்ரஸ் அரசாங்கத்தில் இருந்து தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொண்ட ஒரு சிலரில் வெளியுறவுத் துறைச் செயலர் ஜேம்ஸ் கிளெவெர்லியும் உள்ளடங்குவார். கிளெவெர்லி 2015 இல் தான் நாடாளுமன்றத்தில் நுழைந்தார் என்றாலும், தன்னை ஒரு முன்னணி சீன-விரோத போர்வெறியராக நிலைநிறுத்திக் கொண்டார். சீனா உடனான அமெரிக்க ஏகாதிபத்திய மோதலுக்கு இசைந்த விதத்தில், மற்றும் அதிகரித்து வரும் பிரிட்டனின் ஆத்திரமூட்டும் சூழ்ச்சிகளுக்கு இசைந்த விதத்தில், கிளெவெர்லி இந்தக் கோடையில் கூறுகையில், “உலக அரங்கில் மட்டுமல்ல, இங்கே பிரிட்டனிலும், நாம் சீனாவின் செல்வாக்கை பார்க்க வேண்டும்,” என்றார்.

போரிஸ் ஜோன்சனின் கீழ் பணியாற்றிய டொமினிக் ராப், துணைப் பிரதமராகவும் நீதித்துறைச் செயலராகவும் திரும்புகிறார். இந்தக் கோடையில், ட்ரஸ்ஸால் ஓரங்கட்டப்படுவதற்கு முன்னர், ராப் அவரின் உரிமைகள் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார், அது மனித உரிமைகள் சட்டத்தின் முக்கிய வழிவகைகளை அகற்றி மாற்றியமைக்க உள்ளது.

ஒரு வக்கிரமான வலதுசாரியான சுயெல்லா பிரேவர்மேன், புலம்பெயர்ந்தோருக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு உறுதியாக பொறுப்பேற்கவில்லை என்று ட்ரஸைத் தாக்கி, அமைச்சக நெறிமுறைகளை மீறிய பின்னர், கடந்த வாரம் ட்ரஸ்ஸின் அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்தார். அப்பெண்மணியை சுனாக் உள்துறைச் செயலராக மீண்டும் நியமித்துள்ளார். புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பும் விமானத்தைக் குடியுரிமை மற்றும் எல்லைகள் சட்டத்தின் கீழ் தஞ்சம் கோருவோரின் வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்திய பின்னர், மனித உரிமைக்கான ஐரோப்பிய சம்மேளனத்தில் (ECHR) இருந்து பிரிட்டனை வெளியேற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜூலையில் அவர் நாடாளுமன்ற அவை சஞ்சிகையில், “ECHR இல் இருந்து வெளியேறுவது மட்டுமே பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரே தீர்வு' என்று எழுதியதுடன், அது 'சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டதே' என்று வாதிட்டார்.

சுனாக்கின் நியமனங்கள் மற்றும் உறுதிமொழிகளால் நிதிச் சந்தைகள் உடனடியாக உற்சாகமடைந்தன, ட்ரஸ்/குவார்டெங்கின் இடைக்கால வரவு-செலவுத் திட்டக்கணக்குக்கு முன்னர் இருந்ததை விட பவுண்டு அதன் அதிகபட்ச மட்டத்தை எட்டியது. அந்த வரவு-செலவு திட்டக்கணக்குக்கு முன்னர் இருந்த அதே மட்டத்திற்கு அரசு கடன் செலவுகள் மீண்டும் குறைந்தன.

இது புயலுக்கு முன் இருக்கும் அமைதி போன்றது, இதில் சுனாக்கின் திட்டநிரல் நிற்க முடியாது. அவர் தொழிலாள வர்க்கத்துடன் ஒரு தலையாய மோதலைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்தக் கோடை கால வேலைநிறுத்த அலையில் பார்க்கப்பட்டதைப் போல பல தசாப்த கால தாக்குதல்கள் தொழிலாளர்களைத் திருப்பிப் போராட தூண்டி உள்ள நிலைமைகளின் கீழ் சுனாக் தாக்குதலைத் தொடுத்தாக வேண்டும். அடுத்த ஏப்ரலில் 4,300 பவுண்டுக்கு அதிகமாக அதிகரிக்க உள்ள மிகப் பெரும் ஆண்டு கட்டணங்கள் காரணமாக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வெப்பமூட்டிகளை இயக்குவதற்கே பயப்படுகின்ற நிலையில், தனது நான்கு மாளிகைகளில் ஒன்றில் நீச்சல் குளத்தை வெப்பமூட்ட 14,000 பவுண்டுகள் செலவிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு பிரதம மந்திரியால் இந்த நாடு நிர்வகிக்கப்பட உள்ளது.

இந்த இயக்கத்தைத் தணிக்க தொழிற்சங்க அதிகாரத்துவம் அதனால் ஆனமட்டும் என்னென்ன செய்து வந்தாலும், அதற்கு மத்தியில் நடந்த போராட்டங்களில் இதுவரை இரயில்வே துறை, தபால் துறை, பேருந்து, துறைமுகம், கழிவுநீர் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் மற்றும் வழக்குரைஞர்களின் போராட்டங்களும் உள்ளடங்கும். அடுத்த வாரங்கள் மற்றும் மாதங்களில் 2 மில்லியன் பொதுத்துறை தொழிலாளர்கள் ஈடுபடும் வேலைநிறுத்தங்கள் வரவிருக்கின்றன. இந்த வாரம் 150 பல்கலைக்கழகங்களின் 70,000 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நூலகர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள், நல்ல சம்பளம் மற்றும் வேலையிட நிலைமைகள் கோரவும் மற்றும் அவர்களின் ஓய்வூதிய உரிமைகளைப் பாதுகாக்கவும் வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்தனர்.

ஹெர்குலஸ் கூட செய்ய முடியாத 12 நவீன கால பணிகளை சுனாக் முகங்கொடுக்கிறார். மந்திரிசபை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் 'பிரிட்டிஷ் ஸ்திரத்தன்மையை மீட்டமைக்க ரிஷி சுனாக்கின் பெரும் போராட்டம்' என்ற ஒரு தலையங்கத்தில் பைனான்சியல் டைம்ஸ் எச்சரித்தது, இந்த 'முன்னாள் சான்சிலர் அடுத்த பழமைவாத கட்சியின் பிரதமராக ஆவதற்கு குறைந்தபட்சம் மோசமான தேர்வு' என்று அது குறிப்பிட்டது.

அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “கட்சி அதன் சொந்த சூழ்ச்சிகளில் ஓர் ஆழமான ஜனநாயகமற்ற செயல்முறையின் மூலம் இரண்டாவது முறையாக இடைக்காலத்தில் தலைவரையும் மாற்றியுள்ளது… சுனாக் விரைவாக ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க முடியாவிட்டால், ஒரு தேர்தல் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.

அனைத்திற்கும் மேலாக, “செலவுகள் மற்றும் புலம்பெயர்வு போன்ற சர்ச்சைகளைத் தூண்டக் கூடிய பிரச்சினைகளில், ஆழமாக பிளவுபட்ட ஒரு கட்சியை வைத்துக் கொண்டு முடிவெடுக்க வேண்டியவராக உள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளைப் பாதிக்கும் வகையில், வடக்கு அயர்லாந்துடனான பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வர்த்தக விதிமுறைகளை நீக்க, சுனாக், வலதுசாரிகளிடம் இருந்து வரும் அழுத்தங்களின் கீழ் உள்ளார்.”

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மற்றொரு டோரி பிரதம மந்திரியை மோசமான விதத்தில் மாற்றியமைக்க முடிந்தது என்றால் அதற்குத் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் வகித்த பாத்திரமே காரணமாகும், அவை முன்பினும் ஆழமடைந்து வரும் பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் கடந்த ஏழாண்டு கால நெருக்கடியின் போது அரசாங்கத்தைக் காப்பாற்றி வந்துள்ளன.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

தொழிலாள வர்க்கத்தின் கடுமையான எதிரியாக தொழிற்கட்சி வகிக்கும் பாத்திரம் அக்கட்சி தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் செவ்வாய்கிழமை வெளியிட்ட ட்வீட் செய்தியில் எடுத்துக்காட்டப்பட்டது. அவர் ஒரு பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார், ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளால் ஆதரிக்கப்படும் தொழிற்கட்சி பிரிட்டிஷ் முதலாளித்துவத்தை மீட்பதற்கு இதை இன்றியமையாததாகப் பார்க்கிறது. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் மற்றொரு கடுமையான எதிரி டவுனிங் வீதியில் நுழைந்துள்ள நிலையில், “பிரதம மந்திரியாக ஆனதற்கும், முதல் பிரிட்டிஷ் ஆசிய பிரதம மந்திரியாக வரலாற்றில் இடம் பெறுவதற்கும் வாழ்த்துக்கள் ரிஷி சுனாக்' என்று அறிவித்ததே அவரின் முதல் நகர்வாக இருந்தது.

Loading