1998 SEP இன் கோடைக்கால பள்ளி: மார்க்சிசமும் 20 ஆம் நூற்றாண்டின் அடிப்படை பிரச்சினைகளும்

இங்கு வழங்கப்பட்ட ஏழு விரிவுரைகளும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் தொல்சீர் மார்க்சிசத்தின் மறுமலர்ச்சியில் ஒரு மைல்கல்லைக் குறிக்கின்றன.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான ICFIஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தகைய முதல் சர்வதேச கருத்தரங்கு, ஜனவரி 3 முதல் 10, 1998 வரை ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைகால பள்ளியில் வழங்கப்பட்டது.

இந்த விரிவுரைகளுக்கு வழிகாட்டும் மைய முன்மாதிரியாக இருந்தது என்னவென்றால், அன்றைய எரியும் பிரச்சினைகளுக்கு ஒரு பதில் - வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை, ஆழமான பொருளாதார நெருக்கடி, சமூகத்தின் கலாச்சார மட்டத்தின் வீழ்ச்சி மற்றும் தொழிலாளர் இயக்கத்தில் நிலவும் அரசியல் முடக்கம் ஆகியவற்றை ஆராய்வதோடும்,20 ஆம் நூற்றாண்டின் சிறந்த மூலோபாய படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொள்வதோடும் பிணைக்கப்பட்டிருந்ததாகும்.

ICFI இன் முன்னணி உறுப்பினர்கள் மற்றும் ரஷ்ய மார்க்சிச வரலாற்றாசிரியர் பேராசிரியர் வாடிம் ரோகோவின் ஆகியோரால் எட்டு நாட்களுக்கு மேலாக வழங்கப்பட்ட விரிவுரைகள் நீடித்த தத்துவார்த்த வேலைகளின் தயாரிப்பு மட்டுமல்ல. அவை ஆர்வத்தை தூண்டுபவை, நுண்ணறிவானவை,உண்மையை வெளிக்கொணர்பவை மற்றும் சிந்தனையைத் தூண்டுபவை.

ஒவ்வொரு விளக்கவுரையும் ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் தேசியவாத இயக்கங்களின் பாரிய காட்டிக்கொடுப்புகளுக்கு மாற்றீடு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது: லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் நான்காம் அகிலத்தால் மேற்கொள்ளப்பட்ட உண்மையான மார்க்சிசத்திற்கான போராட்டமாகும்.

1920 இல் கம்யூனிச அகிலத்தின் இரண்டாம் காங்கிரஸ் (ட்ரொட்ஸ்கி இடதுபுறத்தில் இருந்து மூன்றாவது இடத்தில் உள்ளார், போல் லெவி மற்றும் கிரிகோரி சினோவியேவுக்கு அடுத்து)