The Permanent Revolution
WSWS : Tamil
Font download
 
º¡Â¬ó 1
º¡Â¬ó 2
܈Fò£ò‹ 1
܈Fò£ò‹ 2
܈Fò£ò‹ 3
܈Fò£ò‹ 4
܈Fò£ò‹ 5
܈Fò£ò‹ 6
܈Fò£ò‹ 7
܈Fò£ò‹ 8
܈Fò£ò‹ 9
܈Fò£ò‹ 10

 

 

 

அத்தியாயம் 10

நிரந்தரப்புரட்சி என்றால் என்ன? அடிப்படை முன்நிபந்தனைகள்

Use this version to print | Send feedback

இந்நூலை முடிக்கையில், கூறியது கூறல் அச்சமின்றி, எனது பிரதான முடிவுகளை, இரத்தினச்சுருக்கமாய் வடிவமைப்பதற்கான எனது முயற்சியை வாசகர் ஆட்சேபிக்கமாட்டார் என நம்புகிறேன்.

1. ரஷ்ய மாரக்சிஸ்டுகள் மத்தியில் வர்க்க மற்றும் கருத்தியற் போராட்டங்களின் போக்கில் பழைய கருத்து வேறுபாடுகள் மீதான பழைய அனுபவங்களை நினைவுக்குக் கொண்டு வரலின் செயற்பரப்பிலிருந்து முழுமையாகவும் இறுதியாகவும் எழுப்பப்பட்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்காக, மற்றும் அது பொதுவில் சர்வதேச புரட்சியின் பண்பு, உட்தொடர்புகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய ஒரு பிரச்சினையாக மாற்றப்பட்டது தொடர்பாக நிரந்தரப்புரட்சி தத்துவம் இப்பொழுது ஒவ்வொரு மார்க்சிசவாதியிடமிருந்தும் பெரும் கவனத்தைக் கோருகிறது.

2. தாமதமான முதலாளித்துவ வளர்ச்சியுடைய நாடுகள் தொடர்பாக, முக்கியமாக காலனித்துவ மற்றும் அரைக் காலனித்துவ நாடுகள் தொடர்பாக, ஜனநாயகம் மற்றும் தேசிய விடுதலையை அடைவதற்கான அவற்றின் பணிகளின் முழுமையான மற்றும் உண்மையான தீர்வானது, அதன் விவசாய வெகுஜனங்களுக்கும் மேலாக, அடிமைப்படுத்தப்பட்ட நாட்டின் தலைவனாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் மட்டுமே எண்ணிப்பார்க்க கூடியாதாகும் என்று நிரந்தரப் புரட்சி தத்துவம் தெரிவிக்கிறது.

3. விவசாயப் பிரச்சினை மட்டுமல்லாமல், தேசியப் பிரச்சினையும் கூட, பின்தங்கிய நாடுகளில் அபரிமிதமான பெரும்பான்மை கொண்ட, விவசாயியிடம் ஒதுக்கிக் கொடுத்திருப்பது, ஜனநாயகப் புரட்சியில் ஒரு பிரத்தியேக இடமாகும். விவசாயிகளுடன் பாட்டாளி வர்க்கத்தின் கூட்டு இல்லாமல் ஜனநாயகப் புரட்சியின் கடமைகள் தீர்க்கப்பட முடியாது, அக்கறையுடன் முன்வைக்க கூட முடியாது. ஆனால் இவ்விரு வர்க்கங்களின் கூட்டானது தேசிய தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிற்கு எதிரான சமரசமற்ற ஒரு போராட்டத்தின் மூலம் அல்லாமல் வேறு வழிகளில் அடையப்பட முடியாது.

4. ஒவ்வொரு தனிப்பட்ட நாடுகளிலும் புரட்சியின் தொடக்கத்தில் என்ன மேடு பள்ளங்கள் வெற்றி தோல்விகள் இருந்தாலும் பரவாயில்லை, கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் அணிவகுக்கப்பட்ட பாட்டாளி வர்க்க முன்னணிப்படையின் அரசியல் தலைமையின் கீழ் மாத்திரம்தான் பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளிளனதும் புரட்சிகர கூட்டு கருதத்தக்கதாகும். இது முறையே விவசாயிகளுடனான கூட்டின் மீது தன்னை தளப்படுத்திக் கொண்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மூலம் மட்டுமே ஜனநாயகப் புரட்சியின் வெற்றியை நினைத்துப்பார்க்க முடியும்.

5. வரலாற்று ரீதியாக மதிப்பிட்டால், போல்ஷிவிசத்தின் பழைய சுலோகமான 'பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம்' சுருக்கமாக வெளிப்படுத்துவது, பாட்டாளி வர்க்கம், விவசாயிகள் மற்றும் தாராளவாத முதலாளிகள் இடையேயான உறவுகளின் குணாம்சத்தையாகும். அக்டோபர் புரட்சியின் அனுபவங்களினால் இது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. புரட்சிகர கூட்டுக்குள்ளே பாட்டாளிவர்க்கத்திற்கும் விவசாயிக்கும் இடையே இருக்கும் உறவிலுள்ள பரஸ்பரம் கொடுத்துப் பெறுகின்ற உறவுபற்றிய பிரச்சனையை லெனினது பழைய சூத்திரம் முன்கூட்டியே தீர்க்கவில்லை. வேறுவார்த்ததைகளில் சொல்வதென்றால், அந்தச் சூத்திரம் சில அட்சர கணித குணாம்சங்களை வேண்டுமென்றே விடாமற் பிடித்து வைத்துக்கொண்டுள்ளது: வரலாறு அனுபவ நிகழ்வுப் போக்கினூடு மேலும் மதிப்பு மிக்க எண் கணிதப் பருமன்களுக்கு அது வழிதிறந்து விட வேண்டியிருந்தது. அது அனுபவத்தால் காட்டியிருந்தது, சில சூழ்நிலைமைகளுக்குள்ளே அதைப்பற்றி ஏதாவது பிழையாக வியாக்கியானம் செய்வதை தவிர்த்து வைத்திருந்தது. அதாவது விவசாயிகளது புரட்சிகர பாத்திரம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அது சுயாதீனமான பாத்திரத்தையோ குறைவான தலைமைப் பாத்திரத்தையோ கூட வகிக்க வல்லதல்ல என்பதை காட்டியிருந்தது. விவசாயிகள் ஒன்றில் பாட்டாளி வர்க்கத்தை பின்பற்றுவார்கள் அன்றேல் முதலாளி வர்க்கத்தை பின்பற்றுவார்கள். இதன் அர்த்தம் 'பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம்' என்பது விவசாய வெகுஜனங்களை தனக்கு பின்னால் அணி திரட்டி நடாத்திச்செல்லும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற முறையில் மாத்திரம்தான் நினைத்துப் பார்க்கலாம்.

6. ஒரு ஆட்சி என்ற வகையில் அதன் வர்க்க உள்ளடக்கத்தால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் இருந்து வேறுபடுத்திக் கண்டறியப்படும் பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம், விவசாயிகளது நலனை வெளிப்படுத்துவதோடு பொதுவில் குட்டி முதலாளித்துவ ஜனநாயகத்தின் நலனையும் வெளிப்படுத்தி, பாட்டாளி வர்க்கத்தின் இந்த அல்லது அந்த அளவு உதவியுடன் ஆட்சியை கைப்பற்றக் கூடிய மற்றும் அதன் புரட்சிகர வேலைத்திட்டத்தின் தலைவிதியை தானே தீர்மானிக்கும், ஒரு சுயாதீனமான புரட்சிக் கட்சி இருக்கும் நிலைமையில் மட்டுமே அது அடையப்படும். குட்டி முதலாளித்துவத்திற்கு பொருளாதார, அரசியல் சுயாதீனம் இல்லாததாலும் அதனுள்ளே ஆழமான பேதங்கள் நிலவுவதாலும் ஒரு விவசாய கட்சியை உருவாக்கும் பொழுது ஜெயிக்க முடியாத தடைகள் இருந்ததை அனைத்து நவீன வரலாறுகளும், சிறப்பாக கடந்த இருபத்தைந்து வருட ரஷ்ய வரலாறும் உறுதிப்படுத்தும். இது என்ன காரணத்தினால் என்றால் குட்டி முதலாளித்துவத்தின் மேற்தட்டுக்கள் அனைத்து தீர்க்கமான விடயங்களிலும், சிறப்பாக போரிலும் புரட்சியிலும் பெரிய முதலாளிகளோடு சேர்ந்து செல்லும்; கீழ்மட்டம் பாட்டாளி வர்க்கத்தோடு சேர்ந்து செல்லும்; இடைநடுவுப் பகுதி இந்த இரண்டு அதீத முனைகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கப்படும். கெரென்ஸ்கிசத்திற்கும் போல்ஷிவிக் ஆட்சிக்கும் இடையில், கோமின்டாங்கிற்கும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கும் இடையில், இடைநடுவு நிலை இல்லை, இருக்கவும் முடியாது, அதாவது தொழிலாளர்களதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம் இருக்கவே முடியாது.

7. நீண்டகாலத்திற்கு முன்பே முடிந்த முடிவாக வரலாற்றால் சக்தியிழந்துபோன, பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற சுலோகத்தை கொமின்ட்டேர்ன் கிழக்கு நாடுகளிலே திணிக்க பெருமுயற்சி செய்வது, ஒரு பிற்போக்கு விளைவை மட்டுமே பெறும். பாட்டாளி வர்க்க சார்வாதிகாரம் எனும் சுலோகத்திற்கு ஈடாக பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற சுலோகம் வைக்கப்பட்ட இடங்களில் எல்லாம், பாட்டாளி வர்க்கத்தை குட்டி முதலாளித்துவ ஜனங்களுக்குள்ளே அரசியல் ரீதியாக கரைத்து விட உதவி, அதன் மூலம் தேசிய முதலாளித்துவ வர்க்கம் மேலாதிக்கம் பெறுவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாக்கி, அதன் விளைவாய் ஜனநாயகப் புரட்சி சீர்குலைக்கப்பட்டது. இந்த சுலோகத்தை கொமின்ட்டேர்னின் வேலைத்திட்டத்தின் உள்ளே புகுத்தியமை மார்க்சிசத்திற்கும் மற்றும் போல்ஷிவிசத்தின் அக்டோபர் மரபுக்கும் நேரடிக் காட்டிக்கொடுப்பாகும்.

8. ஜனநாயக புரட்சியின் தலைவனாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அதிகாரத்திற்கு வருவது, அது தவிர்க்க முடியாதவாறு மிக விரைவிலேயே பணிகளை எதிர்கொண்டு, தேசத்திற்குள் ஆழமாக உட்சென்று முதலாளித்துவ வர்க்கத்தின் தனிச்சொத்துரிமையை ஆக்கிரமிப்பதில் பிணைந்துள்ள பணிகளை நிறைவேற்றும். ஜனநாயகப் புரட்சி நேரடியாக சோசலிசப் புரட்சிக்கு வளரும் மற்றும் அவ்வாறாய் அது ஒரு நிரந்தரப் புரட்சி ஆகும்.

9. பாட்டாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தை வென்றுகொள்வதானது புரட்சியை பூரணப்படுத்தியது ஆகாது மாறாக அதை தொடக்கி விட்டதாகும். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் உள்ள வர்க்கப் போராட்டத்தின் அஸ்திவாரத்தின்மீது மாத்திரம்தான் சோசலிச நிர்மாணத்தை நினைத்துப் பார்க்கலாம். முதலாளித்துவ உறவு, உலக அரங்கிலே மிகப்பெரிதாக ஆதிக்கம் வகிக்கும் சூழ்நிலையில் இந்தப் போராட்டமானது தவிர்க்க முடியாத படி ஒரு வெடித்தெழுதலுக்கு இட்டுச் செல்லும், அதாவது உள்நாட்டிற்குள் உள்நாட்டு யுத்தங்களுக்கும் வெளிநாடுகளில் புரட்சிகர யுத்தங்களுக்கும் இட்டுச்செல்லும். சம்பந்தப்பட்டது நேற்றுத்தான் தனது ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றிய பின்தங்கிய நாடா அல்லது நீண்ட சகாப்தமாக பாராளுமன்ற ஜனநாயகத்தை உடைய பழைய முதலாளித்துவ நாடா என்றில்லாமல், அந்த வகையில் அங்கே சோசலிசப் புரட்சியின் நிரந்தரக் குணாம்சம் இருக்கிறது.

10. தேசிய எல்லைக்குள்ளே சோசலிசப் புரட்சி பூரணத்துவம் அடைவதைப்பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாததாகும். முதலாளித்துவ சமுதாயத்திலே நெருக்கடி ஏற்படுவதற்கான அடிப்படைக்காரணம் என்னவென்றால், அதனால் உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகள் இனிமேல் தேசிய அரசு கட்டமைப்புக்குள்ளே சமரசப்பட்டு விடாததேயாகும். இதிலிருந்து பெறப்படுவது ஒரு பக்கத்தில் ஏகாதிபத்திய யுத்தங்கள் மறுபக்கத்தில் கற்பனையான முதலாளித்துவ ஐக்கிய ஐரோப்பிய அரசுகள். சோசலிசப் புரட்சி தேசிய அரங்கிலே ஆரம்பமாகி சர்வதேச அரங்குக்கு விஸ்த்தாரமாக உலக அரங்கிலே பூரணத்துவம் அடையும். ஆகவே, புதியதும் பரந்த அர்த்தமும் உள்ள இந்த சொல்லின்படி சோசலிசப் புரட்சி நிரந்தரப் புரட்சியாக ஆகும் என்பது எமது பூகோளத்தில் புதிய சமுதாயத்தின் கடைசி வெற்றியில்தான் பூரணத்துவம் அடையும்.

11. கொமின்டேர்னின் இன்றைய வேலைத்திட்டத்தில் உள்ள சோசலிசத்திற்கு 'முதிர்ச்சியடைந்த நாடுகள்' சோசலிசத்திற்கு 'முதிரா நாடுகள்' என்ற பகட்டு நூலறிவு கொண்ட உயிரற்ற வகைப்படுத்தல்களை, உலகப் புரட்சி அபிவிருத்தியின் மேற்சொன்ன சுருக்க விவரணம் அகற்றி விடும். முதலாளித்துவமானது உலகச் சந்தையை உருவாக்கி, உலகளாவிய உழைப்புப் பிரிவினையை உண்டாக்கி, உலக உற்பத்தி சக்திகளை உருவாக்கி வைத்திருக்கும் அளவில், சோசலிச உருமாற்றத்திற்காக ஒட்டுமொத்தமாக உலகப் பொருளாதாரத்தையும் தயாரித்துள்ளது.

இந்த நிகழ்வுப்போக்கு வித்தியாசமான நாடுகளில் வித்தியாசமான வேகத்தில் நடைபெறும். பின்தங்கிய நாடுகள் சில பல நிபந்தனைகளின் காரணமாக அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு முன்னதாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அடையக் கூடும், ஆனால் அவை அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு பின்னராகவே சோசலிசத்தை அடையும்.

ஒரு பின்தங்கிய காலனித்துவ, அரைக்காலனித்துவ நாட்டின் பாட்டாளி வர்க்கம், விவசாயிகளை ஐக்கியப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்ற போதுமான மட்டத்திற்கு தயாரிக்கவில்லை என்றால் அது, ஜனநாயகப் புரட்சியையும் பூரணத்துவதத்திற்கு கொண்டுவர தகமையற்றதாக ஆகிவிடும். இதற்கு எதிராக ஜனநாயகப் புரட்சியின் விளைவாக ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்கத்தின் கையில் ஆட்சியிருக்கும் என்றால், அந்த சர்வாதிகாரத்தினதும் சோசலிசத்தினதும் தலைவிதி இறுதி ஆய்வில் தேசிய உற்பத்தி சக்திகளைப் பொறுத்து தங்கியிருக்காது என்பது மட்டுமல்லாமல், மாறாக சர்வதேச சோசலிசப் புரட்சியின் அபிவிருத்தியிலேயே அதிகம் தங்கியிருக்கும்.

12. தனியொரு நாட்டில் சோசலிச தத்துவம், அக்டோபர் புரட்சிக்கு எதிரான பிற்போக்குத்தன நொதியத்தால் (Yeast) விளைந்ததாகும். இந்த தத்துவம் மாத்திரந்தான் உறுதியாகவும் கடைசி வரைக்கும் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை எதிர்க்கின்றது.

இழிந்த வரலாற்று வாரிசுகளது முயற்சி, எங்களது விமர்சன சாட்டையின் கீழ், தனியொரு நாட்டு சோசலிச தத்துவத்தின் பிரயோகத்தை தனித்து ரஷ்யாவுக்கு மாத்திரம் பிரயோகிப்பதோடு மட்டுப்படுத்தி விட்டன, ஏனெனில் இதன் பிரத்யேக குணாம்சத்தால் (இதன் பரந்த இயற்கை வளங்கள்) அதுவும் விடையங்களை செம்மையாக்கவில்லை, ஆனால் இன்னும் சீர்கெடுத்துள்ளது. சர்வதேச நிலைப்பாட்டை உடைப்பது எப்பொழுதும், வழக்கமாகவும் தேசிய மீட்பர் வாதத்திற்கு (messianism) இட்டுச் செல்லும், அதாவது தங்களின் சொந்தநாடு விசேட மேன்மையையும் விசேட குணாம்சங்களையும் கொண்டதாக கற்பித்து, மற்றைய நாடுகள் அடைய முடியாததை அடைவதற்கான பாத்திரத்தை ஆற்றுவதற்கு அவை அனுமதிப்பதாக சாட்டி உரைப்பதாகும்.

உலகளாவிய உழைப்புப் பிரிவினை, சோவியத் தொழிற்துறை வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் தங்கி நிற்றல், வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளின் உற்பத்தி சக்திகள் ஆசிய நாடுகளின் மூலப் பொருட்களில் தங்கிநிற்றல் போன்ற இன்னபிற, உலகத்தில் ஏதாவதொரு தனிநாட்டில் சுயாதீனமான சோசலிச சமுதாயத்தை கட்டி வளர்த்தலை இல்லாமல் செய்யும்.

13. ஸ்ராலின், புக்காரினது தத்துவம், ரஷ்ய புரட்சியின் முழு அனுபவங்களுக்கும் எதிராகப் போய் ஜனநாயகப் புரட்சியை எந்திரவியல் முறையில் சோசலிசப் புரட்சிக்கு எதிராக நிறுத்துவது மாத்திரமல்ல, தேசிய புரட்சிக்கும் சர்வதேசப் புரட்சிக்கும் இடையில் பிளவினையும் ஏற்படுத்துகிறது.

இந்த தத்துவம் பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு எதிராக நிதர்சனமாக்க முடியாத ஜனநாயக சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தும்படி திணிக்கிறது. இதனூடாக இத்தத்துவம் அரசியல் பிரமைகளையும் கற்பனைகளையும் புகுத்தி, கிழக்கில் உள்ள பாட்டாளிகளின் ஆட்சியைக் கைப்பற்றும் போராட்டத்தை ஸ்தம்பிக்க செய்வதோடு, காலனித்துவ புரட்சிகளின் வெற்றியையும் தடுக்கிறது.

இழிந்த வரலாற்று வாரிசுகளின் தத்துவத்தின் படி, பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் கைப்பற்றப்படுவது மாத்திரமே புரட்சியை பூரணத்துவம் அடையச்செய்து (ஸ்ராலினின் சூத்திரப்படி பத்தில் ஒன்பது அளவிற்கு) தேசிய சீர்திருத்த வாத சகாப்தத்திற்கு வழியை திறக்கிறது. குலாக்குகள் சோசலிசத்திற்கு வளருகிறார்கள் என்ற தத்துவமும் மற்றும் உலக முதலாளித்துவத்தை 'நடுநிலைப்படுத்தும்' தத்துவமும், தனியொரு நாட்டில் சோசலிச தத்துவத்தில் இருந்து பிரிக்க முடியாதவையாகும். அவைகள் சேர்ந்து நிற்கும் அன்றேல் ஒன்றாக வீழும்.

தேசிய சோசலிச தத்துவமானது, கம்யூனிச அகிலத்தை, இராணுவ தலையீட்டிற்கு எதிராக போராடுவதற்கு மாத்திரம் பயன்படும் துணைக்கருவியாக மதிப்பிழக்கச் செய்துள்ளது. தற்போதைய கொமின்ட்டேர்னின் கொள்கை, அதன் ஆட்சி, அதன் தலைமை ஆட்களை தேர்ந்தெடுத்தல் போன்றன கம்யூனிச அகிலத்தை துணைப்பாத்திரத்தை வகிக்கும் படி கீழ்நிலைக்குத் தள்ளி, அது சுயாதீனமான கடைமைகளை தீர்க்கமாட்டாத ஒன்றாக முழுமையாக ஏதுவாக்கும்.

14. புக்காரினால் உருவாக்கப்பட்ட கொமின்ட்டேர்னின் வேலைத்திட்டம் உள்ளும் புறமும் திரட்டல் வாதமாகும். இது, தனியொரு நாட்டு சோசலிச தத்துவத்தை உலகப் புரட்சியின் நிரந்தரத் தன்மையில் இருந்து பிரிக்க முடியாத மார்க்சிய சர்வதேசிய வாதத்தோடு சமரசப்படுத்த முயன்றமை வெற்றிக்கு வாய்ப்பில்லாத ஒரு முயற்சியாகும். கம்யூனிச அகிலத்தினுள், சரியான கொள்கைக்கும் ஆரோக்கியமான பரிபாலனத்திற்குமான கம்யூனிச இடது எதிர்ப்பு இயக்கத்தின் போராட்டமானது, மார்க்சிச வேலைத்திட்டத்திற்கு போராடுவதில் இருந்து பிரிக்க முடியாது பிணைக்கப்பட்ட ஒன்றாகும். வேலைத்திட்ட பிரச்சனையானது ஒன்றையொன்று பரஸ்பரம் விலக்கும் இரண்டு தத்துவங்களான நிரந்தரப் புரட்சி தத்துவம், தனியொரு நாட்டில் சோசலிசம் ஆகிய இரண்டில் இருந்தும் பிரிக்க முடியாதது. நிரந்தரப் புரட்சி பிரச்சனையானது லெனினுக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையே ஏற்பட்ட சுவாரசியமான ஓய்வொழிச்சல் அற்ற அபிப்பிராய பேதங்களினூடு வரலாற்று ரீதியாக படைக்கப்பட்டு காலாகாலத்திலேயே நன்றாக வளர்ந்து விட்டது. அந்த அபிப்பிராய பேதங்கள் வரலாற்றால் பூரணமாக சக்தியில்லாதாக்கப்பட்டு விட்டன. போராட்டமானது மார்க்ஸ் மற்றும் லெனினின் அடிப்படைச் சிந்தனைகள் ஒரு பக்கத்திலும் மையவாதிகளின் திரட்டல்வாதம் மறுபக்கத்திலும் இருக்க, இந்த இரண்டிற்கும் இடையிலானதாகும்.

 
 
©World Socialist Web Site
All rights reserved