The Permanent Revolution
WSWS : Tamil
Font download
 
º¡Â¬ó 1
º¡Â¬ó 2
܈Fò£ò‹ 1
܈Fò£ò‹ 2
܈Fò£ò‹ 3
܈Fò£ò‹ 4
܈Fò£ò‹ 5
܈Fò£ò‹ 6
܈Fò£ò‹ 7
܈Fò£ò‹ 8
܈Fò£ò‹ 9
܈Fò£ò‹ 10

 

 

 

܈Fò£ò‹ 6

வரலாற்றுக் கட்டங்களை தாண்டிப்பாய்தல் பற்றி

Use this version to print |Send feedback 

றடெக் கடைசி வருடங்களின் உத்தியோகபூர்வ விமர்சன அபிப்பிராயங்களை மட்டும் திருப்பிச் சொல்லவில்லை. சில வேளைகளில் அவற்றை இலகுவாக்க முடியுமென்றால், இலகுவாக்கியும் உள்ளார். அவரின் எழுத்துக்களில் இருந்து பார்த்தால், என்னால் முதலாளித்துவப் புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்கும் இடையே வித்தியாசத்தை காண முடியவில்லை, கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே வித்தியாசத்தைக் காணமுடியவில்லை, 1905-க்கும் இன்றைக்கும் இடையே வித்தியாசத்தை காணமுடியவில்லை என்று தொடர்கிறது. ஸ்ராலினை பின்பற்றி றடெக்கும் வரலாற்றுப் படிகளை தாண்டிப்பாய்தல் அனுமதிக்கத்தகாதது பற்றி எனக்கு கற்பிக்கின்றார்.

எல்லாவற்றிற்கும் முன்னதாக ஒரு கேள்வியை கேட்போம்: 1905ம் ஆண்டிலே சோசலிசப் புரட்சி வருவது பற்றி யோசிக்கும் பொழுது, அது ஏன் வளர்ச்சியடைந்த ஐரோப்பாவில் வராமல் பின்தங்கிய ரஷ்யாவில் தொடங்கும் என்று எதனால் நம்பவேண்டும்? தேசபக்தியினாலா? தேசியப் பெருமையினாலா? இன்று ஏதோவிதத்தில் அது வந்துவிட்டது. சுயாதீன கட்டமாக ஜனநாயகப் புரட்சி வந்திருக்குமேயானால் இன்று நாம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பெற்றிருக்க முடியுமா என்பதை றடெக் விளங்குவாரா? இது மேற்கைவிட இங்கே முன்னுக்கு வந்தது என்றால் துல்லியமாக வரலாறு முதலாளித்துவப் புரட்சியின் முக்கியமான உள்ளடக்கத்தையும், சோசலிசப் புரட்சியின் தொடக்க கட்டத்தையும் இணைத்ததன் காரணமாக ஆகும் - அவை ஒன்று கலக்கவில்லை, மாறாக அவை அங்கமாக இணைந்தன.

முதலாளித்துவ புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்கும் இடையே வித்தியாசம் காண்பதே அரசியல் ஆனா ஆவன்னா ஆகும். ஆனா, ஆவன்னாவுக்கு பிறகு அசைகள் வரும். அதாவது எழுத்துக்களின் சேர்க்கை வரும். வரலாறு முதலாளித்துவ புரட்சியின் முக்கியமான எழுத்துக்களையும் சோசலிசப் புரட்சியின் முதல் எழுத்துக்களையும் இணைத்துவிட்டது. இருந்தபோதும் றடெக் ஏற்கனவே பூர்த்தியாக்கிய அசைகளை எழுத்துக்களை நோக்கிப் பின்னுக்கு இழுத்துவருகிறார். இது பரிதாபத்திற்கு உரியது. ஆனாலும் உண்மை.

பொதுவாக காலகட்டங்களை தண்டிப்பாயக் கூடாது என்பது அர்த்தமற்றதாகும். உயிரோட்டமான வரலாற்று நிகழ்வுப்போக்கு எப்பொழுதும் தனிப்பட்ட கட்டங்களிலிருந்து பாய்ச்சலெடுக்கும். அதன் இயக்கம் தத்துவார்த்த நிலைமுறிவுகளிலிருந்து அபிவிருத்தி நிகழ்வுப்போக்கின் ஒட்டுமொத்தத்தின் பகுதிகளாக எடுக்கப்பட்டு அதன் ஆகக்கூடிய முழுமைக்குப் போகும். இதையே புரட்சிகர அரசியலும் இக்கட்டான சந்தர்ப்பத்தில் கோரும். இந்த கட்டத்தை கண்டு கொண்டு அதை தக்கபடி பாவிக்கும் தகைமையே, ஒரு புரட்சியாளனுக்கும் கொச்சை பரிணாமவாதிக்கும் இடையேயுள்ள முதலாவது வித்தியாசமாகும்.

மார்க்சின் தொழிற்துறை வளர்ச்சி கைவினை, உற்பத்தி மற்றும் தொழிற்சாலை என நிலைமுறிவுறுதல் அரசியல் பொருளாதாரத்தின் ஆனா ஆவன்னாவாகும் அல்லது சுருக்கமாக சொல்வதென்றால் வரலாற்றுப் பொருளாதார தத்துவமாகும் (Historico-Economic Theory). ரஷ்யாவில் பொருள் உற்பத்திச் சகாப்தத்தையும் (Manufacture) நகர கைவினைச் சகாப்தத்தையும் (Urban Handicraft) தாண்டிப் பாய்ந்ததினாலேயே தொழிற்சாலை (Factory) வந்தது. இவை ஏற்கனவே வரலாற்று அசைகளின் (Syllables) மத்தியில் உள்ளது. எங்கள் நாட்டில் இதனோடு ஒத்திசைவான நிகழ்வுப்போக்கு வர்க்க உறவிலேயும் அரசியலிலேயும் நடைபெற்றது. கைவினை, பொருள் உற்பத்தி, தொழிற்சாலையென்ற (Handicraft, Manufacture, Factory) மூன்று கட்ட மார்க்சிச நோக்கில்லாமல் ரஷ்ய வரலாற்றை கிரகிக்க இயலாது. ஆனால் ஒருவர் இதைமட்டும் அறிந்திருந்தால், அவர் இன்னும் ஒன்றையும் கிரகிக்கவில்லை என்று பொருள். உண்மையென்னவென்றால், ரஷ்ய வரலாறு பல கட்டங்களை தாவிப்பாய்ந்துள்ளது. ஸ்ராலின் தனிப்பட்ட முறையில் இதை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இருந்தபோதிலும் ஒவ்வொரு கட்டங்களையும் தத்துவ ரீதியில் வேறுபடுத்தல், ரஷ்யாவுக்கும் தேவையாகவுள்ளது, அல்லாவிடில் இந்த பாய்ச்சல் எவ்வளவென்றும் அந்த பாய்ச்சலின் விளைவுகள் எவை என்பதையும் ஒருவர் கிரகிக்க இயலாது.

இந்த விடயத்தை வேறு பக்கத்தாலும் அணுகலாம். (லெனின் சில வேளைகளில் இரட்டையாட்சி காலத்தை எப்படி அணுகினாரோ அப்படி அணுகலாம்) ரஷ்யா, மார்க்ஸ் வகைப்படுத்திய மூன்று கட்டங்களினோடும் சென்றது. ஆனால் இந்த முதலிரண்டும் அதீத துரதிருஷ்டிக்கு உரியவை. முளை வடிவிலேயே உள்ளவை என்று சொல்லலாம். இந்த ஆதி தொடக்கநிலைகளான கைவினைப் பொருள் உற்பத்தி காலகட்டங்கள் வெறுமனே சின்னப் புள்ளிகளாகவே உள்ளனவென்று சொல்லலாம். இருந்தாலும் அவை பொருளாதார நிகழ்வுப்போக்கின் பாரம்பரியத் தொடர்பை ஊர்ஜிதம் செய்ய போதுமானவையாகும். இருந்தபோதிலும் இந்த இரு கட்டங்களிலுமுள்ள அளவு ரீதியான சுருங்குதல்கள் மிகப்பெரியதாகும். ஆதலால் அது முழுத் தேசத்தின் சமூக கட்டுமானத்திற்கும் ஒரு புதிய குணாம்சத்தை கொடுத்தது. அரசியலில் இந்த புதிய "பண்பின்" மிக்க தாக்கத்தை கொடுக்கும் வெளிப்பாடுதான் அக்டோபர் புரட்சியாகும்.

இங்கே ஆக சகிக்க முடியாதது என்னவென்றால் இரண்டு அற்ப சொற்ப பொக்கிசங்களால் "ஸ்ராலின்" தத்துவமாக்கியதாகும். அதன் முற்று முழுதான தத்துவார்த்த மூட்டை முடிச்சுக்களும் "சீரற்ற அபிவிருத்தி விதி" மற்றும் "வரலாற்றுக் கட்டங்களை தாண்டிப்பாயாமை" என்றவற்றால் ஆனதாகும். கட்டங்களை தாண்டிப்பாய்வதை, சீரற்ற அபிவிருத்தி வளர்ச்சி விதி உள்ளடங்கியுள்ளதென்பது ஸ்ராலினுக்கு இன்று வரை விளங்கவில்லை. (அன்றேல் ஒரு கட்டத்தில் அதிக காலம் காத்திருத்தலாகும்). ஸ்ராலினது ஒப்புவமையில்லாத கரிசனை என்னவென்றால், நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்கு எதிராக, சீரற்ற அபிவிருத்தியை நிலைநிறுத்துவதாகும். இருப்பினும், வரலாற்று ரீதியாக பின்தங்கியுள்ள ரஷ்யா, வளர்ச்சியடைந்த பிரித்தானியாவுக்கு முன்னதாக சோசலிசப் புரட்சிக்கு வந்தது முழுக்க முழுக்க சீரற்ற அபிவிருத்தியினால் என்ற வருமுன்கூறல் ஆகும். இருந்தபோதிலும் இந்த வருமுன்கூறலை சொல்வதற்கு ஒருவர் வரலாற்றின் சீரற்ற அபிவிருத்தியை அதன் ஒட்டுமொத்த இயக்க ஸ்தூலத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். வெறுமனே லெனினினது 1915 மேற்கோள்களை நிரந்தரமாக மென்றுஅசைபோடுவதல்ல, அது எல்லாவற்றையும் தலைகீழாக்கியது மற்றும் ஓர் அறிவற்றவனது வியாக்கியான பாணியில் பொருள் கொள்ளப்பட்டது.

புரட்சிகர ஏற்றக் காலங்களில், வரலாற்று கட்டங்களின் இயங்கியலை விளங்கிக்கொள்ளல் சார்புரீதியாக இலகுவானதாகும். அதற்கு மாறாக, பிற்போக்கு காலங்களில் இயற்கையிலேயே அது மலிவான பரிணாமவாதமாகிவிடும் (Evolutionism). ஸ்ராலினிசம் அதாவது கட்சிப் பிற்போக்குத்தனத்தின் மதிப்புமகன் அதாவது பெரிய தத்துவச் சீர்கேடு, தனது அரசியல் வாலிசத்தை (Tailism) பூசிமெழுகவும் தன்னுடைய முன்னேற்றத்திற்காகவும் கட்டங்கட்டமாக ஒரு கலாச்சாரத்தை படைத்து குப்பை கூளங்களுக்காக வாதாடுகிறது. அந்த பிற்போக்குத் தத்துவம் இப்பொழுது றடெக்கையும் அரவணைத்துக் கொண்டது.

தத்துவார்த்த ரீதியில் தவிர்க்க இயலாதது அல்ல எனினும், வரலாற்று நிகழ்வுப்போக்கின் ஒரு கட்டமோ அன்றேல் மற்றதோ சில சூழ்நிலைமைக்குள் அதை தவிர்க்கமுடியாதென்று நிறுவிக்காட்டும். மறுதலையாக தத்துவார்த்த ரீதியில் "தவிர்க்க முடியாத" கட்டங்கள் அபிவிருத்தியின் இயக்கத்தால் விசேஷமாக புரட்சிகளின்பொழுது பூச்சியத்திற்கு நசுக்கும். ஆதலால்தான் அது வெறுமனே வரலாற்றின் இழுத்துச் செல்லும் ஆற்றல் என்று அழைக்கப்படாது.

உதாரணமாக எங்கள் நாட்டில் பாட்டாளி வர்க்கம் ஜனநாயக பாராளுமன்ற காலகட்டத்தை "தாண்டிப் பாய்ந்தது". அரசியல் சட்டசபையை ஓர் சில மணித்தியாலங்களே வரவிட்டது. அதுவும் கொல்லைப்புறத்தால் மாத்திரந்தான். ஆனால் சீனாவின் எதிர்ப்புரட்சிக் காலகட்டம் எந்த வழியிலும் தாண்டிப் பாயப்படவில்லை. எப்படி ரஷ்யாவில் நாலு டூமா நாட்களை தாண்டிப்பாய முடியாமல் போனதோ அதைப்போல, சீனாவின் தற்போதைய எதிர்ப்புரட்சிக் காலகட்டம் எவ்வகையிலும் "தவிர்க்க முடியாது" என்பது, எவ்வாறாயினும், வரலாற்று ரீதியில் அர்த்தமற்றதாகும். இது ஸ்ராலின், புக்காரினது பேரழிவான அரசியலின் நேரடி விளைவாகும். தோல்வியை அணிவகுத்தவர்கள் அவர்கள்தான் என்று வரலாறு தள்ளி வைக்கும். சந்தர்ப்பவாதத்தின் பலாபலனானது புரட்சிகர வளர்ச்சியை நீண்டகாலத்திற்கு தடுத்து வைக்கும் புறநிலைக் காரணியாகிவிடும்.

புறநிலைரீதியாக நிபந்தனைக்கு உள்ளாக்கப்பட்ட, உண்மைக்கால கட்டங்களை அதாவது வெகுஜனங்களின் அபிவிருத்தி காலகட்டங்களை தாண்டிப்பாய எத்தனிப்பது அரசியல் சாகசமாகும். பெரும்பான்மை தொழிலாள வர்க்கம் சமூக ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் பொழுதோ அன்றேல் உதாரணத்திற்கு, கோமின்டாங்கிலோ, தொழிற்சங்க தலைவர்களிலோ நம்பிக்கை வைத்திருக்கும் பொழுதோ நாம் முதலாளித்துவ ஆட்சியை தூக்கியெறியும் பணியை அவர்கள் முன் முன்வைக்க முடியாது. வெகுஜனங்களை அதற்காக தயாரிக்க வேண்டும். இது ஒரு நீண்ட "காலகட்டம்" என்று இந்த தயாரிப்பு நிறுவிக்காட்டும். ஒரு காலத்தில் நாங்கள் நட்புரிமை கொண்டாடிய "தங்களது தலைவர்களை பற்றிய பிரமை வெகுஜனங்களுக்கு தீரும் வரைக்கும்" "வெகுஜனங்களுடன் சேர்ந்து", முதலில் வலது பக்கம் கட்டாயம் உட்கார வேண்டும் மற்றும் பின்னர் இடது கோமிண்டாங், அல்லது வேலை நிறுத்த உடைப்பாளர் புர்செலுடன் ஒரு கூட்டைப் பராமரிக்க வேண்டும், இதற்கிடையில் அவர்களுடன், எமது நட்பை நிலைநாட்டவேண்டும் என்று வாலாக இழுபடுபவர்கள் மாத்திரம் நம்புவார்கள்.

கோமிண்டாங்கில் இருந்து வெளியேறும்படியும் ஆங்கிலோ-ரஷ்ய குழுவோடு உறவைத் துண்டிக்கும் படியும் பல "இயங்கியல் வாதிகள்" கோரியதை றடெக் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார். அது வேறொன்றையும் காட்டவில்லை, அது கட்டங்களை தாண்டிப்பாயும் படியும், மேற்கொண்டு விவசாயிகளோடு (சீனாவில் உள்ள) பிரியும் படியும், உழைக்கும் மக்களோடு (பிரிட்டனில் உள்ள) முறித்துக்கொள்ளும் படியுமாகும். றடெக் கட்டாயம் அவர்களை ஞாபகப்படுத்த வேண்டும். ஏனெனில் அவரும் அவர்களைப் போன்றதொரு பரிதாபத்திற்குரிய "இயங்கியல் வாதி" யாவார். அவர் இப்பொழுது வெறுமனே தனது சந்தர்ப்பவாத தவறுகளை இன்னும் ஆழமாக்கி பொதுமைப்படுத்துகின்றார்.

1919 ஏப்ரலில், "மூன்றாம் அகிலமும் வரலாற்றில் அதற்குள்ள இடமும்" என்ற வேலைத்திட்ட கட்டுரையில் லெனின் எழுதினார்:

"துல்லியமாக ரஷ்யாவின் பின்தங்கிய நிலைக்கும் அதிஉயர் ஜனநாயக வடிவத்திற்கு அதன் "பாய்ச்சலுக்கும்", முதலாளித்துவ ஜனநாயகத்தை கடந்து சோவியத்திற்கு அதன் பாய்ச்சலுக்கும், அல்லது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்திற்கு அதன் பாய்ச்சலுக்கும் இடையிலான முரண்பாட்டினால்தான் என்று நாம் சொன்னால் தவறாகாது என்றால், துல்லியமாக இந்த முரண்பாடுதான், சோவியத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை மேற்கில் உள்ளவர்கள் விளங்குவதற்கு அல்லது தாமதமாக்கியதற்கான காரணமாகும்." (லெனின்-மொத்தப் படைப்பு XVI, பக்கம் 183)

ரஷ்யா "முதலாளித்துவ ஜனநாயகத்தை கடந்து பாய்ச்சல் எடுத்ததென்று" லெனின் நேரடியாக சொல்கிறார். லெனின் ஐயம் தவிர்த்து ஏக சிந்தையாக சொன்னதெல்லாம் தேவையான தகைமைகளாகும். ஒவ்வொரு தடவையும் இயங்கியல் ஸ்தூலமான சூழ்நிலைமைகளை திருப்பிச் சொல்லாது. வாசகர்களுக்கும் கொஞ்சமாவது தலைக்குள் இருக்குமென்று எழுத்தாளர் விட்டுவிட்டார். லெனினது சரியான பார்வைப்படி, எப்படியென்றாலும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு மேலான பாய்ச்சல் நிலைத்து நின்று மேற்கில் உள்ள வறட்டுவாதிகளும் சூழ்ச்சியாளர்களும் சோவியத்துக்களின் பாத்திரத்தை விளங்குவதை கடினமாக்கியது மாத்திரமல்ல கிழக்கில் உள்ளோரையும் கடினமாக்கியது.

1905ம் ஆண்டு என்பதன் முன்னுரையில் எப்படி எடுத்தாளப்பட்டது இங்குள்ளது, இது திடீரென்று றடெக்கை அத்தகைய தொந்திரவுக்குள்ளாக்குகிறது:

"ஏற்கனவே 1905-ல் பீட்டர்ஸ்பேர்க் தொழிலாளர்கள் தங்களது சோவியத்துக்களை பாட்டாளி வர்க்க அரசாங்கம் என்று அழைத்தனர். இந்த குறியீடானது அந்த நாட்களில் ஒவ்வொரு நாள் பாவனை மொழிக்குள்ளும் சென்று, ஆட்சியை கைப்பற்ற போராடும் பாட்டாளி வர்க்க வேலைத்திட்டத்தோடு முழுமையாக கலந்தது. இருந்தபோதும் அதேநேரத்தில் நாங்கள் ஜாரிசத்திற்கு எதிராக ஒரு விரிவுபடுத்தப்பட்ட அரசியல் ஜனநாயக வேலைத்திட்டத்தை முன் வைத்தோம். (சர்வ ஜனவாக்குரிமை, குடியரசு, குடிப்படை போன்றன) எங்களால் வேறுவிதமாக செயற்பட முடியாது. அரசியல் ஜனநாயகம், உழைக்கும் வெகுஜனங்களின் அபிவிருத்தியில் ஓர் அத்தியாவசியமான காலகட்டமாகும். அதனால் கூடுமானவரை உரிமைகளை பாதுகாக்க வேண்டும். ஏனெனில் சில சம்பவங்களில் இந்தக் கட்டம் பல தசாப்தம் நீடிக்கும். மற்றயவைகளில் அந்த ஜனநாயக ஸ்தாபனங்கள் யதார்த்தமாகும் முன்பே கூட, வெகுஜனங்கள் அரசியல் ஜனநாயக தப்பபிப்பிராயங்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்கு புரட்சிகர சூழ்நிலைகள் வழிவிடும். (ட்ரொட்ஸ்கி, 1905 வருடம், முன்னுரை, பக்கம்-7)

நான் முன்பு மேற்கோளால் காட்டிய லெனினினது சிந்தனையோடு பூரணமாக ஒத்துப்போகும் இந்த சொற்கள், கோமிண்டாங் சர்வாதிகாரத்திற்கு எதிராக "ஒரு விஸ்தரிக்கப்பட்ட அரசியல் ஜனநாயக வேலைத்திட்டத்தை" நிலைநிறுத்திச் செயல்பட வேண்டிய அத்தியாவசியத்தை போதுமான மட்டத்திற்கு விளக்குமென்று நான் நம்புகின்றேன். இங்கேதான் றடெக் இடதுபுறம் ஊஞ்சலாடுகிறார். புரட்சிகர ஏற்றத்தின் சகாப்தத்திலே சீன கம்யூனிஸ்ட் கட்சி கோமின்டாங்கில் இருந்து வெளியேறுவதை எதிர்த்தார். எதிர்ப்புரட்சி சர்வாதிகார சகாப்தத்திலே, சீனத் தொழிலாளர்களை ஜனநாயக சுலோகத்தினோடு அணிதிரட்டுவதை எதிர்த்தார். அவர் கோடைகாலத்திலே கம்பளி உடையணிந்து, பனிக்காலத்தில் நிர்வாணமாகத் திரிகிறார்.

 
 
©World Socialist Web Site
All rights reserved