The Permanent Revolution
WSWS : Tamil
Font download
 
º¡Â¬ó 1
º¡Â¬ó 2
܈Fò£ò‹ 1
܈Fò£ò‹ 2
܈Fò£ò‹ 3
܈Fò£ò‹ 4
܈Fò£ò‹ 5
܈Fò£ò‹ 6
܈Fò£ò‹ 7
܈Fò£ò‹ 8
܈Fò£ò‹ 9
܈Fò£ò‹ 10

 

 

 

அத்தியாயம் 9

முடிவுரை

Use this version to print | Send feedback

முந்தைய அத்தியாயத்தில் கடைசி வரிகளில் நான் கூறிய முன்கணிப்போ அல்லது கவலையோ (Apprehension) அதன் பின்னர் சில மாதங்களில் சரியென்று நிறுவப்பட்டதை வாசகர்கள் அறிவீர்கள். றடெக் நிரந்தரப் புரட்சியை விமர்சித்தமை அவரை எதிர்ப்பிலிருந்து தள்ளிவிடும் நெம்புகோலாக மாத்திரமே உதவியது. ஸ்ராலினது முகாமுக்குள்ளே செல்லும் றடெக்கினது பாதை, எதிர்பாராத விதமாக எங்களிடம் வரவில்லை என்று எங்களது முழு புத்தகமும் நிறுவுமென்று நாம் நம்புகிறோம். கொண்ட கொள்கையை விட்டவர்கள் கூட ஒரு தரத்தை (Gradation) வைத்திருப்பார்கள். அவர்கள் எந்த மட்டத்திற்கு இழிந்து போனார்கள் என்றிருக்கும். தவறுக்கு வருந்தும் அவரது பிரகடனத்தில் றடெக் சீனாவின் ஸ்ராலினிச கொள்கையை பூரணமாக புணருத்தாரனம் செய்துள்ளார். அதன் அர்த்தம் செங்குத்தாக துரோகத்தின் அதி ஆழத்திற்கு போவதாகும். றடெக், Preobrazhensky, சிமில்கா போன்றோரின் தவறுக்கு வருந்தும் பிரகடனத்துக்கான எனது பதிவிலிருந்து அப்படியே மேற்கோள் காட்டுவதுதான் என்னைப்பொறுத்தவரை மிஞ்சி இருக்கிறது. அது அவர்களை அரசியல் சிடுமூஞ்சிகள் என்று சொல்லி கறுப்பு பட்டியலில் வைக்கும்.

பொருத்தமாகவே சுயமரியாதை திவாலடைந்த மூவரும், கட்டாயமாகவே நிரந்தரப் புரட்சிக்கு பின்னால் ஒளிந்திருக்க முடியாமல் போனார்கள். சீனப் புரட்சியிலே சந்தர்ப்பவாதம் தோற்றதே அண்மைக்கால முழு வரலாறும் தந்த துன்பியலான அனுபவமாகும். சரணாகதியடைந்த மூவரும் நிரந்தரப் புரட்சிக்கும் தமக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லையென்று அற்ப சத்தியப்பிரமாண உத்தரவாதத்தோடு அதை விலக்க முயற்சித்தார்கள்.

றடெக்கும் சிமில்காவும் சீன கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ கோமின்டாங்கிற்கு கீழ்ப்படிவதை பிடிவாதமாக பாதுகாத்தார்கள். சியாங் கேய்-ஷேக்கினது திடீர் அரசியல் மாற்றம் வரைக்கும் அல்ல, அதன் பின்பும் கூட பாதுகாத்தார்கள். Preobrazhensky எப்பொழுதும் போலவே அரசியல் பிரச்சனைகள் வரும்பொழுது சத்தம் போடாமல் முணுமுணுத்தார். கம்யூனிஸ்ட் கட்சி கோமிண்டாங்கிற்கு கீழ்ப்படிவதை ஆதரித்த அனைத்து எதிர்ப்பு அங்கத்தவர்களும் சரணாகதியாளர்களாக மாறினார்கள் என்பது கவனிக்க வேண்டிய உண்மை ஆகும். தனது பதாகைக்கு விசுவாசமான எந்த எதிர்ப்பு அங்கத்தவரும் கேவலமான அவமான அடையாளமான இந்த களங்கத்தை பெறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை வெளியாகி முக்கால் நூற்றாண்டின் பின்பு, போல்ஷிவிக் கட்சியை உருவாக்கி கால் நூற்றாண்டின் பின்பு இந்த துரதிர்ஷ்ட "மார்க்சிசவாதிகள்" கோமிண்டாங் கூட்டினுள் கம்யூனிஸ்டுக்களை அடைப்பதை சரியென்று பாதுகாக்கலாம் என்று எண்ணினார்கள். என்னுடைய குற்றச்சாட்டுக்கு விடையிறுக்கும் பொழுது றடெக் ஏற்கனவே தனது மனவருத்தக் கடிதத்தை போலவே முதலாளித்துவ கோமிண்டாங்கிலிருந்து கம்யூனிஸ்ட்டுக்கள் வெளியேறினால் தனிமைப்பட்டு போவார்கள் என்று எங்களை பயமுறுத்துகின்றார். றடெக் கொஞ்சக்காலத்திற்கு முன்பு கன்ரோன் அரசாங்கத்தை ஒரு விவசாயிகளதும் தொழிலாளர்களதும் அரசாங்கமென்று அழைத்தார். அதன் மூலம் ஸ்ராலின் பாட்டாளி வர்க்கத்தை முதலாளி வர்க்கத்திற்கு கீழ்ப்படிய வைத்ததை மறைக்க உதவினார். எதனால் இந்த வெட்கங்கெட்ட வேலைகளை, இந்த கண்மூடித்தனத்தின் பின் விளைவுகளை, இந்த முட்டாள்தனத்தை, இந்த மார்க்சிச காட்டிக்கொடுப்பை, மூடிமறைக்க பார்க்கிறார்கள்? நிரந்தரப் புரட்சியின் மேலுள்ள எரிச்சலால்.

ஏற்கனவே 1928 பெப்ரவரியிலேயே றடெக் சரணாகதியடைவதற்கான சாக்குப்போக்கை தேடி மூன்றாம் அகிலத்தின் காரியாளர் சபையின் 1928 பெப்ரவரி பிளீனத்தில் நிறைவேற்றப்பட்ட சீனப் பிரச்சனை சம்பந்தமான தீர்மானத்தை தீவிரமாய் பற்றிக்கொண்டார். இந்த தீர்மானம் ட்ரொட்ஸ்கிச வாதிகளை கலைப்புவாதிகள் என்று முத்திரைகுத்தியது. ஏனெனில் அவர்கள் வெற்றிவாகை சூடிய சீன எதிர்ப்புரட்சியை சீனப் புரட்சியின் அதிஉயர் கட்டமாக கருதாமல் தோல்வியென்று அழைத்தார்கள். இந்த பெப்ரவரி தீர்மானம் ஆயுதந்தாங்கிய எழுச்சிக்கு பாய்வதையும் சோவியத்துக்களை உண்டாக்குவதையும் பிரகடனப்படுத்தியது. யாராவது அரசியல் உணர்வை பூரணமாக ஒழித்திராதவர்கள் புரட்சிகர அனுபவத்தால் கெட்டியாக்கப்பட்டிருந்தால் இத்தீர்மானத்தை ஆக திடுக்காட்டமான, பொறுப்புணர்வற்ற சாகசத்துக்கான உதாரணம் என்று கண்டு கொள்வர். றடெக் அதை பற்றிக் கொண்டார். Preobrazhensky இந்த விஷயத்தை அணுகிய முறை றடெக்குக்கு குறைந்ததல்ல. ஆனால் அடுத்த முனையில் இருந்து அணுகினார். அவர் எழுதினார்: சீனப் புரட்சி ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டு விட்டது. அது நீண்டகாலத்திற்கு தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஒரு புதிய புரட்சி வெகு சீக்கிரம் வரப்போவதில்லை. சீனாவைப் பற்றி மையவாதிகளோடு மல்லுக்கட்டுவது பலன் தருமா? இந்த ரகத்திலே Preobrazhensky மிக நீண்ட கடிதத்தை அனுப்பியுள்ளார். நான் அதை Alma-ata-வில் வாசித்த பொழுது வெட்கப்பட்டேன். இவர்கள் லெனினிச பள்ளியிலே என்னத்தைத்தான் கற்றுக்கொண்டார்கள்? திருப்பித் திருப்பி என்னை நானே கேட்டுக்கொண்டேன். Preobrazhensky-ன் சர்ச்சைக்கான ஆதாரம் றடெக்கின் ஆதாரத்திற்கும் நேரெதிராக இருந்தபோதும் இருவரது முடிவுகளும் ஒரே மாதிரியானதே. இருவருமே preobrazhensky-ன் பேராசையால் Menzhinsky*-ன் நல்ல அந்தஸ்த்தின் துணையால் சகோதர வாஞ்சையோடு தழுவிக்கொள்ள ஊக்கம் அளிக்கப்பட்டவர்களாவர். கட்டாயமாகவே புரட்சியின் நன்மைக்காக இதனைச் செய்திருக்கலாம். இந்த இருவரும் பிழைப்புவாதிகள் அல்லர். இருவருமே துணையற்ற தத்துவார்த்த ரீதியில் திவாலடைந்த தனிமனிதர்கள். *(Menzhinsky அப்பொழுது GPU-வின் தலைவர். Yaroslavsky கட்சி கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவர்களில் ஒருவர், இடது எதிர்ப்பு இயக்கத்தை தாக்கி அதை பின்பற்றிய அனைவரையும் கட்சியில் இருந்து விலக்கியவர்.)

கம்யூனிச அகிலத்தின் காரியாளர்களின் 1928 பெப்ரவரி பிளீனத்தின் சாகச தீர்மானத்திற்கு எதிராக சீனத் தொழிலாளர்களை அரசியற் சட்டசபை உட்பட ஜனநாயக சுலோகத்தின் கீழ் அணிவகுத்தலை நோக்கிய ஒரு பாதையை ஏற்கனவே முன்வைத்தேன். ஆனால் அதிர்ஷ்டமற்ற மூவரும் அதீத இடதுசாரித்தனத்துள் வீழ்ந்தார்கள். அது மலிவானது மற்றும் ஒன்றிற்கும் அவர்களை அர்ப்பணிக்காது. ஜனநாயக சுலோகமா? ஒரு நாளும் நடவாது. "இது தான் ட்ரொட்ஸ்கியின் மொத்த தவறாகும்." சீனாவுக்கு சோவியத்துக்கள் தான் அதிலும் குறைந்தது ஒன்றுமில்லை. உங்களது கைவிடல் நிலைப்பாட்டின் மூலம் இதிலும் பார்க்க அர்த்தமற்ற ஒன்றை எண்ணிப்பார்ப்பது அரிது. முதலாளித்துவ பிற்போக்குத்தனம் நிலவும் காலத்திலே "சோவியத் சுலோகம்" ஒரு குழந்தைப் பிள்ளை சுலோகமாகும். அதாவது சோவியத்துக்கள் பற்றிய ஒரு கேலிக்கூத்தாகும். புரட்சிகர சகாப்தத்திலும் கூட அதாவது சோவியத்துக்களை நேரடியாக கட்டியெழுப்பும் காலத்திலும் கூட நாங்கள் ஜனநாயக சுலோகங்களை திரும்பப்பெற மாட்டோம். உண்மையான சோவியத்துக்கள் ஏற்கனவே ஆட்சியை கைப்பற்றிய பின்பும் கூட, அவை வெகுஜனங்களின் கண்களுக்கு முன்பாக உண்மையான ஜனநாயக ஸ்தாபனங்களோடு முட்டிமோதும் வரைக்கும் அவைகளை திருப்பி எடுக்கமாட்டோம். இதுதான் லெனினது பாஷையில் ஒரு நாட்டின் அபிவிருத்தியில் ஜனநாயக கட்டங்களை தாண்டிப்பாயக் கூடாது என்பது (அற்பவாத ஸ்ராலினைப் போன்றோ, அவரின் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளைகளை போன்றோ அன்று).

ஜனநாயக வேலைத்திட்டங்கள் இல்லாமல் --அரசியல் சட்டசபை, எட்டு மணித்தியால வேலைநாள், நிலங்களை பறித்தெடுத்தல், சீனாவுக்கு தேசிய சுதந்திரம் அதிலே வாழும் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை இப்படியான ஜனநாயக வேலைத்திட்டங்கள் இல்லாமல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் காலையும் கையையும் கட்டிவிட்டு அது தனது இடத்தை சாத்வீமாக சீன சமூக ஜனநாயக வாதிகளிடம் கையளிக்க நிர்ப்பந்தித்தது, சீன சமூக ஜனநாயக வாதிகள் ஸ்ராலின் றடெக் கூட்டத்தாரின் உதவியோடு கம்யூனிஸ்ட் கட்சியின் இடத்தை வகிப்பர்.

ஆகவே றடெக் எதிர்ப்பு இயக்கம் தோன்றும் காலத்திலே சீனப் புரட்சியின் மிக முக்கியமானதை தவறவிட்டுவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியை முதலாளித்துவ கோமின்டாங்கிற்கு கீழ்படியச் செய்ததை சரியென்று பாதுகாத்தார். றடெக் சீன எதிர்ப்புரட்சியை தவறவிட்டுவிட்டு கன்ரோன் (Canton) சாகசத்திற்கு பின்னர் ஆயுதக்கிளர்ச்சியை நோக்கிப் போவதை ஆதரித்தார். றடெக் இன்று எதிர்ப்புரட்சிக் காலத்தில் ஜனநாயகத்திற்காக போராடும் காலத்தில், இடமருவு காலகட்டத்தை ஒருபுறம் தள்ளி விட்டுவிட்டு தாவிப்பாய்ந்து காலத்திற்கும் வெளிக்கும் (Time & Space) அப்பாற் சென்று மிகச்சூக்கும கருத்தான சோவியத்துக்கு ஆதரவு அளிக்கின்றார். ஆனால் அதற்கு மாற்றீடாக றடெக் தனக்கும் நிரந்தர புரட்சிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையென்று சத்தியம் செய்கின்றார். அது சந்தோஷமானது. அது ஆறுதல் அளிப்பது.

சீன, இந்தியா மற்றும் அனைத்து கிழக்கு நாடுகளுக்கும் ஸ்ராலின், றடெக்கினது மார்க்சிச விரோத தத்துவமானது, செம்மைப்படுத்தப்பட்டதல்லாத, ஆனால் வேறுருக்கொடுக்கப்பட்ட கோமின்டாங் பரிசோதனையை திரும்பச் செய்தலாகும்.

ரஷ்ய, சீன புரட்சிகளின் அனைத்து அனுபவங்களையும் ஆதாரமாகக் கொண்டு மார்க்சினதும் லெனினதும் அறிவூட்டலை ஆதாரமாக கொண்டு இந்தப் புரட்சிகளின் ஒளியில் பரீட்சித்துப் பார்த்து எதிர்ப்பு இயக்கம் உறுதியாக சொல்லும்.

"தனித்து பாட்டாளி வர்க்க சர்வாதிகார வடிவத்திலேதான் புதிய சீனப் புரட்சி, இன்றுள்ள ஆட்சியை தூக்கியெறிந்து ஆட்சியதிகாரத்தை வெகுஜனங்களிடம் அளிக்கும்.

ஜனநாயக வேலைத்திட்டங்களை நிதர்சனமாக்கி விவசாயிகளுக்கு தலைமை கொடுத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு மாற்றீடாக பாட்டாளி வர்க்கத்தினதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்பது ஒரு கற்பனை, தன்னைத்தானே ஏமாற்றுவது அல்லது இன்னும் கேவலமாக சொல்வதென்றால், அது கெரென்ஸ்கியிசம் அல்லது கோமின்டாங்கிசமாகும்.

ஒரு பக்கத்தில் கெரென்ஸ்கி ஆட்சியும் சியாங் கேய்-ஷேக் ஆட்சியும் மறுப்பக்கத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் இரண்டுக்கும் இடைநடுவில் அரைவழியில் இடைப்பட்ட புரட்சிகர ஆட்சியென்பது இருக்க முடியாத ஒன்றாகும். யாராவது அப்படியொரு ஆட்சி பற்றிய வெற்றுச் சூத்திரத்தை பிரேரித்தால் அது வெட்கமில்லாமல், கிழக்கில் உள்ள தொழிலாளர்களை ஏமாற்றுவதோடு இன்னொரு புதிய பேரழிவுக்கு தயாரிப்பதாகும்.

கிழக்கில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிர்ப்பு இயக்கம் சொல்லுவதாவது: உட்கட்சி சூழ்ச்சிகளினால் திவாலடைந்துள்ள சரணாகதி அடைவோர், மையவாத விதைகளை தூவ ஸ்ராலினுக்கு உதவுவதன் மூலம் உங்கள் கண்களிலேயே மண்ணை தூவுகிறார்கள், உங்கள் காதை செவிடாக்குகிறார்கள், உங்கள் தலையை மதிமயங்க செய்கிறார்கள். ஒரு பக்கத்தில் நீங்கள் ஜனநாயகத்திற்கு போராடுவதை தடை செய்வதன் மூலம் வலிமையுள்ள முதலாளித்துவ சர்வாதிகாரத்தை முகங்கொடுக்க இயலாதவர்கள் ஆக்கப்படுகிறார்கள். மறுபக்கத்தில் பாட்டாளி வர்க்கமற்ற சர்வாதிகாரத்தினால் ஏதோ ஒருவித பாதுகாப்பு கிடைக்குமென்று உங்களுக்கு முன்னால் வினோத முன்னோக்குகளை வரைகிறார்கள். இது எதிர்காலத்தில் மீண்டும் கோமிண்டாங் புதுப்பிறவி எடுக்கவே உதவி செய்யும். அதாவது மேலும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் புரட்சியின் தோல்விக்கே வழி செய்யும்.

அப்படி உபதேசிப்போர் காட்டிக்கொடுப்பாளர்களாவர். கிழக்கில் உள்ள தொழிலாளர்களே அவர்களை நம்பாதிருக்க கற்றுக்கொள்ளுங்கள், அவர்களை நிந்திக்க கற்றுக்கொள்ளுங்கள். அவர்களை உங்களது ஸ்தாபனங்களில் இருந்து வெளியேற்றுங்கள்! ....

 
 
©World Socialist Web Site
All rights reserved