வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் இலங்கை ஆசிரியர்கள் wsws உடன் பேசுகிறார்கள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை பாடசாலை ஆசிரியர்களால் “சம்பள முரண்பாடுகளை” நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் ஜூலை 12 அன்று ஆரம்பித்த இணையவழி கற்பித்தல் வேலைநிறுத்தம் இன்று அதன் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக இராஜபக்ஷ அரசாங்கம் உட்பட முழு முதலாளித்துவ ஸ்தாபனமும் கட்டவிழ்த்துவிடும் இன மற்றும் மத ஆத்திரமூட்டல்களை அலட்சியம் செய்து நாடு முழுவதும் ஏறக்குறைய 250,000 ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.

ஆசிரியர் சம்பளம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஊடகங்களுக்கு அறிவித்தார். இதுபோன்ற போலி பத்திரங்களும் மற்றும் யோசனைகளும் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களால் டசின் கணக்கில் முன்வைக்கப்பட்டன. அமைச்சரவை பத்திர மோசடி ஒரு புறம் இருக்க, கல்வி அமைச்சர் உட்பட அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆசிரியர்களின் போராட்டங்களால் மாணவர்களின் கல்வி 'சீர்குலைகின்றது' என்றும், தொற்று நோய்களுக்கு மத்தியில் அரசாங்கம எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் ஊதியத்தை உயர்த்த முடியாது என்றும் கூறி வருகின்றனர்.

போராட்டங்களை ஏற்பாடு செய்யும் இலங்கை ஆசிரியர் சங்கம் (இ.ஆ.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சார்ந்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உட்பட ஆசிரியர் சேவை தொழிற்சங்கங்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரிங்கள் மூலம் தீர்வு கிடைக்கும் என்ற மாயையை பரப்புவதன் மூலம் ஆசிரியர்களின் போர்க்குணத்தை சீர்குலைத்து வருகின்றன.

2021 ஏப்பிரல் 5 அன்று பதுளையில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள்.

அந்த சூழலில், 'ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்யும் இலங்கை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஒரு வேலைத் திட்டம்' என்ற தலைப்பில், சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தலைமையிலான “ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் குழு” வெளியிட்ட அறிக்கை ஒன்று, ஜூலை 25 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்டது. அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புவதன் மூலம் முதலாளித்துவ இலாப முறைமைக்கு எதிராக ஒரு சோசலிச முன்நோக்கின் கீழ் ஆசிரியர்களின் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தீர்க்கமான நிலைமையை இந்த அறிக்கை எடுத்துக்காட்டியது.

அதற்கு சமாந்தரமாக, இந்த மாத 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு, இணையவழி கூட்டமொன்றை நடத்துவதற்கும் நடவடிக்கை குழு திட்டமிட்டுள்ளது. குழுவின் அறிக்கையின் அடிப்படையில் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் மற்றும் நடவடிக்கை குழு உறுப்பினர்களும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் தெரிவித்த சில கருத்துகள் பின்வருமாறு.

கொழும்பு பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் பௌதீகவியல் ஆசிரியரான சதீர சுமார் மூன்று ஆண்டுகளாக ஆசிரியராக இருந்து வருகிறார். “கல்வியை தனியார்மயமாக்குவதை எதிர்த்து பாடசாலை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது மிக முக்கியம். ஆனால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களை ஒன்றிணைக்க தொழிற்சங்கங்களும் மாணவர் சங்கங்களும் எதுவும் செய்யவில்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டங்களில் ஆசிரியர்களின் தொடர்ச்சியான ஈடுபாடு அவர்களுக்கு தங்களின் உரிமைகளை வெல்வதற்கான வலுவான அவசியத்தை வெளிப்படுத்துவதாக சுட்டிக் காட்டிய சதீர, அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு நடவடிக்கையை தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் கூறினார். 'இந்த நேரத்தில் மனிதவளத்தைப் பொறுத்தவரை, இது முன்னெப்போதையும் விட பரந்ததாக தெரிகிறது. ஆனாலும், நிகழ்ச்சி நிரல் பழையதேதான். அரசாங்கம் ஏற்கனவே ஊதிய உயர்வை எதிர்க்கிறது. எங்கள் கோரிக்கைகளை கொடுக்க முடியாது என்று அரசாங்கம் ககூறும்போது, முதலாளித்துவ அமைப்பை சவால் செய்ய ஆசிரியர்கள் ஏனைய தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றுபட வேண்டும். சோசலிச மாற்றீட்டைப் பற்றி கலந்துரையாடும் இணையவழி கூட்டத்தில் நான் பங்குபற்றுவேன்.”

நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஒரு பாசாலையில் அழகியல் ஆசிரியரான தரங்க கூறியதாவது: “தொழிற்சங்கங்கள் 24 ஆண்டுகளாக ஆசிரியர்களின் போராட்டத்தை காட்டிக் கொடுத்தன. ஆசிரியர்கள் சுயாதீனமாக ஒருங்கிணைவது இப்போது அதிகரித்து வருகிறது. ஆனால் அரசாங்கத்தின் தாக்குதல்களை தோற்கடிக்க ஆசிரியர்களுக்கு ஒரு வேலத் திட்டம் தேவை. அந்தத் வேலைத் திட்டத்தைப் பற்றி அறிய நான் நிச்சயமாக 30 ஆம் தேதி கூட்டத்தில் கலந்துகொள்வேன். மற்ற ஆசிரியர்களுக்கும் தெரிவிப்பேன்.”

ஹோமகமவில் உள்ள ஒரு பாடசாலையில் உயர் தரம் கற்பிக்கும் ஆசிரியரான தர்மரத்ன: “இது உயர்ந்த பொறுப்பான வேலை என்றாலும், ஆசிரியர்களின் சம்பளம் மிகக் குறைவு. உண்மையில், ஒவ்வொரு அரசாங்கமும் இலவச கல்வியைக் வெட்டியதன் விளைவாகும். எனவே, இந்த போராட்டம், அனைத்து இலவச கல்வியையும் வென்றெடுக்கும் போராட்டமாக இருக்க வேண்டும்.”

இந்த முறை ஆசிரியர்களின் ஊதியப் போராட்டம், கல்வியை தனியார்மயமாக்குவதை எதிர்த்து நடத்தப் பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது ஜூலை 8 அன்று நடத்தப்பட்ட கொடூரமான பொலிஸ் தாக்குதிலன் பின்னரே, மீண்டும் வெடித்தது என்று அவர் சுட்டிக்காட்டினார். 'தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாகக் கூறி அரசாங்கம் போராட்டங்களை தடை செய்த போதிலும், கம்பனிகள் தங்கள் சொந்த இலாபத்திற்காக தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை வேலைக்கு கொண்டுவரவும், தொற்று நோய்க்கு அவர்களின் உயிரைத் தியாகம் செய்யவும் நிறுவனங்களை அனுமதித்துள்ளன' என்று தர்மரத்ன கூறினார்.

'24 ஆண்டுகளாக இந்த ஊதியப் போராட்டத்தின் ஒரு இடத்திலேயே தேக்கமடைந்திருப்பதன் மூலம், ஒவ்வொரு அரசாங்கமும் எங்கள் ஊதிய உயர்வை எதிர்க்கிறது என்பதைக் காட்டுகிறது. ஆசிரியர்கள் என்ற வகையில், நாங்கள் இதுவரை, அந்தந்த அரசாங்கங்களுடனான தொழிற்சங்கத் தலைவர்களின் பேச்சுவார்த்தைகளை அடுத்து, முன்வந்து கூறுகின்ற எங்கள் கதைகளை கேட்டுவிட்டு திரும்பி சென்றதையே கண்டுள்ளோம். அப்படியெனில் நாங்கள் பழைய இடத்திற்கே மீண்டும் செல்கிறோம். இந்த போராட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல, எங்களுக்கு மாற்று வேலைத் திட்டம் தேவை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நான் இந்த கூட்டத்தில் பங்குபற்றி, அந்த வேலைத் திட்டத்தைப் பற்றி கலந்துரையாடலில் இணைய விரும்புகிறேன்,” என்று தர்மரத்ன மேலும் கூறினார்.

புத்தளம் மாவட்டத்தில் ஒரு பாடசாலையில் கணிதம் கற்பிக்கும் ஒரு ஆசிரியர், தான் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைகளை பற்றி விரிவாக தெளிவுபடுத்தினார். அவர் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார், வாடகை 10,000 ரூபாய். பெறப்பட்ட கடன்களுக்கு அவர் மாதம் ரூபா 19,000 செலுத்த வேண்டும். உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் படிக்கும் மூத்த மகனுக்கு 10,000 ரூபாய்க்கும் மேலாக கல்விக் கட்டணம் மட்டும் செலுத்த வண்டும் என்றும், வீட்டில் கணினி ஒன்று இல்லை என்றும் அவர் கூறினார்.

“பாடசாலை பிள்ளைகளுக்கு இணையவழி வகுப்புகள் நடத்த நான் எனது செல்போனையே பயன்படுத்தினேன். டேட்டாவுக்கு மேலதிகமாக செலவு செய்கிறேன். எனது பாடசாலை மாணவர்களில் நூற்றுக்கு 40 சதவீதத்துக்கும் குறைவானவர்களே இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது.”

இலங்கையில் பாடசாலை வயது பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களில் நூற்றுக்கு 34 சதவீதம் என்ற மிக சிறிய எண்ணிக்கையிலானவர்களுக்கே இணைய வசதி இருப்பதாகவும், 48 சதவீத வீடுகளில் மட்டுமே இணையவழி கற்றலுக்கான அத்தியாவசிய ஸ்மார்ட்போன் அல்லது கணினி இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தோட்டத் தொழிலாளர்கள், மீனவர்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகள் போன்ற சமூகத்தீழ் கீழ் மட்டத்தில் வருமானம் பெறும் குழுக்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே தொலைபேசி அல்லது கணினி வசதி உள்ளது. இணைய வசதியானது 21 சதவீதம் பேருக்கும் குறைவானவர்ளுக்கே உள்ளது.

இந்த குடும்பங்களின் பிள்ளைகள் தொற்றுநோய்க்கு முந்தைய பொருளாதார கஷ்டங்களுக்கு மத்தியிலேயே கூட பாடசாலையை விட்டு வெளியேறி வேலைக்குச் சென்றனர். இந்த போக்கு தொற்றுநோய்களின் மத்தியில் தீவிரமடைந்துள்ளது.

“ஒரு தொகை தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் சேர்ந்துள்ளதாலும், ஆசிரியர்களிடையே அதிக போர்க்குணமும் இருப்பதாலும், இந்த முறை ஊதியப் போராட்டம் வெல்லப்பட வாய்ப்புள்ளது' என்ற தொழிற்சங்கங்களால் பரப்பப்படும் மாயையை, மேற்கண்ட ஆசிரியர் கூறிய கருத்துக்களில் வெளிப்பட்டது. தொழிற்சங்கங்கள் 'அரசாங்கத்துடன் பேரம் பேசுவதன்' மூலம் சில ஊதிய உயர்வு கிடைக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார். 'ஆனால் அரசாங்கம் எங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் என்று நான் நம்பவில்லை,' என்று அவர் மேலும் கூறினார்.

தாம் எதிர்கொள்ளும் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் மத்தியில், கோரிக்கைகளை வழங்குவதற்குப் பதிலாக வர்க்கப் போருக்குத் தயாராகி வருவதையே அரசாங்கம் பலமுறை காட்டியுள்ளது. புதிய நிதியமைச்சர் பசில் இராஜபக்ஷ மற்றும் பிற அமைச்சர்களின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் இதை விளக்கினர். தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கான மூல வேர், நெருக்கடி நிறைந்த முதலாளித்துவத்தில் அமைப்பிலேயே உள்ளது. அதனால் அந்த தாக்குதல்களை தோற்கடிப்பதானது முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் போராட்டமாகும், அதாவது அனைத்துலக சோசலிசத்திற்கான போராட்டம் என்றும், நிருபர்கள் அவருக்கு சுட்டிக்காட்டினர்.

ஆசிரியர்கள் ஏனைய தொழிலாள வர்க்கத்தினருடன் ஒன்றிணைந்து, சர்வதேச சோசலிச முன்னோக்கின் கீழ், போராட்டத்தை முன்நகர்த்துவது சம்பந்தமாக அவர் சந்தேகத்தை வெளிப்படுத்தினார். 'மக்கள் இருக்கின்ற ஒரு பெரிய கட்சியைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர். 2019 இல் பல பொய் வாக்குறுதிகளை அளித்த கோடாபய இராஜபக்ஷவுக்கு அறுபத்தொன்பது இலட்சம் பேர் வாக்களித்தனர். கடந்த காலத்திலும் அப்படித்தான் நடந்தது,” என்று கூறினார்.

அவரது கருத்துக்கள், இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தமை தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகளால் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டி பரப்பப்படும் பொய் தர்க்கங்களின் தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இதற்கு நேர் மாறாக, முந்தைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை காட்டிக் கொடுத்த தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது கட்சிகள் உட்பட இந்த துரோகிகளாலேயே இராஜபக்ஷ ஆட்சிக்கு வருவதற்கான பாதை அமைக்கப்பட்டது. ஆசிரியர்களும் அத்தகைய போராட்டத்திற்கு வந்த ஒரு குழுவினராவர். முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் கைகூலிகள் மற்றும் போலி-இடது அமைப்புகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான மாற்று வேலைதிட்டத்திற்காகப் போராடுவது மிக தீர்க்கமானதாக இருப்பது இதனாலேயே ஆகும்.

முதலாளித்துவ முறைமையானது எதிர்கொள்ளும் வரலாற்று நெருக்கடி சம்பந்தமாக மேற்கொள்ளும் விஞ்ஞானப்பூர்வமான விளக்கங்கள் மூலம் முதலாளித்துவ கட்சிகளை அதிகாரத்துக்கு கொண்டுவருவதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் மூலம் ஆசிரியர்கள் உட்பட தொழிலாளர்கள் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை வெல்ல முடியும் என்பதை, ரஷ்ய புரட்சியின் படிப்பினைகளை கோடிட்டுக் காட்டி எமது நிருபர்கள் அவருக்கு விளக்கினர்.

உலகளாவிய தொற்றுநோயால் ஆழமடைந்து வரும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை மக்கள் மீது சுமத்துவதற்கு எதிராக, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் வெடித்துள்ள வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே ஆசிரியர்களின் ஊதியப் போராட்டம் ஆகும். அவர்கள், அரசாங்கத்திற்கு வாக்களித்தார்களா இல்லையா என்பதற்கு அப்பால், தொழிலாள வர்க்கம், கிராமப்புற விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு பரவலாக அதிருப்தியும் எதிர்ப்பும் வளர்ச்சியடைந்து வருகின்றது.

ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் இலவச கல்வி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் நிறைந்து இருந்தன. அப்போதைய சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன வெறுப்பைப் சுரண்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த கோட்டாபய இராஜபக்ஷவின் பிரதான வாக்குறுதியாக இந்தது “தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல்” என்பதே ஆகும்.

'தேசிய பாதுகாப்பு' என்பதன் உண்மையான அர்த்தம், வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த போராட்டங்களில் இருந்து முதலாளித்துவ சொத்து மற்றும் முதலாளித்துவ அரசைப் பாதுகாகப்பதற்காக இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வாதிகார ஆட்சியை முன் கொண்டு வருவதே ஆகும். 2019 ஏப்ரலில் நடந்த குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் துருப்புக்களை நிறுத்துமாறு பிரச்சாரம் செய்த ஆசிரியர் சங்கங்களும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களும் இராஜபக்ஷ ஆட்சிக்கு வர எவ்வாறு வழிவகுத்தன என்பதை உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் விரிவாக விளக்கினர்.

Loading