Oppose Imperialist War & Colonialism! Oppose Imperialist War & Colonialism!
Oppose Imperialist War & Colonialism! Oppose Imperialist War & Colonialism!
wsws : Tamil
 
இரண்டாம் உலக மகாயுத்தம்
Home
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10

 

 

 

இரண்டாம் உலக மகாயுத்தம்

13. ஜேர்மனி 21 ஆண்டுகளுக்கு முன்னாளைய தனது தோல்வியின் விளைவுகளை பின் வாங்கச் செய்து, ஐரோப்பாவில் தனது ஆளுமையை நிலைநாட்டும் ஒரு முயற்சியாக 1939 செப்டம்பரில் யுத்தத்தை ஆரம்பித்தது. எவ்வாறெனினும் இரண்டு ஆண்டுகள் சற்று அதிகரிப்பதற்குள் யுத்தம் ஒரு உலகளாவிய மோதலாக மாற்றம் செய்யப்பட்டது. பிரிட்டிஷ் சாம்ராஜியத்துடன் ஒரு நீண்ட போராட்டத்துக்கும், அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவுடனும் போரிட தேவையான வளங்களைப் பெறும் பொருட்டு, ஹிட்லர் ஸ்ராலினுடனான "ஆக்கிரமிப்பு இல்லா உடன்படிக்கைகளை", இரத்துச் செய்துவிட்டு, தனது ராணுவத்தினை 1941 ஜுனில் சோவியத் யூனியனுக்கு எதிராகத் திருப்பினார். இதற்கிடையே ஜப்பானிய ஏகாதிபத்தியம் தனக்கு ஆசியாவில் கிடைத்த வெற்றிகளுக்கு இடையேயும் பசிபிக்கில் அமெரிக்க ஆதிக்கத்தை சவால் செய்யாமல் முக்கிய மூலப்பொருட்கள் கிடைப்பதை உத்தரவாதம் செய்ய வழி கிடையாது என்பதை உணர்ந்தது, அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் அது தமக்கிடையேயான வேறுபாடுகளை ஜப்பானுடன் சமாதான வழியில் தீர்த்துக் கொள்ளுவதற்கான சாத்தியங்களை அடைத்து மூடுவதற்கு தனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்தது, பேர்ள் துறைமுகம் மீதான தாக்குதல், ரூஸ்வெல்ட் நிர்வாகத்திற்கு ஜப்பானுடன் கணக்கு வழக்குகளை தீர்த்துக் கொள்ளவும், ஐரோப்பாவில் இடம் பெறும் யுத்தத்தில் நுழையவும் இறுதி வாய்ப்பினைத் தந்தது.

14. ரூஸ்வெல்ட்டினதும் சேர்ச்சிலினதும் ஜனநாயக "பாசிச எதிர்ப்பு" வாய்ச் சவடால்களுக்கு மத்தியிலும் அமெரிக்க, பிரிட்டிஷ் யுத்த இலக்குகளுக்கு அடிப்படையாக விளங்கிய புறநிலை நலன்கள், ஜேர்மனி, ஜப்பானிய ஏகாதிபத்திய நலன்களுக்கு ஒன்றும் குறைந்தவை அல்ல. பிரிட்டன் தனது ஏகாதிபத்திய சொத்துக்களை தன்னால் முடிந்த மட்டும் காப்பாற்றிக்கொள்ள போராடிக் கொண்டிருந்தது. அமெரிக்கா முன்னணி ஏகாதிபத்திய சக்தியாக தனது அந்தஸ்தினை நிலைநாட்டும் நோக்கத்தைக் கொண்டிருந்தது, சோவியத் யூனியனைப் பொருத்த மட்டில் ஹிட்லருக்கு எதிரான போராட்டம், கிரெம்ளின் அதிகாரத்துவத்தின் நம்பிக்கை மோசடிகளுக்கு இடையேயும் ஒரு நிஜ முற்போக்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பை உள்ளடக்கியிருந்தது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் சோவியத் யூனியனைக் கைப்பற்றி, அக்டோபர் புரட்சியின் அடிப்படையில் 1917-ல் நிலை நிறுத்தப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட சொத்து உறவுகளை நிர்மூலமாக்கியிருக்குமாயின், அது சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு கடுமையான தோல்வியை பிரதிநிதித்துவம் செய்திருக்கும். தமது புரட்சியைப் பேணுவதில் சோவியத் மக்கள் கொண்டிருந்த திடசங்கற்பம் நாஜி படைகளைத் தோற்கடிக்க அவர்கள் செய்த மாபெரும் தியாகங்களை பறை சாற்றுகின்றன.

15. எவ்வாறெனினும் சோவியத் மக்களின் வீரதீரத்திற்கு இடையிலும் யுத்தத்தினை வழிநடத்த கிரெம்ளின் கடைப்பிடித்த கொள்கைகள், அடிப்படையில் பிற்போக்குப் பண்பு கொண்டவை. பிரிட்டன், அமெரிக்கா ஆகிய "ஜனநாயக" ஏகாதிபத்திய வாதிகளுடன் அணி திரண்ட சோவியத் அதிகாரத்துவம், யுத்தத்தின் முடிவில் ஒரு பொது புரட்சிகர கிளர்ச்சி வெடிக்கும் சாத்தியத்தை எண்ணி அஞ்சியது. ஜேர்மன், இத்தாலி, பிரான்சில் சோசலிசப் புரட்சி அல்லது அதே விஷயத்திற்காக யுத்தத்தினால் சிதற அடிக்கப்பட்ட எந்த ஒரு முதலாளித்துவ அரசும் சோவியத் தொழிலாள வர்க்கத்திற்கு சக்தியூட்டும் எனவும், அதுவே கிரெம்ளின் மாஃபியாவுடன் கணக்கு வழக்கைத் தீர்த்துக் கொள்ளத் தூண்டும் எனவும், ஸ்ராலின் கணித்தார். எனவே ஸ்ராலின், சேர்ச்சில், ரூஸ்வெல்ட் (1945-ஏப்ரலில் ரூஸ்வெல்டின் மரணத்திற்குப்பின்) ட்ரூமனுக்கிடையே டெஹ்ரான், யால்டா, போர்ட்ஸ்டாம் ஆகிய இடங்களில் நடைபெற்ற வரிசைக்கிரமமான மாநாடுகளின் பின்னர், சோவியத் பிராந்தியங்களில் தலையிடாதிருக்கச் செய்யும் திட்டவட்டமான உத்தரவாதங்களுக்கு பதிலாக, மேற்கு ஐரோப்பாவிலும் மூலோபாய முக்கியத்துவம் காரணமாக கிரீசிலும் முதலாளித்துவ ஆட்சியைக் காப்பதில் ஏகாதிபத்தியத்துடன் தான் ஒத்துழைக்கும் என்பதை கிரெம்ளின் தெளிவு படுத்தியது. பின்னர் சேர்ச்சில் தமது நினைவு குறிப்புக்களில் 1944-ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தின்போது, தாம் எங்ஙனம் ஒரு துண்டுச் சீட்டில் யுத்தத்தின் பின்னைய ஐரோப்பிய அரசியல் பிராந்திய பிரிவினையைக் கோடிட்டுக் காட்டினார் என்பதை நினைவு கூர்ந்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான அணியினர் நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்ததோடு கிரீசில் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் இருந்தனர், இது சேர்ச்சிலின் கோட்டில் பிரிட்டனின் செல்வாக்குப் பிராந்தியத்தில் தொடர்ந்து இருக்குமாறு குறிப்பிடப்பட்டது. சேர்ச்சில் எழுதியதாவது: "நான் இதை ஸ்ராலின் பக்கம் தள்ளினேன். அச்சமயம் அவர் மொழிபெயர்ப்பைக் கேட்டுக் கொண்டிருந்தார். அங்கு சற்றுத் தயக்கம் காணப்பட்டது. பின்னர் அவர் தமது நீலப்பென்சிலை எடுத்து அதன் மேல் குறிபோட்டு அனுப்பினார். தீர்ப்பதற்கு என்று எடுக்கும் நேரத்தைவிட குறைந்த நேரத்துள் அவை எல்லாமே தீர்க்கப்பட்டுவிட்டன". (Churchill, Memoirs of the Second World War [Boston,1987],P.886)

 [போருக்குப் பிந்தைய ஒழுங்குமுறை]