World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு

"We believe in the power of historically progressive ideas"

"வரலாற்று ரீதியான முன்னேற்றக் கருத்துக்களின் ஆற்றலை நாம் நம்புவோம்"

24 April 2003

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவற்றால், ``சோசலிசமும் ஏகாதிபத்தியம், போர் இவற்றிற்கெதிரான போராட்டமும்: ஒரு புதிய சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் வேலைத் திட்டமும் மூலோபாயமும்`` என்ற தலைப்பில், அன் ஆர்பர், மிச்சிகனில் மார்ச் 29-30, 2003 நடாத்தப்பட்ட மாநாட்டில் டேவிட் வால்ஷ் ஆற்றிய உரையை கீழே வெளியிடுகின்ேறாம்.

வால்ஷ் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் ஓர் உறுப்பினர். மாநாட்டின் விவாதத்திற்குப்பின் ஏற்கப்பட்ட ஆறாவதும் இறுதியானதுமான பின்வரும் தீர்மானத்தை அவர் அறிமுகப்படுத்தினார்: ``அமெரிக்கச் செய்தி ஊடகமும் உலக சோசலிச வலைதளத்தின் அபிவிருத்தியும்``

ஏப்ரல் முதல் தேதியன்று உலக சோசலிச வலைத் தளமானது மாநாட்டைப் பற்றிய சிறு தொகுப்பு ஒன்றினைப் பிரசுரம் செய்தது. ("உலக சோசலிச வலைதளம் சோசலிசம் மற்றும் போருக்கெதிரான போராட்டத்தைப் பற்றிய சர்வதேச மாநாட்டை நடத்துகிறது"). இதைத் தவிர உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளருமான டேவிட் நோர்த் தொடக்க உரையை ("கட்டுக்கடங்காத நெருக்கடிக்குள்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும் ஈராக்கிற்கு எதிரான போரும்") வழங்கினார்.

மாநாட்டில் ஒருமனதாக ஏற்கப்பட்ட ஆறு தீர்மானங்களின் வாசகங்களும் ஏப்ரல் 2லிருந்து ஏப்ரல் 4 வரை வெளியிடப்பட்டன. (ஈராக்கில் நிகழ்த்தப்பெறும் போரை வன்மையாகக் கண்டிக்கும்; தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கு அறைகூவி அழைக்கும் தீர்மானங்கள்", "தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்காக அழைக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்க்கும் தீர்மானங்கள்", "போர் மற்றும் அமெரிக்கச் சமுதாய நெருக்கடி மீதான தீர்மானம், உலக சோசலிச வலைத் தளத்தின் வளர்ச்சி பற்றிய தீர்மானம்")

ஏப்பிரல் 22 அன்று உலக சோசலிச வலைத் தளமானது முதலாவது மற்றும் இரண்டாவது தீர்மானங்களை அறிமுகப்படுத்திய பட்ரிக் மார்ட்டின் மற்றும் உலிரிச் றிப்பேர்ட் ஆகியோரின் கருத்துக்களை முறையே பின்வருமாறு வெளியிட்டது: (பார்க்க: "ஈராக்கிற்கெதிரான அமெரிக்கப் போர் விஷயத்தில் முரண்பாடுகளும் பொய்களும்", "தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றில் மையத்தில் நிற்பது சர்வதேசியம்")

ஏப்பிரல் 23 அன்று, மூன்றாவது மற்றும் நான்காவது தீர்மானங்களை அறிமுகப்படுத்திய பரி கிரே மற்றும் லோரன்ஸ் போர்ட்டர் ஆகியோரின் கருத்துக்களை முறையே பின்வருமாறு வெளியிட்டது (பார்க்க: ``தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்ட உள்ளடக்கமும் வரலாற்றுப் பின்புலமும்", "எதேச்சாதிகார வழிமுறைகளுக்குத் திரும்புதல் அமெரிக்க முதலாளித்துவத்தின் தோல்வியின் ஒரு அறிகுறி")

வரும் நாட்களில் மாநாட்டிற்கு சர்வதேச பிரதிநிதிகள் கொண்டுவந்த வாழ்த்துக்களின் தொகுப்பை நாம் பிரசுரிக்க இருக்கிறோம்.

அமெரிக்கச் செய்திப்பிரிவு தன்னையே கண்டனத்திற்கு ஆளாக்கிக் கொண்டுவிட்டது. ஒரு சில பெரிய நிறுவனத் தொகுப்புக்களால் மேலாதிக்கம் செய்யப்படும் முக்கிய செய்தித்தாள், தொலைக்காட்சி வலைப்பின்னல்கள் ஆகியன பெரும்பாலும் மிகப்பெரிய அளவிலான பொய்கள், முட்டாள்தனம், ஒரு செயலுக்கு எதிர்நிற்றல் ஆகியவற்றின் கிடங்குகளாக அமைந்துவிட்டன.

இந்நாட்களில் Fox News, CNN அல்லது MSNBC இவற்றின்முன் எந்த அளவு நேரத்தைச் செலவழித்தாலும் குப்பை கூளம், சகிக்க முடியாத வன்முறைக் காட்சிகளில்தான் பங்குபெறுகிறோம். வசைமாரி பொழியும் குறிப்பிட்ட அளவு வியப்பில் ஆழ்த்தும் அறியாமையில் முழுகியிருக்கும் முகங்களைத்தான் நாம் பார்க்கிறோம். ஒரு நீண்டகால வயப்பட்ட சமூக மற்றும் அறிவாற்றல் அழுகலின் விளைவாகத்தான் இம்முகங்கள் இருக்க முடியும், இந்நிலை அமெரிக்க முதலாளித்துவத்தின் குறுகிய எதிர்நோக்குதலுடன் பிணைந்துள்ளது. எதிர்காலத்தில் நம்பிக்கைகொண்ட எந்த சமுதாயமும் பொது உடைமை எதிர்ப்பு, பேரினவாதம், இராணுவவாதம், சமுதாயத்தின்பால் வெறுப்புத்தன்மை போன்ற இழிந்த, தரக்குறைவான குணங்களையும் எண்ணங்களையும் அதிகமாக்கும், அவற்றின் தூண்டிவிடும் தன்மையுடன் கூடிய, இத்தகைய மனிதக் குப்பைக் களஞ்சியத்தை விரும்பாது.

இந்த நிலையில் நான் உலக சோசலிச வலைத் தளம் பற்றி பேச ஆர்வம் காட்டுகிறேன்.

1998 ஜனவரியிலிருந்து நம்முடைய இயக்கம் வரலாற்றில் இதுவரை செய்யப்படாததை, செய்ய முற்பட்டுள்ளது: அஃதாவது, சர்வதேச அளவில் அரசியல், சமுதாய மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகளின் அன்றாடப் பகுப்பாய்வும் செய்தியும் வெளியிடுதல், அதன் உற்பத்தியிலும் பரப்புதலிலும் சர்வதேசத் தன்மை கொள்ளுதல் என்பதாகும்.

இம்முயற்சி மிக சக்திவாய்ந்த பதில்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. உலக சோசலிச வலைத் தளமும் அது அடிப்படையாகக் கொண்டுள்ள சர்வதேச புரட்சிகர வேலைத் திட்டமும் மிகப் பரந்த அளவிலான மனித சமுதாயத்தின் தேவைகளையும், வரலாற்றில் உள்ள மிக ஆழ்ந்த போக்குக்களையும் கருத்தில் கொண்டு இயங்குகிறது என்பதில் நாங்கள் பற்றுறுதி கொண்டுள்ளோம். இந்த உறுதிப்பாடு சரியே என்பதற்கு இந்த வியத்தகு ஒன்று கூடலே சான்றாகும்.

ஓரிரு முக்கியமான வினாக்களை எண்ணிப்பார்க்க நான் இப்பொழுது விரும்புகிறேன். மார்க்சிசம் சமூக வாழ்க்கையை உண்மையாகவும் புறநிலை ரீதியாகவும் பிரதிபலிக்கின்றது என்றும், நம்முடைய இயக்கம் ஆழ்ந்த விஞ்ஞான அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது என்றும் சொல்லுகின்றோம். நம்முடைய பணியில் நேரடியாக வாசகர்களுக்கு எழுத நாம் முயற்சிகொள்ளுகிறோம். நம்மால் இயன்ற அளவு தீவிர பத்திரிகைகளின் செய்தித் தொகுப்பில் சென்று கொண்டிருக்கும் பயங்கரமான, நம்பிக்கை கொடுக்காத சொற்பிரயோக விளையாடலைத் தவிர்த்தும் உளுத்துப்போன சொல்லாட்சியை நீக்கியும் எழுதப் பாடுபடுகிறோம். ட்ரொட்ஸ்கி கூறினார்: "எந்த பிரமையும் கொள்ளாத, நம்மையே ஏமாற்றிக்கொள்ளாத; அதன் மாபெரும் வரலாற்றுப் பணியைச் செய்வதில் போலி வண்ணப்பூச்சு பூசாத ஒரே கட்சி நாம்தான்."

இயன்ற அளவு வெற்று சொல்வன்மையைத் தவிர்க்கவேண்டும் என்பது, எவ்வாறாயினும் சிக்கலான பிரச்சினைகளைப் பற்றி ஒருவர் எழுதாமல் தவிர்க்கவேண்டும் என்றோ அல்லது வாசகருக்கு தெரிந்திராது என்பதற்காக, மொழி சொல்லாட்சி இவற்றைத் தளர்த்துவதாகவோ அர்த்தப்படுத்தாது. ட்ரொட்ஸ்கி கூறுவார்: ``எது கஷ்டப்படாமல் புரிந்துகொள்ளப்பட முடியுமோ, அது பயனற்றது, அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி.``

ஒரு நல்ல வாசகருக்குத் தனக்கே கொள்ளவேண்டிய கடமையிருக்கிறது; நன்கு ஆழ்ந்து சிந்தித்தல், அறிவைப் பெருக்கிக்கொள்ளுதல், நன்கு படித்தல், முதலில் மார்க்சிச அறிவுப்பெட்டகங்களைப் படித்தல் -- மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி, லுக்ஸம்பேர்க், பிளகெனோவ், மெஹ்ரிங் மற்றும் ஏனையோர் நூல்களைப் படித்தல்.

இவற்றையும் கடந்து அறிவுபூர்வமாக கலை மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகளைப் பற்றி விமர்சிக்க முற்படுகிறோம். இது நம்மால் தவிர்க்க முடியாதது என நாம் கருதுகிறோம். அதாவது கலை - விஞ்ஞானம் போல் உலகத்தை அறிந்துகொள்ளும் முயற்சி, மனித சிக்கல்கள் ஆகியவற்றை அறிய, மனித நிலைமையைப் பற்றி உணர, மிக நெருக்கமான அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருவியாகும்.

புரட்சியாளர்கள் எவ்வாறு அத்தகைய சிக்கல்களைப் பற்றி அக்கறையின்மையுடன் இருக்க முடியும்? அதிகாரத்துவங்கள், சந்தர்ப்பவாதிகள், வாய்ச்சவடால் அரசியல்வாதிகள், ஆகியோர் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. அவ்வளவு நெருக்கமான பரந்த அளவிலான விஷயங்கள் அவர்கள் முன்பு கேடுற்று மங்கிவிடும்.

நமக்குக் கூடுதலான விமர்சகர்களும், கூடுதலான கட்டுரைகளும் தேவை. புரட்சிகரமான சமுதாய மாற்றத்திற்கு இன்றியமையாத முதல் நிபந்தனையான, தீவிரமாக மாற்றப்பட்ட கலாச்சார மற்றும் அறிவார்ந்த சூழ்நிலையை உருவாக்குவதும் நாம் மேற்கொள்ள இருக்கும் சவால்தான்.

அறிவார்ந்ததை அதற்காகவே தேடும் நோக்கமோ, அறிவைப் பறைசாற்றிக்கொள்ள வேடம் பூண்டு நிற்கும் கோலமோ நமக்குத் தேவையில்லை. அதுபோன்றவற்றிற்கு உதாரணமாக நம் வலைதளத்தில் எவரேனும் இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள். அவர்களை நாங்கள் மகிழ்ச்சியுடன் வெளியேற்றுவோம். எம்மைப் பொறுத்தவரை எண்ணங்கள் எப்பொழுதும் பெரும் அரசியல், சமுதாய மற்றும் கலாச்சாரப் பிரச்சினைகளை ஒட்டியன, அதன்படி நாம் நடப்போம்.

``புரட்சியாளர்களாகிய நாம் மற்றய துறை போல் எழுத்துத் துறையிலும் செயலாற்றும் விருப்பத்திற்கு, விழைவிற்கு முன்னுரிமை கொடுக்கிறோம்: சிலவற்றை மாற்றவேண்டும்: சிலவற்றை புதியதாகக் கொண்டுவர வேண்டும்; சிலவற்றை சாதிப்பதற்கு`` என்று ட்ரொட்ஸ்கி எழுதினார்.

வரலாற்று ரீதியில் முன்னேற்றமான எண்ணங்கள் சடரீதியான விளைவுகளையும் வெளிப்பாட்டையும் ஏற்படுத்தும் என நாம் நம்புகிறோம். நம்மிடையே இன்றளவும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களும் மனித சக்தியும்தான் இருக்கின்றன. நம்முடைய செய்தியை மக்கட்தொகை முழுவதற்கும் சரமாரியாக நாம் வீச இயலாது, ஒவ்வொரு இல்லத்திலும் அல்லது ஒவ்வொரு சமூகத்திலும் கூட நம்மை விளம்பரப்படுத்த வசதிகள் கிடையாது; இருந்தபோதிலும் உலக சோசலிச வலைத்தளம் பெரும் கூடுதல் பார்வையாளரை அடையும் நிலையை அண்மையில் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இது எவ்வாறு இயலும்? எண்ணங்களின் ஆற்றலினால்தான் இதைச் சாதித்திருக்க முடிந்துள்ளது.

சடவாதிகள் என்ற முறையில் உலகம் எண்ணங்களைத் தோற்றுவிக்கும் என்பதை நாம் அறிவோம். உண்மையான சடவாதிகள் என்ற அளவில் எண்ணங்களும் உலகைப் படைக்க முடியும் என்பதை நாம் அறிவோம்.

நம்முடைய வாசகர்களுக்கும் சில கடமைகளுண்டு என்று கூறினேன். பிறிதொரு அதே அளவிலான அடிப்படையான நெருக்கும் கடமையுமுண்டு எனக் கூற விரும்புகிறேன்: அதாவது வலைத் தளத்தின் எழுத்தாளர்களாகவும் அவர்கள் ஆகவேண்டும். இம்மாநாட்டின் வெற்றிக்கு, ஒவ்வொரு துறையிலும்: தொழிலாள வர்க்கத்தின் அன்றாட வாழ்க்கை; சமுதாய நிலை, அரசியலைப் பற்றி, வரலாற்றைப் பற்றி, கலை, விஞ்ஞானம், மெய்யியல் பற்றி என 10, 15, 20 புதிய எழுத்தாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்துக்கு கிடைத்தால் அது ஒரு சாதனையாகும்.

நான் மிகைப்படுத்துவதாக நீங்கள் நினைக்கலாம்; ஆனால் அத்தகைய வளர்ச்சி அரசியல் வாழ்வில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். வலைத் தளத்திற்கு தொடர்ந்து எழுதும் ஒவ்வொரு சீரிய, கட்டுரையாளரும் தொழிலாள வர்க்கத்தின் நன்மையைப் பலப்படுத்துவதுடன் அதன் விடுதலைத் தினத்தை அருகாமையில் கொண்டுவருவர்.

உங்களை நீங்களே குறைந்த மதிப்பீட்டிற்கு உட்படுத்திக்கொள்வது மாபெரும் பிழைகளில் ஒன்றாகும். மிக மட்டமான மக்கள் மட்டுமே ஏன் கூடுதலான இறுமாப்பைக் கொள்ளவேண்டும்? நம்முடைய `இறுமாப்பு` நம்மை நம்மையும் நாம் செய்வதையும் அக்கறையுடன் அறிதல், விஞ்ஞானபூர்வமாக, வரலாற்று ரீதியாக சமுதாயத்தையும் அதன் போக்குகளையும் மதிப்பிடுதல் ஆகும்.

இது ஒரு அசாதாரண ஒன்று கூடல் ஆகும். நம்மை நாமே புகழ்ந்துகொள்ளும் செயல் இல்லை இது. புரட்சிக் கருத்துக்களும் முன்நோக்குகளும் தம்மைச் சுற்றிலும் சர்வதேச அளவில், வரலாற்றில் முன்னென்றுமிருந்திராத, ஒரு உலக இயக்கத்தை ஏற்படுத்த முயலும்.

தீர்மானத்திலிருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்டுகிறேன்: ``மக்களை எழுப்புவதிலும் கற்பதிலும் உலக சோசலிச வலைத் தளம் தன்னுடைய வாசகர்களுடைய அறிவு, நியாய உணர்வு, நீதியுணர்வு, உண்மைக்கு ஆர்வம், சமுதாய முன்னேற்றத்திற்காகத் தியாகம், மனித குல ஒற்றுமை, இவற்றிற்கு அறைகூவி அழைக்கிறது.``

``மிகத் தீவிரமான விளைவுகளுடைய சமுதாய மாற்றங்களை, ஆழ்ந்த புறநிலை நிகழ்ச்சிப் போக்குகள் மற்றும் பரந்த வெகுஜனங்களின் அதேபோன்ற ஆழ்ந்த அறிவு மற்றும் கலாச்சார மறுநோக்குநிலைப் படுத்தலின் விளைவால் மட்டுமே காணமுடியும் என்பதை மாக்சிசவாதிகள் அறிவர். இன்று ஏகாதிபத்தியப் போருக்கும் சமுதாய ஏற்றத்தாழ்விற்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோரின் வழியில் முக்கியத்துவம் வாய்ந்த தடை யாதெனில், அது பொதுவான மிகக்குறைந்த அளவிலான வர்க்க நனவும் வரலாற்றறிவும்தான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டுகளில் தோன்றிய மற்றும் ஸ்ராலினிசத்தால் கொடூரமாக பாதிப்படையச்செய்யப்பட்ட, அசாதாரணமான சோசலிச அரசியல் கலாச்சாரத்தை மீளக் கட்டி எழுப்பதலில் உலக சோசலிச வலைத் தளமானது முன்னணிப் பாத்திரத்தை ஆற்றியாக வேண்டும். மார்க்சிசமானது, அதன் மாபெரும் முன்மொழிபாளர்கள் கூறியது போல், அது ஒரு வெறும் அரசியல் வேலைத் திட்டம் அல்ல, மாறாக, அது முதலாளித்துவ சமுதாயத்தின் ஒவ்வொரு கூறுபாட்டினையும் விமர்சனத்திற்கு உட்படுத்தும், இணையற்ற ஆழமும் பரப்பும் கொண்ட அறிவுஜீவிதப் போக்கு ஆகும்."

வரலாறு பல பேரதிர்ச்சிகளையும் கடுந்துன்பங்களையும் அறிந்துள்ளது; இன்று பல இடர்பாடுகள் உள்ளன. லெனினின் மிக அழகிய கூற்று என்ன? ``இன்றைய வாய்ப்பு அடுக்கடுக்கான கஷ்டங்களைப் பெரிதாக உயரத்தில் நிலை நிறுத்தியுள்ளது; அந்த வாய்ப்பிற்கேற்ப நாம் எட்டுவோம்.``

கலாச்சாரத்தில், வரலாற்றைப் படிப்பதில், பகுத்து ஆராய்வதில், மனிதகுலத்தின்பால் மற்றும் அதன் எதிர்காலத்தின்பால் கொண்ட நம்பிக்கையில், மிகக்கூடுதலான மக்களுடைய எண்ணங்களையும் இதயங்களையும் வெல்வோம் என்ற நம்முடைய பெரும் தன்னம்பிக்கையின் அடிப்படையில் நாம் முன்செல்வோம்.

Top of page