Home

Print Version

 

The world capitalist crisis and the tasks of the 4th international.
நான்காம் அகிலத்தின் ஐம்பது ஆண்டுகள்

சர்வதேசியமும்,பாட்டாளிவர்க்கமும்

முதலாளித்துவ நெருக்கடியும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையும்

நான்காம் அகிலமும் சந்தர்ப்பவாதமும்

சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு வரலாற்று கணக்கெடுப்பு

ஸ்ராலினிசத்தின் பங்கு பற்றி பப்லோவாதம்

சோவியத் யூனியன் இன்று

நிரந்தரப்புரட்சித் தத்துவம் ஊர்ஜிதம்

ஐக்கிய அமெரிக்க அரசுகள், ஜப்பான்,ஐரோப்பாவும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதங்களின் வளர்ச்சியும்

ஏகாதிபத்தியமும் ஆசிய பசுபிக்கரையும்

பின்தங்கிய நாடுகளின் வறுமை

உலகக் கடனின் பெருக்கம்

ஏகாதிபத்திய யுத்தத்திற்கெதிரான போராட்டம்

அனைத்துலகக்குழுவும் மார்க்சிசத்துக்கான போராட்டமும்

 

 

Impoverishment of the Backward Countries

பின்தங்கிய நாடுகளின் வறுமை

142. பூமியின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினரின் குறிப்பிடமுடியாத வறுமையானது, முதலாளித்துவத்தின் மாபெரும் வரலாற்றுக் குற்றத்தை உள்ளடக்கியிருக்கிறது. யுத்தத்தின் பின்னைய செழிப்பின் முக்கிய காலப்பகுதியில் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்களின் வாழ்க்கைத்தரத்தை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்த முதலாளித்துவத்தால் முடியாது போயிற்று. அத்துடன் கடந்த 15 ஆண்டுகளாக சமூகநிலைமைகள் பெருமளவு சீர்கெட்டுப் போயுள்ளன. ''காலனித்துவ ஒழிப்பின்'' முதல் நீரோட்டத்தில் தேசிய முதலாளித்துவ வர்க்கம் சுயபூர்த்தி மூலம் செழிப்பு என்ற பிரமையை வளர்த்ததோடு ''இறக்குமதி பதிலீட்டுக் கொள்கையிலும்'' ஈடுபட்டது. இவை ''புதிதாக சுதந்திரம்'' பெற்ற நாடுகளை ஏகாதிபத்திய சக்திகள் பொருளாதாரத்தின் குரல்வளையை நெரிப்பதில் இருந்து விடுதலை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. சுயபூர்த்திக் கொள்கையை ஒரு சோசலிச வடிவமாகவோ அல்லது ''முதலாளித்துவம் அல்லாத வளர்ச்சிப்பாதை'' எனவோ காட்டும் முயற்சிகளும்கூட இடம்பெற்றன. ஆனால் அவர்கள் உருவாக்கிய பகட்டான பிரதாபங்களும், பிரமைகளும் இன்று ஒன்றுகூட மீதமில்லை.

143. 1970களில் ஏகாதிபத்திய வங்கிகளின் ஊக்குவிப்புடன் பின்தங்கிய நாடுகள் பெற்ற பிரமாண்டமான கடன்கள் திருப்பிச் செலுத்த முடியாத ஒரு கடன் மலையை உண்டுபண்ணியுள்ளன. வங்கிகள் கடன் நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக கடன்வழங்குவதைக் கடுமையாகக் குறைத்த சமயத்தில் பண்டங்களின் விலைகள் இருபதாம் நூற்றாண்டில் அவற்றின் அதிகக் குறைந்த மட்டத்துக்கு வீழ்ச்சியடைந்தமையும், உலக வர்த்தகத்தில் ஸ்தம்பிதமும், பாதுகாப்புவாதக் கொள்கைகளின் அதிகரித்துவந்த அழுத்தங்களும் இந்த ஆட்சியாளர்களைத் தமது வட்டிக் கொடுப்பனவுகளை ஈடுசெய்வதற்கு, உள்நாட்டுநுகர்வு பொருட்களில் மேலும் பெருமளவில் வெட்டுக்களை செய்யும் வண்ணம் நெருக்கடியில் தள்ளின. உலகவங்கியினதும், சர்வதேச நாணய நிதியத்தினதும்(IMF) கட்டளைப்படி பின்தங்கிய நாடுகள் தமது இறக்குமதி பதிலீட்டுக் கொள்கைகளை பெருமளவில் கைவிட்டுவிட்டு, அவற்றினை ஏகாதிபத்தியத்தின் கட்டளைக்கு முற்றாக அடிபணியச் செய்யும் ''ஏற்றுமதி மூலோபாயத்தை'' கடைப்பிடித்தன.

144. இறக்குமதி பதிலீட்டில் இருந்து ஏற்றுமதிக்குச் செல்லும் இந்தப் பெயர்ச்சி சர்வதேச வங்கியாளர்களால் ''மறுசீரமைப்புக்கள்'' என நாசூக்காக அழைக்கப்பட்டது.ஆனால் உலகவங்கி சமீபத்தில் ஒத்துக்கொண்டது போல் "இம்மறுசீரமைப்புக்கள்..... பெருமளவில் கடன்பழுவில் மூழ்கிப்போயுள்ள சில நாடுகளுக்கு குறிப்பாக உப சஹாரா (ஷிuதீ-ஷிணீலீணீக்ஷீணீஸீ கியீக்ஷீவீநீணீ) ஆபிரிக்காவுக்கு, உண்மையில் எதிர்பார்த்தைவிட நீண்டபாதை என்பதை நிரூபித்துள்ளன. உரிய நிபந்தனைகளின் அடிப்படையில் அவசியமான வளங்கள் இல்லாதவிடத்து, இந்நாடுகள் கல்வி, சுகாதார சேவைகள், சத்துணவு வேலைத்திட்டங்களையும், முன்னேற்றகரமான நீர்வசதிகளையும், ஏழைகளுக்கான இருப்பிடத்தையும் விஸ்தரிக்க முடியாவிட்டாலும் அவற்றை பராமரிக்க கஷ்டப்படும் " (உலக வங்கி ஆண்டறிக்கை- 1987, பக்கம்- 15). லத்தீன் அமெரிக்காவில் சராசரி தொழிலாளி 1975 ஐக் காட்டிலும் தினசரி குறைந்த கலோரிகளையே உட்கொள்கிறார். சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அத்தியாவசியமான உணவினை உட்கொள்கின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது. குழந்தை மரணவீதம் பெருமளவு அதிகரித்துள்ளது. 1986ல் தலாவருமானம் 1980 மட்டத்துக்குக் கீழேயே இருந்தது. 1970களின் காட்டிக்கொடுப்புக்களுக்கும், தோல்விகளுக்கும் லத்தீன் அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கம் செலுத்தும் விலை இதுவே.

145. உலக வங்கியினால் குறிப்பிடப்பட்ட அத்தியாவசிய சேவைகளிலும், வசதிகளிலும், வேலைத்திட்டங்களிலும் மேற்கொண்டு ஏற்படும் வீழ்ச்சியின் தாக்கங்களின் தாத்பரியத்தை பின்தங்கிய நாடுகளின் 1985 ஆம் ஆண்டின் தலா மொத்த தேசிய உற்பத்தி தெளிவாய் எடுத்துகாட்டுகிறது. புருண்டியின் தலா மொத்த தேசிய உற்பத்தி 130 டாலர், எதியோப்பியா 110 டாலர், மடகாஸ்கர் 240 டாலர், சயிரோ 170 டாலர், சோமாலியா 280 டாலர், மாலாவி 170 டாலர், பர்க்கினோ பாசோ 150 டாலர், பர்மா 190 டாலர், இந்தியா 270 டாலர், இந்தியா ராஜீவ்காந்தியின் ஆட்சியின் கீழ் ஏற்றுமதி மூலோபாயத்திற்கு ஆர்வத்தோடு திசை திரும்பியது. இதனுடைய பொருளாதார அபிவிருத்தியானது ஏகாதிபத்தியத்தின் ஒட்டுண்ணித்தனத்தினதும் வரலாற்றுத் திவால் தன்மையினதும் மிகவும் துல்லியமான நிரூபணத்தை வழங்குகிறது.

1950- 85க்கு இடையே விவசாயத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உண்மையான தலா உற்பத்தியின் அதிகரிப்பு 0.0074% மட்டுமே ஆகும். பம்பாயில் பிரசுரமாகும் ''எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி'" இந்தியப் பொருளாதாரத்தின் முழு அபிவிருத்தியினையும் அளவீடு செய்கையில், ''வளர்ச்சி பற்றாக்குறையாக இருக்கின்றது அதுடன் சனத்தொகையின் பெருக்கத்தினால் இதன் பெரும்பகுதி நடுநிலைப்படுத்தப்பட்டது. கடன் வாங்கல்களால் ஏற்பட்ட அபிவிருத்தியானது, கடன்களை திருப்பிச் செலுத்துவதற்குப் போதுமான நிதிகளை உருவாக்காததோடு கடன் சுமையையும் அதிகரிக்கின்றது. பற்றாக்குறை நிதியீட்டங்கள் பொருளாதார பலவீனத்தை மட்டும் அல்லாமல் அரசியல் உறுதிப்பாடற்ற நிலையையும் உண்டுபண்ணும் பணவீக்கத் தாக்கத்தினை சிருஷ்டிக்கின்றது. பிராந்திய, மாகாண சமத்துவமின்மை அதிகரித்து அரசியல் ஸ்திரமற்ற நிலை உருவாகின்றது. இவை கடினமான பிரச்சினைகள் அத்துடன் இவற்றிற்கு தீர்வுகள் தென்படவே இல்லை. இந்தியா அனேகமாக இவை எல்லாவற்றையுமே முதுகில் சுமந்த வண்ணம் 21 ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கிறது." என குறிப்பிட்டது. (ஜனவரி 2- 9, 1988- பக்கம் 50)

146. லெனினின் ஆய்வுகளும் வரலாற்று தீர்க்க தரிசனங்களும் பின்தங்கிய நாடுகளினது மக்களின் பயங்கரமானது துன்பங்கள் மூலமும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது: தொழில்துறையிலும் பார்க்க எங்கும் இன்று கூடுயளவு பின்தங்கியிருக்கும் விவசாயத்தை முதலாளித்துவத்தால் வளர்ந்தோங்கச் செய்ய முடியுமானால், தொழில்நுட்ப அறிவின் வியக்கத்தக்கவளர்ச்சியானால், எங்கும் இன்னும் அரைப்பட்டினியாகவும் ஏழ்மையுடனும் வாழ்கின்ற மக்கள் பெருந்திரளினரின் வாழ்க்கைத்தரத்தை முதலாளித்துவத்தால் உயர்த்த முடியுமாயின், மூலதனத்தின் மிகுந்த குவிப்பு பற்றிய பேச்சுக்கே இடம் இருக்காது என்பதைக் கூறத்தேவையில்லை. இந்த 'வாதம்' முதலாளித்துவத்தின் குட்டிமுதலாளித்துவ விமர்சகர்களால் அடிக்கடி முன்வைக்கப்படுகிறது. ஆனால் முதலாளித்துவம் இவற்றைச் செய்திருந்தால் அது முதலாளித்துவமாக இருக்கமுடியாது. ஏனெனில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியும் மக்கள் பெருந்திரளினரது அரைப்பட்டினி வாழ்க்கை நிலையுமாகிய இவை இரண்டும் இந்த உற்பத்திமுறைக்குரிய அடிப்படையான, தவிர்க்கமுடியாத நிலைமைகளாகவும் இருப்பவை. முதலாளித்துவம் முதலாளித்துவமாகவே இருக்கும்வரை, உபரி மூலதனமானது அந்த நாட்டின் மக்கள் பெருந்திரளினரது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காகப் பயன்படுத்தப்படமாட்டாது. ஏனென்றால் இது முதலாளிகளுடைய லாபங்களைச் சரிந்துவிழச் செய்வதாகிவிடும். லாபங்களை அதிகமாக்கும் பொருட்டு பின்தங்கிய நாடுகளுக்கு மூலதனத்தை ஏற்றுமதி செய்வதற்கே உபரி மூலதனம் பயன்படுத்தப்படும். (ஏகாதிபத்தியம்) எனவே சோசலிசப்புரட்சி மூலம் ஏகாதிபத்தியத்தைத் தூக்கி வீசுவதிலே மட்டுமே தீர்வு தங்கியுள்ளது. பின்தங்கிய நாடுகளின் மக்கள் இம்முடிவினை நோக்கியே பிடிவாதமாக தள்ளப்பட்டுள்ளார்கள்.