line decor
   WSWS : Tamil : Library
line decor
 
 
 
 

 
 

கம்யூனிச அகிலத்தின் வரைவுத் திட்டம்

பகுதி 2: ஏகாதிபத்திய சகாப்தத்தில் மூலோபாயமும் தந்திரோபாயங்களும்
 

Print part 2 on single page

1. வரைவு வேலைத் திட்டத்தின் முக்கிய அத்தியாயத்தின் முழுமையான திவால் நிலை

கம்யூனிச அகிலத்தின் வரைவு வேலைத் திட்டமானது புரட்சிகர மூலோபாயம் குறித்த கேள்விகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அத்தியாயத்தை கொண்டுள்ளது. அதன் நோக்கம் மிகவும் சரியானது என்பதையும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் இலக்கு மற்றும் சிந்தனை நோக்கிற்கு பொருந்துவதாயும் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும்.

புரட்சிகர மூலோபாயம் குறித்த கருத்தாக்கம் போருக்கு பிந்தைய ஆண்டுகளில் தான், மற்றும் ஆரம்பத்தில் சந்தேகத்திற்கிடமின்றி இராணுவ வார்த்தைப்பிரயோகங்களின் ஆதிக்கத்தின் கீழ் தான் வேர் கொண்டது. ஆனால் இது தற்செயலாக வேரூன்றிய ஒன்றல்ல. போருக்கு முன்னர், நாம் பாட்டாளி வர்க்க கட்சியின் தந்திரோபாயங்கள் குறித்து மட்டுமே பேசினோம்; இந்த கருத்தாக்கமானது அப்போதிருந்த தொழிற்சங்க, அன்றாட கோரிக்கைகள் மற்றும் பணிகளின் எல்லைகளை கடக்காத பாராளுமன்ற வழிமுறைகளுடன் போதுமான அளவுக்கு இயைவு கொண்டிருந்தது. தந்திரோபாயங்கள் குறித்த கருத்தாக்கத்தின் மூலம் வர்க்க போராட்டத்தின் ஒரு ஒற்றை நீரோட்டப் பணி அல்லது ஒரு ஒற்றைக் கிளைக்கு சேவையாற்றும் நடவடிக்கைகளின் முறை புரிந்து கொள்ளப்படுகிறது. மாறாக புரட்சிகர மூலோபாயமானது, தங்களது தொடர்பு, தொடர்ச்சி, மற்றும் வளர்ச்சியால் பாட்டாளி வர்க்கத்தை அதிகாரத்தை கைப்பற்ற நிச்சயம் இட்டுச் செல்லக் கூடிய, செயற்பாடுகளின் ஒரு ஒன்றிணைந்த முறையை தழுவியதாகும்.

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர கட்சிகளின் முன்னதாக, வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அதிகாரத்தை கைப்பற்றுவதான பணியை, மார்க்சிசம் முதன் முதலில் வைத்த காலத்தில் இருந்து, புரட்சிகர மூலோபாயத்தின் அடிப்படை கோட்பாடுகள் இயல்பாக சூத்திரப்படுத்தப்பட்டன. இருப்பினும் முதலாம் அகிலமானது, இந்த கோட்பாடுகளை வெற்றிகரமாக சூத்திரப்படுத்தியது, சரியாக சொல்வதென்றால் தத்துவார்த்த ரீதியாக மட்டுமே, பின் அவற்றை பகுதி அளவில் மட்டுமே பல்வேறு நாடுகளின் அனுபவங்களில் சோதிக்க முடிந்தது. இரண்டாம் அகிலத்தின் சகாப்தமானது, பேர்ன்ஸ்டைனின் மோசமான வெளிப்பாட்டில் கூறுவதென்றால், "இயக்கம் தான் எல்லாமே, இறுதி இலக்கு ஒன்றுமில்லை" என்று கூறும் வழிமுறைகள் மற்றும் பார்வைகளுக்கு இட்டுச் சென்றது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அதன் தந்திரோபாயத்தின் ஒரு பகுதி அன்றாட பிரச்சினைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிலையுடனான அன்றாட "இயக்க"த்திற்குள் கரைந்து மூலோபாய பணி காணாமல் போய் விட்டது. மூன்றாம் அகிலம் மட்டுமே, கம்யூனிசத்தின் புரட்சிகர மூலோபாயத்தின் உரிமைகளை மறுநிர்மாணம் செய்து, தந்திரோபாய வழிமுறைகளை முற்றாக அதற்கு அடிபணிந்து செயலாற்ற வகை செய்தது. முதல் இரண்டு அகிலங்களின் மதிப்பிட முடியாத அனுபவத்தின் காரணமாகவும், இவற்றின் தோள்களில் அமர்ந்திருக்கின்ற மூன்றாம் அகிலம் நடப்பு சகாப்தத்தின் புரட்சிகர குணாம்சத்தினதும் மற்றும் அக்டோபர் புரட்சியின் மாபெரும் வரலாற்று அனுபவத்தின் காரணமாகவும், மூன்றாம் அகிலத்தின் மூலோபாயமானது ஒரு முழு மூச்சான போர்க்குணத்தையும், பரந்த வரலாற்று பரிமாணத்தையும் உடனடியாக பெற்றது. அதே சமயத்தில், புதிய அகிலத்தின் முதல் பத்தாண்டு காலமானது, பெரும் யுத்தங்கள் மட்டுமல்லாமல், 1918ல் இருந்து தொடங்கி பாட்டாளி வர்க்கத்தின் மிகப்பெரும் தோல்விகளையும் பற்றிய விரிந்த காட்சியை நமக்கு வெளிப்படுத்துகிறது. இதனால் தான் மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்கள் குறித்த கேள்விகள், ஒரு பார்வையில், கம்யூனிச அகிலத்தின் வேலைத்திட்டத்தின் முக்கிய விஷயமாகவும் ஆகியிருக்க வேண்டும். இருந்தாலும் உண்மையை சொல்லப் போனால், வரைவு வேலைத்திட்டத்தில் கம்யூனிச அகிலத்தின் மூலோபாயம் மற்றும் தந்திரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான பாதை என்று துணைத் தலைப்பை தாங்கிய அத்தியாயம், முற்றிலும் ஏறக்குறைய எந்த வித அர்த்தமும் இல்லாத, மிகவும் பலவீனமான அத்தியாயங்களில் ஒன்றாகும். கிழக்கினை குறித்து பேசும் இந்த அத்தியாயத்தின் பகுதியானது உண்மையில் செய்த தவறுகளின் பொதுமைப்படுத்தல்களையும் புதியவற்றின் தயாரிப்புகளையும் மட்டுமே கொண்டிருக்கிறது.

இந்த அத்தியாயத்தின் அறிமுகப் பிரிவானது அராஜகவாதம், புரட்சிகர தொழிற்சங்கவாதம், ஆக்கபூர்வ சோசலிசம், கைவினைக்கழக சோசலிசம் ஆகியவற்றின் மீதான விமர்சனத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இங்கே நாம் கொண்டிருப்பது, தனது காலத்தில் மிகவும் முக்கியமான கற்பனாவாத சோசலிச வகைகளின் தனித்தன்மையான சுருக்க குணாதிசயங்களை கடந்த பாட்டாளி வர்க்கத்தின் விஞ்ஞான ரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட கொள்கையின் சகாப்தத்தை தொடங்கி வைத்த, கம்யூனிஸ்ட் அறிக்கையின் ஒரு தூய இலக்கிய போலியாகும். ஆனால், கம்யூனிச அகிலத்தின் பத்தாவது ஆண்டு விழா காலத்தில், கோர்னெலிஸன், ஆர்துரோ லேப்ரியோலா, பேர்னார்ட் ஷா, அல்லது இன்னும் குறைவாய் தெரிந்த கைவினைக்கழக சோசலிஸ்டுகளின் "தத்துவங்களின்" மீதான இலக்கில்லாத சத்தில்லாத விமர்சனத்தில் இப்போது ஈடுபடுவது என்பதன் பொருள், அரசியல் தேவைகளுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக ஒருவர் சுத்த இலக்கிய புலமைக்கு பலியாகிறார் என்பதாகும். இந்த அடிப்பாரமானது வேலைத்திட்டத்தில் இருந்து எளிதாக கொள்கைப்பரப்பு இலக்கியத்திற்கு இடம் மாற்றப்பட முடியும்.

மூலோபாய பிரச்சினைகளை பொறுத்தவரை இதுவரை, அந்த வார்த்தையின் பொருத்தமான பொருளில் காண்பதென்றால், வரைவு வேலைத்திட்டமானது தன்னை இவ்வாறான அரிச்சுவடி அறிவுக்குள் எல்லைப்படுத்திக் கொள்கிறது:

"தனது சொந்த வர்க்கத்தின் பெரும்பான்மை மீது தனது ஆதிக்கத்தின் விரிவு ...

"பொதுவாக உழைக்கும் மக்களின் பெரும் பிரிவின் மீது தனது ஆதிக்கத்தின் விரிவு ...

"தொழிற்சங்கங்களை வெற்றி கொள்ளும் அன்றாடப் பணியானது குறிப்பாக அதிக முக்கியத்துவம் பெற்றதாகும் ...

"அதீதமான வறுமை பீடித்த விவசாயிகளின் பெரும் பிரிவின் வெற்றியும் கூட [?] பாரிய முக்கியமானது ..."

இந்த பொதுவான இடங்கள் அனைத்தும், இவை தங்களளவில் போதுமான அளவு எதிர்த்து வாதாட முடியாத அளவில் உள்ளதுடன், வெறுமனே இங்கு சுழற்சி முறையில் நிறுத்தப்பட்டுள்ளன, அதாவது, வரலாற்று சகாப்தத்தின் குணாதிசயத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் அவை கொண்டுவரப்பட்டுள்ளன, இவ்வாறாக, அவற்றின் தற்போதைய அருவமான, புலமைவாத வடிவத்தில், எந்த வித சிக்கலும் இல்லாமல் இரண்டாம் அகிலத்தின் தீர்மானத்திற்குள் கொண்டுவரப்பட முடியும். வேலைத்திட்டத்தின் மையப் பிரச்சினையானது கொஞ்சம் இழுவையாகவும் தெளிவின்றியும் "ஆக்கபூர்வ" மற்றும் "கைவினைக் கழக" சோசலிசங்களை கையாளும் பத்தியை விட இன்னும் சுருங்கிய ஒரு ஒற்றை வகைமுறைப் பத்தியில் கருதப்படுகிறது. இதன் பொருளானது புரட்சிகர கவிழ்ப்பின் மூலோபாயம், ஆயுதமேந்திய கிளர்ச்சியினது சூழல்கள் மற்றும் பாதைகள், மற்றும் அதிகாரத்தை கைப்பற்றல் போன்ற இவையெல்லாம் அருவமாகவும் பகட்டுநூலறிவுடனும், மற்றும் நமது சகாப்தத்தின் வாழும் அனுபவத்திற்கு கொஞ்சம் கூட கவனத்திற்கு எடுக்காமலும் முன்வைக்கப்படுகின்றன.

இங்கே நாம், பின்லாந்து, ஜேர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரிய சோவியத் குடியரசின் பாட்டாளி வர்க்கத்தின் பெரும் போராட்டங்கள், இத்தாலியின் செப்டம்பர் நாட்கள், ஜேர்மனியின் 1923 நிகழ்வுகள், இங்கிலாந்தின் பொது வேலைநிறுத்தம் மற்றும் இன்னும் ஏராளமாக ஒரு மொட்டையான காலவரிசையிலான கணக்கீட்டின் வடிவத்திலேயே குறிப்பிடப்படுவதை காண்கிறோம், . இதுவுமே கூட பாட்டாளி வர்க்கத்தின் மூலோபாயத்தைக் கையாளும், ஆறாம் அத்தியாயத்தில் காணப்படவில்லை, மாறாக முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி மற்றும் சர்வதேச புரட்சி வளர்ச்சியின் முதல் கட்டம் என்ற இரண்டாம் அத்தியாயத்தில் காணப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பாட்டாளி வர்க்கத்தின் பெரும் போராட்டங்களானது இங்கு பாட்டாளி வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்கள் என்பதாக அல்லாமல் வெறும் புறநிலை நிகழ்வுகளாக "முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி" என்ற வெளிப்பாடாக அணுகப்படுகிறது. உதாரணமாக எஸ்தோனியா கிளர்ச்சி, அல்லது சோபியா கதீட்ரல் மீதான 1924ம் ஆண்டின் குண்டுவீச்சு, அல்லது கன்டோனின் கடைசியாக நடைபெற்ற கிளர்ச்சி, இவை எல்லாம் புரட்சிகர சாகசவாதத்தின் வெளிப்பாடுகளா அல்லது இதற்கு மாறாக, பாட்டாளி வர்க்க புரட்சிகர மூலோபாயத்தின் திட்டமிட்ட செயல்பாடுகளா என்கின்ற கேள்விக்கு பதிலளிக்க எந்தவித முயற்சியும் எடுக்கப்படாமலேயே, வேலைத்திட்டத்தில் விடப்பட்டுள்ளது என்கிற உண்மையை சுட்டிக் காட்டினாலே போதுமானதாக இருக்கும். ஒரு வரைவு வேலைத்திட்டம் ''ஆட்சிக்கவிழ்ப்பு'' பிரச்சினையை கையாளும்போது இந்த எரியும் கேள்விக்கு பதிலளிக்கவில்லை என்றால், இது ஒரு இராஜதந்திர அலுவலக வேலையாக மட்டுமே இருக்க இயலுமே தவிர ஒரு கம்யூனிச மூலோபாய ஆவணமாக இருக்க முடியாது.

வெளிப்படையாக, பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர போராட்ட பிரச்சினைகளின் இந்த அருவமான, மேலே குறிப்பிடப்பட்ட வரலாற்று ரீதியான சூத்திரப்படுத்தலானது, இந்த வரைவை பொறுத்தவரை தற்செயலாக நடந்தது அல்ல. கேள்விகளை பொதுவாக ஒரு செயலூக்கமிக்க புரட்சிகர வழியில் கையாளாமல், இலக்கிய, புத்தகப் புலமையுடனான, போதிக்கின்ற வகையில், புக்காரினிச வழியில் கையாளுவதுடன் மட்டுமின்றி, இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது: வரைவு வேலைத்திட்டத்தின் ஆசிரியர்கள், எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய காரணம், பொதுவாக கடந்த ஐந்து ஆண்டுகளிலான மூலோபாய பாடங்களை மிகநெருக்கமாக கையாள விரும்பவில்லை என்பதாகும்.

ஆனால் இயல்பாகவே புரட்சிகர செயல்பாட்டின் ஒரு வேலைத்திட்டமானது, இந்த சகாப்தத்தை அடையாளப்படுத்துகின்ற ஆண்டுகளில் நிகழ்ந்த அனைத்தும் எந்த வித தொடர்பும் இன்றி, அருவமான முன்மொழிவுகளின் ஒரு வெறுமையான தொகுப்பாக அணுகப்பட முடியாது. ஒரு வேலைத்திட்டமானது, உண்மையில், கடந்த கால நிகழ்வுகளின் விவரிப்புக்குள் செல்ல முடியாது, மாறாக அது அந்த நிகழ்வுகளில் இருந்து தொடங்க வேண்டும், அவற்றின் மீது அடிப்படையை வைக்க வேண்டும், அவற்றை சுற்றியிருக்க வேண்டும், அவற்றுடன் தொடர்பாயிருக்க வேண்டும். ஒரு வேலைத்திட்டமானது, தான் எடுக்கும் கொள்கை நிலைப்பாட்டின் மூலம், பாட்டாளி வர்க்க போராட்டத்தின் அனைத்து முக்கிய உண்மைகளையும் மற்றும் கம்யூனிச அகிலத்திற்குள்ளான தத்துவார்த்த போராட்டங்கள் தொடர்பான அனைத்து முக்கிய உண்மைகளையும் புரிந்து கொள்வதை சாத்தியமாக்க வேண்டும். இந்த வேலைத்திட்டம் ஒட்டுமொத்தம் சம்பந்தமாகவும் இது உண்மையாக இருக்குமானால், அப்போது மூலோபாயம் மற்றும் தந்திரோபாயங்கள் பற்றிய கேள்விக்கு குறிப்பாக அர்ப்பணிக்கப்பட்ட பகுதி சம்பந்தப்பட்டதும் அதே அளவுக்கு உண்மையானதுமாய் இருக்கும். இங்கே, லெனினின் வார்த்தைகளில் சொல்வதென்றால், வென்றவற்றுடன் சேர்த்து, இழந்துள்ளதும், புரிந்து கொள்ளப்பட்டு சரியாக ஜீரணிக்கப்படுமானால் "வெற்றியாக" மாற்றத்தக்கவற்றையும், பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். பாட்டாளி வர்க்க முன்னணிப் படைக்கு தேவை வெளிப்படையான உண்மைகளின் தொகுப்பு அல்ல, மாறாக செயல்பாடுகளுக்கான ஒரு கையேடு. இதனால் நாங்கள் "மூலோபாய" அத்தியாயத்தின் பிரச்சினைகளை, போருக்கு பிந்தைய காலகட்டத்தின் போராட்டங்களின் அனுபவங்களுடன், குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டு காலங்களின், தலைமையின் துயரமான தவறுகளின் ஆண்டுகளின், அனுபவங்களுடன் நெருங்கிய தொடர்புடைய பிரச்சினைகளை இங்கே கவனமாய் எண்ணிப்பார்க்கிறோம்.